Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-050  (Read 4238 times)

December 02, 2024, 05:07:22 pm
Read 4238 times

RiJiA

கவிதையும் கானமும்-050
« on: December 02, 2024, 05:07:22 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-050


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: February 04, 2025, 07:13:27 pm by RiJiA »

December 03, 2024, 07:53:51 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-050
« Reply #1 on: December 03, 2024, 07:53:51 am »


உன் நினைவு கிளைகளில் என்றும் ஒரு பறவையாய்..!


பறவையாக நானும்மாறி
அந்த வானம்தொட ஆசைக்கொண்டேன்
பூமியெங்கும் நான் பறந்து
புதுக்கவிதைப்பாட ஆசைக்கொண்டேன்

காதல் செய்தால் வானில் பறக்கலாம்
படித்ததோ கேட்டதோ நினைவிலில்லை- ஆனால்
பறக்கும் ஆசையோ எனை விடவில்லை

எங்கிருந்தோ வந்தாளவள்
எனைக்கூட்டிச் சென்றாளவள்
காதல் சிறகை கட்டிவிட்டு
வானம் பறக்கச் செய்தாளவள்-என்
வாழ்க்கை மறக்க செய்தாளவள்

கனவுலகிலும் நனவுலகிலும் நான்
காதல் வானில் பறந்திருந்தேன்
காலை மாலை மறந்திருந்தேன்

என்னடி இது விளையாட்டு?
இதுதான் என் முதல்பாட்டு
உறவுகள் பலர்கூடி என் பாடல்வரிகளை அழிக்க முயற்சித்தனர் பறந்தோடினேன்
என் காதல் சிறகிறண்டை முறிக்க முயற்சித்தனர் பறந்தோடினேன்..!

என்னவளை காணாமல் அவள் வாய் மொழி கேளாமல்  என் இதயத்தில் முளைத்திருந்த காதல் சிறகை விரித்து அவளை தேடி அலைந்த நான் அவளின் மௌன புயலில்
என் சிறகுகள் உதிர்ந்து தள்ளாடியபடி கீழே விழுந்தேன்..!

சிறகுதிர்ந்த பறவையாய் செத்து நான் போகாமல் தினமுமவளை பாடினேன்
சிந்தையால் அவள் நினைவெழுதி
தினமுமவளை தேடினேன்..!

இறக்கும் தருவாயில்
என் இதயம் கேட்கும் உன் உறவை மட்டுமே
இறகிரண்டை இழந்தாலும்
இப்போதும் நான் பறவைதான் என எண்ணி
நிற்கும் தருவாயில் தேவதை போல் வெண்ணிற ஆடையில் அவளை கண்டு மனமுறுகிய வேளையில் அவளின் கையில் வில் அம்பை கண்டு உறைந்து நின்றேன்..!

என்னவளின் காதல் அன்பை சுமந்த என் இதயத்தில் அவள் எய்த அம்பு என் இதயத்தை
துளைத்து அந்த குருதியின் வழியே என் காதலை வெளியேற்ற முயன்றால்..!

என் இதயத்தில் பாய்ந்த அந்த அம்பின் வழியே என் குருதி வழிந்து  ஓடும் நீரில் திசையரியாது சென்றதே தவிற என் காதல் என்றும் என் இதையத்திற்குள்ளே..!

ஆம்..
"சித்திரைக் குயிலாய்"
நித்திரையில்லாமல்
"உன் நினைவு கிளைகளில்"
இப்போதும் நான் பறவையாய்..!



December 10, 2024, 05:20:16 pm
Reply #2

Thendral

Re: கவிதையும் கானமும்-050
« Reply #2 on: December 10, 2024, 05:20:16 pm »
❣️காதல் ..காயம் ..வலி.. காதல்❣️

அழகிய சொல்லாய் நான் உணர்தேன்
நீ உன் காதலை உரைத்தபோது -ஆம் அது 'காதல் '!!!
ஏற்கும் நிலையில் நான் இல்லாதபோதும்
என் மனமோ உன்னையே நாடி சென்றதேன் -ஆம் ... இது 'காதலே 'தான் !!!

ஒவ்வொருநாளும்    நீ கொடுத்த அன்பு
என்னுள்ளே வேர்விட்ட அந்த நொடிகள் -ஆம் ...அது 'காதல்'!!!
என்னை அறியாமலே நான் நீரூற்றினேன்
இன்று அதை நெடுமரமாய் நான் காண்கிறேன் -ஆம் ...இது 'காதலே' தான்!!!!

