Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-064  (Read 292 times)

February 02, 2026, 06:14:09 pm
Read 292 times

RiJiA

கவிதையும் கானமும்-064
« on: February 02, 2026, 06:14:09 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-0634


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.



மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: February 02, 2026, 07:48:02 pm by RiJiA »

February 03, 2026, 05:16:16 pm
Reply #1

Love Me

Re: கவிதையும் கானமும்-064
« Reply #1 on: February 03, 2026, 05:16:16 pm »
வார்த்தைகள் எல்லாம்
உன்னை வர்ணிக்க முயன்ற நொடியில்
தம்முடைய அர்த்தங்களை இழந்து
என் முன் மௌனமாய் நின்றுவிடுகின்றன.
அதனால்தான்
சொல்ல முடியாத அன்புகளை
என் மௌனங்களுக்குள் உன்னை வைத்து
நாள்தோறும் உயிரோடு காத்திருக்கிறேன்.

விடியும் காலையின் ஒளி
என் விழிகளைத் தொட்டாலும்,
உன் முகம் மனதில் மலராத வரை
அந்த ஒளியும் எனக்கு இருட்டாகத்தான் தெரிகிறது.
உன்னை நினைத்து விழித்திருக்கும்
இந்த கண்களுக்கு
உறக்கம் கூட ஒரு ஆடம்பரம்.

உன் நினைவு தீண்டாத
ஒரு நொடி கூட
என் வாழ்வில் இல்லை என்பதால்தான்,
நீ இல்லாத தருணங்களில்
என் சுவாசமே தன்னை
அனாதையாய் உணர்கிறது.

நீ பேசும் போது
உன் குரலில் மட்டும் அல்ல,
என் உயிரின் ஆழத்திலும்
தேன் சொட்டுகிறது.
நீ மௌனமாய் இருந்தால்
அந்த மௌனமே
என் மனதை எழுதும்
அழகிய கவிதையாக மாறுகிறது.

உன் கை பிடித்து நடக்கும் பாதைகளில்
வலி என்ற சொல்லுக்கே இடமில்லை;
கற்களும் கூட
உன் அருகாமையில்
மலர்களாய் மாறி
என்னை மென்மையாய் தழுவுகின்றன.

உனக்கும் எனக்குமான இந்த அன்பு
நாள்காட்டியின் சில தேதிகளுக்குள்
சுருங்கிப்போகும் உறவல்ல.
காலங்கள் கடந்து,
நரைகள் நம் தலைமுடியில்
வெள்ளையாய் பூத்தாலும்,
உடல் தளர்ந்து
நடையும் மந்தமானாலும்,
உன்னை பார்க்கும் என் கண்கள் மட்டும்
எப்போதும் இளமையோடே இருக்கும்.

உன் மார்பில் சாய்ந்து
உலகம் முழுதையும் மறந்து,
நான் கேட்க விரும்புவது
பாடல் அல்ல…
கவிதை அல்ல…
இசைக்கருவி அல்ல…
உன் இதயத்தின்
நித்தியமான அந்த ஒரே துடிப்பு தான்.

அந்தத் துடிப்பில்
என் வாழ்க்கை கரைந்துவிடட்டும்,
அந்த அன்பில்
என் பிறவிகள் எல்லாம்
நிறைவடைந்துவிடட்டும்.

உன்னை காதலிப்பது
ஒரு நாள் விழா அல்ல…
என் மூச்சு நிற்கும் வரை
தொடரும் என் வாழ்வின் வழிபாடு.

இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்
என் உயிரே…
என் வாழ்வே…
என் என்றும் தீராத காதலே… 💞

February 04, 2026, 12:10:23 pm
Reply #2

MDU

Re: கவிதையும் கானமும்-064
« Reply #2 on: February 04, 2026, 12:10:23 pm »


உன் கையில் ஒரு ரோஜா கொடுத்த போது என் இதயத்தில் ஆயிரம் நினைவுகள்
சொல்ல முடியாத காதலை, ரோஜா மலரின் இதழ்கள் மட்டும் சொல்கின்றன

மலரின் மணத்தில் மகிழ்ச்சி பொங்க
ஆனல் ரோஜா  மலர்ரின் முள்ளின் மீது காதல் வலி.

