See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: கவிதையும் கானமும்-048
தனிமை சிலர் மட்டுமே தாங்கிகொள்ளும் ஆயுதம் தனிமை தாக்கி கொள்ளும் ஆயுதமும் கூட தனிமையில் கடக்கும் நிமிடங்கள் சிலருக்கு சிறந்ததோர் அறிவினை கொடுக்கும் தனிமை சிலருக்கு நரகத்தினை காட்டும் தனிமையில் சாத்தானும் ஞானம் பெறுகின்றான் தனிமையில் புத்தனும் சாத்தான் ஆகின்றான்.! தனிமை விந்தையானது ஆண் பெண் இருவரை இணைப்பதுண்டு தனிமையால் இரு உறவுகள் பிறிவதும் உண்டு தனிமை படைப்புகளின் பிறப்பிடம் தனிமை அழிவின் ஆரம்பமும் கூட.., இளமையின் தனிமை காதலால் சிலரை மகிழ்விக்கும்., தனிமை காதல் பிரிவை தந்தது நிமிடங்களையும் கசந்திடச்செய்யும்., நான் கொண்ட தனிமையில் இக்கவியை படைத்தேன்.... தனிமையை நேசிக்க கற்றுகொண்டேன் நிழல் பிரிந்தாலும் நான் உன்னை பிரியேன் என என்னை அணைத்து கொண்டது தனிமை., எனக்கும் உன்னை பிரிய மனமில்லை பற்றி கொண்டேன் உன்னை என் இனிய தனிமையே.. தனிமை இருள் அல்ல தனிமையை நேசிக்க கற்றுகொண்டால் தனிமை இறைவன் தந்த அருள்ளென்பாய்.. தனிமையை கையாள கற்றுக்கொண்டால் நமனை கண்டாலும் போடா என்பாய்.., தனிமையில் நொருங்கி போகாதே தனிமையை உனதாக்கிகொள் படைத்தவனும் தனிமையில் தானே இருக்கின்றான் மானிடன் உனக்கு மட்டுமல்ல...கடவுள் கூட தனிமைவிரும்பியே.. Gtc தோழர் தோழிக்கு இக்கவியை சமர்பிக்கிறேன் நன்றிகள் பல..!!!!! உங்கள் நண்பன் Dan_Bilzerian 😍😍😍🥳🥳🥳🥳 October 01, 2024, 09:04:24 pm |
7 |
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#073
வணக்கம் Gtc நண்பர்களே எனக்கு பிடித்த பாடல் பனாரஷ் படத்தில் இருந்து இலக்கண கவிதை பாடகர்கள்: பிரதீப் குமார் & கே.எஸ். சித்ரா இசை:- பி. அஜனீஷ் லோக்நாத் பாடல் வரிகள் நான் ரசித்தது உனதிரு விழிகள்… இமைத்திடும் பொழுதில்… பகலிரவு உறைகிறதே என்ன ஒரு ரசனை பாடலாசிரியருக்கு இந்த பாடல் என் அனைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் ..💐💐💐😍🎵🎧🎶🎧 சங்கீத மேகங்கள் இன்னிசையால் உங்களை நனைத்து மகிழ்விக்கட்டும்....💐💐💐💐😍😍🎶🎶🎶🎶🎶🎧 October 07, 2024, 01:38:58 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-049
பாடல் நிசப்தமான இரவினில் இனிமையான இசையுடன் இனிமை குரல்களில் ஒலிக்கும் பாடல் காதல் கதைகள் கதைக்கும் பாடல் கண்களில் கனவுகள் நிறைக்கும் பாடல் விழாக்காலம் அதிரும் பாடல் பக்தியோடு பாடும் பாடல் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் பாடல் கண்ணீரில் கரையும் ஒருவனை கனிவுடன் தேற்றும் பாடல் கல்நெஞ்சமும் கசிந்துருக செய்யும் கவிஞ்சனின் பாடல் இசை தந்தைக்கும் மொழியெனும் தாய்க்கும் பிறந்த பிள்ளையின் பெயர் பாடல் பாடல் பற்றிச்சொல்ல ஆயுளும் போதுமோ ..? பிறவிகள் எடுத்து வந்தும் சொல்லத்தான் இயலுமோ.? மானுடம் மரபினோடு கலந்துவிட்ட பாடலை கவியினில் விரித்துரைக்க முடியுமோ...? இயன்ற வரை சொல்லிபோட்டேன் இனிய என் மித்திரரே..! கேளுமின் யான் மொழிந்ததோர் கவியை கவிதையும் கானமும் தன்னிலே...🥳💐😉✍️ October 15, 2024, 11:50:42 pm |
6 |
Re: கவிதையும் கானமும்-050
காதல் காயம் கவிதை காதல் பேச்சில் தொடங்கி மெளனத்தில் பிரசவித்த பிள்ளை அது.., காதல் ஓர் அழகிய வன்முறையாளன் காலம் பார்ப்பதில்லை கருப்பா சிவப்பா உயர்வா தாழ்வா பார்ப்பதில்லை .., கவர்ந்தவர் மனதை மட்டுமே பார்க்கும் புரட்சியாளன் காதலே..! பெண்ணோ ஆணோ யாராகிலும் காதலை கடந்து செல்லாதவர் இருப்பாரோ சொள்ளுங்களேன்..! காதல் இனிமையான பொய் சாகும் வரை துரத்தும்.., செத்தே போனாலும் நினைவாகி கொள்ளும் ..🔪 காதல் தந்த ரணம் நரகினும் கொடியது உயிருடனே வதைக்கும் காதல் தந்த நல் நினைவுகள் சொர்க்கத்தினை உணரச்செய்யும்., காதல் தோற்பதும் இல்லை ஜெயிப்பதும் இல்லை.., காதல் கொண்ட உள்ளங்களால் கொலை செய்யப்படுகின்றன.., நான் நீ என்ற அகந்தையும் நம்பிக்கையை உடைத்து ஒளிவும் மறைவுமாய் மறைத்து வாழ்வதும் புரிதல் இன்மையும் காதலை கொளை செய்யும் காரணங்கள். காதல் பௌர்ணமி இரவில் ஒளிரும் நிலவை போல மார்கழி மாதம் புள்ளின் நுனியில் மிளிரும் பனித்துளி போல மலை மிது படர்ந்து வரும் தென்றலை போல மனதை கவரும் கள்வனின் சொற்சுவை போல உவமைகள் சொல்லி மாளாத உண்த உணர்வள்ளவோ காதல்.., கசந்த பின் காதலோ எரியும் தனழாக, கோடையில் சுட்டெரிக்கும் சூரியனை போல கடலில் எழும் புயல் போல கண்ணீரில் வெள்ப்பெருக்கெடுத்தாற் போல கடினமான இலக்கண பிழை காதல் சொர்க்கம் நரகமும் சேர்ந்த சொல்லவே முடியாத இறைவனின் ஆட்டம் காதல்.., ஆட்டத்தில் அங்கமாக பொம்மைகளே ஆணும் பெண்ணும்.... December 15, 2024, 06:38:49 pm |
6 |