Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-049  (Read 2631 times)

October 14, 2024, 06:22:34 pm
Read 2631 times

RiJiA

கவிதையும் கானமும்-049
« on: October 14, 2024, 06:22:34 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-049


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.



மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: December 02, 2024, 05:05:43 pm by RiJiA »

October 15, 2024, 10:38:58 am
Reply #1

Mansi

Re: கவிதையும் கானமும்-049
« Reply #1 on: October 15, 2024, 10:38:58 am »
The Voice of My last Night before sleep

In twilight’s embrace, a melody weaves,
A singer appears, as the world softly breathes.
With each note that rises, a heart takes flight,
Carving through silence, igniting the night.

The strings of ur guitar hum a soft tune,
Echoing dreams beneath the watchful moon.
His voice, like the wind, dances through the trees,
Carrying stories on the breath of the breeze. I’m always want to be the strings of your guitar and you know why ….

With passion and grace, he paints every line,
A tapestry woven of rhythm and rhyme.
In the crowd, souls awaken, as shadows retreat,
His song, a sweet promise, makes my night complete and comfort with better sleep . I’m not going to miss it but I’m carrying it with me as my protection and memories ❤️this symbol indicates my love my guitar my world my music forever mine ❤️ hope all this mine forever if not please be in safe place or safe hand I will watch you forever

RR my love of music and guitar

My English version will be translated to Tamil but it’s beautiful when it’s in English hope that Tamil give the same emotion and feel …!!!!


Tamil version

உறங்கும் முன் செவி சாய்க்கும் குரல்

அந்தியின் அணைப்பில் எழும் ஓர் மெல்லிசையின் வருடல்

சுற்றி உலகமே மௌனமாக சுவாசிக்கும் போது, ஓர் மெல்லிய குரலாய்  படற்கிராய்

குரலின் மென்மை உயரும் தருணம், மனம் மெலிந்து பறக்க எண்ணும்

அமைதியான அந்நேரத்தை மென் குரல் கொண்டு செதுக்கி, என் இரவுகளை வண்ண மயமாக்கினாய்

அதிர்கம்பிகள் கொண்ட உன் கித்தார் கொண்டு, அதிர்வே இன்றி என்னையும் ஓர் மென் குரல் எழுப்ப வைக்கிறாய்

கனவுகள் கொண்டு விழிப்புடன் நான் இணைகிறேன் உன்னோடு அந்த நிலவின் ஒளியில்

உன் குரலோடு நானோ, அக்காற்றோடு நடனம் பயிலும் மரக்கிளை போல் ஆனேன்
 
மெல்லிய தென்றலின் பிணைப்போடு, என் கனவுகளை சுமந்து செல்கிறேன்

உனது கித்தாரின் கம்பிகளை போன்று உன்னோடு இணைய என் மனம் எண்ணுவதை ஏன் என்று நீ அறிவாய்

ஒவ்வொரு வரியையும், பேரார்வம் மிகுந்த கருணையின் வழியில் நீ வரைகிராய்

இனிய தாளங்களையும் வருணனை கொண்டு அழகான நெய்கிறாய்

கூட்டத்தில் நிழல் கூட எழ எண்ணும்போது
எனது உயிரின் ஆன்மா விழித்து எழுகிறது

உனது பாடல், ஒரு இனிய வாக்குறுதி கொடுத்து, என் இரவை முழுமையடையச் செய்து என்னை ஆறுதலோடு துயில் கொள்ள வைக்கிறது

விட்டு விலக எண்ணம் ஏதும் கொள்ளாமல் என்னோடு என்னுள்  என் நினைவுகளோடு சுமக்கிறேன் பத்திரமாக

❤️ இச்சின்னம் யாவும் உவமையாக்குகிறேன் எனது அன்பின் வெளிபாட்டில் - 
என் காதலே, என் (கித்தார்) கருவியே, எனது உலகமே, எனது இசையே - என்றும் என்னுடையதாய் கொள்வேன் என்னோடு