சிரிப்பில் பிறக்கும் காதல் பூக்கள் பூக்கும் தருணம் ,
மௌனத்தில் வளரும் என் காதல் கதை .

கண்களில் மின்னும் காதல் கனவுகள்,
கண்ணீரில் கரையும் காதல் நினைவுகள்.

உன் அருகில் நான் சொர்க்கமதில் இருப்பது போல இருக்க ஆசை பட்டேன் ஆனால்  என்னவோ
உன் நினைவில் நான்  ஆயுள் கைதி போல  மாற்றி விட்டது உன் நினைவுகள்

சந்தோஷம் கூட சோகமாகும் நீ என்னை விட்டு பிரிந்த போது
சோகம் கூட இனிமையாகும் நீ என் பக்கத்தில் இருக்கும் போது

ரோஜா பூ போல நீ  என் இதயத்தில் உள்ளே வந்தாய்
கள்ளி காட்டு முள்ளு போல உன் பிரிவு என் நெஞ்சில் குத்தி சென்றாய்

ஒன்றாய் இருந்த நொடிகள் எல்லாம் இதயத்தில் எழுதப்பட்ட கவிதை.
பிரிந்த நாட்கள் வந்தாலும் கூட உன் நினைவு மட்டும் உயிராய் வாழும் என் இதயதில்

சொல்லாத சொற்கள் ஆயிரம் இருந்தாலும் உன் கண்கள் போதும் உன் நினைவுகள் புரிய.
மௌனம்கூட உன் அருகில் காதலாய் பேசுது தினமும்.

தொலைந்தாலும் உன்னைத் தேடும் என் மனசு,
தோற்றாலும் உன்னை விடாத என் காதல் இதயம்.

சிரித்த நாட்களும் உண்டு அழுத நாட்களும் உண்டு
எல்லாமே இனிய நினைவுகள் தான் எனக்கு

நீ தூரம் இருந்தாலும் பரவாயில்லை உன் காதல் மட்டும் என் அருகில்தான்.
மறக்க முடியாத என் காதல் நினைவுகள் இன்று உன்னோடு மட்டுமே முடியுமோ.

நீ என் கனவின் காதலி நாயகி ஆன பிறகு
நான் உன் காதலின் கைதி ஆகின்றேன்

இந்த ஜென்மம் போதாது உன்னுடன் நான் சேர்ந்து வாழ
முடிவில்லா என் காதலுக்கு ரோஜாவே சாட்சி சொல்ல வா என்று சொல்லி கொடுத்தது

உன் மூச்சின் வெப்பத்தில்  காற்று என் மீது விழுந்ததும் கரையும் நான்,
உன் கை விரல்கள் தொட்ட போது பனித்துளி போல உருகுது என் இதயம்

நீயே என் வாழ்க்கை கவிதை வரிகள் ஆகிறாய்
நீயே என் தினசரி சந்தோஷம் துன்பமும் ஆகிறாய் .

வேறு யாரையும் மனது நினைக்கவில்லை
உன்னை மட்டும் கண்கள் தேடுகின்றன .

உன் தொடுதல் ஒரு மந்திரம் போல என் இதயம் மெதுவா துடிக்குது.
உன் அருகில் நான் இருக்கும் போது அந்த ஒரு நிமிடம் என்னையவே தொலைந்த போல தேடுகிறேன் .

உன் தோளில் சாயும் போது உலகமே நிறுத்தம் ஆகுது.
கவலை எல்லாம் தூங்கிப் போய் காதல் மட்டும் விழித்திருக்கு.

