See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: Happy Birthday Vels
Many more happy returns of the day bro🎂
August 18, 2023, 03:36:02 pm |
1 |
Limat
வணக்கம் GTC மக்களே🙏🙏🙏 👉 நான் உங்கள் தமிழ் 👉 புதுவை 👉 சுயதொழில் 👉 கொஞ்சம் அடக்கமான அமைதியான பையன்🙈 👉 யாரையும் கஷ்டப்படுத்த கூடாது என்று நினைப்பவன் 👉 அதனால் தான் என்னோமோ அதிகம் கஷ்டப்படுபவன் 👉 அனைவரும் இருந்தும் தனித்தே வலந்தவன் 👉 தனிமை எனது நண்பன் என்றும் சொல்லலாம் 👉 பிடித்தது மழையில் நனைந்தபடி பைக்கில் செல்வது மற்றும் இசை மழையில் நனைவது 👉 தனிமையில் இருந்த எனக்கு முகமரியா தேவதையாக வந்தவள் தர்ஷிணி 5 வருடம் முடிந்து 6வது வருடம் சேர்ந்து பயணிக்கிறோம் ஒன்றாக நான் உடைந்தபோதெல்லாம் எனக்கு உறுதுணையாக நிற்பவள் அவள் எனக்கு கிடைத்தது நான் கேட்காமல் பெற்ற வரம் என்று சொன்னால் அது மிகையாகாது. 👉 எளிதில் பிறர் மீது அன்பு வைத்து பெரிதும் காயப்பட்டவன் 👉 நான் அதிகமாக சிந்திக்கிறவன் மற்றும் நான் மிகவும் ஆழமாக உணர்கிறவன் அது தான் என் பிரச்சனை👻 👉 என்னை GTC குடும்பத்தில் இணைத்தமைக்கு நன்றி🙏🙏 August 29, 2023, 09:56:58 am |
4 |
Re: கவிதையும் கானமும்-030
நட்பின் உறவே..! என் கைகளை பிடித்தபடி கவலையின்றி நடப்பாய் நண்பனே கடைசிவரை துணையாய் நான் வருவேன் என்ற நம்பிக்கையுடன்..........! நீ மௌனமாய் அழும் ஒவ்வொரு நொடியும் உடன் இருப்பேன் உன் கண்ணீரை துடைக்க உரிமை தோழியாய்..................! இனி உன் மனம் சோர்ந்து போகும் போதெல்லாம் உன் தாய்மடி தேவையில்லை......, சோகம் தீர்த்து தோள்கொடுக்கும் அன்புத் தோழியாய் என்றுமே உன்னுடன் நான்................! மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம்...........! மறந்தும் நினைத்து விடாதே... உன்னை மறப்பேன் என்று............! மீண்டும் ஒரு ஜென்மமிருந்தால் என் தோழனாக நீ வேண்டும்..........! என் துன்பங்களையும் உன் தோளில் சுமந்தவனே நீ எனக்கு நண்பன் அல்ல.......! இன்னொரு தகப்பன்........! உள்ளம் மறக்குவதில்லை உன்னை நண்பனே.........! August 29, 2023, 11:13:09 am |
1 |
Re: கவிதையும் கானமும்-031
அம்மு! நீ என் கண்ணில் படும் நேரமெல்லாம் நான் கிறுக்கிய கவிதைகள் யாவும் என் மனமெனும் மதில்சுவர் தாண்டி ஒன்றோடு ஒன்று மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கிறது... மங்கை உன் மதிமுகம் கண்டு மயக்க நிலைக்கு சென்று... கவிதையின் வரிகளை நீ உச்சரித்து முடிக்கும் போது... உன் உதட்டு வரிகளில் என் உயிர் வரிகள் கலந்து... உன் உள்ளத்தில் நிறைந்து... உன் சுவாசத்தில் படர்ந்து கொள்ள இதயமின்றி துடிக்கின்றது! கண்களின்றி கண்ணீர் வடிக்கின்றது..! September 14, 2023, 05:49:46 am |
