Advanced Search

Author Topic: திருக்குறள்  (Read 58965 times)

October 31, 2022, 12:39:45 pm
Reply #120

Sanjana

Re: திருக்குறள்
« Reply #120 on: October 31, 2022, 12:39:45 pm »
VERY NICE ARJUN.....
« Last Edit: October 31, 2022, 12:43:44 pm by Sanjana »

October 31, 2022, 06:55:56 pm
Reply #121

RiJiA

Re: திருக்குறள்
« Reply #121 on: October 31, 2022, 06:55:56 pm »
HI Arjun...உங்கள்  பதில்  சரியானது  வாழ்த்துக்கள் 🙂👏👏


⭐விடை:

கேள்வி 1 :

அதிகாரம் 2 – வான்சிறப்பு
குறள் 20:

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு


கேள்வி 2 :

திருக்குறள் ஓவியம் : ஓவிய ஆசிரியர் செ. நடராஜன், நல்லூர், விஜயாபுரம்

November 01, 2022, 08:41:58 am
Reply #122

RiJiA

Re: திருக்குறள்
« Reply #122 on: November 01, 2022, 08:41:58 am »
31வது கேள்வி:

Sarayu sis இப்போது பதிவிடும் அதிகாரம் 2. இந்த திருக்குறள் அதிகாரத்திலுள்ள ஒரு திருக்குறளில் தொடர்ச்சியான 3 சொற்கள் திருக்குறளுக்கு முந்தைய காலத்து தமிழ் இலக்கியம் ஒன்றிலும் அப்படியே (வார்த்தை மாறாமல்) பயன் படுத்த பட்டு இருக்கிறது.

அது எந்த  திருக்குறள்?

November 03, 2022, 12:00:36 pm
Reply #123

Arjun

Re: திருக்குறள்
« Reply #123 on: November 03, 2022, 12:00:36 pm »
அதிகாரம் 2 – வான்சிறப்பு
குறள் 20:

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு

நீர் இன்று அமையா உலகு - நற்றிணையில் பயன்படுத்த பட்டுள்ளது.

விளக்கம் & Credit : Pls visit


http://interestingtamilpoems.blogspot.com/2013/09/blog-post_1824.html

November 03, 2022, 05:17:19 pm
Reply #124

RiJiA

Re: திருக்குறள்
« Reply #124 on: November 03, 2022, 05:17:19 pm »
சரியான  பதில்  Arjun 👏 👏

⭐விடை:அதிகாரம் 2 – வான்சிறப்பு
குறள் 20:

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு

நீர் இன்று அமையா உலகு - நற்றிணையில் பயன்படுத்த பட்டுள்ளது
.
« Last Edit: November 03, 2022, 05:25:33 pm by RiJiA »

November 07, 2022, 04:05:19 pm
Reply #125

RiJiA

Re: திருக்குறள்
« Reply #125 on: November 07, 2022, 04:05:19 pm »
                         

32வது கேள்வி:

இந்த 2 புகைப்படங்களில் இருந்து சில எழுத்துகளை எடுத்து இணைத்தால் ஒரு வார்த்தை கிடைக்கும். அந்த வார்த்தை இடம் பெற்ற திருக்குறள் குறிப்பிடவும்.
« Last Edit: November 11, 2022, 08:45:21 am by RiJiA »

November 08, 2022, 11:40:56 am
Reply #126

Sanjana

Re: திருக்குறள்
« Reply #126 on: November 08, 2022, 11:40:56 am »
அந்த வார்த்தை:

எழுபது


அந்த வார்த்தை இடம் பெற்ற திருக்குறள் :

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.


மு.வரதராசன் விளக்கம்:
தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:
தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.

சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
மடத்தனமான ஆலோகர் அருகில் இருப்பது எதிரிகள் எழுபது கோடி இருப்பதுபோல் ஆகிவிடும்.