திக்கு முக்காடத்தான் செய்தாய் உன்  அன்பால்
திணறித்தான் போனேன் நான்  ஒவ்வொருநொடியும்  -ஆம் ...அது காதல்!!!
என் நிலையை எச்சரித்த என் மனதை
ஆற்ற நினைத்து தோற்றேதான் போனேன் நான் -ஆம் ...இது 'காதலே' தான் !!!

இதுவரை வாழ்வில் அறிந்திரா பாசம்
உன் ஒவ்வொரு சொல்லும் ..சொல்லும் உன் நேசம் -ஆம்... அது 'காதல் '!!!
என் இதயம் நெகிழும் தருணம்
என் நிலை தடுமாற உணர்தேன் -ஆம் ...இது 'காதலே' தான்!!!

சேர்ந்து பயணிக்க நம் இதயம் துடிக்க
 வாழும் காலம் அழகாய் தோன்ற -ஆம்... அது' காதல்'!!!
ஒவ்வொரு நொடியும் முத்தாய் அமைய
அதை மாலையாய் கோர்த்தேன் நெஞ்சினுள்ளே -ஆம்...இது  'காதலே' தான் !!!

சொல்லில் அடங்கா அழகிய தருணங்களில்
 என் வார்த்தைகள் உன் இதயம் துளைக்க- ஆம் ...அது 'காயம்'!!!
புரியாமல் நீயும் துடிக்க
புரியவைக்க முடியாமல் நானும் தவிக்க -ஆம் ...இது 'காயமே' தான் !!!

காரணம் தெரியாத வலியில் நீ
 சொல்ல முடியாத நிலையில் நான் -ஆம் ...அது 'காயம்'!!!
நீ துடிக்கும் துயர் கண்டு
என்   இதயம்  படும்பாட்டை அறிவாயோ என்னவனே- ஆம் ..இது 'காயமே' தான் !!!

என்  சொல் அம்பால் நீ பட்ட காயம் ....
உன் காயம் கண்டு நான் பட்ட துன்பம் - ஆம் ...அது 'வலி' !!!
 நான் விட்ட   அம்பை திரும்பப்பெற துடிக்குறேன்
நீ பட்ட காயம்  நான் ஆற்ற  தவிக்குறேன் -ஆம் ..இது ' வலியே ' தான் !!!

சேராத காதல் இம்மண்ணில் உண்டு
ஆனால் புரியாத காதல்? -ஆம்... அது 'நம் காதலே'!!!
 வாழ்ந்து தான் பார்ப்போமே  என்னவனே
 நம் காதலும் வசப்படும் ஓர் நாளிலே -ஆம் ... அது 'நம் காதலே' !!!

என்றும் உங்கள்
 ❣️தென்றல்❣️
« Last Edit: December 19, 2024, 08:54:55 am by Thendral »

December 15, 2024, 06:38:49 pm
Reply #3
Re: கவிதையும் கானமும்-050
« Reply #3 on: December 15, 2024, 06:38:49 pm »
காதல் காயம் கவிதை

காதல் பேச்சில் தொடங்கி
மெளனத்தில் பிரசவித்த
பிள்ளை அது..,

காதல் ஓர் அழகிய வன்முறையாளன்

காலம் பார்ப்பதில்லை

கருப்பா சிவப்பா உயர்வா தாழ்வா

பார்ப்பதில்லை ..,

கவர்ந்தவர் மனதை மட்டுமே

பார்க்கும் புரட்சியாளன் காதலே..!

பெண்ணோ ஆணோ யாராகிலும்

காதலை கடந்து செல்லாதவர்

இருப்பாரோ சொள்ளுங்களேன்..!

காதல் இனிமையான பொய்

சாகும் வரை துரத்தும்..,

செத்தே போனாலும் நினைவாகி

கொள்ளும் ..🔪

காதல் தந்த ரணம்  நரகினும்

கொடியது உயிருடனே வதைக்கும்

காதல்  தந்த  நல் நினைவுகள்

சொர்க்கத்தினை உணரச்செய்யும்.,

காதல் தோற்பதும் இல்லை

ஜெயிப்பதும் இல்லை..,

காதல் கொண்ட உள்ளங்களால்

கொலை செய்யப்படுகின்றன..,

நான் நீ என்ற அகந்தையும்

நம்பிக்கையை உடைத்து

ஒளிவும் மறைவுமாய்

மறைத்து வாழ்வதும்

புரிதல் இன்மையும்

காதலை கொளை செய்யும்

 காரணங்கள்.

