Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1] 2 3 ... 7
Post info No. of Likes
வான்முகிலின் கவிதை சுவடுகள்.... எனக்கெனவே நீ......

நீ என் நிஜம் என்பதா? - இல்லை
என்னை தொடரும்
என் நிழல் என்பதா?

நீ என் உயிர் என்பதா? - இல்லை
என்னுள் இருக்கும்
என் சுவாசகாற்று என்பதா?

நீ என் இமை என்பதா? - இல்லை
எனக்குள் நுழைந்து
கலைந்து செல்லும் கனவென்பதா?

நீ என் அகிலம் என்பதா - இல்லை
என்னுள் வசிக்கும்
முகில் என்பதா?

அன்பே. நீ  நான் செய்த தவமல்லவா?
என் வாழ்வில் கிடைத்த வரம்மல்லவா?
அன்பே. என்றும் எனக்கெனவே நீ,
எனக்கு மட்டுமே நீ......

February 12, 2023, 08:21:15 pm
2
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... போர் வீரன் காதல்....

களம் இறங்கி வாள் வீசி,
வகை சூடிய போர் வீரன் நான்....
அவள் பார்வை பட்ட கணம் முதல்
சிக்கி தவிக்கின்றேன்......

எதிர் நாட்டின் வீழ்ச்சியை
சில நொடியில் வீழ்த்தியவன் நான்.....
அவள் எதிரில் என் வீழ்ச்சியை
உணர்கின்றேன்.....

போரில் வாள் வீசி வேல் எய்து
வெற்றி வீரன் என்று
பேர் சூட்டப்பட்டவன் நான்......
இன்று அவள் விழியில்
நான் தோற்று சரணடைகிறேன்.....

போர்களம் சென்று
குருதியில் நீந்தியவன் நான்.....
அவள் சிரிப்பினில் செத்து பிழைக்கிறேனே....
என் காதலே....


February 14, 2023, 07:44:21 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... தொலைதூர காதல்

தொலைதூர காதல்.....
தொலையாத காதல்......

முகம் காணாமல்,
முகவரி தெரியாமல்
தொடர்கின்ற காதல்
தொலைதூர காதல்.....

கடல் தாண்டியும்,
பல நாடுகள் தாண்டியும்,
பல ஆயிரம் மைல் தாண்டியும்
தொடர்கின்ற காதல்
தொலைதூர காதல்.....

இரு மனம் கதைக்க
வலைதளமும், கைபேசியும்
காதலின் தூதாய்
வந்த காதல்
தொலைதூர காதல்.....

கண்கள் பேசா காதல்
கை பிடித்து கதைக்கா
முடியா காதல்.....
கணம் ஒரு பொழுதும்
பிரியாத காதல்
தொலைதூர காதல்.....

பல ஆண்டுகள் கடந்தும்
சந்திக்க நாள் இல்லா காதல்
ஒரு பொழுதேனும் சந்திப்பில்
விடியாதா ?
என்னும் காத்திருப்பில்,
இரு மனங்களின் தவிப்பில்
வரும் காதல்
தொலைதூர காதல்.....

சந்திப்பில் இல்லா காதல்
சற்றும் மாறாத காதல்
இரு மனங்களின் காதல்
தொலைதூர காதல்.....
என்றும் தொலையாத காதல்....

February 28, 2023, 11:57:05 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... கனா.....

விழி இரண்டும் உறக்கத்தில்
மனம் மட்டும் கனவின் மிதக்கத்தில்....
நினைக்க நினைக்க இன்பம்
நினைவில் ஒரு துன்பம்
உன்னோடு நான்,
இன்பமே.....
நிஜம் இல்லை, நிழல் என்றாலும்
துணை இல்லையே,
துன்பமே.......
கனா ஒன்றே வாழ்வின் நிலையானதே......

February 28, 2023, 11:59:33 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... முதலும் நீ.....முடிவும் நீ....

எதிர்பாராமல் எனக்குள் வந்த
முதல் காதலும் நீ.....

எனக்குள் என்னவன் ஆன
முதல் உறவும் நீ......

ஏராள கனவுகளையும்,
உணர்வுகளையும் தந்த
முதல் உரிமையும் நீ......

எண்ணிலா கவிதைகளை
வார்த்தைகளால்
வடிவமைத்த கவிதை நீ.....

என்னருகில் நீ இல்லை
என்ற போதிலும்
என் மனதில் என்றும்
முதலும்......முடிவுமாய் நீ........

March 01, 2023, 11:12:15 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... தூது போ தென்றலே

தூது போ தென்றலே....❤❤❤
தூது போ தென்றலே...❤❤❤

மன்னவனின் செவிகளும்,
தேகங்களும் சிலிர்க்க
மங்கையின் செய்தியை
தூதாக கொண்டு போ தென்றலே.....