உன் சிரிப்பில் சிக்கிய என் காதல் வாழ்க்கை வெளியே வர நெனைத்தது இல்லை
உன் கண்ணீரை துடைக்க நான் எப்போதும் உன் கைக்குட்டை போல் உன்னுடன் இருப்பேன்

இந்த ஜென்மம் போதாது உன்னோடு நான் வாழ
இன்னும் பல ஜென்மம் வேண்டும் உன்கூடவே நான் வாழ

என் மூச்சின் கடைசி நொடி வரை உன்னையே தான் காதலிப்பேன்.
« Last Edit: February 05, 2026, 05:39:44 pm by MDU »

February 04, 2026, 03:10:13 pm
Reply #3

Lovi

Re: கவிதையும் கானமும்-064
« Reply #3 on: February 04, 2026, 03:10:13 pm »
பெயரை போன்றே அவளும் காவியம்

அவள் கண்கள்,
என் மனதை
மௌனமாகப் பார்த்த கண்ணாடி.

எதுவும் கேட்காமல்
என்னை கவனித்தவள்,
வலி வந்த நேரங்களில்
தாயாய் இருந்தவள்.

நாம் பிரிந்தோம்,
அது உண்மை.
ஆனால் காதல்
பிரிவை நம்பவில்லை.

இன்றும் என் இதயம்
ஒரே வார்த்தை தான் சொல்கிறது—

நான் இன்னும் உன்னை காதலிக்கிறேன்

என்றும் உன் இதயம் எனக்கே🙂🤍..

February 04, 2026, 05:25:51 pm
Reply #4

Wings

Re: கவிதையும் கானமும்-064
« Reply #4 on: February 04, 2026, 05:25:51 pm »
சாம்பல் நிற உலகில்
நான் உன்னைக் கண்டேன் —
சிவப்பு ரோஜா ஒன்று
நம்பிக்கை மறந்த இடத்தில்
தைரியமாய் மலர்ந்தது போல.
உன் காதல் சத்தமில்லை;
மெல்லிசையாய் முணுமுணுத்தது,
உலகம் உணராத அளவு மென்மை,
ஆனால் என் நெஞ்சில் நிறைந்திருக்கும் வலிமை.
என் நடுங்கும் கரங்களால்
ஒரு ரோஜாவைப் ஏந்தினேன் —
எளிமை, உண்மை, நேர்மை,
முட்களில்லா மென்மை,
நம்பிக்கையால் வண்ணமேற்றப்பட்டது.
காலம் மங்க செய்யவில்லை,
தொலைவு வாட்டவில்லை.
என் இதயம் நினைவுகூர்ந்ததால்,
தேர்ந்தெடுக்கப்பட்டதாய் உணர்ந்ததால் —
அது மீண்டும் மலர்ந்தது,
அமைதியான விடியல் போல.
நீ அதற்கு வாசனை சேர்த்தாய் —
உலகம் உணராத நறுமணம்,
என் இதயம் மட்டும் உணர்ந்தது:
முயற்சியின் மணம்,
தொடர்ந்தது..
மீண்டும் மீண்டும் உன்னைத் தேர்ந்தெடுக்கும் மனம்.
மைல்கள் பிரித்தபோதும்
இந்த ரோஜா பாலமானது
தூய்மை பயணிக்கும் போது,
கவனிப்பு உண்மையாயிருந்தால்,
நல்லெண்ணம் இருந்தால்.
அது அலங்காரமல்ல;
ஆறுதல்,
மெல்லிய உறுதி —
தொடுதல் இல்லாமலும் காதல் உண்மை,
இருப்பு மட்டும் போதும்,
நேர்மை மட்டும் போதும்.
சாதாரண நாட்களில்,
எதுவும் சிறப்பில்லாதபோதும்,
ரோஜா வந்தது —
தொடர்ச்சியே காதலின் இனிமை என்று
என் இதயத்துக்குக் கற்றுத் தந்தது.
இப்போது ரோஜா இல்லை என்றாலும்,
அதன் மணம் மாறவில்லை.
பழக்கமானது, ஆறுதல் தருவது,
இதயத்தில் தங்கிய நினைவுகள் போல,
தன் இடத்தை அறிந்து நிலைத்திருப்பது.
உலகம் கேட்டால் —
எப்படி இவ்வளவு அமைதியானது,
காணாதது, இன்னும் நினைவில் நிற்கிறது என்று —
நான் எளிமையாய்ச் சொல்வேன்:
தூய்மையாய் நான் காதலித்தேன்,
நேர்மையாய் கவனித்தேன்,
ஒரு ரோஜாவைப் பரிசாகப் பெற்றேன் —
அதன் வடிவம் மறைந்தாலும்,
அதன் வாசனை
எந்த தொலைவும், எந்த மௌனமும்
எடுத்துச் செல்ல முடியாது.

