See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12
My Place 28-07-23023 July 18, 2023, 10:24:32 am |
1 |
Re: கவிதையும் கானமும்-028
பேருந்தில் நீ என்னக்கு ஜன்னல் ஓரம் ஆனால் இப்பொழுது நாம் பயணிப்பது சுற்றும் திறந்துள்ள உள்ள இரு சக்கர வாகனம் ! ஒரு ஆணின் வெற்றியின் பின்னால் பெண்ணுள்ளாள் என்பது இந்த படத்தின் மூலமாக தெளிவு பெற்றது ! நம் பயணத்தின் பொது எராளமான காட்டிச்சிகளை காண்பதுண்டு ஆனால் பெண்ணே நான் சாலையை காண்பதை விட வாகன கண்ணாடியில் உனையே காண்கிறேன் ! நாம் வாகனத்தில் செல்லும்போது காற்றுகூட நம்மீது கோபம் கொள்கிறது இடையே நுழைய இடம் இல்லையென்று ! சூரியன் ஒளிகூட என் மீது கோபம் கொள்கிறது எனது நிழலை கொண்டு உன்னை மறைத்து கொள்கிறேன் என்று ! பெண்ணே பயணத்தின் பொது நீ உறங்கும் தலையணை ஆகிறது எனது முதுகு ! காற்றடிக்கும் போது உனது கூந்தல் முடிகள் என்னை வருடிச்செல்கின்றன! சாலையோர பள்ளங்களில் பார்த்து பார்த்து வாகனத்தை செலுத்துகிறேன் உனது தூக்கம் கலையக்கூடாது என்பற்காக ! செடியின் கோடி படர்வதுபோல் உனது கைகள் என்னை பிடிப்பதற்க்க்கா படர்ந்து இருந்தது ! தூங்கி எழுந்ததும் உனது குறும்புத்தனத்தை என்மீது காட்டிடுவாய் ! இப்பொழுது நாம் கண்ட காட்சி திருமணத்தின் பதாகை காதலர்களாய் இரு சக்கர வாகனத்தில் உலாவரும் நாம் அந்த பதாகையை பார்த்த பின் எப்பொழும் கணவன் மனைவியாக வாழ்க்கையை தொடங்குவோம் என்ற எதிர்பார்ப்பின் பொழுது எடுத்த புகைப்படம் !!! நன்றி வான் _நீலம் July 28, 2023, 11:01:58 am |
3 |
Re: Happy Friendship Day 2023
நட்பு தூய்மையானது நட்பு வஞ்சகம் செய்யாதது நட்பு எதையும் எதிர்பார்க்காதது நட்பு சுயநலம் இல்லாதது நட்பு வெண்சங்கு சுட்டாலும் வெண்மை தரும் நட்பை கர்ப்பை போல் காப்போம் இழிவு படுத்தாமல் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நட்பே💝💖💗💞 H♥a♥p♥p♥y♥ F♥r♥i♥e♥n♥d♥sh♥i♥p♥ D♥a♥y♥ ,💙💙Sky_Blue💜💜 August 06, 2023, 02:51:43 am |
1 |
Re: கவிதையும் கானமும்-030
முதல் காதல் பிரிவு அந்தி சாயும் மாலை நேரம் சூரியன் உறங்க செல்லும் நேரம் சட்டென்று நிலவை போல ஒரு முகம் எனது அடுத்த வீட்டில் தோன்றியது! ஒரு பார்வை பார்த்தாள் கண்ணாடி கீழேவிழுந்து நொறுக்கியது போல் எனது இதயம் நொறுங்கியது அப்பொழுது நினைத்துக்கொண்டே பார்த்தவுடன் காதல் வரும் நெஞ்சை துளைக்கும் என்று ! தினமும் ரசிக்க தொடங்கினேன் அவளின் செய்கைகளை அது சிறுபிள்ளையை போல் குறும்பின் விளையாட்டு ! அலாரங்கள் எனது கடிகாரத்தில் வைக்கவில்லை மாறாக அவள் வரும் நேரத்தை எனது நெஞ்சத்தில் வைத்திருந்தேன் ! அலைபேசி எண் பரிமாறப்பட்டது அன்று பரிமாறப்பட்டது எண்கள் மட்டும் அல்ல எங்கள் இருவரின் இதயமும் தான் ! அன்றில் இருந்து காலம் நேரம் அறியாமல் பேசிக்கொண்டிருதோம் நிலவும் சூரியன்கூட எங்களை தேடின இரவும் பகலும் ! கூர்க்கா வின் ரோந்து பனி அவர் லடியால் கதவு