Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-030  (Read 13667 times)

August 21, 2023, 09:55:14 pm
Read 13667 times

Administrator

கவிதையும் கானமும்-030
« on: August 21, 2023, 09:55:14 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-030


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: September 12, 2023, 06:46:07 pm by Administrator »

August 22, 2023, 12:37:50 am
Reply #1

Donmama

Re: கவிதையும் கானமும்-030
« Reply #1 on: August 22, 2023, 12:37:50 am »
          நட்புக்கு ஒரு இலக்கணம்


தோழா எதற்கும் கலங்காதே..
தோழி இருக்கிறேன் மறவாதே..
தோளில் நீயும் சாய்ந்து கொண்டால்
தோல்விகள் உன்னை துரத்தாதே!!

தடைகள் சில இங்கு சார்ந்து வரும்..
தவிப்புகள் பல இங்கு கடந்துவிடும்..
தேனீக்கள் கட்டிய கூட்டு வீடு இது..
தேள் வந்து குடியேறும் மறவாதே..

வந்தது எதுவும் வாய்ப்பதில்லை..
தந்தது எதுவும் தர்மம் இல்லை..
வழியின் வழியில் வலி இருந்தால்..
வசந்தங்கள் வசப்படும் மறவாதே...

சிலந்தியின் வலையினை பார் தோழா...
சிரமங்கள் இருக்கும் தெரியாதா?
சிரமம் என்று நினைத்திருந்தால்
சிகரத்தை தொட வழி அறியாதா?

கடல் அலை வருவதை பார் தோழா..
கடந்து வந்து கரை தொடும் தெரியாதா?
கல்லறையில் பூக்கும் பூவூக்கும்,
கார்மேகம் மழை தந்தால் மலராதா?

நினைத்தால் நினைவுகள் வலி தோழா...
நினைவலைக்கு கரை இங்கு  கிடையாதா?
நிழலும் தனியே நிற்பதினால்
நின்ற இடம் அது மறவாதா?..

ஒருநாள் உனக்கு வரும் தோழா..
ஒவ்வொரு வரமும் உன் வசம் தோழா..
கண்ணுக்கும் கனவுக்கும் தூரம் என்றால்..
கனவுகள் இங்கு பூக்காதா??

சோகங்கள் என்று நினைத்திருந்தால்,.
சோலை கதிர்கள் இங்கு விளைவதில்லை..
சொந்தங்கள் எல்லாம் சொர்க்கம் என்றால் ..
பந்தங்கள் இங்கு பாரமில்லை..

இழப்புகள் எல்லாம் நிரந்திரமில்லை..
இழப்போம் என்று தெரிவதில்லை..
இன்னிசை பாடிடும் கானகுயில் ஒன்றும்..
இதுதான் இசை என்று அறிவதில்லை..

துன்பத்திற்கு துணை உண்டு என் தோழா..
துவண்டு நீ கிடந்தால் துளிர்க்காதா?
துடுப்புகள் எல்லாம் பாரம் என்றால்..
தடுப்புகள் தாண்டி படகு கரை அடையாதா?..

தடுமாறும் மனம் இங்கு ஏன் தோழா..
தட்டிக்கொடுப்பேன் நான் இங்கு வா தோழா..
தவழும் பிள்ளை நீ எனக்கு,
தவறிட வழி இல்லை புரியாதா?

உயிர் தந்த உறவிது நம் நட்பு தோழா..
நீ உடைந்தால் உயிர் விடுவேன் நான் தோழா..
உனக்காக யார் என்று கலங்காதே...
உள்ளங்கையில் உன் உலகம் நான் ,
என்றும் மறவாதே..

சுமை என்றால் சுகமில்லை என் தோழா..
சுழலும் உலகினில் நாம் தோழா..
வார்த்தைகள் எல்லாம் வாழ்த்துக்கள் ஆக,.
வாழ்வோம் இந்நாள் வா தோழா!!!





















