திங்கள் ஒளி பாவும் அமைதியான இரவில்,
கனவுகள் மெல்லிய வெள்ளி ஒளியில் நிழலாய் நடனமாடும் போது,
காதல் என்ற மென்மையான இழையின் கதை விரிகிறது,
முட்களால் நெய்யப்பட்ட அந்தக் கதை, துயரங்களால் நிறைந்தது.
அவள் ஓர் மென்மையான ஒலி போல வந்தாள்,
அவன் உள்ளத்தை தூண்டி, அதன் ஆழங்களை விழித்தெழுப்பினாள்,
அவளின் சிரிப்பு பிரகாசமான ஒரு இசையை போல இருந்தது
மனதின் சலனங்களை தூண்டும் இசையாக அது இருந்தது
அவளுடனான தருணங்களை
கடல் போன்ற ஆழமான கண்களுடன்,
அவன் அனுபவித்தான்,
அவளுடனான மகிழ்ச்சியை இறுகப் பிடித்தான்,
ஆயினும் கொதிக்கின்ற கனலாய் இருந்த இதயத்தின் அனலை
பார்க்க மறுத்தான்
கொந்தளிப்பான புயலாய் இருந்த மனதை கேட்கப்படாத ஆழத்தில்
ஒதுக்கி வைத்தான்.
வலிமையான அவன் இதயத்தின் மெல்லிய வீழ்ச்சிகளை அவன் நிராகரித்தான்,
ஏனெனில் அவளுடனான தருணங்களை அவன் இறுகப் பிடித்திருத்தான்
எங்கிருந்து அவன் வீழ தொடங்கினான்?
எங்கிருந்து அந்த காதல் தேயத் தொடங்கியது?
சொல்லப்படாத வார்த்தைகள் தங்கிவிட்டன,
அவை ஆழமாக புதைக்கப்பட்டன,
ஒரு பார்வை அமைதியாக மாறியது, ஒரு தொடுதல் வெறுப்பாக மாறியது,
தேடல்கள் கசப்பாக மாறியது,
காதலின் மாயை தொட்டு கலைத்து விடக் கூடிய ஒரு மெல்லிய திரையினால் மறைக்கப்பட்டிருந்தது
அவள் தன் இதயத்தை கண்ணாடி வில்லாய் கையாண்டாள்,
அது அவனின் இதயத்தை துளைக்கும் கூர் அம்பு என அறிந்தே எய்து கொண்டே இருந்தாள்.
கோபத்தின் தருணங்களில்,
சந்தேக தருணங்களில்,
விரக்தியில்,
அவள் அம்பை எய்து கொண்டே இருந்தாள்
அவனின் நம்பிக்கையையும் தாக்கினாள்,
வெறுமையான காயத்தை விட்டுச் சென்றாள்.
ஒவ்வொரு சிறிய வாதத்திற்கும்,
ஒவ்வோர் அம்பிற்கும்
ஒரு பிளவு விரிந்தது,
ஒரு காலத்தில் நம்பிக்கையுடன் இருந்தவன், இப்போது அம்புகளிலிருந்து தப்பிக்கும் ஓட்டத்தில் தொலைந்தான்,
அவன் அவளுடைய உணர்வுகளை ஆராய்ந்தான்,
தன் மதிப்பை கேள்வி எழுப்பினான்,
ஆசையின் புயலில், பூமியை தேடும் பிஞ்சு பாதங்களானது அவன் இதயம்.
நாட்கள் மாதங்களாக மாறியது, சின்ன சின்ன வாக்குறுதிகள்,
சின்னஞ்சிறு கேலிகள்,
சின்ன சின்ன கோபங்கள்
எல்லாமும் மறைந்தது,
அவள் இருப்பின் வெப்பம் மறைந்தது
அவளின் சிரிப்பிற்காக ஏங்கினான்,
அவளின் உற்சாகத்தின் ஒளிர்வை தேடினான்
ஆனால் மெல்லிய முணுமுணுப்பாய் அவன் மனம் கேட்டது
"அந்த காதல் உண்மையிலேயே உன் அருகில் தான் இருக்கிறதா?"
அவன் ஆன்மாவில் இன்னுமொரு தீப்பொறி மிச்சமிருந்தது
காதலின் தீப்பொறி
இதயத்தை துளைத்து நிற்கும் அம்புகளின் ஊடே
மெல்லிய வெளிச்ச கீற்றை பாவும்
காதலின் தீப்பொறி
நதியென பெருகிய அவன் கண்ணீர் துளிகளினூடே
மின்மினிப்பூச்சியின் ஒளியாய் திரளும்
அந்த ஒரே ஒரு தீப்பொறி
எத்தனை முறை வீழ்ந்தாலும் அவனை முழுமையாக்கும் அந்த காதலின் தீப்பொறி
காதலின் பாடங்களை கற்றுக் கொண்ட அவனுக்குத் தெரியும்
வலியில் போராடிய அவனின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஓர் இதயதுடிப்பு இருந்தது என்று.
சாம்பலில் இருந்து அவனே தன்னை மீட்டெடுத்துக் கொண்டான்
அவனின் ஒவ்வொரு துளி கண்ணீரும் ஓர் தெளிவை தந்தது.
வலியின் துண்டுகளை அவன் சேகரித்தான்,
குறைகளை ஏற்றுக் கொண்டான்,
நம்பிக்கையின் தாளங்களை தேடினான்.
அவன் பயத்தின் எதிரொலிகளில்
தன் வலிமையை கண்டுகொண்டான்,
காதல் அம்புகள் தந்த காயத்திலிருந்து
ஞானமாய் அவன் வெளிப்பட்டான்.
கருணையுடன் அவள் தந்த காயங்களை
மன்னித்து நகர்ந்தான்.
அவன் தழும்புகளில் இருந்து விடுபடவில்லை
இருந்தும்
அவன் இதயத்துடிப்பு காதலின் நினைவில் இன்னமும்
நடனமாடிக் கொண்டு தான் இருக்கிறது..