அவ்வாறு இல்லை என்றாலும்
தயை கூர்ந்து பாதுகாப்பான கையில் இருப்பாயாயின்
நான் தம்மை கண்டு களிப்பேன் என்றும் என் உலகமாய்

RR my love of music and guitar




« Last Edit: October 17, 2024, 07:58:56 pm by Mansi »

October 15, 2024, 05:30:44 pm
Reply #2

Limat

Re: கவிதையும் கானமும்-049
« Reply #2 on: October 15, 2024, 05:30:44 pm »
GTC கவிஞர்களின் கவிக்கு உயிர் கொடுக்கும் குரலோசைக்கு இக்கவி சமர்ப்பணம்..!💐💐

கவிஞனின் சொற்களுக்கு
இசையால் உடல் கொடுத்தாலும்
குரலால் உயிர் கொடுத்த பிரம்மா நீயே

கவிதையும் காணமும் நிகழ்ச்சியை
GTC அன்பர்கள் அனைவரையும் ரசிக்க வைத்தாய் உன் அலாதி குரல் வளத்தாலே..!

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலை சொல் கேளாதோர் - இது பொது மொழி

ஆனால்.....

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
எங்கள் RIJIA குரல் கேளாதோர் - இது புது மொழி

கூர் இருள் துளைக்கும் குளிர் பனிப் பொழிவு
கூவிச் செல்லும் கூதல் காற்று
முகில் இடுக்கில் முகம் பார்க்கும் நிலவு
மூடாத இமைகளுடன் விழித்திருக்கும் வானம்

ஓசை தொலைத்த நிசப்தங்களின்
கைபேசி ஒலிபெருக்கி வழியாக
ஊடுருவி வரும் உந்தன் குரலோசையில்
உன்னோடு சிறகு விரிக்கிறது GTC

காதோரம் தேனூற்றும் கணப் பொழுதெல்லாம்
தொடுவானச் சூரியனாய் கைப்பேசி தொடுதிரை முழுவதும் நிறைந்திருக்கும் கவிதையும் காணமும் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி உந்தன் பெயரே..!

மென் மழையின் தூறலென வீழ்ந்து
மிஞ்சுகின்ற வெள்ளமென எழுந்து
மஞ்சள் மாலை ஒளியெனப் பரந்து
மனதை மயக்கும் இருள் கலந்து
மாய ஒளி உமிழும் மெழுகென கரைந்து
மனவெளியெங்கும் நிறக்குழம்பு பூசி நிற்கும் உந்தன் குரலோசை..!

நாதமாய் சுருதியாய் நற் சுரமாய் ராகமாய்
நாளும் பொழுதும் நடந்து வரும் மெல்லிசையே
GTC கவிஞர்களின் கவி காத்திருக்கும்
தென்றலோடு தவழ்ந்து வரும் உந்தன் குரலோசைக்காக..!

October 15, 2024, 09:24:11 pm
Reply #3

Candy Boy

Re: கவிதையும் கானமும்-049
« Reply #3 on: October 15, 2024, 09:24:11 pm »
என் உயிரில் கலந்த இசையே...!
என் தனிமையின் துள்ளல் உன் இசை
என் தனிமையின் ஒரே தோழன் உன் இசை
என் தனிமையின் கண்ணீர்கட்டிகளை கரைக்கும் வெப்பம் உன் இசை
என் தனிமையில் அன்னையின் ஸ்பரிசம் உன் இசை
என் தனிமையின் இளமை ரகசியம் உன் இசை
என் தனிமையின் எதிரிகளை கொன்றது உன் இசை...
என் தனிமையின் நிசப்த பசிக்கு விருந்து உன் இசை..!
உருகிப்போன என் தனிமை மெழுகுவர்த்தி மீண்டும் உருப்பெறுகிறது உன் இசையால்
தோல்வியைத்தான் தினமும் சந்திக்கிறது உன் இசை..!
என் தனிமையை சலிப்படைய செய்யும் முயற்சியில்....
விடிந்துவிட்டது ..காற்றின் ஒற்றை காதலனே
நான் உன்னை  நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
மீண்டும் உன் இசையுடன் தனித்திருக்க காத்திருக்கிறது என் தனிமை….