« Last Edit: August 22, 2023, 01:30:51 am by Donmama »
Follow your heart ❤️

August 23, 2023, 11:05:01 am
Reply #2

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-030
« Reply #2 on: August 23, 2023, 11:05:01 am »
முதல் காதல் பிரிவு

அந்தி சாயும் மாலை நேரம் சூரியன் உறங்க செல்லும் நேரம்
சட்டென்று நிலவை போல ஒரு முகம் எனது அடுத்த  வீட்டில் தோன்றியது!

ஒரு பார்வை பார்த்தாள் கண்ணாடி கீழேவிழுந்து நொறுக்கியது போல்
எனது இதயம் நொறுங்கியது அப்பொழுது நினைத்துக்கொண்டே
பார்த்தவுடன் காதல் வரும் நெஞ்சை துளைக்கும் என்று !

தினமும் ரசிக்க தொடங்கினேன் அவளின் செய்கைகளை
அது சிறுபிள்ளையை போல் குறும்பின் விளையாட்டு !

அலாரங்கள் எனது கடிகாரத்தில் வைக்கவில்லை மாறாக
அவள் வரும் நேரத்தை எனது நெஞ்சத்தில் வைத்திருந்தேன் !

அலைபேசி எண் பரிமாறப்பட்டது அன்று பரிமாறப்பட்டது
எண்கள் மட்டும் அல்ல எங்கள் இருவரின் இதயமும் தான் !


அன்றில் இருந்து காலம் நேரம் அறியாமல் பேசிக்கொண்டிருதோம்
நிலவும் சூரியன்கூட எங்களை தேடின இரவும் பகலும் !

கூர்க்கா வின் ரோந்து பனி அவர் லடியால் கதவு தட்டின  சத்தம்
எங்கள் இருவர் காதுகளில் மட்டும் ஒலித்தது !

இருவரும் குறும் செய்திகள் அனுப்பியது நினைவில் வருகிறது
"தூங்குறிய என்று " அன்றுமுதல் எனது இதயம் அவளிலும்
அவளது இதயம் எனிலும்  துடிக்க ஆரம்பித்து காதல் பூத்த தருணம் !

காதல் வாழ்கை தொடங்கியது பேருந்துதில் முதல் பரிசாக
அவளுக்கு கொடுத்தது பூ பூவுக்கே பூவா என்று நினைத்த தருணம் !

காதலிக்கு  ஒரு சிறப்பு அம்சம் உண்டு அவள் நேரத்திற்கு தகுந்தார் போல
தாயாக தந்தையாக தோழியாக அணைத்து உறவு முறைக்கும் உரிமை கொண்டவள் !

என்னை அழவைப்பதும் சிரிக்கவைப்பதும் சிந்திக்கவைப்பதும்
 அவளது கையில் என்றாகிவிட்ட தருணம் !

என்னை நானே மறந்த நேரம் எனது செயல்களை கண்டு
தாயும் தந்தையும் கூறியது நல்ல இருக்கிய மகனே என்று

அன்றைய நாள் எனது வாழ்வின் கருப்பு தினம் நீ கூறிய செய்திக்கு
பின்பு எனது இதயத்தை நொறுக்கிவிடது
பிடித்த கண்ணாடி கோப்பை உடைந்தது போல!

காதலனுக்கு காதலி கொண்டுவந்த அழைப்பிதழ்
அவளின் நிச்சியதார்த்தம் சுனாமியை போல கலங்கவைத்த செய்தி

முகத்தை மூடி எனது அழுகையை உன்னிடம் காட்டாமல் நான் அமர்ந்திருக்க
அப்பொழுது நீ கூறிய வார்த்தை  இன்னும் எனது நினைவுகளில் ஓடிக்கொண்டிருக்கிறது !


என்றும் உனது நினைவுடன்

நீல வானம்
« Last Edit: August 23, 2023, 07:09:47 pm by Passing Clouds »

August 23, 2023, 09:43:32 pm
Reply #3

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
Re: கவிதையும் கானமும்-030
« Reply #3 on: August 23, 2023, 09:43:32 pm »
துணையாய் ஓர் நட்பு.....