காதல் பௌர்ணமி இரவில்

ஒளிரும் நிலவை போல

மார்கழி மாதம் புள்ளின் நுனியில்

மிளிரும் பனித்துளி போல

மலை மிது படர்ந்து வரும்

தென்றலை போல

மனதை கவரும்  கள்வனின்

சொற்சுவை போல

உவமைகள் சொல்லி மாளாத

உண்த உணர்வள்ளவோ காதல்..,

கசந்த பின் காதலோ

எரியும்  தனழாக,

கோடையில் சுட்டெரிக்கும்

சூரியனை போல

கடலில் எழும் புயல் போல

கண்ணீரில் வெள்ப்பெருக்கெடுத்தாற் போல

கடினமான இலக்கண பிழை காதல்

சொர்க்கம் நரகமும் சேர்ந்த

சொல்லவே முடியாத இறைவனின்

ஆட்டம் காதல்..,

ஆட்டத்தில் அங்கமாக

பொம்மைகளே ஆணும் பெண்ணும்....







« Last Edit: December 15, 2024, 07:37:32 pm by Dan_Bilzerian »

January 09, 2025, 01:18:40 pm
Reply #4

Ami

Re: கவிதையும் கானமும்-050
« Reply #4 on: January 09, 2025, 01:18:40 pm »
திங்கள் ஒளி பாவும் அமைதியான இரவில்,
கனவுகள் மெல்லிய வெள்ளி ஒளியில் நிழலாய் நடனமாடும் போது,
காதல் என்ற மென்மையான இழையின் கதை விரிகிறது,
முட்களால் நெய்யப்பட்ட அந்தக் கதை, துயரங்களால் நிறைந்தது.

அவள் ஓர் மென்மையான ஒலி போல வந்தாள்,
அவன் உள்ளத்தை தூண்டி, அதன் ஆழங்களை விழித்தெழுப்பினாள்,
அவளின் சிரிப்பு பிரகாசமான ஒரு இசையை போல இருந்தது
மனதின் சலனங்களை தூண்டும் இசையாக அது இருந்தது

அவளுடனான தருணங்களை
கடல் போன்ற ஆழமான கண்களுடன்,
அவன் அனுபவித்தான்,
அவளுடனான மகிழ்ச்சியை இறுகப் பிடித்தான்,
ஆயினும் கொதிக்கின்ற கனலாய் இருந்த இதயத்தின் அனலை
பார்க்க மறுத்தான்
கொந்தளிப்பான புயலாய் இருந்த மனதை கேட்கப்படாத ஆழத்தில்
ஒதுக்கி வைத்தான்.
வலிமையான அவன் இதயத்தின் மெல்லிய வீழ்ச்சிகளை அவன் நிராகரித்தான்,
ஏனெனில் அவளுடனான தருணங்களை அவன் இறுகப் பிடித்திருத்தான்

எங்கிருந்து அவன் வீழ தொடங்கினான்?
எங்கிருந்து அந்த காதல் தேயத் தொடங்கியது?
சொல்லப்படாத வார்த்தைகள் தங்கிவிட்டன,
அவை ஆழமாக புதைக்கப்பட்டன,
ஒரு பார்வை அமைதியாக மாறியது, ஒரு தொடுதல் வெறுப்பாக மாறியது,
தேடல்கள் கசப்பாக மாறியது,
காதலின் மாயை தொட்டு கலைத்து விடக் கூடிய ஒரு மெல்லிய திரையினால் மறைக்கப்பட்டிருந்தது

அவள் தன் இதயத்தை கண்ணாடி வில்லாய் கையாண்டாள்,
அது அவனின் இதயத்தை துளைக்கும் கூர் அம்பு என அறிந்தே எய்து கொண்டே இருந்தாள்.
கோபத்தின் தருணங்களில்,
சந்தேக தருணங்களில்,
விரக்தியில்,
அவள் அம்பை எய்து கொண்டே இருந்தாள்
அவனின் நம்பிக்கையையும் தாக்கினாள்,
வெறுமையான காயத்தை விட்டுச் சென்றாள்.

