See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Sivarudran Kavithaigal
மானே தேனே பொன்மானே ! மரகதமே மயிலிறகே! அன்னமே எந்தன் பொன் வண்ணமே ! மன்னவன் மாமன் உனக்கு தாலாட்டு பாடுறேனே தலை சாய்த்து தூங்கிடுவாயோ! கட்டி வைரமே கனியமுதே தேன் கிண்ணமே ! தென்னவன் நான் உனக்கு தெம்மாங்கு பாடுறேனே தேம்பாதே நீ உறங்கு ! தந்தையாய் நான் இருப்பேன் நீ தவிக்கயிலே தாயாவும் நான் இருப்பேன். காலமெலாம் காவக்காரன் உன் கூட இருப்பேன் கண் முடி நீ உறங்கிடு . November 18, 2022, 03:14:15 pm |
2 |
Re: Sivarudran Kavithaigal
என்ன கதை ? என் கதை சொல்ல எனக்கும் இங்கு ஆசை உண்டு. என்னவென்று கேட்க எனக்கு இங்கு யாரும் உண்டோ ? என்னுள் வாழ்ந்த கதை சில உண்டு நான் வீழ்ந்த கதை பல உண்டு . எனக்கென எழுதி வைத்த கதை ஏதும் உண்டோ? அதை எடுத்து சொல்ல எனக்கு ஆள் உண்டோ ? என் எண்ணமெல்லாம் வண்ணமாக இனியொரு கதை எனக்கென உண்டோ ? December 28, 2022, 11:24:52 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-033
தாயை பிரிந்த கன்றானேன் ! தவித்து தனியாய் நின்றேனே ! என் தலையைக் கோதும் என் தாயின் விரல்கள் எங்கே ? என் தனிமையை துரத்தும் என் தந்தை விரல்கள் எங்கே ? தரணி ஆளப் பிறந்த மகன் நான் தானென்றே ! தவறாது என்னை தலையில் வைத்தாடும் தந்தையே ! தனியாய் நின்று தவிக்கும் உங்கள் தலைச்சன் பிள்ளை நான் தானே ! தறிகெட்டு ஓடியாடும் எனக்காய் கறி கூட்டு பல சமைத்து நறி வருது கத சொல்லி நாலு வாய் சோறு ஊட்டும் நல்ல தாய் நீதானே ! தேர் பாக்க போகையில தேம்பி நான் அழுகையில தேயாத நிலவு நான்தானுன்னு என்னைத் தேற்றும் தெய்வங்களே ! உங்கள் முன்பிருக்கும் என்னைக் கண்ணிருந்தும் நீங்கள் காணலையே ! உங்களிடம் வந்து வாய் பேசும் என்னை நீங்கள் வாய் திறந்து கூப்பிடலையே ! ஓயாமல் அழுகும் என்னை கண் சாயமல் காத்து நின்ற காவல் தெய்வங்களே ! அடுப்பு கரியில் நான் வரைந்த அழகு காவியம் இதுவென்று தெரிந்தும் உங்கள் கரம் பற்றி ஊமையாய் நிக்கிறேனே ! இங்கே ஊமையாய் நிக்கிறேனே ! November 30, 2023, 07:35:45 pm |
3 |
Re: Sivarudran Kavithaigal
காதல் கண்ணாடியில் அடிக்கடி முகம் பார்க்கும் ! கடிகார நேரத்தை நொடிக்கு நொடி கண்கள் உத்துப் பார்க்கும் ! கை விரல் ஐந்தும் அடிக்கடி தலைமுடியைக் கோதிக் கொள்ளும்! காரியமே இல்லாமல் காதலி வீட்டு முன்பு கர்ணம் போட்டு வித்தை காட்டும்! அவள் வெளியே எட்டிப் பார்க்கும் நேரத்தில் குட்டி இதயம் வெளியே எகிரி குதிக்கும் ! கண்கள் உருண்டு திரளும் ! கைகள் நடுங்கி பரபரக்கும் ! காரியமே இல்லாமல் கால்கள் அங்கும் இங்கும் நடை போடும் ! அவள் அழைப்பு ஏதுமின்றி அலைபேசி துவண்டு கிடக்கும் ! பாழாய் போன காதலால் படாத பாடுபடுதே பாதி ஆண்களின் வாழ்க்கை . December 05, 2023, 10:47:53 am |
2 |
Re: கவிதையும் கானமும்-035