3 |
Re: கவிதையும் கானமும்-032
என்னவளின் இதய துடிப்பில் சொர்க்கம் கண்டேன்!!!! அழகிய மாலை வேலை அந்த கடற்கரை மணலில் இதமாய் வீசிய குளிர்காற்று இருமேனி இடைவெளி குறைத்தது என்னவள் என் கரம் இறுக்க பிடித்து உன்னை மிகவும் பிடிக்கும் என்றால் நான் அம்மு வின் நெற்றியில் முத்தமிட்டு நீ என்றி நான் இல்லை என்றேன் முழு நிலவின் தரிசனம் முழுமையாக அம்முவின் கண்ணில் ஒரு ஏக்கம் கண்டேன் உடலும் உணர்வுகளும் ஒன்றான நிமிடங்களில் இதழ்கள் இணைய இதயம் துடித்தது என்னவள் தலை என் மார்பில் புதைத்தால் நான் இருகரத்தால் அவள் முகம் தூக்கி அவள் விழிகளை வினாடிகள் ரசித்து இதழ்கள் இணைய இமைகள் மூடிக்கொண்டது காந்தவிசை தோற்கும் ஒரு ஈர்பால் இறுக்கமாய் இணைந்திருந்த இதழ்கள் ஈர் உயிர் ஓர் உயிரான நொடி துளிகள் இமை வழி கசிந்தது கண்ணீர் துளிகள் சொர்க்கம் மண்ணிலா விண்ணிலா என்று கற்பனையில் தவித்த எனக்கு சொர்க்கம் என்னவளின் இதய துடிப்பில் என்று அவளது அணைப்பாள் என்னை உணர வைத்தால்.... October 12, 2023, 12:18:40 pm |
2 |
Re: கவிதையும் கானமும்-033
தனிமையில் தவிக்கிறேன்.! நான் பிறக்க பத்து மாதங்கள் உங்களை தவிக்க வைத்ததாலோ இன்று நான் உங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கி தனிமையில் தவிக்கிறேன்..! என்னை செல்லமாக தொட்டு தூக்கி உன் நெஞ்சோடு அனைத்து என் துயர் துடைக்க தாயின் கைவிரல்கள் இன்றி தனிமையில் தவிக்கிறேன்..! நான் துவலும் போதெல்லாம் என் தலை கோத என் தோலை தட்டி கொடுக்க தந்தையின் விரல்கள் இன்றி தனிமையில் தவிக்கிறேன்..! என் பசியரிந்து பாலூட்ட தாயின் மார்பும் நான் துயில் கொள்ள தந்தையின் மார்பும் இன்றி தனிமையில் தவிக்கிறேன்..! விக்கல் வருகையில் மற்றவர்கள் யாரோ நினைக்கிறார்கள் என்று கூறுகையில் என் வெறுமையை எண்ணி தனிமையில் தவிக்கிறேன்..! என் பிறந்தநாளை கொண்டாடவில்லை என்றாலும் என் பிறந்தநாள் எதுவென்றே அறிவாமல் தனிமையில் தவிக்கிறேன்..! உங்கள் வரவை நோக்கி தனிமையில் தவிக்கும் எனக்கு நித்திரையில் வரும் சொப்பனத்திலாவது வருவீர்களா என்று எண்ணி தனிமையில் தவிக்கிறேன்..! என்னை விட்டு தொலை தூரம் சென்ற தாய் தந்தையே உங்களை எண்ணி தனிமையில் தவிக்கிறேன்..! என் மனதின் வேதனைகளும் குறையவில்லை என் கண்ணீரும் நிற்கவில்லை என் மன கவலை போக்க நீங்கள் இல்லாமல் தனிமையில் தவிக்கிறேன்..! செப்பாய் இருக்க வேண்டிய என் தேடல்கள் மட்டும் தங்கமாய் ஜொலிப்பதை எண்ணி தனிமையில் தவிக்கிறேன்..! போகுமிடம் தங்குமிடம் அனைத்திலும் தனிமையிலே தவிக்கிறேன்..! என் தனிமையை மறைக்க வரைந்தேன் ஒரு ஓவியம் அதில் என் தாய் என்னை பார்த்து புன்னகைப்பதில் உணர்ந்தேன் அவள் அன்பின் காவியம்..! என்றும் உங்கள் நட்💐க்களுடன் November 30, 2023, 01:58:38 pm |