February 04, 2026, 08:55:37 pm
Reply #5

Eagle 13

Re: கவிதையும் கானமும்-064
« Reply #5 on: February 04, 2026, 08:55:37 pm »
மொட்டுகள் இதழ்விரித்ததால் வந்த மின்னல்
அவள் புன்னகை!
 

விரிந்து மடியும் மலரின் ஓசை
அவள் குரல் !

சூரியனையே மூடும் கார்மேகங்கள்
அவன் கூந்தல்!

பகலிலும் வரும் சந்திரன்
அவள் முகம்!

மழை மேகங்கள் மோதாமல்
வந்த பேரோலி
- உன் கோபம்!

கோடையிலும் கேட்கும் மழை ஓசை!
உன் கொலுசு!


 பெண்ணே!
 நீ உன்னை எனக்கு கொடுத்தால்
ஒரு நாள் என் வாழ்வில் நிச்சயம் அடைவேன்
விண்ணை!
என் வாழ்நாளில் ஒரு துளி நீர் கூட சிந்த
விடமாட்டேன் உன் கண்ணை!
தவமிருந்து பெற்றதால் என்னவோ?
அடிக்கடி உன் பார்வையில் தடுமாறி
விடுகிறேன்!
வாழ்க்கையில் பற்றற்று கிடக்கும் எனக்கு
படபடப்பை தருகிறாய்!
என் இதய துடிப்பை கூட்டி விட அனுதினம்
என் பார்வையில் விழுகிறாய்!
வலிகள் என் வாழ்வில் எவ்வளவோ
கண்டுவிட்டேன்!
அதனால், வலிகள் எனக்கு தெரியவில்லை!
ஆனாலும்,
இப்பொழுது, என்ன நடக்கின்றது என்றும்
புரியவில்லை!
நம்மை என்றும் வள்ளுவன் வாசுகி
என்று சொல்லமாட்டேன்!
உன்னை விட்டு என்வாழ்நாளில் என்றும்
செல்லமாட்டேன்!
என்னிடம், நிறைய குறைகள் உள்ளது!
சில நேரங்களில்,
கரையும் வாழ்க்கையில் நல்லது!
என் மனம் கரைக்க முடியாத கல் அது!
உன் நினைவு அதையும் வெல்லுது!
தோல்விகள், கண்ட காதல்கள் மட்டுமே
பூமியில் காதலின் அடையாளம்!
வெற்றி கண்ட காதல்கள் கூட
பூமியில் வாழ்வது இன்று
சில காலம்!
அப்படி என்னையும் எண்ணி விடாதே!
நாம் சேர்ந்து வாழ்ந்தால் தோல்விகளும்
நம்மை தொட்டுவிடாதே!
உன்னோடு சேர்ந்தால் இப்பிறவியில்
நான் துறவி இல்லை !
மறுப்பிறவியும், இப்பூமியில் எனக்கு
தேவையே இல்லை!.