ஆசபட்டேன் ஆசப்பட்டேன் பள்ளி செல்ல ஆசபட்டேன் ! அம்மா கை புடிச்சு ஆசை நடை நடந்து பள்ளி போக ஆசைப்பட்டேனே ! அப்பா சைக்கிளில் அசைந்து அசைந்து பள்ளி போக ஆசைப்பட்டேனே! தலைமகன் எந்தன் தலையில் உச்சிவகுந்தெடுத்து ஊர்வலம் போகும் தேர் போல அலங்காரித்து அழகு சீருடை தான் அணிவித்து. சீக்கிரமாய் என்னை பள்ளி கிளப்பும் -என் சிரித்த முகத் தாயே ! வருந்துகிறேன் நம் நிலை கண்டு . கஷ்டமில்லாம நாம வாழ இஷ்டம் இல்லாம இரும்பு பட்டறைக்கு வேலைக்கு போறேனே ! என் கூட்டு பிள்ளைங்க எகிரி குதிச்சு விளையாடயிலே - அத எட்ட நின்னு பார்க்கும் என் மனசு . விட்டுட்டு போக தோணுது பாதியிலேயே நான் பார்க்கும் வேலையை விட்டுட்டு போக தோணுதே ! வழியில வாத்தியாரை பார்க்கும்போது வணக்கம் சொல்லி வாரேன் உங்களோடு பள்ளிக்குன்னு வாய் சொல்ல துடிக்குதே ! வறுமையின் கொடுமை நினைவுக்கு வரவே வாய் மூடிய பதுமையாய் வந்துடுவேன் பட்டறை வேலைக்கு ! படிக்க இஷ்டப்பட்டு துடிக்கும் இதயம் இரும்பு அடிப்பதா ? சுழன்று விளையாடும் வயதில் சுத்தியல் பிடிப்பதா ? சுமைகளை சுகம் எனத் தாங்கும் வயதில்லை எனக்கு - ஆம் சுகங்களை சுமையில்லாமல் தாங்கும் வயதே எனக்கு. உள்ளுக்குள் ஊஞ்சலாடுது வயசு ! வீட்டுக்குள் வறுமையால் திண்டாடுது மனசு ! நித்தமும் சுத்தியல் பிடிக்கும் நினைவுகள் நெஞ்சுக்குள்ளே படபடக்குதே ! பென்சில் பிடிக்கும் ஆர்வங்கள் என்னுள்ளே பேரின்பம் கொள்ளுதே ! கையெல்லாம் காய்ச்சு போச்சு கை நாட்டு நானென்றாச்சு - சமூகமே விழி இழந்த - என் வாழ்க்கைக்கு வழிகாட்ட வாருங்கள் ! வலி சுமக்கும் என் கரங்களுக்கு விடை கொடுக்க வாருங்கள் ! December 21, 2023, 01:37:51 pm |
2 |
Re: கவிதையும் கானமும்-036
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ! தாவிக்குதித்துச் செல்லடா தடையை மீறி வெல்லடா ! ஈராயிரம் ஆண்டுகளாய் எம் இனப்பெருமை ஏறுதழுவுதல் என்றே திமிரி நிற்க்கும் திமிலை வீரத் திமிரோடு பிடித்தே செல்லடா ! முகத்திற்கு முன்னிற்கும் காளைக் கோடுகளை முந்திச்சென்றே மோதிடடா ! வாடிவாசல் காளைகளின் வால் பிடித்தே வாழ்த்திடடா தமிழின் பெருமையை ! தாழ்ந்து போகாதவன் தமிழன் ! வீழ்ந்து போகாதவன் தமிழன் ! தடைகளைக் கண்டு சோர்ந்து போகாதவன் தமிழன் ! கட்டவிழ்த்து வரும் காளைகளை கட்டியணைத்தே -நம் இனவீரம் சொல்லடா ! சங்க இலக்கியம் பேசிய வீரத்தினை சங்கம் வைத்தே வீடு தோறும் சொல்லடா ! சரித்திரம் பேசும் தமிழின் வீரத்தினை சாக விடமாட்டோம் என சத்தமிட்டு சொல்லடா ! வீரத்தின் விளைநிலம் தமிழ் இனம் என்றே வீதி எங்கும் நிற்கும் எம் காளைகளைப் பாருங்கள் ! காளை அடக்குதல் எம் கலாச்சாரம் ! காளைக் கோடுகளை பாய்ந்துப்பிடித்தல் எம் பாரம்பரியம் ! தடையை தகர்ப்போம் ! தாவிக் குதிப்போம் ! தமிழனாய் நிற்போம் ! சலங்கை ஒலிக்கட்டும் ! ஜல்லிக்கட்டு நடக்கட்டும் ! January 09, 2024, 07:51:38 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-037
மரமாகிப் போனேன் நான் - ஆம் அவள் என்னை கட்டி அணைத்து காதல் சொல்கையில் தானே மரமாகிப் போனேன் நானே ! நான் துளிர்விட நினைக்கையில் அவள் என்னை தொட்டுவிட்டாள் ! என் உடம்பில் கிளைகளும் இலைகளும் முளைத்து முறுக்கேறியது அவள் என்னை மூளை சலவை செய்கையில் ! அவள் தொட்ட இடம் துளிர்விட்டது ! களிறு போல் என் தோல் தடித்து போனது ! காதல் சொல்லி என் பக்கம் வந்த கன்னியவள் கைப்பட்டதும் -ஆம் களிறு போல் என் தோல் தடித்து போனது ! அவளின் வேர்வைத் துளி பட்டு நிலத்தில் நான் வேர் விட்டுப் பாய்ந்தேன் ! இச்சையோடு அவள் என் அருகில் வர என் உடம்பில் பச்சையம் பல கோடி கூடியது! காயாத சருகுகள் என்னில் பல உண்டு