October 15, 2024, 11:50:42 pm
Reply #4
Re: கவிதையும் கானமும்-049
« Reply #4 on: October 15, 2024, 11:50:42 pm »
பாடல்


நிசப்தமான இரவினில்
இனிமையான இசையுடன்
இனிமை குரல்களில் ஒலிக்கும்
பாடல்
காதல் கதைகள் கதைக்கும்
பாடல்
கண்களில் கனவுகள் நிறைக்கும்
பாடல்
விழாக்காலம் அதிரும் பாடல்
பக்தியோடு பாடும் பாடல்
பிறப்பு முதல் இறப்பு வரை
தொடரும் பாடல்
கண்ணீரில் கரையும் ஒருவனை
கனிவுடன் தேற்றும் பாடல்
கல்நெஞ்சமும் கசிந்துருக செய்யும்
கவிஞ்சனின் பாடல்
இசை தந்தைக்கும் மொழியெனும் தாய்க்கும்
பிறந்த பிள்ளையின் பெயர் பாடல்

பாடல் பற்றிச்சொல்ல ஆயுளும்
போதுமோ ..?
பிறவிகள் எடுத்து வந்தும்
சொல்லத்தான் இயலுமோ.?
மானுடம் மரபினோடு
கலந்துவிட்ட பாடலை
கவியினில்  விரித்துரைக்க
முடியுமோ...?
இயன்ற வரை சொல்லிபோட்டேன்
இனிய என் மித்திரரே..!
கேளுமின் யான் மொழிந்ததோர் கவியை
கவிதையும் கானமும் தன்னிலே...🥳💐😉✍️



« Last Edit: October 15, 2024, 11:52:59 pm by Dan_Bilzerian »

October 16, 2024, 03:12:10 pm
Reply #5

Shree

Re: கவிதையும் கானமும்-049
« Reply #5 on: October 16, 2024, 03:12:10 pm »


உயிரை உண்ணும் உணரா உணர்வே....


விழி கண்டு வியந்த வழி இல்லை -  என் பொருள்
   செவி சேர்ந்து வழி கொண்டு என் உயிர் கலந்த  இன்குரல்

குழல் கொண்ட காற்றோடு மேன்மையுறும் பண் போன்று
   உரைந்த என்னை நீ மீட்கிறாய், புத்துயிர் கொண்டு

பூவின் உள்ளிருந்தவாறே தேனீக்களை வசமாக்கும் அச்சிறு மகரந்தத்தாளின் வழி
   இன்சுவை கொண்ட தேன் துளியின் சிறப்பாக
என்னுள் இருக்கும் அனைத்தையும் சிறு ஒலி கொண்டு வசம் செய்து
   என் உயிர்ப்பொருளை நெகிழச் செய்கிறாய்

உவமை கொண்டே உன்னை முழுதும் விவரிக்கலாயினும்
   உன்னோடடு நான் கொண்ட பேரன்பினை
      வரி கொண்டு மட்டுமே இயற்றுதல் ஆகாது
   வரி வழி உள் உயிர் கொண்ட நேசத்தை
      விரல் கொண்டு சொற்களால் தீட்டுகிறேன்

அன்பை தேடும் மழழையின் மனக்குரலை அறியும் தாயைப்போல
   இடர் தோன்றும் வேலையில், என் மனக்குரலை அறிவது நீயே

தாய் தந்தையின் பிரிவை ஏற்க இன்றளவும் என்னோடு நீ கொண்ட பகிர்ப்பினை
   இமை மூடிய வண்ணம் என்னுள் ஏற்கிறேன்

பேரிடர் ஏதும் என்னைச் சூழ்ந்தாலும்
   பேரின்பம் என்னை ஆட்கொண்டாலும்
ஒலி வழி ஒளி வீசி என்னை இறுகபற்றிக் கொள்கிறாய்