« Last Edit: February 04, 2026, 10:56:41 pm by Eagle 13 »

February 05, 2026, 10:18:38 pm
Reply #6

Shaswath

Re: கவிதையும் கானமும்-064
« Reply #6 on: February 05, 2026, 10:18:38 pm »
பூவே…

நிஜமது நீயானால், உன் காலடி வேறாவோம்,
மறைந்திடும் நாள் வந்தால், அச்சுறுத்தல் இன்றி விலகிடுவோம்

வண்ணம் தீட்டும் ஆள் அதை பாராதே,
மொட்டின் மடல் தேடிட கூடாதே,
இழந்து நாட்கள் கூடி போனாலும்,
நிஜமது நீங்கிட தாங்காதே

சிந்திய கண்ணீர் விலைமதிப்பற்றது,
வெருட்சி நீக்கும் நிஜமும் நீ…

சண்டைகள் எவ்விதம் இருப்பினும் நிகழ்ந்திருக்கும்,
தனிய செய்து புதுமையயூட்டும் வாசனை நீ…

முள்ளற்ற பயணத்தில் அடர்த்தியற்ற பந்தம்,
என்னும் வாசகத்தின் உருப்படிவம் நீ…

சிவந்த கண்மாணிக்கம் நீ,
சிவக்கும் கன்னங்கள் நாணுகிர்வதை பார்!

உன்னை வலுவாக பார்க்க ஏதேனும் செய்வோம்,
வாடி சாயாமல் காக்க,
வாழ்ந்தாலே போதும்…

நிஜமது பூவானால்… 🌹

February 06, 2026, 12:17:03 pm
Reply #7

Limat

Re: கவிதையும் கானமும்-064
« Reply #7 on: February 06, 2026, 12:17:03 pm »


ஒரு முடிவினில் ஒரு ஆரம்பம் அதுவே இயற்கையின் நியதி ...
ஏனோ என் வாழ்வில் அது எதிர்மறையே நான் இருக்கும் பொழுதே என்னவளின் காதல் வேறு ஒருவனிடம்...
சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல்
திசையின்றி பறக்கும் எந்தன் கவி வரிகள்...

உன்னை காண நொடிகள் யாதும்
என் இமைகளின் ஓரம் ஈரப்பதம் ஆகும்

ஆழ்ந்து கிடக்கிறாய் ஆழமாய்
என் விழிகளுக்குள்ளே

என்னை அழவைத்துப் பார்க்கிறாய்
உன் அடர்ந்த பிரிவாலே

தோய்ந்து போய் உள்ளது உள்ளம்
நீ நீண்ட துலைவிலே நிற்கிறாய்

அடியெடுத்து உன் அருகே வர முயற்ச்சித்தேன்
ஏனோ நீ மறைந்துக் கொண்டிருக்கிறாய்
என் விழிகளுக்கு தென் படாமல்

ஓய்ந்து போனேன் தேடி தேடி
உடைந்து போனேன் உன்னை நாடி நாடி
விழுந்து போகிறேன் மண்ணில் ஓடி
கலங்கரை விளக்கமாக நான் மாறி

உன் நினைவின் பிம்பமானது என் ஈரமான விழிகளிள்....

தொடுதிரை முன்  விழியசைத்து
 காலம் விரையம் செய்து விழிகள் பேசிட
காதலில் விரல்கள் கோர்த்திட,
வினாக்களின் நடுவே நான்...
 பாவை நீயோ விளையாட்டாய் என்னை
விட்டுச் சென்றிட  பாவம் நான்..
விரல்களில் பேனாவுடன்,
விளையாத தாடியுடன் 
உயிரற்ற விதியுடன்,
விலையற்ற உடலுடன் காலத்தின்,
விபரீத ஆசையினால்
வீணாகிப் போனேனே..!
 
