See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#023
வணக்கம் Sangeetha Megam Team BULLET and LovelY சங்கீத மேகம் நிகழச்சியில் நான் இரண்டாவது முறையாக மீண்டும் கலந்துகொள்ள முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி... எனக்கு மிகவும் பிடித்த பாடல்: ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் திரைப்படத்தின் பெயர்: லேசா லேசா பாடியவர்கள்: Harish Raghavendra, Srilekha Parthasarathy, மற்றும் Franko நடிகர்கள்: Shyam, Trisha பாடல் வரிகள்: Vaali இசை: Harris Jayaraj இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்: நல்ல மனம் உன் போல் கிடையாது நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது ஒரு தாய் நீ உன் சேய் நான் இந்த உறவுக்கு பிரிவேது தாய்மடியில் சேய்தான் வரலாமா தள்ளி நின்று துன்பம் தரலாமா உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச என்னை தனியில் விடலாமா வெண்ணிலவை பூவாய் வைப்பேனே வானவில்லை உடையாய் தைப்பேனே உனக்காக ஏதும் செய்வேன் நீ எனக்கென செய்வாயோ இந்த ஒரு ஜென்மம் போதாது ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது அந்த தெய்வம் உன்னை காக்க தினம் தொழுவேன் தவறாது என்ன நான் கேட்பேன் தெரியாதா இன்னும் என் மனம் புரியாதா அட ராமா இவன் பாடு இந்த பெண்மை அறியாதா ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன் உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன் உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களின் ஒன்று. எனக்கு பிடித்த இந்த பாடலை நான் உயிராக நேசிக்கும் என் Aaliya விற்கு இந்த பாடலை நான் Dedicate செய்கிறேன்... இந்த பாடலை நானும் Aaliya வும், GTC நண்பர்களோடு சேர்ந்து கேட்க ஆசை படுகிறேன். மீண்டும் ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுத்த சங்கீத மேகம் குழுவிற்கும், GTC FM க்கும் மற்றும் COFFEE BOY அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இப்படிக்கு என்றும் உங்கள் நண்பன் NATURE LOVER April 02, 2023, 10:42:11 pm |
1 |
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11
My place on 9.5.2023
April 26, 2023, 12:50:29 am |
1 |
Re: Happy Friendship Day 2023
Wish you a very Happy Friendship day to all My GTC lovable friends❤️❤️❤️❤️
August 06, 2023, 01:35:10 am |
1 |
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#037
My place
August 13, 2023, 07:38:49 pm |
1 |
Re: Happy Independence Day 2023
Happy Independence day to all My GTC lovable friends🇮🇳🇮🇳🇮🇳
August 15, 2023, 07:50:23 am |
1 |
Re: Happy Birthday Vels
Wish you a Happy birthday Vels bro🎉🎉🎉
August 18, 2023, 04:30:24 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-029
ஓ....இயற்கையே இயற்கையே!!! ஓ....மழையே மழையே!!! மேள தாளத்துடன் இடியினை கொண்டு வா!!! ஓ....மழையே மழையே மின்னல் ஒளியினால் தோரணத்தை கட்ட வா!!! ஓ....மழையே மழையே உன் ஈரத்தினால் ஒத்தடம் போல முத்தம் நூறு நீ கொடுத்து என்னை மொத்தமாக கொள்ளை அடிக்க வா!!! ஓ....மழையே மழையே உன் தீண்டலால் மீண்டும் என்னை குழந்தை போல மாற்றிட வா!!! ஓ....மழையே மழையே புத்தம் புது மனிதனாய் நான் அவதரிக்க என்னை ஆசிர்வதிக்க வா!!! ஓ....மழையே மழையே வாடிய பயிர்களுக்கு உயிர் கொடுக்க பறந்து வா!!! ஓ....மழையே மழையே ஏழைகள் மற்றும் விவசாயிகளின் கண்ணீரை துடைக்க நீயும் மண்ணில் வா!!! ஓ....மழையே மழையே வெட்கத்தை தொலைத்து வெளியிலே பூத்து வா!!! ஓ....மழையே மழையே பூமியின் ஏக்கத்தை பூர்த்தி செய்ய உடைந்து வா!!! ஓ....மழையே மழையே பூக்களின் வாசத்தை தலையிலே சூட வா!!! ஓ....மழையே மழையே மண்ணின் சாயத்தை உடம்பிலே பூசி குளிக்க வா!!! ஓ....மழையே மழையே பூமிக்கு உதிரத்தை தானமாக கொடுக்க வா!!! ஓ....மழையே மழையே மண்ணுக்கு உந்தன் சக்தியினை ஆணுவாக கொடுக்க வா!!! ஓ....மழையே மழையே சின்னஞ்சிறு விளையாட்டு பிள்ளையாய் வீதியிலே வீசி விளையாட வா!!! ஓ....மழையே மழையே உந்தன் விரதத்தை முடித்துக் கொள்ள மண்சாதத்தை உண்ண வா!!! ஓ....மழையே மழையே பல நாட்களாய் படுத்த படுக்கையாய் செடி கொடிகள் எல்லாம் வாடிப் போய் கிடக்கு வா!!! ஓ....மழையே மழையே உனக்காகவே நானும் நாள் கணக்காய் உனக்காகவே ஏக்கத்தோடு காத்திருக்கிறேன் வா!!! நாம் வாழ எல்லாவற்றையும் இழந்தோம்..... இயற்கையான நிலம், சுத்தமான நீர், தூய்மையான காற்று..... இனி வரப்போகும் தலைமுறைகளுக்காக வரப்போகும் மழை நீரையாவது சேமிப்போம்...... மரம் வளர்ப்போம்!!! மழை பெறுவோம்!!! இப்படிக்கு உங்கள், NATURE LOVER (இயற்கை நேசகன்) August 20, 2023, 11:34:02 am |