பற்றிக்கொண்ட பிணைப்போ உன் மேல் ஏழும் என் காதலினை
   உதடுகள் உறக்க உரைக்க எண்ணும்
   உரைத்து கூறலாயின், இதழ் பதித்து கூற நேரும்
   பதித்து கூறலாயின், இமை விழித்து கூற கேட்கும்
   விழித்து கூறலாயின், விரல் பற்றிக் கூற வேண்டும்
   பற்றிக் கூறலாயின், உயிர் அணைத்து கூற ஏங்கும்
என் உயிரை உண்ணும் உணரா உணர்வே,
   உயிர் அணைத்து உன்னோடு உரைகிறேன்


உணரா உணர்வே - பிரதீப் குமார் ( PK - my love of music )

« Last Edit: October 16, 2024, 03:35:15 pm by Shree »
ஶ்ரீ

October 16, 2024, 07:33:38 pm
Reply #6
Re: கவிதையும் கானமும்-049
« Reply #6 on: October 16, 2024, 07:33:38 pm »
அனைவருக்கும் வணக்கம் !
சிரீய தலைப்பை அளித்து என் சிந்தைக்குள் சிறுத்தையை சீறிப்பாய செய்திருக்கிறீர்கள் .
இதுவே என்றும் என் உரையின் துவக்கம் !

ஐந்து வயதில் மேடையேறிய என் முயற்சி !
அந்த ஆசிரியை எனக்கு தந்த அயராத பயிற்சி !

அடுத்த அடுத்த வகுப்புகளிலும் அதிரும் பேச்சுக்கு அடையாளம் ஆனேன் நான் !

தமிழ்த்தாயின் மடியில் தஞ்சம் புகுந்தேன் நான் !

எத்தனை பெரிய கூட்டத்திலும் ஓங்கி ஒலிக்கும் உன் பேச்சுக்கு ஒலி வாங்கி எதற்கு என்று ஒய்யாரமாக பேச சொன்னவர்கள் பலர் !

பேச்சு மூச்சு இல்லாத வகுப்பறையில் பேச்சுப்போட்டிக்கு பெயர் கொடுங்கள் என்றதுமே பேச்சே இல்லாமல் பேரானந்தமாய் கை உயர்த்திவிடுவேன் நான் !

பேச்சுப்போட்டிக்கென பக்கம் பக்கமாக ஆசிரியை எழுதிக்கொடுத்த தாளை கையிலேயே வைத்துக் கொண்டு சுற்றுவேன்
தனியாக நின்றுக் கொண்டு கத்துவேன் !

விளையாட்டாய்க் கூட இந்த முறை நீ வேண்டாம் என்று சொன்னாலும் நான்
விட்டதில்லை ஒரு போதும் விவேகானந்த கேந்திர பேச்சு போட்டிகளை !

பின்னோக்கி பார்க்க தேவையில்லை முன்னோக்கி செல்லுங்கள் என்பதுபோல்
முதலோ மூன்றாவதோ பரிசை தட்டிவிடுவேன் எப்படியும் !

என்னால் முடியும் என்றும் நான் நினைத்ததில்லை
என்னால் மட்டும் தான் முடியும் என்றும் நான் நினைத்ததில்லை !

தலைக்கணம் தான் கொஞ்சம்.
என்னை தவிடு பொடியாக்க சக போட்டியாளர்கள் வரும் வரை !

வெற்றியில் ஆடியதும் தோல்வியில் வாடியதும் வர வர வாடிக்கையாகி போனது எனக்கு !

பள்ளி சொல்லி தந்தப் பாடத்தால் பல மேடைகள் பழகிப்போனது எனக்கு !

புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இல்லை
புத்தியில் சிறந்ததாய்
வழக்கம் இல்லை !

மெத்தனமாய் இருந்ததுமில்லை மெனக்கெடுதல் ஏதும் இல்லை !

வாய்க்கு வந்ததை பேசியதுமில்லை
வாய் சொல்லில் வீரனும் இல்லை !
ஆனால் என்
கடமையை செய்ய காற்றிலே கர்ஜித்துவிடுவேன் நான் எப்படியோ ?