ஒவ்வொரு சிறிய வாதத்திற்கும்,
ஒவ்வோர் அம்பிற்கும்
ஒரு பிளவு விரிந்தது,
ஒரு காலத்தில் நம்பிக்கையுடன் இருந்தவன், இப்போது அம்புகளிலிருந்து தப்பிக்கும் ஓட்டத்தில் தொலைந்தான்,
அவன் அவளுடைய உணர்வுகளை ஆராய்ந்தான்,
தன் மதிப்பை கேள்வி எழுப்பினான்,
ஆசையின் புயலில், பூமியை தேடும் பிஞ்சு பாதங்களானது அவன் இதயம்.

நாட்கள் மாதங்களாக மாறியது, சின்ன சின்ன வாக்குறுதிகள்,
சின்னஞ்சிறு கேலிகள்,
சின்ன சின்ன கோபங்கள்
எல்லாமும் மறைந்தது,
அவள் இருப்பின் வெப்பம் மறைந்தது
அவளின் சிரிப்பிற்காக ஏங்கினான்,
அவளின் உற்சாகத்தின் ஒளிர்வை தேடினான்
ஆனால் மெல்லிய முணுமுணுப்பாய் அவன் மனம் கேட்டது
"அந்த காதல் உண்மையிலேயே உன் அருகில் தான் இருக்கிறதா?"

அவன் ஆன்மாவில் இன்னுமொரு தீப்பொறி மிச்சமிருந்தது
காதலின் தீப்பொறி
இதயத்தை துளைத்து நிற்கும் அம்புகளின் ஊடே
மெல்லிய வெளிச்ச கீற்றை பாவும்
காதலின் தீப்பொறி
நதியென பெருகிய அவன் கண்ணீர் துளிகளினூடே
மின்மினிப்பூச்சியின் ஒளியாய் திரளும்
அந்த ஒரே ஒரு தீப்பொறி
எத்தனை முறை வீழ்ந்தாலும் அவனை முழுமையாக்கும் அந்த காதலின் தீப்பொறி

காதலின் பாடங்களை கற்றுக் கொண்ட அவனுக்குத் தெரியும்
வலியில் போராடிய அவனின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஓர் இதயதுடிப்பு இருந்தது என்று.
சாம்பலில் இருந்து அவனே தன்னை மீட்டெடுத்துக் கொண்டான்
அவனின் ஒவ்வொரு துளி கண்ணீரும் ஓர் தெளிவை தந்தது.
வலியின் துண்டுகளை அவன் சேகரித்தான்,
குறைகளை ஏற்றுக் கொண்டான்,
நம்பிக்கையின் தாளங்களை தேடினான்.
அவன் பயத்தின் எதிரொலிகளில்
தன் வலிமையை கண்டுகொண்டான்,

காதல் அம்புகள் தந்த காயத்திலிருந்து
ஞானமாய் அவன் வெளிப்பட்டான்.
கருணையுடன் அவள் தந்த காயங்களை
மன்னித்து நகர்ந்தான்.
அவன் தழும்புகளில் இருந்து விடுபடவில்லை
இருந்தும்
அவன் இதயத்துடிப்பு காதலின் நினைவில் இன்னமும்
நடனமாடிக் கொண்டு தான் இருக்கிறது..
« Last Edit: January 09, 2025, 01:27:56 pm by Ami »

January 15, 2025, 12:47:44 am
Reply #5
Re: கவிதையும் கானமும்-050
« Reply #5 on: January 15, 2025, 12:47:44 am »
வில் புருவ வில்லியே
விரல் பிடித்த மல்லியே - ஆம்
எந்தன் விரல் பிடித்த மல்லியே !
வீசும் காற்று நீயெனக்கு 
பேசும் காதல் ஊற்று நான் உனக்கு !

புவி ஈர்ப்பு விசையில் நானிருக்க - உந்தன்
விழி ஈர்ப்பு விசையில் நான் சருக்க
விழுந்துவிட்டேன் உன் வழியில் !
காயங்கள் ஏதும் இல்லை 
மானே நீ செய்த மாயங்கள் ஏராளம் !

பூவினும் மெல்லிய புன்னகை உனக்கு -அது
பூங்காற்றாய் வீசியது அன்றெனக்கு !

தேனினும் இனிய
குரல் உனக்கு -அது
தென்றல்காற்றாய் வீசியது அன்றெனக்கு !

நூலினும் மெல்லிய இடை உனக்கு - அதில்
நுழைந்து மரணிக்க ஆசை அன்றெனக்கு !

பனித்துளி படர்ந்திடும் செவ்விதழ் உனக்கு - அதை
பக்கத்தில் பார்த்து ரசித்திடும் மனது அன்றெனக்கு !

