See likes given/taken
| Post info | No. of Likes |
|---|---|
|
Re: கவிதையும் கானமும்-039
உலகமே அடங்கிப் போய் மீண்டுமொரு முறை குழந்தயாய் சுருண்டு கொள்ளும் மூன்றெழுத்து மந்திரம் அம்மா! தவழ்ந்து நடையிட்டு பின் தத்தி நடையிட்டும் நான் விழுந்து எழுந்த பொழுதெல்லாம் பூரித்து மகிழ்ந்தவள் நீ. சிறு காயம் பட்டாலும் துடிதுடித்து அடங்கும் உன் உள்ளம் பத்து மாதம் சுமந்ததனினாலா? அல்லது உன் உயிரையே கருவாக உருக்கொண்டதினாலா? எனக்குத் தெரியவில்லை ஆனால் தெரிந்தது ஒன்றெனில் அது இன்றளவும் யாரும் நிரப்ப முடியாத இடம். மொத்தக் குடும்பத்திற்கும் ஒற்றை கண்ணியாய் விளங்குபவள் நீ.. உன் இடத்தை யார் தான் நிரப்பிட முடியும்? 'மகனுக்கு இது பிடிக்கும், மகளுக்கு இது பிடிக்கும்', என நீ செய்த தியாகங்களில் வாழ்பவர்கள் அறிவார்களா தியாகத்தின் நீட்சி தியாகம் என்பதை? நாங்கள் வைத்த மிச்ச உணவை உண்டு உயிர் வாழும் உன் தியாகத்தின் எச்சம் நாங்கள் உன் உதிரத்தின் எச்சம் நாங்கள், உன் பிறவியின் எச்சம் நாங்கள், உண்மையில் உன் மிச்சத்தின் எச்சம் நாங்கள். எங்கோ தொலைதூரத்தில் இருப்பின் உன் புடவை வாசனையை தேடும் மனதிற்கு என்ன கூறி ஆற்றுப்படுத்துவது? யாரோ எங்கேயோ ஊற்றும் தோசையின் மணத்தில் உன்னை தேடும் மனதிற்கு என்ன கூறி ஆற்றுப்படுத்துவது? நரை கூடும் பருவத்திலும் உன் மடி சாய தேடும் மனதிற்கு என்ன கூறி ஆற்றுப்படுத்துவது? தன் ஒவ்வொரு காயத்தையும் மறைத்து தன் பிள்ளைக்காய் குடையாய் வேராய் மரமாய் மடியாய் இருக்கும் தாய்க்கு கூற நினைப்பதெல்லாம் நீ என் மகளாய் பிறந்திட நான் உன்னை என் சேயாய் காத்திட வேண்டும் அம்மா! March 08, 2024, 12:01:32 am |
2 |
|
Re: கவிதையும் கானமும்-048
வெளிச்ச கீற்றுகள் உள்ளடங்கும் வேளையில் தனிமையின் நாக்குகள் அடங்காத ஜூவாலையென உள்ளிருந்து எழுந்து விலக்க முடியா வலையென பின்னிக் கொள்கிறது. எல்லோரும் இருந்தும் யாருமற்ற நிலையில் பற்றற்று அமர்ந்திருக்கிறேன். தனிமை இன்னும் தீவிரமாய் அணைத்துக் கொள்கிறது. சில சொற்களின் சூடுகள், துண்டித்துக் கொண்ட சில அன்பின் எச்சங்கள், தட்டிவிடப்பட்ட வெறுப்புகள், அலைகழிக்கப்பட்ட உணர்வுகள் ஒன்றின் பின் ஒன்றென மன அடுக்குகளின் மேல் எழுந்து மீள முடியா நீர் சுழற்சியில் சிக்கிக் கொண்டவளை போல உள்ளிழுத்துக் கொண்டே இருந்தது. கடிகார முட்களை பின்னோக்கி திருப்பி விளையாடும் விளையாட்டென காலத்தை முதலிருந்து வாழ்ந்திட முடியாதா என பெரு ஏக்கம் காற்றை துழவுகிறது. இல்லை, என் காலத்தை இனி திருப்ப முடியாது கடக்க முடியாத தூரங்களை கடந்து வந்துவிட்டேன் இது ஒருவழி பாதை என நிதர்சனம் புரியும் முன் ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்க்கின்றது. காலத்தின் மீது எந்தவொரு கோபமும் எனக்கில்லை. யார் மீதும் கோபமில்லை என நினைத்துக்கொண்டாலும் என் மீதே இருக்கும் கோபத்தை எங்ஙனம் மறைத்துக் கொள்வது? இந்த கணம் பற்றிக் கொள்ள ஒரு துடுப்பு போதும் தான் எல்லாருக்கும் கை கொடுக்கும் துடுப்பு கூட என்னை மட்டும் ஏன் தத்தளிக்க வைக்கிறது? துடுப்பின் மீதும் எனக்கு கோபமில்லை