மன்னவனின் வருகையை எண்ணி
மங்கையவள் வழி வாசலில்
விழி வைத்து காத்திருக்கிறாள் என்றும்.....❤❤❤

மன்னவன் மணவாளனாய் ஆகும்
தருணங்களை எண்ணி
மங்கையிவள் மணமகள் கோலத்தில்
சிந்தனை கனவில் காத்திருக்கிறாள் என்றும்.....❤❤❤

மன்னவனின் சுட்டு விரல் பிடித்து
அக்னி சாட்சியாய் வலம் வர,
அம்மி மிதித்து அருந்ததி பார்க்க
மனதுக்குள் கோட்டை எழுப்பி
காத்திருக்கிறாள் என்றும்.....
என்னவனிடம் தூதாக கொண்டு போ தென்றலே.....❤❤❤

March 01, 2023, 11:14:30 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... தரிசு நிலம்

கழனியிலே கால் பதிச்சு......
காலமெல்லாம் நெல் விதைச்சு.....
அரைஜான் வவுத்துக்கு
அல்லும் பகலும் பாராது
அயராது உழைத்தேனடா....

பட்டினியாய் நான் கிடந்தேன்
பச்சை மண்ணு போல நான் காத்தேன்.....
வர்ணனின் கருணை இல்ல....
வாடிய தோரணையில் என் பிள்ள....

பெண் பிள்ளையாய் நான் வளர்க்க....
பேரம் பேசி எவனோ விலை கேட்க....
பெத்த வவுறு எரியுதடா.....
பாலும் மனம் நோகுதடா....
உசுர கிள்ளி போகுதடா.....

விளைஞ்சதெல்லாம் என் வியர்வை....
விலை பேச வேலையில்ல...
விதைச்சவன் உசுரு கண்ணீருல
விட்டேனைய்யா தரிசு நிலத்துல.........

March 04, 2023, 04:18:58 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... கண்ணால வாழ்க்கை.....

பட்ட படிப்பு பாதியில
பக்கத்தூரு மாப்பிள்ளை
பாவி மனம் புரியவில்ல
எடுத்து சொல்ல நாதி இல்ல.....

வந்தவரெல்லாம் வாழ்த்து சொல்ல
வானம் சாட்சி கல்யாணம்
பெத்த மனசு குளிருதடா
பெண்ணை எண்ணி மகிழுதடா....

வெளிநாட்டில் வேலையாம்
வெள்ளை சூட்டில் வருவாராம்
கையோடு கண்ணாலமாம்
கைய விட்டு போவாராம்....

அப்பன் ஆத்தா சொல்ல கேட்டு
கழுத்துல வாங்கினேன் மஞ்ச கயிறு
கயிரு ஈரம் காயல
மஞ்சள் மணம் மாறல
மறுநாளே பறந்தாரே
என் கண்ணான கண்ணாளன் .....

யார் எவருன்னு தெரியல்ல
சொந்த பந்தம் மத்தியில்ல
தன்னந்தனியா விட்டு
தவிக்க விட்டு போனாரே.....

செங்கடல் போறவரு
செந்தூரம் வச்சவரு
அழகான மனசுல
ஆழமா பதிஞ்சிட்டாரு.....

தொலைதூர அழைப்பிலே
தொடருதடா என் வாழ்க்கை
கண்ணாளன் வரும் நாளை எண்ணி
கன்னி மனம் வாசலிலே
காத்திருந்தே கழியுதடா
கால்கள் கோலம் போடுதடா.......

March 04, 2023, 04:21:43 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... யார் அவனோ ? யார் அவனோ ?

சற்றே கணம்,
சலனத்தில் மனம்,
மௌனத்தில் தத்தளிக்கிறது,
யார் அவனோ ?

பெயர் என்னவோ?
பேதையின் மனம் களவாடி சென்றானே !!
பேரழிவு ஒன்றை எனக்குள் தந்தானே !!
யார் அவனோ ?

மறுமுறை காண்பேனா?
மனம் என்னும் பேழைக்குள் பூட்டி வாழ்வேனா?
மந்திரமாய் அவன் பெயர் கூற்வேனா?
யார் அவனோ ?

நித்திரையில் வருவானோ?
நீங்காமல் நீட்டிப்பானோ?
நிரந்தரமாய் வாழ்வானோ?
யார் அவனோ?

மின்னலாய் தெரிவானோ?
மீட்டெடுத்து செல்வானோ?
மிகுதியாய் காதல் கொள்வானோ?
யார் அவனோ?
என்னவன் என்பவன் யார் அவனோ?


March 06, 2023, 03:54:10 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்

என் ஆசை ராசவே,

என் அயித்த மவன் ராசாவே....


என் நினைப்பு உன்மேல

ஏங்குதைய்யா மனம்போல.....

மண் வாசனை போனாலும்

உன் வாசனை போகாதே.....


உசிருகுள்ள நின்னு

உருக்குதைய்யா உன் நினைப்பு,

இந்த ஒத்த உசுரு வாடுதய்யா...

உம்ம முடிஞ்சு வைக்க தேடுதைய்யா....


நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சு வைக்க

நித்தம் நித்தம் தவிக்குதையா....

நேரம் காலம் பார்க்காமல்

உன்னை எண்ணி கண்ணீர் வடிக்குதையா....


ராவெல்லாம் உன் நினைப்பு

ராட்டினாமாய் சுத்துதய்யா....

ராசாவே உன்ன பாக்கத்தான்

என் ராப்பகலும் நீளுதைய்யா......


என் ஆசை ராசவே,

என் அழகு ராசாவே,

என் நினைப்பு ஏங்குதைய்யா

உம்ம நெஞ்சுக்குள்ள முடிஞ்சி வைக்க

தேடி வாடுதைய்யா....

March 06, 2023, 03:55:56 pm
1