Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-047  (Read 3089 times)

September 09, 2024, 06:20:38 pm
Read 3089 times

RiJiA

கவிதையும் கானமும்-047
« on: September 09, 2024, 06:20:38 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-047


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: September 30, 2024, 03:30:45 pm by RiJiA »

September 10, 2024, 09:00:11 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-047
« Reply #1 on: September 10, 2024, 09:00:11 am »
தரணியில் அன்னையை போல்
நம்மைக் காக்கும் தெய்வம்
இன்னும் தோன்றவில்லையே..!


ஒருவர் இருக்கும் பொழுது அவர்கள் அருமை பலருக்கு புரிவதில்லை.. அவர்கள் இல்லாத பொழுது ஏற்படும் வலி நாம் அனைவரும் உணர்ந்ததே!! அப்படி பெற்றோரை இழந்து வாழும் என் அம்முவிற்கு இந்த படைப்பு சமர்ப்பணம்🙏

ஐயிரு திங்கள்
அங்கம் சுமந்து
ஐயமர நாளும் காத்தாய்!

கருவாய் என்னை
உணர்ந்ததுமே
உருவம் மனதிற்குள் தந்தாய்!

வெளிவரா என்னோடு
வெளிப்படுத்தினாய்
உன் உணர்வுகளை!

அசைவுகளை கண்டே
ஆனந்தம் கொண்டாய்
அழகாய் உன் நெஞ்சில்!

நாட்கள் செல்லச் செல்ல
நான் வெளிவரும்
நாட்களை எண்ணினாய்!

மாதமோ நெருங்கி வர
மனமெங்கும்
மாற்றெங்கள் பல கண்டாய்!

உள்ளுக்குள்ளே
நான் உதைக்க
உனக்கோ ஆனந்த கொண்டாட்டம்!

உருண்டு படுக்க
உடல் விழைந்தாலும்
உறக்கமில்லா திண்டாட்டம்!

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மாற்றம் கண்டு
மனமெங்கும் பூரித்தாய்!

நெருங்கி வரும்
நாளை எண்ணி
மனதிற்குள் பயமும் கொண்டாய்!

வலியை மெதுவாய்
உணர்கையில்
மகிழ்ச்சியே அடைந்தாய்!

தசைகள் கிழிய
எலும்புகள் உடைய
எனக்காய் தாங்கிக் கொண்டாய்!

உதிரம் சொட்ட
உனக்கும் வலிக்க
என்னை ஈன்றாய் என்தாயே!

பட்ட துன்பம்
அத்தனையும்
பாலகன் என் முகம் காணவோ?

தொட்டு என்னை
தூக்கிடவே - பட்ட
தொல்லையெல்லாம் மறந்தாயே!

உந்தன் உதிரத்தைப்
பாலாய் எனக்களித்து
இரத்த ஓட்டம் கொடுத்தாயே!

என்னுள் துடிக்கும்
இதயத்தை விட
அதிகமாய் எனக்காய் துடித்தாயே!

தந்தை கையில்
என்னைத் தந்து
தவழக் கண்டு அகங்குளிர்ந்தாய்!


நான் பிறக்க நீ பட்ட கஷ்டம் என்னென்னவோ என்று  நான் என்னி பார்க்கும் முன்னே நான் வளர நீ அடுத்த ஒரு யுத்தத்தை தொடங்கி விட்டாய்!

எனக்காக வெயில் மழை பாராமல் நீ உழைக்க
உன் அங்கம் குளிர அந்த கார்மேகம் மழையாய் தூவையிலே என் மகரந்த பூவை தழுவ எனக்கு மட்டுமே உரிமை உண்டென குடை விரித்தேன்!

நீ பட்ட துயரை கண்டு என் உடல் தோலை உரித்து அதில் ஒரு குடை உருவாக்கி உன்னை காக்க என் மனம் துடிக்க ஆனால் இந்த ஜனனம் குடுத்த என் வாழும் தெய்வத்திற்கு உன் ஆயுள் முழுக்க பணிவிடை செய்ய வேண்டி என் மனதை கல்லாக்கி ஏதோ ஒரு துணியில் ஆன ஒரு குடை விரித்தேன் என் வாழும் தெய்வமே!




