இந்த புகைப்படத்தை பார்த்தவுடன்,
என் நினைவில் ஊஞ்சலாடியது ஒரு சினிமா வசனம்,
"நட்புண்னா என்னன்னு தெரியுமா" இப்படி தொடங்கும் அந்த வசனம்...
நம்மை படைத்த இறைவனை விட கொடுத்து வைத்தவர்கள் நாம் தான்...
அந்த இறைவனுக்கு கூட கிடைக்காத ஓர் அற்புதமான உறவு இந்த நட்பு ...
அந்த இறைவனுக்கு கூட கிடைக்காத ஓர் அற்புதமான உறவு இந்த நட்பு...
ஒரு தடவை,,,,,ஒரு தடவை கூடவா உன் வலியை என்னிடம் சொல்ல தோனல?
உன் வலியை நான் உணராமல் போகலாம்..
ஆனால்..
உனக்கொன்று என்றால்,
காலம் நேரம் முடிந்ததும் மறைவதற்க்கு,,,
நான் அந்த நிலவுமில்லை சூரியனுமில்லை...
நீ எந்த பக்கம் திரும்பினாலு நான் எங்கும் இருப்பேன்..
அந்த வானம் போல...
நீ அழு,,,,,,நீ அழு நான் வேணான்னு சொல்லல..
என் தோளில் சாய்ந்து அழு....
அந்த அழுகை கூட உனக்கு ஆனந்தமாக தெரியும்....
அந்த அழுகை கூட உனக்கு ஆனந்தமாக தெரியும்....
எந்த சுழல்நிலையிலும் உன்னை விட்டும் கொடுக்காமல்,,, தட்டி கொடுத்து போகும் ஒரே திமிர் பிடித்த உறவு,,
உனக்கு என்னக்கும் இடையே உள்ள இந்த புனிதமான நட்பு...
நிரம்பியதும் விட்டு விலகி ஓடுவதற்க்கு நான் உன் கண்ணீர் துளிகள் என்று நினைத்து விடாதே...
உன்னோடு நான் இருக்கும் வரை உன் அகராதியில் அனாதை என்ற முகவரியை கிழித்தேறிந்து எரித்து விடு...
துன்பங்கள்ளாகிய அந்த சாம்பல் காற்றோடு காற்றாக கலந்து மறைந்து போகட்டும்..
காற்றோடு காற்றாக கலந்து மறைந்து போகட்டும்..
இப்ப கூட எனக்கு ஒரு சினிமா வசனம் தான் நினைவில் வந்து வந்து போகுது...
( )
எழுந்து வா நண்பா எதுவானாலும் பாத்துக்கலாம்....