பற்றிக் கொள்ள எனக்கு தான் தெரிந்திருக்கவில்லை. இருளை விட கொடிய இத்தனிமையின் தீண்டலில் இந்த இரவில் எவ்வளவு பேர் உத்திரத்து காற்றாடியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருகிறார்கள்? கேட்பாரற்று அநாதரவாய் அலையும் நாய்க் குட்டியை போல் தத்தளிக்கும் மனதை எதை கொண்டு நான் ஆற்றுப்படுத்துவது? ஆதூரமாய் மெல்லிதான காற்றும், எங்கோ தூரமாய் ஒலிக்கும் மெல்லிய இசையும், சாளரங்களை தாண்டி வீசும் நிலவின் குளுமையும், மெழுகுவர்த்தியின் இச்சிறு வெளிச்ச கீற்றும் படர்ந்துவிடாதா அத்தனை பேருக்கும்? October 05, 2024, 08:52:28 pm |
4 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#073
வணக்கம் சங்கீத மேகம் டீம், இது சங்கீத மேகம் நிகழ்ச்சிக்கான என்னுடைய முதல் பதிவு. RJ நிலா அட்டகாசமா கடந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாங்க. எனக்கு இந்த நிகழ்ச்சி ரொம்ப பிடிச்சிருந்ததால நானும் பதிவிட ஆசைப்பட்டேன். இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் உல்லாசம் திரைப்படத்திலிருந்து வீசும் காற்றுக்கு என்கிற பாடல் இந்த பாடலில் மொழியை பறித்தாள் மௌனம் கொடுத்தாள் என்கிற வரி எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இந்த பாடலை இசை ரசிகர்கள் அனைவருக்காகவும் விரும்பி கேட்கிறேன் October 06, 2024, 10:26:09 pm |
1 |
|
Re: Happy Deepavali 2024
October 31, 2024, 09:16:20 am |
3 |
|
Re: Happy Birthday JODHA
Many more happy returns of the day Jodha sis 💐💫🎉🌼 November 01, 2024, 11:11:04 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-050
திங்கள் ஒளி பாவும் அமைதியான இரவில், கனவுகள் மெல்லிய வெள்ளி ஒளியில் நிழலாய் நடனமாடும் போது, காதல் என்ற மென்மையான இழையின் கதை விரிகிறது, முட்களால் நெய்யப்பட்ட அந்தக் கதை, துயரங்களால் நிறைந்தது. அவள் ஓர் மென்மையான ஒலி போல வந்தாள், அவன் உள்ளத்தை தூண்டி, அதன் ஆழங்களை விழித்தெழுப்பினாள், அவளின் சிரிப்பு பிரகாசமான ஒரு இசையை போல இருந்தது மனதின் சலனங்களை தூண்டும் இசையாக அது இருந்தது அவளுடனான தருணங்களை கடல் போன்ற ஆழமான கண்களுடன், அவன் அனுபவித்தான், அவளுடனான மகிழ்ச்சியை இறுகப் பிடித்தான், ஆயினும் கொதிக்கின்ற கனலாய் இருந்த இதயத்தின் அனலை பார்க்க மறுத்தான் கொந்தளிப்பான புயலாய் இருந்த மனதை கேட்கப்படாத ஆழத்தில் ஒதுக்கி வைத்தான். வலிமையான அவன் இதயத்தின் மெல்லிய வீழ்ச்சிகளை அவன் நிராகரித்தான், ஏனெனில் அவளுடனான தருணங்களை அவன் இறுகப் பிடித்திருத்தான் எங்கிருந்து அவன் வீழ தொடங்கினான்? எங்கிருந்து அந்த காதல் தேயத் தொடங்கியது? சொல்லப்படாத வார்த்தைகள் தங்கிவிட்டன, அவை ஆழமாக புதைக்கப்பட்டன, ஒரு பார்வை அமைதியாக மாறியது, ஒரு தொடுதல் வெறுப்பாக மாறியது, தேடல்கள் கசப்பாக மாறியது, காதலின் மாயை தொட்டு கலைத்து விடக் கூடிய ஒரு மெல்லிய திரையினால் மறைக்கப்பட்டிருந்தது அவள் தன் இதயத்தை கண்ணாடி வில்லாய் கையாண்டாள், அது அவனின் இதயத்தை துளைக்கும் கூர் அம்பு என அறிந்தே எய்து கொண்டே இருந்தாள். கோபத்தின் தருணங்களில், சந்தேக