September 12, 2024, 07:07:04 pm
Reply #2

Shree

Re: கவிதையும் கானமும்-047
« Reply #2 on: September 12, 2024, 07:07:04 pm »

உன் கார்குழலை வருடும் காற்றாக


உருவம் அறியா பொழுது முதல் தோன்றிய நேசம்
அவளோடு என்னை ஓர் உயரிய உயிரின் பொருளாகவைத்தது.

உயிராக நான் என்று ஆன பின் - அவளோடு
உயர்வாக எண்ணிய அனைத்தும் துகள்களாக மாறின

தன்னோடு தான் கொண்ட துயர்களை சிறு பணிவோடு ஏற்றவாறே
தன் நேசத்தை, உயிர் பொருளின் சிறப்பாக தனக்குள்
சேமித்தாள்

தன்னைப்பற்றிய சஞ்சலம் சிறிதளவு கூட கொள்ளாமல்
தன் தனித்துவமான அன்பின் வழியில் தூய சுடர் ஏற்றுவாள்
 
தன் கருவிழிகளுக்குள் சிறு தூசு அண்டாதவாறு தனக்குள் தூய்மையாக தனக்கென அடைகாப்பாள் 

அன்பின் அனைத்துமாக தான் என இருப்பினும்
தாம் பெற்ற இடர் ஏதும் செயல் இழந்தவாறு கையாளுவாள்
 
தனக்கென தேவை ஏதும் ஏற்காமல் என் தேவையை பெரிதென கண்டாள்

எனக்காய் நீ  இருந்த நாட்கள் அனைத்தும் உணர்த்தியவை யாதெனில்
உன்னில் நானாய் என்றும் உனக்காக நான் வேண்டும் என்று
 
உன்னிடத்தில் மடி  சாய்ந்து என்னை மறந்த நேரங்களில் கூடாத மதிப்பு
ஏனோ எனக்காய் நீ  உழைத்த நேரங்களில் கண்ணீர் மல்க கூடியது

சிறிய இடைவேளையை கூட உனது புன்னகையில் இதழ் கூப்பி
என் நேரத்தை பொன் போன்று மதிப்பிட செய்தாய்

வார்த்தைகளால் விவரிக்க முடியாத உன் அன்பில் நீந்திய என்னை
ஏனோ ஒரு புயல் இன்னொரு கரை கொண்டு சேர்த்தது

புயலை கண்டு அஞ்சிய நான் வசிப்பது முழுதும் உன் சுயநலமே இல்லாத அன்பின் வகையின் பொருட்டாய்

கரை கடந்து புயல் போன பின்னும்
உன் நினைவை கடக்க தெரியாத நான் கொள்ளும் எண்ணம் யாதெனில் 
புயல் ஓய்ந்த பின்  மழையின் சாரலை கண்டு ரசிக்கும் அமைதியான சூழலில் மெல்ல உன் கார்குழலை வருடும் காற்றாக நான் மாற வேண்டுமென

« Last Edit: September 13, 2024, 08:14:43 am by Shree »
ஶ்ரீ

September 18, 2024, 10:26:00 am
Reply #3

kathija

Re: கவிதையும் கானமும்-047
« Reply #3 on: September 18, 2024, 10:26:00 am »
Hi rijia sis, lv u so much for ur effort

அம்மா:

கருவறையில் என்னை தாங்கியவள்
தன் இதயத்தில் என் உயிரை சுமப்பவள்
தூங்கும் இமை நடுவே தூங்காமல் என்னை காப்பவள்
 நான் பசிமறக்க தன் பசியை மறந்தவள்


 கோபவம் என்னை தினமும் சூழும்
எனோ அன்னையே உன்னிடம் அது என்றுமே வாராதோ!

கோவில் தேவையில்லை
தெய்வமும் தேவையில்லை

அந்த தெய்வத்திடம் கூட கண்டதில்லை உன் போன்ற பாதுகாப்பை
அழும் போது நான் அழைப்பதும் அம்மா!
பசிக்கும் போது நான் அழைப்பதும் அம்மா!
வலி என்றால் நான் ஓடி வருவதும் அம்மா!

