Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1] 2
Post info No. of Likes
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#066 Hi Sangeetha Megam team ..Thank you for the opportunity. All RJs are doing rocking performance.


This week i would  like to request song 'Yenadi enna ne ippadi' song from Movie *Athaagapattathu Magajanangale*.
Awesome lyrics i love this song very much.

I dedicate this song to my dear ❤❤❤  & All friends kettu enjoy panunge.



July 14, 2024, 08:14:25 pm
1
Re: கவிதையும் கானமும்-048 அழகானவள் அவள்
வலி மிகுந்த குழப்பத்தில் இருந்தால் அவள்
சில சமயங்களில் பித்துப்பிடித்தவள்
போலும் இருந்தாள்
கட்டுப்படுத்த முடியாத எண்ணவோட்டங்கள் ஆக்கிரமிக்கும்பொழுது
சில விஷயங்களை சொல்லாமல்
விடுவதே உகந்தது.
உடைந்து விழும் அவளின் கண்ணீர்
சில நேரங்களில் கருமை அடர்ந்திருந்தது
சில நேரங்களில் பிரகாசமான சிவப்பாக இருந்தது

.

அவளின்  துளி கண்ணீரும்
வாதை நிறைந்தது.
மீட்டெடுக்க முடியாத தொலைந்த  நம்பிக்கைகளை
அவளின் கண்ணீர் கதைகளாக கூறியது.

விலகி நடக்கும்பொழுது ஒவ்வொரு தருணமும்
அவளின் வலி பேசியது.
அவளின் பொய்களின் பின்
மறைந்திருக்கும்
உண்மையின் தாத்பரியம் எனக்கு விளங்கியதே இல்லை.
உள்ளத்தின் உள்ளே பொதிந்திருக்கும் அவளின்
வலிகளை யாரும் அறிந்ததுமில்லை.
யாரும் கண்டுக்கொள்ள முடியாத
மனதின் இருண்மையில் ஆழ்ந்திருக்கும்
அவளின் ரகசியம் தான் என்ன?

அவளின் ஒவ்வொரு பாடலும் தாலாட்டு போலவே ஒலிக்கிறது.
வலி மிகுந்த கண்ணீருடன்
சோக பாவனையில்
கால்களை ஆட்டியபடி மீண்டுமொரு
தாலாட்டை பாடுகிறாள்.
உலகத்துடன் போராடி தோற்ற அவளுக்கு,
அவளின் இருப்பை நியாயப்படுத்தும்
ஒரு பிரியமானவராவது இருக்கட்டும்.

அவளது இதயத்தில் நிபந்தனையற்ற அன்பு இருந்த போதிலும்
 அவளுக்கு ஒரு அன்பான தொடக்கம் அமைய பெறவில்லை !!!
அவளின் காதல்
மெய்யானதும் உணர்ச்சிப்பூர்வமானதும்.
அவள்சாத்தியமான எல்லா வழிகளிலும்
தவறாகவே கையாளப்பட்டிருக்கிறாள்.
கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறாள்,
இருந்தும் அவளது காதல்
மெய்யானதும், உணர்ச்சிப்பூர்வமானதும்.

அவள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டாள்,
அவளது ஆழமான இருண்ட கண்களில் கண்ணீர்
திரண்டு நின்றிருந்தது.
ஆனால் அவளின் துக்கமான அழுகையை யாரும் கேட்கவில்லை ...
ஆம் யாருமே கேட்கவில்லை !!!!

October 06, 2024, 12:12:58 pm
4
Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி-1 காதல் வலியும் இன்பம் :