தட்டின சத்தம் எங்கள் இருவர் காதுகளில் மட்டும் ஒலித்தது ! இருவரும் குறும் செய்திகள் அனுப்பியது நினைவில் வருகிறது "தூங்குறிய என்று " அன்றுமுதல் எனது இதயம் அவளிலும் அவளது இதயம் எனிலும் துடிக்க ஆரம்பித்து காதல் பூத்த தருணம் ! காதல் வாழ்கை தொடங்கியது பேருந்துதில் முதல் பரிசாக அவளுக்கு கொடுத்தது பூ பூவுக்கே பூவா என்று நினைத்த தருணம் ! காதலிக்கு ஒரு சிறப்பு அம்சம் உண்டு அவள் நேரத்திற்கு தகுந்தார் போல தாயாக தந்தையாக தோழியாக அணைத்து உறவு முறைக்கும் உரிமை கொண்டவள் ! என்னை அழவைப்பதும் சிரிக்கவைப்பதும் சிந்திக்கவைப்பதும் அவளது கையில் என்றாகிவிட்ட தருணம் ! என்னை நானே மறந்த நேரம் எனது செயல்களை கண்டு தாயும் தந்தையும் கூறியது நல்ல இருக்கிய மகனே என்று அன்றைய நாள் எனது வாழ்வின் கருப்பு தினம் நீ கூறிய செய்திக்கு பின்பு எனது இதயத்தை நொறுக்கிவிடது பிடித்த கண்ணாடி கோப்பை உடைந்தது போல! காதலனுக்கு காதலி கொண்டுவந்த அழைப்பிதழ் அவளின் நிச்சியதார்த்தம் சுனாமியை போல கலங்கவைத்த செய்தி முகத்தை மூடி எனது அழுகையை உன்னிடம் காட்டாமல் நான் அமர்ந்திருக்க அப்பொழுது நீ கூறிய வார்த்தை இன்னும் எனது நினைவுகளில் ஓடிக்கொண்டிருக்கிறது ! என்றும் உனது நினைவுடன் நீல வானம் August 23, 2023, 11:05:01 am |
2 |
Re: Happy Birthday KIlLivAlavAn
September 06, 2023, 10:18:40 am |
2 |
Re: கவிதையும் கானமும்-031
பேசும் கண்கள் கண்ணனுக்கு மை அழகு ஆனால் அவளுக்கோ அவள் கண் தான் அழகு! ஆயிரம் சக்திகள் இருந்தலும் அவளின் கண்ணில் இருக்கும் சக்திக்கு நிகர் ஏதும் இல்லை ! காந்த சக்தியோ இரும்பை இர்க்கும் அவளின் கண்ணில் இருக்கும் காந்தம் எனது இதயத்தை ஈர்த்தது ! இடி இடுத்து மின்னல் வரும் உனது கண்ணின் மின்னலிலே எனது இதயம் சுக்குநூறாய் உடைந்தது பெண்ணே! நீ ஓரக்கண்ணால் பார்க்கும் பொழுது எனது இதயத்தின் ஓரத்தில் மற்றொரு இதய துடிப்பு இன்னும் கூடியது ஒரு ஆயுட் காலம் ! உனது கண்ணின் கருப்பு வைரம் என்ன நோக்கி தோட்டாக்கள் பல பாய்கின்றன பெண்ணே ! பெண்ணே வெண்திரையை கண்ணுக்குள் வைத்து உனது நினைவை எனது நெஞ்சுக்குள் வர செய்தாயே! கண்கள் கூட பேசுவதை உனது கண்களை கண்டுதான் புரிந்துகொண்டேன் பெண்ணே ! அன்போடு என்னை பார்க்கும் காதல் பார்வை! என்னை காணவில்லை என்றால் ஏக்கமான பார்வை ! நான் பெண்களோடு பேசும்போது ஓர பார்வை! என் மீது கோவம் கொண்டு உனது கையில் சிவத்த மருதாணியை போல கோவத்தில் பார்வை! கோவத்தில் நீ இருக்க நான் அளித்த பரிசில் நீ பார்க்கும் வெட்க்க பார்வை! உனது கண்ணில் கடலைப்போல நீரை காண ஆசை இல்லைபெண்ணே ஆனந்த கண்ணீரையே காணவேண்டும் ..!!! அடடா உலகத்தில் இருக்கு மொழிகளைவிட உனது கண்ணுக்கு இருக்கு மொழிகள் அதிகம் போல ! இந்த அழகிய கண்னில் மயங்கிய நான் இப்பொழுது நிமிர்கிறேன் பெண்ணே உனது நெத்தி போட்டில் ! அடிப்பெண்ணே உனது கண்ணின் அழகில் மயங்கியத்தை வாய் இருந்த நான் சொல்லிவிட்டேன் உனது அருகில் இருக்கும் இலைகள் எப்படி சொல்லும் அது பார்த்து கொண்டிருக்கும் நான் பார்க்காத முகத்தின் அழகை ! மென்மையான காற்றின் மூலம் தெரிவிக்கும் உன்மீது பட்டு !!! நீல வானம் September 18, 2023, 10:51:11 am |