என்னை நாளும் ஒரு ஒரு கணமும் பேணிகாப்பதால் தான் என்னவோ!
எனக்கு தெய்வமும் கூட தேவைப்படுவதில்லை

 என்னை தாங்கிய உன்னை
நான் தாங்குவேன்

நானும் புரிந்து கொண்டேன்
தாயின்றி வேறில்லை என்று

நீ பட்ட துயரத்திற்கு முன் நான் என்செய்வேன் தாயே!
நன்றி கடனாக உன்னை காப்பதை தவிர

இல்லாதபோது அன்னையை நினைத்து நாம் வடிக்கும் கண்ணீரை விட
 அவள் தவிக்கும் போது கொடுக்கும் தண்ணீர் சிறந்தது

 என்றும் காப்பேன் என் தாயை என் மூச்சின் இறுதிவரை

Raam movie la irunthu ararari raro naan ingku paada song podunga plz
thish song dedicated for my amma
;) :) :)

September 18, 2024, 11:05:27 am
Reply #4

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-047
« Reply #4 on: September 18, 2024, 11:05:27 am »
குடைக்குள் அன்னை


என்னை காணாதபோதே பாசம் வைத்தவள் அன்னை

கர்ப்பத்தின் காலத்தில் நீ என்னை கருத்தாய் பாதுகாத்தாய்
உனக்கு எத்தனை  இன்னல்கள் வந்தாலும் …

கருவறை நான் பூமிக்கு வரும் முன்னால்  தங்கியிருந்த
நந்தவனம் …

கலப்படம் இல்லாத காற்றை சுவாசித்தேன்  கருவறையில்

வற்றிபோகாத நதி ஒன்று உண்டென்றால் அது அன்னையின்
அரவணைப்பும் பாசமும் தான் ...

கோடிகள் குவித்துவைத்தாலும் கிடைக்காத ஒன்று அன்னையின் அன்பு

பாசத்தில் என்னை வசீகரித்தவள்  சமையலில் என்னை வசீகரித்தவள்
வசீகரிப்பதில் ராணி அன்பின் மூலமாக …

தனக்கென்று ஏதும் செய்யாத உள்ளம் தாயின் உள்ளம் …

நாம் நேரத்திற்கு சாப்படிவதர்க்காகவே அவள் சாப்பிடும் நேரத்தை குறைப்பவள் ...

அனைத்து பாசத்தையும் கொடிவளர்ப்பதால்தான் என்னவோ கடவுளுக்கு மேல்
அன்னை வகிக்கிறாள் முதல் இடத்தில் …

தனக்கு இருக்கும் இன்பத்தையெல்லாம் மூட்டைகட்டிவிட்டு
என்னுடைய இன்பத்தை சுமந்தாள் வாழ்நாளெல்லாம்  …

ஒரு எறும்புக்கடித்துவிட்டாலும் பொறுக்காத மனது அன்னையின் மனது …

அன்னையிடம் நீ அன்பை வங்காளம் என்ற கூற்று உண்மையாய்
இருக்கிறது அன்னை இருக்கும் அணைத்து வீட்டிலும் …


கணவன் தன்னை சுயநலத்தின்முலம் கைவிட்டாலும்
பிள்ளைகளை இறுதிவரை சுமப்பவள் அன்னை …


தன் இரத்தத்தை பாலாக உன்ன தந்தவள்
இன்று எனக்காக வேர்வை சிந்தி உழைக்கிறாள் …
 

காரணம் ஒன்றுதான் பாசம் …


கொட்டும் மழையிலும் எனக்காக உழைக்கிறாயே தாயே !
உனக்கு மகனாக இருக்க என்ன தவம் செய்தேன் தாயே!
உனது வாழ்நாள் முழுவதும் உனது பாதத்திற்கு காலனியாய்  இருப்பேன் தாயே !
என்னை கண்ணின் மணிபோல பார்க்கிறாயே நீயே எந்தன் தாயே !

உயரம் எட்டவில்லையென்றாலும்  மழையாய் உன்மேல் படவிடமாட்டேன் தாயே ☔
நாற்காலி போடு குடைக்குள் வைத்து உன்னை பாதுகாப்பேன்  தாயே ...


ஆயிரம் வார்த்தைகள் தமிழில் இருந்தலும் உயிருள்ள வார்த்தை "அம்மா"

வாழும் தெய்வங்களான அனைத்து அன்னைக்கு ஒரு சமர்ப்பணம் !


