கனவும்.. வருங்காலமும்.. நானும் ...
சிறு கிள்ளையாய் நானும் ...கையில் என் பொம்மையும் ...
வழி தவிறிய கனவின் கொடூர வீதியிலே ...
இது கனவாய் இராதோ ...
பதறி எழுகிறேன் ஒவ்வொருநாளும் ...
அய்யோ இக்கனவு தான் கலையாதோ ....!!!
இறையே உன் செவிகளில் விழாதோ ....என் கூக்குரல்
கொடிய கனவில் திடுக்குற்று தனியே நான் ...
இல்லை இல்லை கையில் என்னுடன் என் பொம்மையும் கூடவே ...
அய்யோ இக்கனவு தான் கலையாதோ ....!!!
நிஜத்தில் என்னை உயிர்பித்தவர்களும்...
கனவில் இப்புகை மண்டலமும் -நித்தமும்
என்னை இருவேறு உலகில் நான் காண ...
அய்யோ இக்கனவு தான் கலையாதோ ....!!!
ஆயிரம் ஆசைகளுடன் அன்னை தந்தையின் கரம் பற்றி...நான் !!
நாளைய உலகில் சாதனை பல படைக்க... என் உளியானவர்கள் !!
கற்பனைக்கடங்கா வன்முறையின் உலகின் மிச்சமாய் இதோ நான் ...!!
அய்யோ இக்கனவு தான் கலையாதோ ....!!!
கனவாய் ஆகாதோ மீண்டும் உறங்கி எழ முயல்கிறேன் நான் ..
அய்யோ இக்கனவு தான் கலையாதோ ....!!!
வன்முறை ..வெடிகுண்டின் புகையாய் என் ஒரு கண்ணில்...
பயம் ...பரிதவிப்பின் பிம்பமாய் என் மறு கண்ணில் ...
கைகளும் தேடுதே பற்றியிருந்த என் பெற்றோரின் கரத்தை ..!!!
அய்யோ இக்கனவு தான் கலையாதோ ...!!!
கண்முன்னே பற்றியெரியும் போரின் கொடிய கோரப்பற்கள்...
வழி தவறிய புள்ளிமானாய் கண்ணீர் வற்றிய என்கண்கள்...
அன்னையின் அணைப்பில் தந்தையின் நிழலாய்...நினைவுகள்
போகும் பாதை.. பார்க்கும் தூரம் வரை அச்சுறுத்தும் ஆகாயம்...
அய்யோ இக்கனவு தான் கலையாதோ ...!!!
தொலைந்தது நானா..
தொலைத்தது என் வரும்காலமதையா...
அய்யோ இக்கனவு தான் கலையாதோ...!!!
கடக்கும் ஒவ்வொரு நொடியின் கனமும்
தாங்க இயலாத பச்சிளம் பிள்ளையாய்.. வழியறியா.. நான் ..
என் கண்ணில் தங்கள் கனவை கண்ட ...என் பெற்றோர் எங்கே ...??
இந்த புகை மண்டலமால் என் கண்ணீரில் கரைந்து தான் போனார்களோ ...
அய்யோ இக்கனவு தான் கலையாதோ...!!!
வருங்காலம் நான் காணும் முன்னே
இத்தேசம் சாம்பலாகிடுமோ...

இத்தேசம் எனக்கானதும் தானே ...
இந்த பூமி நமக்கானதும் தானே...
அய்யோ இக்கனவு தான் கலையாதோ...!!!
மனிதம் போற்றி .. நம் வாழ்வு சிறக்க
மனமில்லா இதயங்களின் ...கொடூரத்தின்
மிச்சமாய் இதோ... நான்
அய்யோ இக்கனவு தான் கலையாதோ...!!!!
அழகிய இந்த பூமி எனக்கானதே...ஆம் நமக்கானதே ....
இப்பூமியை பேணி ...பாதுகாப்பாய்... நாம் வாழ
வன்முறை ஒழிய ...வாழும் வழி தெரிய ...கனவு மெய்ப்பட
மனிதம் போற்றி... அன்பால் புதிய உலகு செய்வோம்...👍
வா இவ்வுலகம் என்னுடையது....
வா இவ்வுலகம் நம்முடையது....
வன்முறையில்லா... போட்டியில்லயா... வஞ்சனையில்லா ...
அழகிய பூமி...💕
நம் தாய் பூமி...💕
நம் பூமி ...💕
என்றும் மனிதம் காப்போம்💝
இப்படிக்கு என்றும்... தென்றலாகிய💕 நான்💕 ...