*அவளின் அழுகுரல்*
அந்தகார இரவினில்,
அலறும் ஆலயத்தின் அருகில்,
அலைபாயும் ஆவிகள் அச்சத்தில் அணைந்தன,
அவளின் அழுகுரல் அண்டமெங்கும் அலைந்தது,
அடங்காத ஆவிகள் அவலமாய் அசைந்தன,
அறியாத் துயரில், அலைகடலாய் ஆர்ப்பரித்தன.
கல்லறைக் காட்டின் கரையில், கருமேகம் கலைந்தது,
கண்களற்ற கோபுரம் காலத்தை கலங்கடித்தது,
கரையோரக் காற்றில் கலங்கிய கானங்கள்,கதறிடக் கேட்டன.
கலங்காத காவியத்தின் கனமான காட்சியாய்,
கண்மூடாக் கனவுகள் காணாமற்போயின.
நீண்ட நிழல்போல நிலவினில் நீந்தியவள்,
நேசமற்ற நினைவுகள் நெஞ்சினில் நீங்காதவள்.
நிலைகுலைந்த நெஞ்சங்கள் நிசப்தமாய் நடுங்கின,
நிறமற்ற நிசப்தத்தில் நிலைதவறிக் கிடந்தன.
நாளைய நம்பிக்கை
நாசமாய் நசிந்திட,
நம்பிக்கை நாடி நிஜமற்று நின்றன.
நரகத்தின் நுழைவாயில் நழுவியே நின்றது,
நானிலம் நடுங்கி நிசப்தமாய்ப் போனது.
மூடுபனி மூடிய மயானத்தின் மூலையில்,
மூச்சிரைக்கும் மௌனம் முழுமையாய் மிதந்தது.
முடிவற்ற மரணத்தில் முழக்கங்கள் மிதந்திட,
முன்னோர்கள் முகத்தில் முடிவற்ற வேதனை.
முழங்காலிட்டு முறையிட்டாள்,மெலிந்தவள்.
பறவைகள் பறந்தன, பயத்தில் பதறின,
பல்லாயிரம் பேய்கள் பின்னாலே தொடர்ந்தன.
பதறிய பாறைகள் பாதையில் சிதறின.
பண்பற்ற பயங்கரம் பரப்பியே பாய்ந்தது,
பயங்கரப் பிம்பங்கள் பலவிதமாய்ப் பதிந்தன.
பாதகப் புயல்கள் பாய்ந்தோடும் போது,
பாசம் பதைத்துப் பாழாகிப் போனது.
வானத்து வட்டநிலா வாட்டமாய் நின்றது,
வயலின் பகுதி வெறிச்சோடிக் கிடந்தது.
வலியற்ற வரிகள் வார்த்தைகளில் வாழ்ந்தன,
வேதனை வெளிப்பட்டது- விடிவை எதிர்பார்த்தது.
விடியாத இரவில் விசித்திர வேதனை,
விண்மீன்கள் வெட்கி வெளிறியே நின்றன.
விதியற்ற விளையாட்டு, விழிகளில் விரிந்தது,
விஷமப் புயலென வேகமாய்ப் பாய்ந்தது.
சோகத்தின் சுவடுகளில், சூனியத்தின் சொந்தமாய்,
சொல்லாத கதைகளின், சூட்சும சலனமாய்,
சொற்களற்ற சொற்களால், சுழன்றோடும் சத்தியமாய்,
சுடரற்ற சூனியத்தில், சுருண்டோடும் சுடராய்.
சுமைகளைச் சுமந்தாள், சுழன்றோடும் காலம்போல்,
சுழன்றேடும் சுழலைப்போல், சுடுகாட்டுச் சூழலில்.
சூரியனின் சுடரும், சூனியமாய்ப் போனது.
மயானத்தின் மையத்தில், மண்டியிட்டாள் மதிமயங்க,
மரணத்தின் மாளிகையில், மனம் நொந்து மாள;
மனிதர்கள் மறந்த, மகத்தான காவியம்.
துயரத்தின் திரையில், தொலைந்ததோர் திசை,
துயரத்தின் ஆழத்தில், துடித்ததோர் திசை;
துணக்கற்ற துயரம், துளிர்விட்டதே அங்கே,
துணக்கற்ற நினைவுகள், துடித்ததோர் துன்பம்.
தூயவள் துயரத்தில், தூக்கத்தை இழந்தாள்,
தூக்கம் தொலைந்ததும் , துயரம் தொடர்ந்தது.
தூய்மையற்ற துயரில், தூங்கியே கிடந்தாள்,
தூங்கியே கிடந்தாள், துயரத்தில் மூழ்கினாள்.
நிலவொளி நீளும், நிசப்த இரவினில்,
நீங்காத சோகம், நிலமெங்கும் பரவும்;
நாளைய நாட்களிலும், நடுங்கும் ஓலமாய்,
நிரந்தரச் சோகமாய், நிலைத்து நிற்கும்.
Always peace and love ✌️❤️
Harry Potter 💥