இது என்னது கடைசி கவிதை


நன்றி ரிஜியா மற்றும் வாழ்த்துக்கள் 💐

நீலவானம்
« Last Edit: September 19, 2024, 01:39:46 pm by Passing Clouds »

September 18, 2024, 03:42:17 pm
Reply #5

Globe

Re: கவிதையும் கானமும்-047
« Reply #5 on: September 18, 2024, 03:42:17 pm »
என் அம்மாவுக்கு என் முதல் கவிதை…

அம்மா…
என் பேரில் நீ கவிதையை வைத்தாலும்…
எனக்கு என்னவோ கவிதையே வரவில்லையே அம்மா…
என்னைக் கண்டு அது மிக தூரத்தில் அல்லவா நிற்கிறது…

இருந்தும் உனக்காக ஒரு சிறு கவிதை - இது கவிதை என்றால்….

அம்மா…
நீ என்னிடம் அடிக்கடி சொல்வது…
நீ ஆணாகப் பிறக்க வேண்டியவள்...
பெண்ணாக பிறந்து விட்டாய் என்று…

நான் பெண்ணாகப் பிறந்தாலும்…
உனக்கு நான் பெண் உருவத்தில் இருக்கும் மகன் தான் அம்மா…

உண்மையான அன்புக்காக மட்டுமே
உன் தலை குனிய வேண்டும் என்று சொல்லிச் சொல்லி என்னை வளர்த்தவள் நீ…
காலில் கூட விழு…
தவறு ஒன்றும் இல்லை…
ஆனால் அது உண்மையான அன்பாய் இருக்க வேண்டும் என்று சொல்வாய்…

இன்று வரை நான் அதைக் கடைப்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறேன் அம்மா…

உன்னைப் பாதுகாத்துக் கொள்வேன் என் அன்பில்…
ஆண் மகன் உருவத்தில் இருக்கும் கவசமாய் நான் உன் அருகில்…

அந்தக் கதிரவன் கூட உன்னைத் தொடாமல் பார்த்துக் கொள்வேன் நான்…

நீ வீட்டுப் பணிகளைச் செய்யும்போது…
நானும் உதவி பண்ணவா அம்மா…? என்று கேட்டால்…

வேண்டாம் ஐயா, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு
மௌனமாய் சிரிப்பாய்…
அந்தச் சிரிப்பின் அர்த்தம் எனக்குப் புரிந்தது அம்மா…

சிறுவன் இவன்…
இவனால் என்ன முடியும் என்று நீ உன் மனதில் நினைக்கிறது எனக்குக் கேட்கிறது…

என்னைச் சிறுவன் என்று எண்ணாதே அம்மா…
நான் சிறுவன் ஆனாலும்….
உன் மீது நான் கொண்ட அன்பு மிகப் பெரியது..
அது அளவில்லாதது…
இந்தப் பிரபஞ்சத்தை விட மிகச் சிறந்தது.

உன் சுமையைக் குறைக்க என்னால் இயன்ற அனைத்தும் செய்வேன் அம்மா..

உன்னைப் பாதுகாக்க எனக்கு உடல் வலிமை இல்லாமல் இருக்கலாம்... ஆனால் எனது அன்பினால் உன்னை எந்தத் தீங்கிலிருந்தும் காப்பாற்றுவதற்கு நிச்சயமாக நான் வல்லவனாய் திகழ்வேன்.

இந்தக் கவிதையின் தொடக்கத்தில் கவிதைக்கும் எனக்கும் கடலளவு இடைவெளி இருந்ததாய் உணர்ந்தேன்…
ஆனால் முடிக்கும் இத்தருணத்தில் கொஞ்சம் என்னருகில் வந்ததாய் உணர்கிறேன்…

இது தான் அம்மாவின் மகிமை…
அவள் இருந்தாலும் இறந்தாலும்…
அவள் நினைப்பு கூட நம்மைச் சாதிக்க வைக்கும்…

நீ ‘அங்கிருந்து’ என் கவிதையைக் கேட்பாய் என்ற நம்பிக்கையில்…
இதோ என் முதல் கவிதை…
நான் உனக்காகச் சமர்ப்பிக்கிறேன் அம்மா…

என்றும் உன் ஆண் மகள் நான்… I love you Maa….