2 |
Re: கவிதையும் கானமும்-034
கோழை ஆனேன் அம்மு..! கொடுத்து வைத்த கொலுசுகள் மழை நீரில் மட்டுமல்ல மஞ்சத்திலும் என் அம்முவின் காலோடு கொஞ்சி விளையாடுவதால் ....! பளிங்காய் போனது என் பார்வைக்கு உன் பாதம் தொட்ட என் கை விரல்கள்..! இல்லாத இன்பங்களுக்கு இடையில் துன்பம் கூட துரத்தலாம் - உன் நினைவை திரட்டி நிம்மதி பெறுகிறேன் ..!! உறக்கத்தின் உலறலை உன் உதடு உரச கன்னம் தொட்டு காணாமல் போகிறது கனவு ..!! மோதி கொண்ட கண்ணில் மோகமில்லா காதல் சொன்ன முகவரியை எழுதி எழுதி முத்திரைப் பதியாத கடிதம் என் கையோடு ..!! தேடி வரும் பாதையில் மரங்கள் எல்லாம் மனிதமாய் மாற என் பார்வை தேடுதடி அழகு பதுமை உன்னை ..!! அம்மு .. இப்ப புடிச்ச கிறுக்கு - இதுல புதுசா ஏதோ இருக்கு ..!! இதோ .. படியில் ஓடி நீ மறைய கோழை ஆனேன் - உன் கொலுசின் குரலில் ..!! என்றும் உங்கள் நட்💐க்களுடன் December 12, 2023, 11:22:08 am |
1 |
Re: கவிதையும் கானமும்-035
கருகும் மலர்கள்...! மலரும்முன் மண்ணில் வீழ்ந்தாயே, கனியும்முன் பிஞ்சில் வெம்பினாயே, அழுவதற்கு கூட நேரம் இல்லமால், அரைவயிரை நிறைக்க ஓடுகின்றாயே, உன் நிலை கண்டு என் உள்ளம் உறைகின்றதே..! காலை கதிரவன் ஒளி வீசும் முன்னே ; வெட வெடத்த நடை பயணமாய் , பெற்றோரின் துயர் துடைக்க , கையெல்லாம் மையாய் இருக்க வேண்டிய பருவத்தில் , ஐயோ !! செத்த பிணத்தின் அருவருப்பு போதுமடா சாமி அவர்கள் நிலை . அதை பார்க்க என் இமை இடம் கொடுக்கவில்லை ..! கருவறையின் சுகம் மட்டும் கண்டாய் வாழ்வில் கல்லறைக்கூட கலங்கும் - உன் காய்ச்சிய கை கண்டு....... நெருப்பில் சுட்ட இரும்பாய் தினம் தினம் அகதியாய் கனவுகள் பல சுமந்து...... கார்மேக கண்களில் கண்ணீரை சுமந்து செம்பட்டை முடியுடன் வீதியில் உன்னை பார்க்கையில் மனம் பதபதக்கின்றது என்ன பிறப்பிதுவென்று..! செங்கற்கள் இடையில் சிக்கிய செந்தாமரையாய் ~ வழிந்து ஓடும் உன் குருதி அதில் சிவந்த செங்கற்கள் உன் வறுமையை பேசும்..! அய்யன் பட்ட கடன் தீர்க்க அடகு வைத்தாய் உன் இளமையை தியாகியாய் நீ சிந்தும் இரத்தம் பறைசாற்றும் உன் அன்னையின் துயரை..! நீ ஒட்டிய சுவரொட்டிகள் அனைத்தும் வேதனையில் கிழிந்தது