குறைவில்லாமல் நீ அனுப்பும் குறுஞ்செய்தி மட்டுமே
 என் உடம்பின் குருதியோட்டம் அன்றெனக்கு !

அழகின் சொர்க்கம் நீ
அன்பின் வர்க்கம் நீ !
கவிதையின் தொடக்கம் நீ - என்
காதலில் அடக்கம் நீ !

காட்டன் புடவையில் கற்சிலை நீ கடந்து செல்ல
கல்லூரி வாசல் அன்றெனக்கு காளவாசல் ஆனதடி !

தவழ்ந்து வரும் தத்தை உன்னிடம்
காதல் வித்தைக்காட்ட தாவி வரும் காளை நானே !

புடவை கட்டிய பட்டாம்பூச்சியே !
நீ வீசி நடக்கும் உன் முந்தானையின் நுனிபட்டே வீழ்ந்து போனவன் நானே !

கல்விச் சாலையில் கிடைத்த  காதல் சோலையோ நீ ?

அலுவலக வாசலில்
பூத்த அடுக்கு மல்லியோ நீ ?

அத்தை பெற்றெடுத்த தத்தை கொஞ்சலோ நீ ?

இணையத்தில் கண்டெடுத்த இதய துடிப்போ நீ ?

என் எதிரே நின்று
என் இதயத்தை துளைக்கும் அம்பே !

யாரடி நீயென்று
எகிரி குதித்தேன்
மணி எட்டாகி போனது - என் மனம் துண்டாகிபோனது .
தூக்கம் கலைந்து போனது .
ஏக்கம் என்னுள் ஆழ்ந்து போனது.
யார் இவள் என்றே ஏங்கி தவிக்கிறேன்
என்னை ஏந்திக் கொள்ள வருவாளா ?
கனவு நினைவாக காதல் தேவதை கரம் பிடிக்க வரம் தருவாளா ?

January 22, 2025, 08:52:46 am
Reply #6

iamcvr

Re: கவிதையும் கானமும்-050
« Reply #6 on: January 22, 2025, 08:52:46 am »
எதிரில் நின்று துடிப்பதல்லவா காதல்!


ஆறாக் காயங்களின்
ஆழம் பார்க்க மேலும் இறங்குகிறன அம்புகள்
மீளாத்துயரிலும்
தாழா மனமென அம்புகளை ஏற்கிறது என் காதல்

எவ்வளவு தான் தாங்கி விடும் என் மனம்
எள்ளளவும் கோபமில்லை உன்னிடம்
அன்பை மட்டுமே பிரித்தறிய சக்தி இருந்திருந்தால்
அம்புகள் துளைக்க நான் இடம் கொடுக்காதிருந்தால்
இதயம் இன்னும் இலேசாக இருந்திருக்கும்.

வெளியறியா வடுக்களும்
வழியறியா பாதைகளுமாய்
சிக்கி நிற்கும் என் பயணம்
என்றோ ஒரு மாற்றம் வரும் என
ஏங்கி நின்றிருக்காது.

காதலின் மேல் கொள்ளை ஆசை எனக்கு
எனக்கென ஒரு இதயம்
எதிரில் நின்று துடிப்பதல்லவா காதல்

எதிரில் நின்று நீ நாண் ஏற்ற
ஏதிலியாய் நான் இருக்க
எங்கோ என் காதல் எனை நின்று காக்கிறது.

நீ போய் விடு,
என் காதல் அதற்கேற்றவளை சீக்கிரம்
தேடிக்கொள்ளும்.
« Last Edit: January 22, 2025, 08:54:33 am by iamcvr »

January 26, 2025, 05:03:56 pm
Reply #7

Eagle 13

Re: கவிதையும் கானமும்-050
« Reply #7 on: January 26, 2025, 05:03:56 pm »
வாழ்த்துகள்!
கவிதையும் காணமும் பகுதி-50.
கல் தோன்றி முன் தோன்றிய
தமிழ் மொழியின்
முத்தமிழின் முதல் பாகமாகிய
இயலின் இன்னொரு பெயரான
கவிதையை என்றும் முன்னிறுத்தும்
கவிதையும் காணமும்.
இன்று!
யரலவழள" என்ற
இடையினத்தை உச்சரிக்க
தத்தளிக்கும் நவீன
மனிதர்களுக்கிடையில்
சரளமாக தூய தமிழ் பேசி
உதயமான கவிதையும் காணமும்
தொகுப்பாளினிக்கு வாழ்த்துகள்!