“Mothers hold their children’s hands for a short while, but their hearts forever.” — Unknown


Thanks a lot to RiJiA dear for this amazing picture. This image somehow has inspired me (with my limited knowledge in Tamil language) to come up with this piece of writing. I would like to thank my colleague as well for helping me with the Tamil font for my Tanglish.

September 18, 2024, 04:10:43 pm
Reply #6
Re: கவிதையும் கானமும்-047
« Reply #6 on: September 18, 2024, 04:10:43 pm »
எம்மா !  🤣

ஏலே ! பத்து மணியானாளும்
பதராம நீ துங்குவ . இங்க
பயித்தியக் காரி ஒருத்தி இருக்கேன்லா
உங்களுக்கு பாடு தொலைக்கன்னு  - நீ புலம்பும் சத்தம்
அனுதினமும் அதிகாலையில் எனக்கு அலாரமாகும் !


எம்மா !  எங்கம்மா போன நீ !
வீடுன்னு இருக்கமாட்டியா நீ ! அப்படின்னு நா கேட்டா ?
ஏம்லே ! உசிரு போற மாதிரி கத்துற
உனக்கு என்னய மட்டும் வீட்லயே சிலையடிச்சு வைக்கனுமே !
அப்பனுக்கு பிள்ள தப்பாம பொறந்துருக்கன்னு -  நீ ஆரம்பிக்கும் வசை
நாளெல்லாம் எனக்கு இசையாகும் !


எம்மா ! எனக்கு ஏழு கழுத வயசானாலும் 
எப்போதுமே என் தலைக்கு எண்ணெய் தேய்க்கும்
உன் கரங்கள் என்றுமே
எனக்கு வரமாகும் .

எம்மா ! எத்தனை முறை சாப்பிட்டாலும் என்னைக்குமே சலிச்சதில்ல .
நீ வைக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
என்றுமே எனக்கு அமிர்தமாகும்  .

எம்மா ! உப்புமா எனக்கு வேண்டாம்னு ஒத்த கால்ல நா நின்னா
வம்படியா வந்து என் வாயில் நீ திணிக்கும்
ஒரு வாய் உப்புமா நாளெல்லாம் என் நாக்குல இனிக்கும்.

எம்மா ! ஆத்துக்கு நா குளிக்க போனா !
 ஏலே ரொம்ப நேரம் தண்ணியில ஆடிக்கிட்டே இருக்காம ஆறு மணிக்குள்ள வீட்டுக்குவான்னு நீ பாசமா சொல்லும் வார்த்தை
என்றுமே எனக்கு பாடமாகும்.

எம்மா ! ஆசையா என்கிட்ட வந்து
வசந்தமாளிகை பட பாட்டு போடு ,
வாய்க்குரிசியா ஒரு டீ போடுன்னு 
நீ வைக்கும் கோரிக்கைகள் என்றுமே
எனக்கு வேடிக்கையாகும்.

எம்மா ! மூத்தமகன் ஒரு முழுமாடு ,
கடைக்குட்டி தான் என் கன்னுக்குட்டின்னு
தம்பிய நீ ஆசையா  கொஞ்சும் போது
அது என்றுமே எனக்கு வயித்தெரிச்சலாகும் .


எம்மா ! செல்போன் பாத்துட்டே நான் சிரிச்சா
ஏலே ! எவள பாத்து சிரிச்சுட்டு இருக்க?
எவ்வளவு நேரமா தா போன் பேசுவ ?
எத்தனை தடவ தான் தல சீவுவன்னு நீ வரிசையாய்
அடுக்கும் கேள்விகள் என்றுமே எனது வாடிக்கையாகும்.


எம்மா !
இப்படி நாளெல்லாம் உன் புராணத்த
சொல்லிக்கொண்டே இருப்பேன் சோர்ந்து போகாமல்.

எம்மா !