3 |
Re: Happy Birthday VaanMugil
happy birthday
November 23, 2023, 10:11:16 am |
1 |
Re: கவிதையும் கானமும்-033
கற்பணை குடும்பம் "அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம் தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் " கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது அன்னையின் பாசம் தந்தையின் நேசம் பாசம் இன்று கலப்படமாகிப்போனது பணம் இருக்கும் வரைதான் இருக்கும் அந்த கலப்படமான பாசம் அவர்களுக்கு உபயோகம் இருக்கும் வரைதான் இருக்கும் அந்த கலப்படமான விசுவாசம் இந்த விசுவாசம் பாசம் மறந்துவிடும் காலப்போக்கில் நம்மிடம் ஒன்றும் இல்லையென்றால் புதைத்திடுவார் அவர்களின் காலுக்கு அடியில் ஆனால் துளிகூட களங்கமில்லாத எதையும் எதிர் பாராத அன்பு தாயின் அரவணைப்பில் தந்தையின் அக்கரையில் தான் உள்ளது வெண்சங்கு சுட்டாலும் வெண்மைதரும் அதுபோல அவர்களை நாம் உதாசீன படுத்தினாலும் ஒரு துளிகூட மாறாத அன்பு பெற்றோரின் அன்பு அந்த அன்பு பசுவின் மடியில் இருந்து வரும் பாலை விட தூய்மையானது நீல வானத்தின் எல்லையை விட பெரியது எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் அதை ஒரு நொடியில் போக்கிவிடும் அன்னை மடியும் தந்தையின் அறிவுரையும் தலை சாய்க்க மடியும் இல்லை அறியுரை கேட்க என்னக்கு பாக்கியமும் இல்லை உங்கள் கை கைகோர்த்து நடக்கத்தான் ஆசை எனக்கு அம்மா அப்பா ஆனால் கடவுளுக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை உங்களை அழைத்து சென்றுவிட்டான் உங்களின் அன்பையும் அறியுரையும் கேட்க .... உங்கள் இருவரோடும் கைகோர்த்து போக என்னக்கு ஆசை அம்மா என் அப்பா அதனால் கற்பனையாக வரைத்தேன் சுவரில் ............. கற்பனையோடு வாழ்கிறேன் உங்களோடு அப்பொழுதும் என்னையே பார்க்கிறாய் அம்மா ஐ லவ் யு மா ப்ளஸ் உங்க அம்மா அப்பாவை கஷ்டப்படுத்தாதீங்க இல்லாத போதுதான் அவங்க கஷ்டம் தெரியும் ... நீலவானம் November 30, 2023, 10:46:26 am |
3 |
Re: கவிதையும் கானமும்-035
குழந்தை தொழிலாளி விளையாட்டு மைதானத்தில் துள்ளித்திரியும் குழைந்தைகள் வானத்தில் பறந்துவிளையாடும் வண்ணத்துப்பூச்சிககளை போல குழந்தையின் மழலை மொழி காதில் தேன் பாய்வது போல குழந்தையின் புண்முக சிரிப்பு பூத்து குலுங்கும் வண்ண பூக்கள்போல குழந்தையின் குறும்புத்தனம் முக்கனியின் சுவையைப் போல ஆனால் இவையெல்லாம் வேலை செல்லும் குழந்தைக்குக் கிடைக்காது போல !! அன்னை கர்பதில் கன்னட சொர்கம் அன்னையின் அரவணைப்பில் கண்ட இன்பம் பாதம் வலிக்கும் என்று தோளில் தாங்கிய தந்தையின் நேசம் இவை அனைத்தும் கடலில் மூழ்கின