November 09, 2022, 02:18:12 pm
Reply #127

RiJiA

Re: திருக்குறள்
« Reply #127 on: November 09, 2022, 02:18:12 pm »
Hi SanJaNa  siss...நல்ல  முயற்சி  siss👏
ஆனால் பதில்  தவறு  siss...மறுபடியும்  முயற்சி  செய்ங்க 💐

குறிப்பு:
அந்த வார்த்தை திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மலர்களில் ஒன்று.

November 10, 2022, 04:10:26 pm
Reply #128

Sanjana

Re: திருக்குறள்
« Reply #128 on: November 10, 2022, 04:10:26 pm »
THX FOR THE CLUE

அந்த வார்த்தை:
அனிச்சம்


குறள் 1120:

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.



மு.வரதராசன் விளக்கம்:
அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.


சாலமன் பாப்பையா விளக்கம்:
உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.


சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும் பெண்களின் பாதத்திற்கு நெருஞ்சிப் பழத்தின் முள்போல் வலி உண்டாக்கும்.

November 10, 2022, 06:51:00 pm
Reply #129

RiJiA

Re: திருக்குறள்
« Reply #129 on: November 10, 2022, 06:51:00 pm »
சரியான  பதில்  SanJaNa  siss 👏👏👏

⭐விடை:அனிச்சம்
திருக்குறளும் சரியான விடை..

November 11, 2022, 12:05:37 pm
Reply #130

RiJiA

Re: திருக்குறள்
« Reply #130 on: November 11, 2022, 12:05:37 pm »
33வது கேள்வி:

Sarayu  siss மற்றும்  Aslan அதிகாரம் 3-ல்
4 குறள்கள் பதிவு  செய்துள்ளனர். அதில்  ஒரு  குறளுக்கான  முழு விளக்கத்திருந்து
ஒரு  சிறு  பகுதி  மட்டும்  எடுத்து அந்த  விளக்கம்  இங்கு   பதிவு செய்துள்ளேன். அது  எந்த  குறளக்கான   விளக்கம்,யார்  தந்த விளக்கம் மற்றும் முழு  விளக்கம்  இங்கு  பதிவிடவும்.



விளக்கம்:
முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.

November 11, 2022, 12:34:10 pm
Reply #131

Arjun

Re: திருக்குறள்
« Reply #131 on: November 11, 2022, 12:34:10 pm »
அதிகாரம்:நீத்தார் பெருமை
குறள் எண்:22

திருக்குறள் :

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

உரைவிளக்கம் : பரிமேலழகர் உரை:

துறந்தார் பெருமை துணைக் கூறின் - இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும்.

(முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.)


November 11, 2022, 02:30:29 pm
Reply #132

RiJiA

Re: திருக்குறள்
« Reply #132 on: November 11, 2022, 02:30:29 pm »
சரியான பதில்  Arjun👏👏👏

⭐விடை :

1) குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

2)உரைவிளக்கம் : பரிமேலழகர் உரை:

துறந்தார் பெருமை துணைக் கூறின் - இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும். (முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.).
« Last Edit: November 11, 2022, 02:32:53 pm by RiJiA »

November 15, 2022, 09:19:17 am
Reply #133

RiJiA

Re: திருக்குறள்
« Reply #133 on: November 15, 2022, 09:19:17 am »


34வது கேள்வி:

AslaN  அவர்கள் அதிகாரம் 3-ல் கொடுக்கப்பட்ட குறள்களில் இந்த  புகைப்படம்  எந்த  குறளை விளக்குகின்றன?
« Last Edit: November 15, 2022, 09:21:41 am by RiJiA »

November 15, 2022, 10:43:45 am
Reply #134

Sanjana

Re: திருக்குறள்
« Reply #134 on: November 15, 2022, 10:43:45 am »
விடை :

குறள் 26:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.


மு.வ விளக்கம்:⚜️

🌟செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்




⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.




⚜️கலைஞர் விளக்கம்:⚜️

🌟பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.[/size]