தொப்புள் கொடி அறுத்து !
தொட்டில் சுகம் கொடுத்து !
என் தொல்லைகள் பல பொருத்து !
உன் உள்ளத்தை இரும்பாக்கி !
உன் உதிரத்தை பாலாக்கி !
இன்று என்னையும் ஓர் ஆளாக்கி !
இங்கு
நான் எழுதிய கவிதைக்கு உன்னையே சொல்லாக்கி !
எய்துள்ளேன் உன் அன்பை அம்பாக்கி !

September 19, 2024, 10:26:07 am
Reply #7

Misty Sky

Re: கவிதையும் கானமும்-047
« Reply #7 on: September 19, 2024, 10:26:07 am »
"என் அன்பு தேவதை அம்மா"

"அம்மா எனக்கு முகவரி கொடுத்தது நீங்கள், இவ்வுலக வாழ்க்கையை அறிமுகம் செய்த அன்னையே உன் புதல்வனின் அன்பின் ஆசையும், ஏக்கமும் நிறைந்த இக்கவிதையை என் அன்புமிக்க அன்னையே உனக்காக நான் சமர்ப்பிக்கிறேன்!!!

"அம்மா மூன்றெழுத்து மந்திரமவள்
தன் மூச்சுக்காற்றை கொடுத்தவள்
தன் உடலுக்குள் வாழ தனியறையை தந்தவள்"
"அம்மா தொப்புள் கொடி தந்த உறவு
என்னை தொட்டு வளர்த்த சிறகு
என்னை தொட்டு வளர்த்த சிறகு"

"அம்மா உன் கருவில் என்னைச் சுமந்து தவமாய் தவமிருந்து
பத்து திங்கள் காத்திருந்தாய்
முத்துப்போல பெற்றெடுத்தாய்
இந்த உலகிற்கு என்னை அறிமுகம் செய்தாய்"
"உன் மார்போடு என்னை அணைத்து என் பசியை போக்கினாய்"
"உன் மனதார என்மேல் அன்பையும், பாசத்தையும் பொழிந்தாய்"
"உன் அழகிய கரங்களால் என்னைக் கட்டித் தழுவி அணைத்தாய்"
"மா... மா... அம்மா, எனும் சொல்லில் என் நாவின் மழலை மொழி கேட்டு மகிழ்ந்தாய்"
"நான் தத்தித் தத்தி நடந்து வந்தால் உன் கைகளைத் தட்டி ரசித்தாய்"
"நான் முட்டி மோதி கீழே விழுந்தால்
பதறி வந்து என்னை தூக்கினாய்"

"அம்மா உன் பசி மறந்து என் பசி போக்க நித்தம் பாடுபட்டவளே"
"அம்மா உன் வியர்வைத் துளிகளில் உடல் நனைய அயர்வின்றி எனக்காய் உழைத்தவளே"
"அம்மா உன் உடலை வருத்தி உடல்மிக வளைந்து அயராது கால் தேய நடந்தவளே"
"அம்மா நான் இறைவன் தந்த செல்வம் என்று இன்பத்துடன் இரவும், பகலும் கண்விழித்து என்னை காத்தவளே"
"அம்மா எத்தனை வயது நான் கடந்தாலும் என்றும் என்னை குழந்தையாக நினைத்து நேசித்தவளே"

"தாய் சேலையின் தொட்டிலில் தூங்கும் சுகம்"
"தாய் சேலையின் தொட்டிலில் தூங்கும் சுகம்"
"அது நம் பட்டு மொத்தையில் தூங்கினாலும் கூட கிடைக்காத வரம்"

"நம் தாய் மடியில் கிடைக்கும் நிம்மதி"
"நம் தாய் மடியில் கிடைக்கும் நிம்மதி"
"நாம் கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத வெகுமதி"

"தாய் அவளின் பாசம்
உலகெங்கும் பேசும்"
"தாய் அவளின் நேசம்
அளவில்லாமல் வீசும்"
"எத்தனை முறை யோசித்தாலும் விடை தெரியாத கணிதம்!! தாயின் பாசம்"
"பாசத்தையும், நேசத்தையும் அள்ளிக் கொடுப்பதில் அன்னை தெய்வத்திற்கு நிகரானவள்"
"பாசத்தையும், நேசத்தையும் அள்ளிக் கொடுப்பதில் அன்னை தெய்வத்திற்கு நிகரானவள்"