என்னாளும் என்னை ஆளும் என் காதலன் அவன்

அவர் என்னை கடந்து சென்ற போதும்
என் வழியில் நான் பயணித்தேன்
அமைதியாய்

அவன் ஒற்றை விழி பார்வையில்
ஆயிரம் பட்டாம்பூச்சிகளை
கண்டேன்

அவன் குரலில் என்னுள் ஏனோ
புது மயக்கம்

மீண்டும் மீண்டும் என்னை
உயிர் பித்த குரல் அது

அவன் புன்னகை என்னை அன்பால் தாக்கும் ஆயுதம்

நான் அமைதியை நாடும் போது
என் வாழ்வின் விளிம்பில் இருந்த போது

என்னை தாங்கும் கைகளாய்
அவன் வந்த போது
அவனிடம் புதைந்தேன்

அவன் மந்திர புன்னகையும்
அவன் மயக்கும் வார்த்தை மொழிகளும்
என் வலிமையை
குறைத்தன

உன்னில் நான்
என்னில் நீ
வேறில்லை என்றாய்

என்னை சுற்றிய உன்
நினைவு ஒன்றே
என்றானது

நீ மறைத்து வைத்த
எல்லாம்
நானறிவேன்

இன்று ஏனோ எல்லா நிலையும் மாறியது

என்னை மறந்தது ஏனோ

என்னை நீ வெறுக்கலாம்

அனைத்தையும் மறக்கலாம்

ஆனால்

நீ இன்றி நானில்லை
உன் நினைவின்றி
என் வாழ்வும் இல்லை

உன்னை ரசித்தேன்
உன்னால் ரசித்தேன்

நீ என்னை 1000 முறை காயப்படுத்தினாலும்

என்னை உன் நினைவிலிருந்து அகற்றினாலும்

என் காதல் உண்மை
என்றும்
மறையாது
நீ கொடுத்த அன்பும்
வலியும்

நீ என்னிடம் கூறிய அந்த வரிகள் இன்னும் என் நெஞ்சை துளைக்கிறது

சூரிய ஒளியின் பிரகாசம் உள்ளவரை
உன்னோடு இருப்பேன் என்றாய்

அந்த வானம் நீ
இந்த பூமி நீ என்றாய்

என் பெயரை நீ கூறும் போதெல்லாம்
என் முகம் நாணத்தில் சிவந்தது

அனைத்தும் பொய் என அறிந்தும்
உன்னை காதலித்தேன்
பித்தனை போல்

நீ பேசிய
வார்த்தைகள்
உனக்கு அசாத்தியம்
எனக்கு அது அதிசயம்

பேதையாய் இருத்ததால்
ஏனோ என்னை வருத்தி‌னாய்

இத்தனை அறிந்தும்
அது காத‌ல் என நினைக்கிறேன்
இன்னும் பேதையாய்

February 10, 2025, 11:13:08 pm
4
Re: Happy Birthday RIJIA ( Coordinator) அழகிய இந்நாளில் ஓர் இனிய நினைவுறுத்தல்...
 அனைவரையும் கொண்டாடும் இனியவளே உன்னையே நீ கொண்டாடவேண்டிய அழகிய நாள் இது.
 நீ தேவதை என்பதை உணரும் உன்னத நாளும் இந்நாளே!!!
உன்னை நேசிக்காதவர் தான் இங்குண்டோ... அறிவாயோ நீயே !!!!
GTC யின் விலைமதிப்பற்ற ரத்தினமே
உங்களுக்கு இனிய பிறந்தநாள்

February 22, 2025, 01:11:32 pm
1
Re: Happy Birthday IAMCVR மகிழ்ச்சியும் தெய்வீக அருளும் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிரியாணியின் முதல் துளியின் மகிழ்ச்சி உங்கள் முழு வாழ்க்கையும் தனித்துவமாகவும் உற்சாகமாகவும் மாற்றட்டும் .
மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



March 06, 2025, 11:27:45 am
1
Re: கவிதையும் கானமும்-052 அமைதியான இரவு நேர வேளை

என் குழம்பிய மனநிலையோடு நிலவை நோக்கி புன்னகைக்க

நிலவும் என்னை நோக்கி    பதிலளித்தது அதன் புன்னகையோடு

அட பேதையே
இங்கே நீ தனியே இல்லை

நீயும் நானும் ஒரே ஜாதி தான் என்று
 
பின் நான் நிலவை நோக்கும் போது அதில் என்னை கண்டேன்

அழகிய காடுகளைப் போன்ற நிலவு   காட்சி அளித்தது

மனிதனுக்கு அது தரும் வெளிச்சம் பிரதிபலன் பாராதது

நிலவு மின்னும் மின்மினிகள் நடுவே நிற்கிறது அதன் ஒளியால்

நிலவும் நானும் ஒன்று

தேய்கிறேன் என் கவலையில்
ஒளிற்கிறேன் என் புன்னகையில்

நான் நிலவிடம் கேட்டேன்

சூரியனுடனான உன் பிரியமான காதல் எவ்வாறென்று

இருவரும் சந்திக்கும் நேரம் வேறு
ஏன் சந்திப்பு ஒரே நேரமில்லை என்று

அதற்கு நிலவு சொன்னது

அவன் மயக்கும் பார்வையை சந்திக்கும் துணிவின்றி நான் மறைகிறேன் என்று

நான் மட்டுமல்ல
 
அவனும் அவ்வாறே

என் வெண்ணிற அழகினை அவன் வெப்பம் சுட்டுவிடும் என்று மறைகிறான் எனக்காக

நான் சிந்தித்தேன் எவ்வாறு நானும் நிலவும் ஒன்று என்று

பிறகு என் சிந்தையில் எட்டியது

அவன் இருக்கும் இடத்தில் நான் இருந்தால் போதும்
அவன் மனதை வெல்ல ஆசை இல்லை

என் காதலை எண்ணியே ஆனந்தம் அடைகிறேன்

நிலவும் நானும் ஒன்று என்று


அந்த இருண்ட இரவில் நான் ஒரு நண்பனை கண்டேன்

என் இதயத்தின் ஒரு துண்டை பிடித்து வைத்திருந்த நிலவாகிய அவளை.

நிலவும் நானும்

பூமியிலிருந்து வானத்தை நோக்கி,
முடிவில்லாத ஒரு கதை.