1 |
Re: கவிதையும் கானமும்-030
அம்மா நீ தான் என் முதல் உயிர் பெண் தோழி!!! அம்மா என் உருவத்தையும், என் முகத்தையும் காணும் முன்பே, என் குணத்தை அறியும் முன்பே நான் உன் கருவில் இருக்கும் போதே என்னை காதலித்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!! அம்மா என்னை ஈன்றெடுக்கும் முன்பே என்னை கட்டித் தழுவி அரவணைத்து கொண்ட என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!! அம்மா என் குரல் கேட்கும் முன்பே உன் மெல்லிய குரலில் என்னோடு உரையாடிய என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!! அம்மா என்னை ஈன்றெடுத்த பின்பு முதன்முதலில், என் முகத்தைப் பார்த்து முத்தமிட்ட என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!! அம்மா என்னை உன் மார்பிலும், தோளிலும் சுமந்து என் முகத்திலிருந்து எனது பிஞ்சு பாதங்கள் வரை முத்தத்தால் என்னை கொஞ்சி ரசித்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!! அம்மா இரவு, பகல் என்றும் பாராமல் சிப்பிக்குள் முத்து போல என்னை அன்போடு பாதுகாத்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!! மா... மா... அம்மா என முதன் முதலாக வாய் திறந்து தித்திக்கும் தமிழில் பேசியதை பார்த்து என்னை கட்டி அணைத்து கொண்ட என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!! நான் தத்தித் தவழ்ந்து நடக்கும் போது என் அழகை ரசித்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!! நான் தடுமாறி கீழே விழுந்த போது எனக்காக கண்ணீர் சிந்திய என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!! சாலையில் செல்லும் போது மழையிலும், வெயிலிலும் உன் சேலையின் முந்தானையில் என் மேனியை பாதுகாத்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!! மழையில் விளையாடி நனைந்த என்னை பாசத்தோடு என் தலையை துவட்டி விட்ட என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!! எனது பள்ளி பருவத்திலும் சரி எனது கல்லூரி பருவத்திலும் சரி எனது வெற்றிகளை பெருமையோடு மற்றவர்களிடம் கூறி புன்னகையோடு என்னைப் பாராட்டி நான் பெற்ற வெற்றிக்கு எனக்கு உறுதுணையாய் இருந்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!! நான் சோர்ந்து போய் வந்தாலும் சரி நான் தோற்றுப் போய் வந்தாலும் சரி உன்னால் முடியுமென்று என்னை தட்டி தோள் கொடுத்து என்றுமே எனக்கு ஆதரவு கரமாக இருந்த முதல் (உயிர்த் தோழி).... நீயே அம்மா!!! அம்மா மற்றவர்கள் என்னை திட்டினாலும், ஏசினாலும் யாரிடமும் என்னை விட்டுக் கொடுக்காமல் ஆதரித்த என் முதல் (உயிர்த் தோழி).... நீயே அம்மா!!! அம்மா நான் பிறக்கும் வரை என்னை உன் கருவினில் சுமந்து!!! நீ இறக்கும் வரை என்னை உன் இதயத்தில் சுமந்த!!! என் வாழ்வின் சிறந்த (உயிர்த் தோழி) நீயே அம்மா.... தனிமையில் அழுகிறேன் உன்னை நினைத்து தினமும்!!! அம்மா என் (உயிர்த் தோழியே) எனக்கு நீ வேண்டும்.... அம்மா என் (உயிர்த் தோழியே) மீண்டும் நீ வேண்டும் வருவாயா!!! அம்மா என் (உயிர்த் தோழியே) என் ஏக்கம் தீர்ப்பாயா!!! அம்மா... என் (உயிர்த் தோழியே) பாசத்தின் வறுமையில் ஏங்கித் தவிக்கிறேன்.... அம்மா... என் (உயிர்த் தோழியே) உன் நேசத்தை கொண்டு என் ஏக்கத்தை தீர்க்க மீண்டும் வருவாயா.... காத்திருக்கிறேன் அம்மா உனக்காக என் முதல் உயிர்த் தோழியே!!! அன்னையும் நீயே என் ஆருயிர் நண்பியும் நீயே!!! என் ஆதி முதல் அந்தம் வரை என் நினைவுகளில் என்றும் முதல் அன்னையும் தோழியும் நீயே!!! இவ்வாழ்க்கையையும் இந்த உலகையும் அறிமுகம் செய்த அன்னையே உன் புதல்வனின் அன்பின் ஆசையும் ஏக்கமும் நிறைந்த இவ்வரிகளை என் அன்பின் அன்னை தோழிக்கு சமர்ப்பிக்கிறேன்!!! இப்படிக்கு உங்கள், NATURE LOVER (இயற்கை நேசகன்) September 05, 2023, 06:55:34 pm |
2 |
Re: Happy Birthday KIlLivAlavAn
Wish you a Happy Birthday KIlLivAlavAn machi😘😘🎉🎉🎉
September 06, 2023, 04:28:42 am |
1 |
Re: THIS OR THAT
Animals Beach or Forest September 12, 2023, 03:00:35 am |
1 |