கப்பலைப் போலக் குழந்தை தொழிலாளருக்கு !!! புத்தகம் சுமந்தது செல்லும் வயதில் நீ சுமப்பதோ குடும்பத்தின் பாரம் நீ சுமைதாங்கி என்று கடவுள் நினைத்தானோ ? தந்தையின் அலட்சியமோ தாயின் கஷ்டமோ இல்லை சமுதாயத்தின் அக்கறையின்மையோ இவை அனைத்தும் புரியாத வயதில் அழுக்கான ஆடை கொண்டு போகிராயோ பூச்செண்டு ! நீயும் பறக்கத்தானே ஆசைப்படுகிறாய் பட்டத்தைப் போல நீயும் ஆடத்தானே ஆசைப்படுகிறாய் ஊஞ்சலைப் போல நீயும் விளையாடத்தானே ஆசைப்படுகிறாய் மற்றவர்களைப் போல அனைத்து ஆசையும் நிராசையாய் போனதே காற்றிழந்த பலூனைப் போல! குழந்தை தினத்தைக் கொண்டாட வேண்டிய நீ தொழிலாளர் தினத்தை அல்லவா கொண்டாடுகிறாய்! நீ சுத்தியலினால் ஆணியை அடிக்கிறாய் ஆனால் காயம் அடைந்தது என்னவோ எனது இதயம் நானும் சமுதாயத்தில் ஒருவன் தானே !!! நீலவானம் December 21, 2023, 12:53:43 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-036
ஏறு தழுவல் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள் ஜனவரி மாதம் என்றால் நினைவுக்கு வருவது ஒன்று பொங்கல் மற்றொன்று ஜல்லிக்கட்டு துள்ளிப்பாய்த்து வரும் காளைகளை அடக்கும் வீரனுக்கு வாரி வாரி வழங்குவார்கள் பரிசு தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டு அதில் துள்ளி விளையாடும் காளைகள் கம்பிரம் உடையவை காளைகளைத் தன் சொந்த பிள்ளைகளைப் போல வளர்ப்பவர்களுக்கு உண்டு ஜல்லிக்கட்டில் தோற்று போனால் அதை மண்ணில் புதைப்பவர்களும் உண்டு இப்படி புதைத்துத்தான் தொண்ணூற்றி இரண்டு வகையாக இருந்த காளைகள் இப்பொழுது கைவிட்டு என்னும் வகைதான் என்ன ஒரு பரிதாப நிலை !!! தமிழரின் பண்பாடு எப்படி மண்ணோடு போனதே காரணம் இயலாமைய்யா ? இல்லை தொழில்நுட்ப வளர்ச்சியா ? இல்லை தனிமனிதனின் அலட்சியமா ? அல்லது விவசாயத்தின் தாழ்ச்சியா ? பழையகாலத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவந்த நாம் இப்போதைய நிலைமையை எண்ணி பார்ப்போம் ? மனிதர்களுக்கே இந்த நிலை என்றல் காளைக்குக் வெறும் கேள்விக்குறிதான் ? ஜல்லிக்கட்டு தடை என்றதும் போராடினார்கள் மக்கள் தமிழனின் மரபு அழியக் கூடாது என்பதற்காகத் தான் அந்தப் போராட்டம் அனால் நாம் முந்தய கால பண்பாட்டை மறந்து அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ! கூட்டுக்குடும்பமாக இன்று எத்துனை குடும்பங்கள் வாழ்த்துக்கொண்டிருக்கின்ற அழிந்துபோன காளைகளின் வகைகள்போல நாமும் நமது பண்பாட்டை அழித்துக்கொண்டிருக்கிறோம் சிந்திப்போம் அன்பெனும் சிறகை விரிப்போம் எஞ்சியுள்ள காளைகளைக் காப்பது போல நாமும் நமது குடும்பங்களோடு ஒன்றிணைத்து வாழ்வோம் விலைமதிக்க முடியாத நேரத்தை அவர்களுக்காக ஓதுக்குவோம் சந்தோசமாக வாழ்வோம்!!! தைத்திருநாளில் வெறும் பொங்கல் சமைத்து உண்ணாமல் அன்பின் விருந்து படைப்போம் தமிழரின் பண்பாட்டைக் காப்போம் "கூடிவாழ்ந்தால் கோடிநன்மை " நீலவானம் January 09, 2024, 10:42:19 am |
2 |