துன்பத்தில் தோள் கொடுக்கும்
நம்பிக்கை தூணாய், அன்பின் ஆறுதலாய்
என் தோழமைக்கு.....

என் அன்பு தோழமையே துவளாதே....
துயரம் என்று ஒருபோதும் வருந்தாதே....
துயரத்திலே வாழ்வை சிதைக்காதே.....
துயரம் ஒரு போதும் நிலைக்காதே......

துணிவை கொண்டு எதிர்கொள்ளு தோழா.....
துணிச்சல் என்று அம்பெய்து
துன்பத்தை கொன்று விடு தோழா......

தோல்வி என்று எண்ணாதே தோழா...
தோற்பது வெற்றியின்
அடித்தளம் என்று நினைவுகொள் தோழா....

நட்பு உறவாய், துணையாய், பலமாய்,
கை கொடுப்பேன் தோழா.....
உன் துயரம் துடைக்க அன்பின் அரவணைப்பில்
தோள் கொடுப்பேன் தோழா....

அன்பின் வலியில் தூக்கி எறிந்தால்
வீசப்பட்ட இடத்தில்
விதையாய் மாறி மரமாகு தோழா.....
வீசியவன் விழித்து
அஞ்சும் நாள் விரைவாகும் தோழா.....

இழந்தவை எல்லாம்
இம்மியளவு என்று எண்ணு தோழா.....
இனி மீட்டும் வரை இன்பம் ஒன்றே
ஆயுதமாய் எண்ணு தோழா......

வலி என்று வாடாதே தோழா.....
வலிமையாய் வாழ்ந்திடு தோழா.....
துன்பத்தை புதைத்திடு தோழா.....
அதில் , இன்பத்தை விதைத்திடு தோழா.....

புதிதாய் புது உலகை புகுத்திடு தோழா.....
புது விடியலை புன்னகையில் காண்போம் தோழா....


 இந்த வரிகளை என் அன்பு தோழன் "இயற்க்கையை நேசிப்பவர்" என் நட்புக்கு சமர்ப்பிக்கிறேன்....
« Last Edit: August 25, 2023, 07:37:04 pm by Vaanmugil »

August 25, 2023, 02:41:33 pm
Reply #4

Shruthi

Re: கவிதையும் கானமும்-030
« Reply #4 on: August 25, 2023, 02:41:33 pm »
இந்த  புகைப்படத்தை பார்த்தவுடன்,
என் நினைவில்  ஊஞ்சலாடியது  ஒரு  சினிமா  வசனம்,
"நட்புண்னா  என்னன்னு  தெரியுமா" இப்படி  தொடங்கும் அந்த  வசனம்...

நம்மை  படைத்த  இறைவனை  விட  கொடுத்து வைத்தவர்கள்  நாம் தான்...
அந்த  இறைவனுக்கு  கூட  கிடைக்காத ஓர்  அற்புதமான  உறவு  இந்த  நட்பு ...
அந்த  இறைவனுக்கு  கூட  கிடைக்காத ஓர்  அற்புதமான  உறவு  இந்த  நட்பு...

ஒரு  தடவை,,,,,ஒரு  தடவை  கூடவா  உன்  வலியை  என்னிடம் சொல்ல  தோனல?


உன்  வலியை நான் உணராமல்  போகலாம்..
ஆனால்..
உனக்கொன்று  என்றால், 
காலம் நேரம்  முடிந்ததும்  மறைவதற்க்கு,,,
நான்  அந்த  நிலவுமில்லை சூரியனுமில்லை...
நீ  எந்த  பக்கம்  திரும்பினாலு  நான் எங்கும்   இருப்பேன்..
அந்த  வானம்  போல...


நீ  அழு,,,,,,நீ அழு நான்  வேணான்னு  சொல்லல..
என்  தோளில்  சாய்ந்து அழு....
அந்த  அழுகை  கூட  உனக்கு  ஆனந்தமாக தெரியும்....
அந்த  அழுகை  கூட  உனக்கு  ஆனந்தமாக தெரியும்....