வலைதள பக்கத்தில் உனது மனநிலை கண்டேன்...
நீ என்னை காதலித்தது உண்மை
தற்போது உனது அன்பு வேறு ஒருவரின் மீது திசைமாறியதும் உண்மை...
நாம் சுதந்திர பறவைகளாக சுற்றி திரிந்த அந்த இனிமையான நாட்கள்
பசுமரத்து ஆணி போல் அந்த நிகழ்வுகள் ஆழமாக என் மனதில் பதிந்து விட்டது
பரஸ்பரம் நாம் வழங்கிய நம்பிக்கை வாக்குறுதிகள் அனைத்தும்
படுகொலை செய்யப்பட்டது.
என் மனம் ரனம் ஆகிவிட்டது.
என் இதயம் வெடித்து சிதறிவிட்டது.
என் வாழ்க்கையில் தென்றல் நீ என்று நினைத்தேன்
இன்று சுனாமியாய் தாக்கிவிட்டாயே!
எந்த தைரியத்தில் உனது  மனநிலை பதிவின் மூலம் வெளிப்படுத்தினாய்..
நான் ஏமாளி என்று நினைத்து தானே
அல்லது கோமாளி என்று நினைத்தாயோ!
காதல் என்ன உனக்கு விளையாட்டு பொருளாக ஆகிவிட்டதா!
உன்னை மண்ணிக்க என் மனம் மறுக்கிறது
இவ்வளவு ஆகிவிட்ட பிறகு
நிச்சயம் உன் வாழ்வில் குறுக்கிடமாட்டேன்
எங்கிருந்தாலும் வாழ்க என்று கூற நான் ஒன்றும் தியாகியும் இல்லை
காதல் தோல்வியில்
மது அருந்தி தாடி வளர்த்த தேவதாசும் இல்லை.
உன்னிடம் ஒரே ஒரு கேள்வி
நாகரீகம் கருதி
'மண்ணித்து விடு' என்ற ஒற்றை சொல் கூட நீ சொல்லவில்லையே.
ஏன்.... ஏன்....
உன்னை பொருத்தமட்டில் வாழ்க்கை ஒரு விளையாட்டு
என்னை பொருத்தவரை வாழ்க்கை ஒரு தவம்.
இதில் இருந்து மீள சில காலம் ஆகும்
என் இதயம் மட்டும் இரும்பால் ஆணதா என்ன... சொல்...
ரத்தத்தாலும், சதையாலும் செய்த சாதாரண மனிதன் தானே
கண்ணீர் என் கண்களில் அருவியன கொட்டுகிறது துடைத்து கொண்டேன்.

என் உயிர் நாடி நீ என்று உரைத்த உன்னவனுக்காகவும் என் இதய துடிப்பு நீ என்று உரைத்த உன்னிடத்திலும்
வம்பு செய்யமாட்டேன்
இந்த கடிதமே பரிசாக ஏற்றுக்கொள்
தளர்ந்தது உடல் மட்டுமே
மனம் தளராமல் இருக்க முயற்சிக்கும்
உன் முன்னாள் மாமன்.....



Today at 07:05:11 am
Reply #8

Dharshini

Re: கவிதையும் கானமும்-064
« Reply #8 on: Today at 07:05:11 am »
Un kanavum un ninaivum naanaga
mattume irukka
 vendum endru enninen...

En ninaivaiyum kanavaiyum neeye kalaithaai.....
Ethanaiyo uravugal vanthu sendra pothilum
 un uravai mattume nilaiyanathu
 endru nambinen...

Athanaiyum poi endru santhega thiraiyai
en meethu porthinaai....

Aduthavarudan pesinaale kaadhal
endra muthirai kuthunaai....
Netru oruvan indru oruvan endru un
 mana kanakkil ennikaikal koodi konde
ponathu.....

Pala aandu kaalam poruthu pona  enakku
vaalkaiye un seyalkalaal veruthu ponathu...
.
Yaarudaiya anbaiyum uthaaseena paduthi
Verukka  theriyathathaal indru un munnal
 en bimbam thappanathu.....

Thappe seiyamal un munnal thavaraga
 ithuvarai therintha naan ini
 thapagave irunthu vittu pogiren....

Kavithaiye elutha theriyatha ennaiyum Muthal murai
 Sila varikal kirukka seitha en munnal
mamanukku nandrigal pala kodi....
 
Intha GTC il en manam thalararum bothellam
enakku uruthunaiyaga
Iruntha athanai ullangalukkum nandri..

Expecialy MISTY SKY, MDU , Shahidm, Abdullah, Love me
And Thendral Sister. Mansi..
GTC in anaithu kadhal jodikalukkum
kadhalar thina vaalthukkal......
« Last Edit: Today at 08:24:02 am by Dharshini »