"என் தாயின் பாசத்தில் நான் அன்பின் முழு ஆழத்தை அறிந்தேன்"
"என் தாயின் பாசத்தில் நான் அன்பின் முழு ஆழத்தை அறிந்தேன்"
"என் தாயின் இறப்பில் நான் ஒரு அனாதையாக உணர்ந்தேன்"
"என் தாயின் இறப்பில் நான் ஒரு அனாதையாக உணர்ந்தேன்"

"அம்மா உன் ஆயுள் முழுவதும் எனக்கு பாசத்தை குறைவின்றி கொடுத்தாய்"
"அம்மா உன் ஆயுள் முழுவதும் எனக்கு நேசத்தை நிறைவின்றி கொடுத்தாய்"

"அம்மா நான் தவறான பாதையில் தடுமாறிப் போகாமல் உரிமையெனும் உளி பிடித்து என்னை ஒரு கலையாக உருவாக்கிய சிற்பி நீ"
"அம்மா எனக்காய் வாழ்ந்த தெய்வம் நீ"
"அம்மா எனக்காய் வாழ்ந்த தெய்வம் நீ"
"எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், எந்தன் முதல் தெய்வம் நீ
எந்தன் முதல் தெய்வம் நீ"

"அம்மா
உன் கண்ணின் கனவுகள் நான்
உன் வாழ்வின் வானவில் நான்
எனக்கென வாழ்ந்தாய் நீயே
என் உயிரில் கலந்துவிட்டாய் தாயே
என் உயிரில் கலந்துவிட்டாய் தாயே"

"அம்மா ஆயிரம் உலக அழகி வந்தாலும் நீ தான் எனக்கு முதல் அழகி"
"வயது பல கடந்தாலும்
உயர்ந்த நிலையை அடைந்தாலும்
அன்னையின் மடிக்கு ஏங்காதவர் அகிலத்தில் இருக்க முடியாது"

"நமக்கு உயிரையும், உணவையும், அன்பையும், பாசத்தையும் ஊட்டி வளர்த்த அன்னைக்கு உண்மையான அன்பையும், உரிமையையும் கொடுப்போம்"

"துளசியின் தூய்மை"
"மலர்களின் மென்மை"
"மனதால் வலிமை"
"உடலால் பெண்மை"
"இவை அனைத்தும் சேர்ந்து தான் தாய்மை"
"இவை அனைத்தும் சேர்ந்து தான் தாய்மை"
"தாய்மையை போற்றுவதே நமது மேன்மை"
"தாய்மையை போற்றுவதே நமது மேன்மை"
"தாய்மையே உன் தாழ் சரணம்
தாய்மையே உன் தாழ் சரணம்
நான் சாகும் வரை
நான் சாகும் வரை"

"ஆயிரம் உறவுகள் இருந்தாலும் தாயின் காலடியே எனக்குச் சொர்க்கம்"
"தாயின் காலடியே எனக்குச் சொர்க்கம்"
"அம்மா நான் பிறக்கும் வரை என்னை உன் கருவினில் சுமந்தாய்"
"நீ இறக்கும் வரை என்னை உன் இதயத்தில் சுமந்தாய்"
"தனிமையில் அழுகிறேன் உன்னை நினைத்து தினமும்"
"அம்மா நீ மீண்டும் வருவாயா!!!
அம்மா என் ஏக்கத்தை தீர்ப்பாயா!!!"
"அம்மா பாசத்தின் வறுமையில் ஏங்கித் தவிக்கிறேன்"
"அம்மா உன் நேசத்தை கொண்டு என் ஏக்கத்தை தீர்க்க மீண்டும் வருவாயா"
"அம்மா காத்திருக்கிறேன் உனக்காக"
"அம்மா காத்திருக்கிறேன் உனக்காக"

"இறைவா என் தாயே மீண்டும் எனக்கு மகளாகப் பிறக்க அருள் புரிவாய்"
"சந்தோஷமிக்க என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!