உன் நிலை காண்கையில்..! ஒரு கையில் பொம்மையுடன் மற்றொரு கையில் புத்தகத்தோடு வீட்டில் மகிழ்ச்சியாய் இருக்கும் குழந்தையை ஏக்கத்தோடு உன் கண்கள் பார்க்கின்ற வலி நிறைந்த பார்வையை கண்டு மனம் உடைகின்றது..! பசி வயிற்றை வாட்டி எடுக்க பிச்சை எடுக்க மனம் தடுக்க கொஞ்சம் வயிற்றை நிறைக்க நீ படும் துயர்கள் அனைத்தும் கனவாக கரைய மனிதம் காப்போம் குழந்தை தொழிலாளி இல்லா சமூகம் உருவாக்குவோம்..!🤝 என்றும் GTC நட்💐களுடன் நான் உங்கள் December 19, 2023, 10:06:12 am |
1 |
Re: கவிதையும் கானமும்-036
கலாசாரத்தின் அங்கமடா எங்கள் வீரம் பல சம்பவம் செஞ்சொமடா காலகாலம் என்று மார்தட்டி சொல்லி வைப்போம் தமிழனின் துள்ளி திரியும் வீரம் பற்றி! கொம்புவெச்ச சிங்கமடா எங்கள் காளை... விவசாயத்தின் பெருமையும் நீயே! விவசாயின் அன்பும் நீயே! எங்களின் அடையாளமும் நீயே! நாங்கள் உண்ணும் ஆகாரம் சத்தாக மாற காரணம் நீயே! எங்கள் உயிர் மறந்தது எங்களை உன்னை நேசித்த பின்.. தூங்கி கிடந்த தமிழன் வீரம் துள்ளி குதிக்க வேண்டிய நேரமிது..! தூசி படிந்த தமிழன் மானம் தூய்மையானதென காட்டவேண்டிய நேரமிது..! ஓங்கி ஒலிக்கும் தமிழன் சத்தம் ஓசோன் தாண்டியும் கேட்க வேண்டிய நேரமிது..! ஒன்று படும் தமிழினம் கண்டு ஒவ்வொரு நாடும் வியக்கும் நேரமிது..! சாதி மதம் அரசியலால் மதியிழந்த மக்கள் கூட்டம் மண் பெருமை கான வேண்டி மடை திறந்து ஒன்றுசேரும் நேரமிது..! காளையைப்போல் திரிகிறாயே என்று பெயர் பெயர் வாங்கிய இளைஞர்களுக்கும் ராஜா அப்பு என செல்லப்பெயர் வைத்து மகனைப்போல வளர்க்கப்பட்ட காளைக்கும் இடையே நடக்கும் செல்ல சண்டை தான் இந்த வீர விளையாட்டு! உன்னை காளையாய் பசுவாய் பார்க்காமல் கடவுளாய் பிள்ளையாய் மதித்த நாங்களே சில நேரங்களில் பண மோகத்தில் அறிய மறுத்தோம் உன் பெருமையை! நீ உழைக்க நாங்கள் வாழ்க்கை நடத்திய காலங்கள் ஏராளம்! பெண்ணை தழுவ வேண்டுமென்றால் முதலில் என்னை தழுவ வேண்டும் என்று கம்பீரமாய் நிற்கும் காளையின் அருமையையும் அதனை அடக்கி தன் வீரத்தை நிலை நிறுத்தும் தமிழனின் பெருமையையும் இந்த உலகிற்கு பறைசாற்றுவோம்.... GTC அன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களுடன் உங்கள் January 09, 2024, 11:06:22 am |
1 |
Re: கவிதையும் கானமும்-040