March 14, 2025, 10:21:52 pm
4
Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2025 புத்தாண்டு பொன்னாள் வந்ததடி இன்று,
புதுமை பூத்தாடும் பூக்கள் மனஞ்சுழன்று.
சந்திரனோ சிரிப்பான முகமாய் விழிகின்றான்,
சூரியனோ புதிய உன்னதம் சொல்கின்றான்.

அன்பும் அமைதியும் வாழ்வில் மலரட்டும்,
அருளும் ஆசீர்வாதமும் என்றும் நிலைத்திரட்டும்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் –
உற்சாகமாய், ஒளியோடு, உன்னத பாதையோடு!






April 14, 2025, 10:51:00 am
3
Re: Happy Birthday ISHA Nge oru super advisor, with that magical voice that makes everything better.
May your day be as sweet as your heart,
As colourful as your dreams,
And as special as nge. 💕💕

HBD sis❤️



May 18, 2025, 12:49:21 pm
1
Re: கவிதையும் கானமும்-055 கல்லறை நிலவில் ஒரு காதல் கதை

அந்த இரவினிலே...
முழு நிலவு குளிர் கொண்டு நின்றது,
அதன் ஒளி ஒரு உறைந்த பெருமூச்சு போலிருந்தது.
மரணம்கூட அங்கே வியப்பில் ஆழ்ந்திருந்தது.

பழைய, மறக்கப்பட்ட ஆலயத்தின் அருகே,
கல்லறைகள் அமைதியாய் வரிசையாய் நின்றன.
ஒவ்வொன்றின் உள்ளும் ஒரு கதை ஒளிந்திருந்தது,
ஒரு காலத்தில் அழுத காதலின் நினைவு.

மெல்லிய காற்றினில் ஏதோ அசைந்தது...
அவள் வந்தாள்.
வெள்ளாடை பூண்டு,
அவளின் மௌனம் அவள் இதயம்போல் துயரமாய் இருந்தது.
அவளின் நிழலைக் கண்டு நிலவுகூட அஞ்சியது.

"நீதானா அது?" ஒரு குரல் கேட்டது -
அவள் வாயிலிருந்து அல்ல,
பூமியின் கீழிருந்து.
அவன் அவளுடன் எடுத்துச் சென்ற காதல்,
இப்பொழுது பனிபோல் அவளைத் தொடர்ந்தது.

அவள் மண்ணில் கால் வைத்ததும்,
பூமி குளிரால் உறைந்தது.
அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும்,
கல்லறைகளுக்குச் சொல்லும் ஒரு துயரப் பிரியாவிடை போலிருந்தது.

அவள் வெறும் ஆவியல்ல...
ஒரு ரணமான காயம்.
துரோகிக்கப்பட்டு, தொலைந்த காதலின்,
வலிமிகுந்த நினைவவள்.

"எனக்காக திரும்பி வருவேன் என்றான்..."
"ஆனால், ஒரு கல்லின் பெயராகவே அவன் திரும்ப வந்தான்."
அவளின் வார்த்தைகளும், சுவாசம்
இப்பொழுது இரவின் குளிர்ந்த காற்றாய் மிதக்கின்றன.

பறவைகள்கூட அவளுக்கு மேலே பறக்கவில்லை.
மரக்கிளைகள்கூட அவளை மென்மையாகத் தொட்டன, பழைய நினைவுகள்போல்.
ஒரு காலத்தில் 'இறைவன் வீடு' என அழைக்கப்பட்ட அந்த ஆலயம்,
இப்பொழுது பாவம்போல உணர்ந்த ஒரு காதலைப் பார்த்தது.

ஒவ்வொரு இரவும்,
நிலவு அவளுக்காக இன்னும் காத்திருக்கிறது.
அவர்களின் ஆன்மாக்கள் மீண்டும் சந்திக்காவிடினும்,
அவர்களின் நிழல்கள்கூட காதலிக்க ஒரு வழியைக் கண்டன.

அவள் பேசுவதில்லை...
அவள் அழுவதில்லை...
ஆனால், அவள் இன்னும் அங்கேயே இருக்கிறாள் -
தொலைந்த ஒவ்வொரு காதலின்,
அமைதியான அலறல் போல.

June 06, 2025, 11:11:17 am
6
Re: Happy Birthday Thendral Wish you many many happy returns of the day, Thendral! 🌸✨
Epome thendral pola, a cool breeze of love, prosperity, and happiness uga life la blow agatum. ❤️
Nga romba kind-hearted person, and even though nama conversations romba persu illa, each and every moment I remember with a smile. 🌼
I adore the way you carry yourself—with kindness, positivity, and grace. 💫

May your dreams take you to places where only success and happiness live. May you become the inspiring entrepreneur you’re meant to be, making a difference wherever you go. 🌟
Uga laughter, uga vibes—everything about you spreads warmth. So, never stop being that beautiful breeze in people’s lives.

Have an amazing year ahead, filled with blessings, adventures, and sweet memories. 🎂💖
Stay blessed, stay happy, and keep inspiring always, dear Thendral
. 🌹🌈


August 10, 2025, 06:22:38 am
1