எந்த  சுழல்நிலையிலும்   உன்னை  விட்டும்  கொடுக்காமல்,,, தட்டி  கொடுத்து போகும்  ஒரே  திமிர்  பிடித்த  உறவு,,
உனக்கு  என்னக்கும் இடையே  உள்ள இந்த  புனிதமான  நட்பு...


நிரம்பியதும்  விட்டு  விலகி  ஓடுவதற்க்கு  நான் உன் கண்ணீர்  துளிகள் என்று  நினைத்து  விடாதே...

உன்னோடு  நான்  இருக்கும் வரை  உன்  அகராதியில்  அனாதை  என்ற முகவரியை கிழித்தேறிந்து  எரித்து விடு...
துன்பங்கள்ளாகிய அந்த  சாம்பல் காற்றோடு காற்றாக கலந்து  மறைந்து  போகட்டும்..
காற்றோடு காற்றாக கலந்து  மறைந்து  போகட்டும்..

இப்ப கூட எனக்கு ஒரு  சினிமா  வசனம்  தான்  நினைவில்  வந்து  வந்து  போகுது...
(                                                              )
எழுந்து  வா  நண்பா எதுவானாலும்  பாத்துக்கலாம்....
« Last Edit: August 25, 2023, 03:02:40 pm by Shruthi »

August 29, 2023, 11:13:09 am
Reply #5

Limat

Re: கவிதையும் கானமும்-030
« Reply #5 on: August 29, 2023, 11:13:09 am »
நட்பின் உறவே..!

என் கைகளை பிடித்தபடி
கவலையின்றி நடப்பாய் நண்பனே
கடைசிவரை துணையாய் நான்
வருவேன் என்ற நம்பிக்கையுடன்..........!

நீ மௌனமாய் அழும் ஒவ்வொரு
நொடியும் உடன் இருப்பேன்
உன் கண்ணீரை துடைக்க
உரிமை தோழியாய்..................!

இனி உன் மனம்
சோர்ந்து போகும் போதெல்லாம்
உன் தாய்மடி தேவையில்லை......,
சோகம் தீர்த்து தோள்கொடுக்கும்
அன்புத் தோழியாய்
என்றுமே உன்னுடன் நான்................!

மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத இதயம்...........!
மறந்தும் நினைத்து விடாதே...
உன்னை மறப்பேன் என்று............!

மீண்டும் ஒரு ஜென்மமிருந்தால்
என் தோழனாக நீ வேண்டும்..........!

என் துன்பங்களையும்
உன் தோளில் சுமந்தவனே
நீ எனக்கு நண்பன் அல்ல.......!
இன்னொரு தகப்பன்........!

உள்ளம் மறக்குவதில்லை உன்னை நண்பனே.........!

September 05, 2023, 06:55:34 pm
Reply #6

Misty Sky

Re: கவிதையும் கானமும்-030
« Reply #6 on: September 05, 2023, 06:55:34 pm »
அம்மா நீ தான் என் முதல் உயிர் பெண் தோழி!!!

அம்மா என் உருவத்தையும்,
என் முகத்தையும் காணும் முன்பே,
என் குணத்தை அறியும் முன்பே
நான் உன் கருவில் இருக்கும் போதே  என்னை காதலித்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!

அம்மா என்னை ஈன்றெடுக்கும் முன்பே என்னை கட்டித் தழுவி அரவணைத்து கொண்ட என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!

அம்மா என் குரல் கேட்கும் முன்பே உன் மெல்லிய குரலில் என்னோடு உரையாடிய என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!

அம்மா என்னை ஈன்றெடுத்த பின்பு முதன்முதலில், என் முகத்தைப் பார்த்து முத்தமிட்ட என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!