உன்னருகே நான் இருந்தால்..! உன்னருகே நான் இருந்தால் கவலை என்பது எனக்கேது!! உன் மனதை நீ அறியாவிட்டாலும்... உன் ஆழ் மனதை நான் அறிவேன்... காற்று செல்லக்கூட இடமில்லை என்றாய் உன் இரும்பாலான இதயத்தில்... இரும்பையும் துளை இடலாம் சில கருவிகள் கொண்டு என்று.. நான் உன்னிதயத்தில் உட்புகுந்தேன் என் அன்பு என்னும் கருவி கொண்டு... கைகோற்றுக்கொண்டு ஒட்டிபிறந்த உடன் பிறப்புப்போல் ஊர் முழுவதும் சுற்றி திரிவோம் வெய்யில் மழை பாராமல் - உன் பெயரை எனக்கும் என் பெயரை உனக்கும் மாற்றி கூப்பிடும் தாத்தாவின் தர்மசங்கடத்தை இன்று நினைத்தாலும் சிரிப்புவரும் .. உன்னருகே நான் இருந்தால்..! எனக்கு வருத்தமென்றால் உன் உடல் சோரும் உனக்கு வருத்தம் என்றால் எனக்கு உடல் சோரும் ஊரிலுள்ள மூலிகை எல்லாம் கொண்டுவந்து தந்து குடியடா .. குடியடா என்று நச்சரித்து நச்சரித்து மூலிகையால் வருத்தம் மாறுதோ தெரியாது உன் அன்பு மூலிகையால் மாறிவிடும் வருத்தம் இதையெலாம் சொல்லி சிரிக்கணும் உன்னருகே நான் இருந்தால்..! எனக்கு தான் காதல் வலி எனக்கு தான் வாழ்க்கை வலி உனக்கு நான் சொல்லி அழும்போது உன் ஓரக்கண்ணால் வடியுமடா ஒரு துளி கண்ணீர் - நான் குடம் குடமாய் வடித்த கண்ணீருக்கு ஈடாகுமடா உன் ஒரு துளி கண்ணீர் -இப்போ நினைத்தாலும் அழகை வருமடா நீ அழுத அந்த அழுகை -வாடா நண்பா மீண்டும் ஒருமுறை அழுவோம் உன்னருகே நான் இருந்தால்..! வாழ்க்கையில் வேதனை சோதனை குடும்பத்தினரால் பிரச்சனை ஊரார் உறவினரால் பிரச்சனை இருந்த சொத்தெல்லாம் ஊரூராய் அகதியாக திரிந்து இழந்து விட்டேன் இருக்கும் போது வந்த சொந்தங்கள் இப்போ வருவதில்லை - உண்டு கழித்த உறவுகளும் திரும்பி பார்ப்பதில்லை உன்னருகே நான் இருந்தால் இந்த நிலை எனக்கு இல்லை..! உன்னருகே நானிருந்தால் என்னருகே கவலைகளுக்கு ஏது இடம்....? உந்தன் குறும்பான பேச்சு கரும்பாகிப் போச்சு.... எந்தன் விழிகளில் வீழ்ந்த நட்பே.... உந்தன் பார்வையில் என்றும் நானிருப்பேன்..... கடும்புயலும் கம்பளிக்குள் அடங்கும் உன்னருகே நான் இருந்தால்..! இமைகள்கூட இமைக்க மறுக்கும் உன்னருகே நான் இருந்தால்..! பேசும் வார்த்தைகள்கூட ஊமையாகும் உன்னருகே நான் இருந்தால்..! வருடங்கள் நிமிடங்களாகும் உன்னருகே நான் இருந்தால்..! காணும் காட்சிகள் பதிவுகளாகும் உன்னருகே நான் இருந்தால்..! சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும் உன்னருகே நான் இருந்தால்..! ஒரு வரிக்கு ஓராயிரம் அர்த்தங்கள் உன்னருகே நான் இருந்தால்..! ஒரு நொடிக்குள் ஒரு கோடி புரிதல்கள் உன்னருகே நான் இருந்தால்..! தாய்மையும் தனிமையும் ஒரே நேரத்தில் உன்னருகே நான் இருந்தால்..! இதோ கிடைத்துவிட்டது என் ஏழேழு ஜென்மங்கள் உன்னருகே நான் இருந்தால்..! காலமெல்லாம் நட்பு வாழட்டும் அதையும் தாண்டி நாம் வாழ்வோம்.... March 22, 2024, 06:55:19 am |
1 |