பெண்ணே!
        உன் காதல் அம்புகள் மெல்ல
என்னை கொல்ல !
என் கண்ணோ!
          ஏன்! இந்த வம்பு என்று
உன்னைவிட்டு  விலகி செல்ல!

வீணாய்!
             நாட்களும் நம்மைவிட்டு
விலகி செல்ல
தானாய்!
               உன்னை பற்றிய நினைவுகள்
என்னை கொல்ல
என்னுள்ளே!
                  மனதிற்கும் அறிவிற்கும்
இடையே உன்னை பற்றிய சண்டை செல்ல
மண்ணுள்ளே!
                   என்னால் முடியவில்லை
உன்னை வெல்ல
இருந்தாலும்!
                     உன்னை பற்றிய நினைவுகள்
எனக்குள் வந்து செல்ல
மறந்தாலும்,
                     எனக்குள் மறையவில்லை
உன்னுடன் வாழ நினைத்த கனவுகள்
என் நெஞ்சின் உள்ளே!
தினமும்!
                         நீ என்மேல் ஏய்ந்த காதல்
அம்புகள் என் இதயத்தில் ரணமாக!
மனமும்!
                          தினமும் தவிக்குது
அந்த மருந்தில்லா காயங்கள் குணமாக|
நம் காதல்!
                          கடலாய் இருந்தால் கூட
ஒருவேளை நீந்தி கரை சேர்ந்திருப்பேன்.
நம் மோதல்!
                         நம் காதலை காணால் நீராக்கியதால்
தினமும் கரை தேடி கரைகிறேன்
தினமும் இரை தேடும் காகாமாக !
           என் வாழ்க்கை உன்னால் சோகமாக!.

January 29, 2025, 12:35:29 am
Reply #8

Coffee

Re: கவிதையும் கானமும்-050
« Reply #8 on: January 29, 2025, 12:35:29 am »

காதல் வலி

காதல் வலி,  அந்த சொல்லொணா வலி,
இதயத்தைத் துளைக்கும் கத்தி போல,
ஆன்மாவிற்குள் ஊறும் விஷம் போல,
முழுமையாக ஆறாத வடுக்களை விட்டுச் செல்கிறது.

ஒரு காலத்தில் மகிழ்ச்சியைத் தந்த அந்த இனிமையான அணைப்பு,
இப்போது என்னை இழுத்துச் செல்லும் பாரமாக,
என்னை நிலத்தில் கட்டிப்போடும் சங்கிலியாக,
நான் அசைக்க முடியாத துக்கமாக உணர்கிறது.

ஒரு காலத்தில் என் இதயத்தை தீப்பிடிக்க வைத்த அந்தத் தொடுதல்,
இப்போது வலி மிகுந்த பாரம் போல,
உள்ளிருந்து தொடர்ச்சியாக துளைத்துக் கொண்டிருக்கும் வலி போல,
முழுமையாக ஆறாத காயம் போல
என்னை அழுத்திக் கொண்டே இருக்கிறது.

காதல் வலி, அந்த சொல்லொணா வலி,
என் உடலின் ஒவ்வொரு செல்களையும்
துளைக்கும் கூர்மையான வலி.
அசைக்க முடியாத சுமை போல
அந்த வலியை நான் சுமந்து கொண்டே இருக்கிறேன்.

காதல் வலி, அந்த சொல்லொணா வலியிலும்
என் காதல் எத்தனை மதிப்பானது என்பதை நான் அறிவேன்.
வலிக்கு உட்படுத்தும் என் காதலே என்னை வலிமையாக்குகிறது.
சொல்லொண்ணா வழியே என்னை குணப்படுத்துகிறது.
காதல் வலியின் அரவணைப்பில்
என்றேனும் அமைதி காண்வேன்

காதல் வலி, அந்த சொல்லொணா வலி
நீ தந்த அந்த வலி
வாழ்வில் எத்தனை எத்தனை வலிகளையும் எதிர்கொள்ள துணியும்
சக்தியை கொடுத்த அந்த வலி
இனி வாழ்வு எத்தனை அடிகளை
தந்தாலும் நான் தாங்கிக் கொள்வேன்

'அடேங்கப்பா
என்னா அடி
அடி ஒவ்வொண்ணும் இடி மாதிரில இருந்துச்சு...
ஆனா அவ்வளவு அடியிலயும்
நடுவுல நீ ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன்னு
சொன்ன பார்த்தியா...
போதும் ம்மா..போதும்