அம்மா என்னை உன் மார்பிலும், தோளிலும் சுமந்து என் முகத்திலிருந்து எனது பிஞ்சு பாதங்கள் வரை முத்தத்தால் என்னை கொஞ்சி ரசித்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!

அம்மா இரவு, பகல் என்றும் பாராமல் சிப்பிக்குள் முத்து போல என்னை அன்போடு பாதுகாத்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!

மா... மா... அம்மா என முதன் முதலாக வாய் திறந்து தித்திக்கும் தமிழில் பேசியதை பார்த்து என்னை கட்டி அணைத்து கொண்ட என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!
நான் தத்தித் தவழ்ந்து நடக்கும் போது என் அழகை ரசித்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!
நான் தடுமாறி கீழே விழுந்த போது எனக்காக கண்ணீர் சிந்திய என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!

சாலையில் செல்லும் போது மழையிலும், வெயிலிலும் உன் சேலையின் முந்தானையில் என் மேனியை பாதுகாத்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!

மழையில் விளையாடி நனைந்த என்னை பாசத்தோடு என் தலையை துவட்டி விட்ட என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!

எனது பள்ளி பருவத்திலும் சரி
எனது கல்லூரி பருவத்திலும் சரி
எனது வெற்றிகளை பெருமையோடு மற்றவர்களிடம் கூறி புன்னகையோடு
என்னைப் பாராட்டி நான் பெற்ற வெற்றிக்கு எனக்கு உறுதுணையாய் இருந்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!

நான் சோர்ந்து போய் வந்தாலும் சரி
நான் தோற்றுப் போய் வந்தாலும் சரி
உன்னால் முடியுமென்று என்னை தட்டி தோள் கொடுத்து என்றுமே எனக்கு ஆதரவு கரமாக இருந்த முதல் (உயிர்த் தோழி).... நீயே அம்மா!!!

அம்மா மற்றவர்கள் என்னை திட்டினாலும், ஏசினாலும் யாரிடமும் என்னை விட்டுக் கொடுக்காமல் ஆதரித்த என் முதல் (உயிர்த் தோழி)....
நீயே அம்மா!!!

அம்மா நான் பிறக்கும் வரை என்னை உன் கருவினில் சுமந்து!!!
நீ இறக்கும் வரை என்னை உன் இதயத்தில் சுமந்த!!! என் வாழ்வின் சிறந்த (உயிர்த் தோழி) நீயே அம்மா....
தனிமையில் அழுகிறேன் உன்னை நினைத்து தினமும்!!!

அம்மா என் (உயிர்த் தோழியே) எனக்கு நீ வேண்டும்....
அம்மா என் (உயிர்த் தோழியே) மீண்டும் நீ வேண்டும் வருவாயா!!!
அம்மா என் (உயிர்த் தோழியே) என் ஏக்கம் தீர்ப்பாயா!!!

அம்மா... என் (உயிர்த் தோழியே) பாசத்தின் வறுமையில் ஏங்கித் தவிக்கிறேன்.‌‌...
அம்மா... என் (உயிர்த் தோழியே) உன் நேசத்தை கொண்டு என் ஏக்கத்தை தீர்க்க மீண்டும் வருவாயா....

காத்திருக்கிறேன் அம்மா உனக்காக என் முதல் உயிர்த் தோழியே!!!

அன்னையும் நீயே என் ஆருயிர் நண்பியும் நீயே!!!
என் ஆதி முதல் அந்தம் வரை என் நினைவுகளில் என்றும்
முதல் அன்னையும் தோழியும் நீயே!!!
இவ்வாழ்க்கையையும் இந்த உலகையும் அறிமுகம் செய்த  அன்னையே உன் புதல்வனின் அன்பின் ஆசையும் ஏக்கமும் நிறைந்த இவ்வரிகளை என் அன்பின் அன்னை தோழிக்கு சமர்ப்பிக்கிறேன்!!!

இப்படிக்கு உங்கள்,
NATURE LOVER (இயற்கை நேசகன்)
« Last Edit: September 05, 2023, 08:13:55 pm by NATURE LOVER »