உச்ச சாயலில் பேசியே ஓரிரு
உச்சரிப்புகளில் கோட்டைவிடுவேன்.
பலரின் கரகோஷங்களும் பரிகாசகங்களும் பட்டைத் தீட்டியது என்னை !

இன்று காலங்கள் செல்ல செல்ல என் கர்ஜனையே
கசந்துப்போனது எனக்கு !
என் சுவரமே  பாரமானது எனக்கு !

ஊடக தாகம் ஊடுருவியே ஊரெல்லாம் சுற்றினேன் !

காசுக்கும் கடமைக்கும் ஏதோ ஒரு கடையில் டீ ஆத்துவதைவிட
என் கனவுகளை நினைவாக்க கடவுளை வேண்டியே காத்து நிற்கும் கற்பூரம் நானே !
காற்றில் கரைந்துவிடுவேனோ தெரியவில்லை ?

எப்படியோ வானொலியிலோ , தொலைக்காட்சியிலோநான் உங்கள்
சுட்டித்தோழன் சிவருத்ரன் என்றே புத்துயுயிர் பெற்ற குரலோடு நான் என்னை சுயஅறிமுகம் செய்து பேசும் நாட்களுக்காய் காத்துக் கிடக்கிறேன் !

என்னுடைய பேராசை தான் இது .
பாவம் நானும் மனிதன் தானே !

October 16, 2024, 07:36:54 pm
Reply #7

Eagle 13

Re: கவிதையும் கானமும்-049
« Reply #7 on: October 16, 2024, 07:36:54 pm »
எனக்கு பிடித்த பாடல்
 உனது குரலில் கேட்க
 எனக்கு என்றும் விருப்பமே!
அதை உனது குரலில் கேட்பதால்
எனது ஒலிப்பெருக்கியில்
மீண்டும் மீண்டும் ஒலிக்குமே!
நீ பாடும் பாட்டில் என்றும் உச்சரிப்பு
அழுத்தம் திருத்தமே!
உனது பாடலில் உள்ள உணர்வுகள் கேட்டு
எனக்கு மனது வலிக்குமே!
உன் இனிய குரலில் வரிகள் என்றும்
சுருதியோடு நிலைக்குமே!
நீ பாடும் பாட்டில் எந்நாளும் சில
சிணுங்கல் இருக்குமே!
அந்த சிணுங்கல்கள் பாடல்களை
தரத்தை தூக்கி நிறுத்துமே!
உந்தன் பாட்டில் வரிகளின் வலிகள்
 என்றும் புரியமே!
உந்தன் குரலில் நவரசங்களையும்
படைக்க முடியுமே!
இந்த மண்ணில் உயிர் மாண்டாலும்
இந்த உலகை ஆளுமே!
வாழ்க்கை என்பது வலிகள் நிறைந்த
கோலமே!
அதில் உன் பாடல்கள் எங்களுக்கு
நம்பிக்கை பாலமே!
நீ ஒவ்வொரு முறையும் வெற்றி
காண்கிறாய்!
உனது படைப்பை பிறர் மீண்டும்
பதிப்பிக்க முடியாமல் தவிப்பதால்!
உன் திறமையை யாரும் புதுப்பிக்க
முடியாமல் இருப்பதால்!
நீ மறைந்தாலும் மறையாமல் மண்ணில்
ஒவ்வொருவரின் மனதில் வாழ்கிறாய்
எங்கள் செவிகளில் என்றும்
உன் குரலை கேட்பதால்!.

மூச்சில் முடிந்த உன் குரல்
மீட்க முடியாத எங்கள் குடுப்பிணை!
_ ஸ்வர்ணலதா!

மூச்சி இல்லாமல் பாடிய
நீ மூச்சினை விட்டுவிட்டாய்!
எங்கள் ஒவ்வொரு முயற்சியிலும்
உன் பாடல்கள்!

  S.P.B.