இப்படிக்கு
உன் புதல்வன் MISTY SKY 💙💙
« Last Edit: September 19, 2024, 04:18:01 pm by Misty Sky »

September 19, 2024, 12:01:19 pm
Reply #8

Thendral

Re: கவிதையும் கானமும்-047
« Reply #8 on: September 19, 2024, 12:01:19 pm »
           ❣️என் தாயே ❣️
உன்னால் நான் ஜனனம் கொண்டேன்
என்னுள் உன் உதிரம் கண்டேன்

ஆயிரம் அர்த்தம் உன் பார்வை
என்றும் எங்களுக்கே உன் சேவை

மனதாலும் உடலாலும்   களைத்தாயோ
என்றுதான் எங்களிடம் உரைப்பாயோ

நினைவு தெரிந்து எங்களுக்குப் பின் நீ எழவில்லையே
நினைத்து பார்த்தாலும் எங்களுக்கு முன்
நீ உறங்கியது இல்லையே

என்ன வரம் தான் வாங்கி வந்தேனோ - என் தாயே
எல்லா வரமுமாய் நான் உன் சேயே

நீ அயர்ந்து நான் கண்டதில்லை
எனக்கு முன் என்றுமே நீ உண்டதில்லை

காலமெல்லாம் உன் இதயம் எங்களுக்காகவே துடிக்கும்
உன் கைகள் எங்களுக்காகவே  உழைக்கும்

உனக்காய் என்று நான் வருவேன் உன் பாரம்
குறைக்க
அதுவரை என் கைகள் உனக்கு குடை பிடிக்க

அன்பு ஒருவழி என்று நீ ஏற்க மறுக்க
எப்படி உரைப்பேன் என் மனதை உறக்க

தாயே நீயே என்னுள் என்றும் வாழும் தெய்வமாய்
வளர்வேன் உன் துயரம் தீர்க்க விரைவாய்

காலங்கள் உருண்டோடும்
நம் வாழ்வும் கரை சேரும்

நாமும் வாழ்வோம் உயர்வாக
உன் கரம் ஓய்வாக

நம் வாழ்வும் ஒளியாக
என் கனவும் நினைவாக

உன் ஜென்மம் நூராக
என்றும் உன் சேயாக
இறையருள் இருந்தால் உன் தாயாக

     ❣️❣️தென்றல்❣️❣️
   
« Last Edit: September 19, 2024, 01:47:32 pm by Thendral »

September 19, 2024, 01:56:35 pm
Reply #9

Nilla

Re: கவிதையும் கானமும்-047
« Reply #9 on: September 19, 2024, 01:56:35 pm »
அம்மா பசிக்குது என்று நான் சொன்னால் அடுப்பாங்கரைக்கு வேகம் எடுக்கும் என் அம்மாவின் கால்கள் !

அதிர்ஷ்டம் என்னை விட்டு எட்டி நிற்கும் போதெல்லாம் நான் தலைசாய என் அருகே நின்றது
என் அம்மாவின் தோள்கள் !

என் கண்ணீர் துளிகள் மண்ணைத் தொடுமுன்னே என் கண்ணை
எட்டித்துடைக்கும் என் அம்மாவின் கைகள் !

நான் துவண்டு விழும் போது என்னை தாங்கி பிடிக்கும் என் அம்மாவின் மடி !

அன்று நான் அசையாமல் அப்படியே இருப்பது கண்டு நீ துடித்த உன் அலறல் சத்தம் கேட்டு நான் உயிர் கொண்டேன் அம்மா !

அன்று உன் கருவறையின் இருட்டிலும் கூட நீயே எனக்கு வெளிச்சமானாய் !

இன்று தனியறை வெளிச்சத்திலும் நீ இருண்டு இருக்கிறாயே !

எனக்காய் ஓடிய உன் கால்கள் இன்று ஓய்ந்து போகவே உன் கால்களாய் நானானேன் !

என் கண்ணீர் துடைத்த
உன் கைகள் இன்று தோய்ந்து போகவே உன் கைகளாய் நானானேன் !

என் தலை சாய்த்த உன் தோள்கள் இன்று துவண்டு போகவே உன் தோளோடு தோளாய் நானானேன் !

அன்று நீயே நானாக
இன்று நானே நீயாக !
நாளெல்லாம் நாமாக !
இங்கே ஓர் தாயுக்கும்
நான் தாயாக !
ஆம் !
தாய்க்கும் தயானேன்
என் சின்ன குழந்தை
உந்தன் சின்னத்தாயாய் நானானேன் !