அவள் தன் காதல் சொல்லியதால்! வாடாத கிளைகள் என்னில் பல உண்டு வண்ணக்கிளி அவள் என்மேல் வாழ்ந்து வருவதால் ! உதிராத பூக்கள் என் மேல் பல உண்டு -அவள் உள்ளத்தை அள்ளி என் மேல் வைத்த காரணத்தினால் ! வெம்பாத பழங்கள் என்னில் பல உண்டு வெட்கப்படும் பாவை- அவள் என் மேல் விருப்பம் கொண்டதால் ! ஆசை மங்கை அருகில் இருக்க ஆயுள் கூடி போன மரமானேன் நான்- ஆம் ஆண்டெல்லாம் வளர்ந்து செழிக்கும் மரமாகி போனேன் நான் ! யாரும் என்னை வெட்டிவிடாமல் என்னை கட்டி அணைத்து காலமெல்லாம் காத்து நிற்கும் இவளோடு என் காலமும் காதலும் நாளெல்லாம் நகர்ந்து கொண்டிருக்கிறது ! January 23, 2024, 12:16:55 pm |
1 |
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#053
சங்கீத மேகம் குழுவிற்கு வணக்கம். மிகச் சிறப்பாக இயங்கி ஒன்று இருக்கும் சங்கீத மேகக் குழுவில் இன்று நானும் எனக்கு பிடித்த பாடலை கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். ஒவ்வொரு வாரமும் சங்கீத மேகம் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் இந்த வாரமும் சங்கீத மேகம் நிகழ்ச்சி சிறப்புற என்னுடைய வாழ்த்துக்கள். இந்த வார சங்கீத மேக நிகழ்ச்சியில் என்னுடைய விருப்ப பாடலாக கண்ணன் வருவான் திரைப்படத்திலிருந்து காற்றுக்கு பூக்கள் சொந்தம் என்ற பாடலை என்னுடைய விருப்ப பாடலாக இங்கு பதிவு செய்கிறேன். இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்தப் பாடலின் வரிகள் அனைத்தும் மிகவும் இனிமையாக இருக்கும் தனக்கான ஒரு பெண்ணைத்தேடும் வகையில் அமைந்திருப்பதால் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சங்கை நெரிக்கும் சோகம் கூட சங்கீத மேகம் கேட்டால் கலைந்தோடும். நன்றி. January 29, 2024, 01:03:53 pm |
1 |
Re: Happy Birthday RIJIA
காந்தர்வ குரல் அழகி ! கற்பூர பேச்சழகி ! கண்ணாடி சிரிப்பழகி ! அரட்டைக்கு அணியழகி ! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். February 22, 2024, 10:06:49 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-039
எங்கிருந்து வந்த தேவதை நீ - ஆம் என்னைக் காக்க எங்கிருந்து வந்த தேவதை நீ ? எனக்காக வெயிலை விரட்டும் உன் வேக நடை ! எனக்காக மழையை முந்தும் உன் முந்தானை குடை ! என் கண்ணில் தூசி பட்டால் புயலை புரட்டும் பூமகளே ! ஈரைந்து மாதமாய் என்னை சுமந்து இடுப்பு நோக ஈன்ற அன்னையே ! என் கால்கள் நோகாமல் எனக்காக என்னை கையில் தாங்கியவளே ! என் கண்கள் தூங்காமல் போனால் நீ அதை தாங்காமல் தாலாட்டு பாடியவளே ! அடைக்காக்கும் கோழியாய் என்னை காக்கும் என் அன்பு தோழியே ! காலத்தின் கைதியாய் நீ இருக்க காலமெல்லாம் நான் வாழ கையில் எனக்கு கல்வி தந்தவளே ! முந்தி வரும் அம்புகள் உன் முதுகை தாக்க மூத்த மகன் நான் படிக்க என் கையில் புத்தகம் தந்தவளே ! ஆயிரம் தடைகள் அம்புகளாய்ஆழப் பதிந்தது உன் முதுகில் அத்தனையும் தாங்கிக் கொண்டு என்னை அரவணைத்த என் அன்பு தாய் நீ தானே ! ஆயிரம் அம்புகள் என்னை நோக்கி வந்த போது அன்னை எனும் கேடையத்தால் அவற்றைத் தடுத்து நிறுத்தும் அன்புத் தாய் நீ தானே ! ஊரில் உள்ள அத்தனை குலசாமியும் ஒன்றாய் தெரிகிறது உன் உருவில் என் குலசாமி நீ என்று. March 10, 2024, 04:28:31 pm |
2 |