தருணங்களில், விரக்தியில், அவள் அம்பை எய்து கொண்டே இருந்தாள் அவனின் நம்பிக்கையையும் தாக்கினாள், வெறுமையான காயத்தை விட்டுச் சென்றாள். ஒவ்வொரு சிறிய வாதத்திற்கும், ஒவ்வோர் அம்பிற்கும் ஒரு பிளவு விரிந்தது, ஒரு காலத்தில் நம்பிக்கையுடன் இருந்தவன், இப்போது அம்புகளிலிருந்து தப்பிக்கும் ஓட்டத்தில் தொலைந்தான், அவன் அவளுடைய உணர்வுகளை ஆராய்ந்தான், தன் மதிப்பை கேள்வி எழுப்பினான், ஆசையின் புயலில், பூமியை தேடும் பிஞ்சு பாதங்களானது அவன் இதயம். நாட்கள் மாதங்களாக மாறியது, சின்ன சின்ன வாக்குறுதிகள், சின்னஞ்சிறு கேலிகள், சின்ன சின்ன கோபங்கள் எல்லாமும் மறைந்தது, அவள் இருப்பின் வெப்பம் மறைந்தது அவளின் சிரிப்பிற்காக ஏங்கினான், அவளின் உற்சாகத்தின் ஒளிர்வை தேடினான் ஆனால் மெல்லிய முணுமுணுப்பாய் அவன் மனம் கேட்டது "அந்த காதல் உண்மையிலேயே உன் அருகில் தான் இருக்கிறதா?" அவன் ஆன்மாவில் இன்னுமொரு தீப்பொறி மிச்சமிருந்தது காதலின் தீப்பொறி இதயத்தை துளைத்து நிற்கும் அம்புகளின் ஊடே மெல்லிய வெளிச்ச கீற்றை பாவும் காதலின் தீப்பொறி நதியென பெருகிய அவன் கண்ணீர் துளிகளினூடே மின்மினிப்பூச்சியின் ஒளியாய் திரளும் அந்த ஒரே ஒரு தீப்பொறி எத்தனை முறை வீழ்ந்தாலும் அவனை முழுமையாக்கும் அந்த காதலின் தீப்பொறி காதலின் பாடங்களை கற்றுக் கொண்ட அவனுக்குத் தெரியும் வலியில் போராடிய அவனின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஓர் இதயதுடிப்பு இருந்தது என்று. சாம்பலில் இருந்து அவனே தன்னை மீட்டெடுத்துக் கொண்டான் அவனின் ஒவ்வொரு துளி கண்ணீரும் ஓர் தெளிவை தந்தது. வலியின் துண்டுகளை அவன் சேகரித்தான், குறைகளை ஏற்றுக் கொண்டான், நம்பிக்கையின் தாளங்களை தேடினான். அவன் பயத்தின் எதிரொலிகளில் தன் வலிமையை கண்டுகொண்டான், காதல் அம்புகள் தந்த காயத்திலிருந்து ஞானமாய் அவன் வெளிப்பட்டான். கருணையுடன் அவள் தந்த காயங்களை மன்னித்து நகர்ந்தான். அவன் தழும்புகளில் இருந்து விடுபடவில்லை இருந்தும் அவன் இதயத்துடிப்பு காதலின் நினைவில் இன்னமும் நடனமாடிக் கொண்டு தான் இருக்கிறது.. January 09, 2025, 01:18:40 pm |
5 |
|
Re: Happy 3rd Anniversary GTC
January 14, 2025, 07:57:06 am |
1 |
|
Re: Happy Birthday Sivarudran
Happy Birthday Sivarudran. May all your birthday wishes come true. Wishing you all the happiness you deserve. January 16, 2025, 10:31:12 am |
1 |
|
Re: ENGLISH WORDS BUILDING GAME
I choose G Gorgeous January 17, 2025, 05:05:42 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#077
சங்கீத மேகம் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். இந்த வாரம் சங்கீத மேகம் நிகழ்ச்சியில் நான் கேட்க விரும்பும் பாடல் சேது திரைப்படத்தில் இருந்து சிக்காத சிட்டொன்று பாடல். இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்: கல் மனசில் காதல் வந்த தென்ன என்ன ஊற்றெடுத்து அன்பை தேடி போவதென்ன காலையிலே மாலை வர ஏங்குதடி.. மாலை வந்தால் உன்னை மனம் தேடுதடி.. January 27, 2025, 10:24:01 am |
1 |