GTC FORUM

General Category => Games - விளையாட்டு => Topic started by: SuNshiNe on September 21, 2022, 11:57:12 pm

Title: திருக்குறள்
Post by: SuNshiNe on September 21, 2022, 11:57:12 pm
திருக்குறள் வினாக்கள்

-RiJiA


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)


💫நமது GTC  மன்றத்தில் உள்ள  பொது விவாதம் என்னும்  பிரிவில் தினம் தோறும் திருகுறள்கள்ப்   பதிவு செய்யப்படுகிறது .


💫அதில் பங்கேற்று நாள் தோறும் பயின்று  இங்கு கேட்கப்படும்  திருகுறள்கள் தொடர்பான   கேள்விகளுக்கு விடை அளியுங்கள்.



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 22, 2022, 12:26:02 am
முதல்  கேள்வி:

திருக்குறளில்  மொத்தம்  எத்தனை  திருக்குறள்கள் உள்ளது?
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on September 22, 2022, 12:57:04 am
1330 குறள்கள்
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 22, 2022, 09:05:04 am
வணக்கம்  சஞ்சனா siss...
திருக்குறள்  பகுதியில் முதல்  கேள்விக்கு  சரியான  பதிலை  தந்த உங்களுக்கு பாராட்டு... 🎉🎉


⭐சரியான  விடை: 1330
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 22, 2022, 09:11:07 am
2வது கேள்வி:

133 என்ற  எண் திருக்குறளில்  எதைக்
குறிக்கின்றன
?
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on September 22, 2022, 09:54:53 am
133 Adigarangal

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 22, 2022, 01:09:44 pm
சரியான  பதில்  Arjun  வாழ்த்துக்கள் 👍👏

விடை:அதிகாரங்கள்
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 22, 2022, 01:17:06 pm
3வது கேள்வி:

முதன்முதலில் திருக்குறள் அச்சிடப்பட்ட ஆண்டு எது?

A.1801      B.1912
C.1887      D.1812
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on September 22, 2022, 01:32:20 pm
D.1812
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 22, 2022, 02:31:07 pm
வாழ்த்துக்கள்  Arjun 👏👍

⭐விடை: D:1812
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on September 22, 2022, 02:33:40 pm
PAAKA MUTHALE ANS PANIDURANKALEEEE............
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 22, 2022, 02:39:00 pm
4வது கேள்வி:

இது  எந்த  திருக்குறளுக்கான விளக்கம்?

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால்
எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on September 22, 2022, 03:25:42 pm
குறள்-04

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 22, 2022, 11:28:47 pm
சரியான பதில்  சஞ்சனா  siss 👏🎉


⭐விடை: வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு  யாண்டும் இடும்பை இல

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 23, 2022, 12:27:25 pm
5வது கேள்வி:

இந்த  திருக்குறளில்  வரும்  வாலறியவன் என்ற சொல்லுக்கு பொருள்  என்ன?
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on September 23, 2022, 12:30:30 pm
Thooya arivu udaiyavan (Iraivan)

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 23, 2022, 07:13:42 pm
சபாஷ்  சரியான  பதில்  Arjun 👏🎉

⭐விடை:
Thooya arivu udaiyavan (Iraivan),
தூய்மையான அறிவு வடிவானவன் என்றுப் பொருள்படும்(இறைவன்)
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 23, 2022, 11:42:21 pm
6வது கேள்வி:

எந்த அதிகாரம் மட்டுமே திருக்குறளில் இருமுறை வருகிறது?

Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on September 23, 2022, 11:47:28 pm
குறிப்பறிதல் என்ற அதிகாரம் மட்டுமே திருக்குறளில் இருமுறை வருகிறது.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 24, 2022, 12:11:24 pm
SUPER SISS   சரியான  பதில் 👏🎉

⭐விடை:  குறிப்பறிதல்
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 24, 2022, 07:22:36 pm

7வது  கேள்வி:

திருக்குறளின் முதல் பெயர் முப்பால்.  அந்த மூன்று முப்பால் பெயர்களை குறிப்பிடவும்....
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on September 24, 2022, 11:44:58 pm
அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், 'முப்பால்' என்றும் அழைக்கப்படுகிறது.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 25, 2022, 02:51:32 am
சரியான  பதில்  SanJaNa  siss👏👏

⭐விடை: அறம், பொருள், இன்பம் அல்லது காமம்
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 25, 2022, 02:53:34 am
8வது kelvi: TASK FOR Arjun, மற்றும் sarayu  siss,

Arjun 7வது கேள்விக்கான  பதில்  அறம், பொருள், இன்பம்  இதில்  ஏதாவது  ஒரு  வார்த்தையை   தேர்வு  செய்து  ஒரு முழுமையான வாக்கியம்  அமைக்கவும்.அந்த வாக்கியம்  கேள்வி  குறியாக  இருக்க  வேண்டும்..அந்த  கேள்விக்கு  sarayu  siss  பதில்  அளிக்க  வேண்டும்...🙂
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on September 25, 2022, 11:03:57 am
RiJiA, Great!!! different approach in question asking pattern. Appreciate it!!! I don't want to stop with one paragraph whereas you three are very active in this thread. So I have written 3 paragraphs and so each of you can share your views for one question.

1) அறம் :
அறம் என்றால் என்ன? திருவள்ளுவரின் வரிகளால் விளக்க வேண்டும் என்றால், பொறாமை, ஆசை, சினம் , கடுமையான சொற்கள் இந்த நான்கும் இல்லாமல் இருப்பதுவே அறம்.

கேள்வி : இந்த நான்கில் ஒன்றை இல்லாமல் செய்தால் அல்லது குறைத்து கொண்டால் ஏனைய மூன்றும் நம்முடைய கட்டுப்பாட்டுக்கு வரும். உங்கள் பார்வையில்  இந்த நான்கில் அது என்ன?

2) பொருள் : மனித வாழ்க்கையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற உலகம், நாம் இறுதியில் சென்று சேர கூடிய உலகம் என்ற இரண்டு உண்டு. இரண்டு உலகத்திலும் நாம் இன்பமாக இருப்பதற்கு ஏதோ ஒன்று தேவை. வள்ளுவரின் வரிகளில் பார்த்தோம் என்றால், இவ்வுலகில் வாழ பொருள் தேவை. அவ்வுலகில் வாழ அருள் தேவை.

கேள்வி : உங்கள் பார்வையில் அருள் என்றால் என்ன?

3) இன்பம் : காலம் மற்றும் வயது முதிர்ச்சிக்கேற்றபடி நம்முடைய (மனிதர்களுடைய) எண்ணங்களில் இன்பம் என்ற சொல்லுக்குண்டான சரியான அர்த்தம் வேறுபடுகிறது. இருந்தாலும் , இன்பம் இரண்டு வகைப்படும். அது சிற்றின்பம் மற்றும் பேரின்பம்.

கேள்வி : உங்கள் பார்வையில் சிற்றின்பம் / பேரின்பம் என்றால் என்ன?


I randomized the list and order is below.

1.   Sarayu (1st Question)
2.   Sanjana (2nd Question)
3.   RiJiA (3rd Question)

There is no right or wrong, only sharing our thoughts towards it.


Title: Re: திருக்குறள்
Post by: SuNshiNe on September 25, 2022, 09:16:48 pm
RiJiA, Great!!! different approach in question asking pattern. Appreciate it!!! I don't want to stop with one paragraph whereas you three are very active in this thread. So I have written 3 paragraphs and so each of you can share your views for one question.

1) அறம் :
அறம் என்றால் என்ன? திருவள்ளுவரின் வரிகளால் விளக்க வேண்டும் என்றால், பொறாமை, ஆசை, சினம் , கடுமையான சொற்கள் இந்த நான்கும் இல்லாமல் இருப்பதுவே அறம்.

கேள்வி : இந்த நான்கில் ஒன்றை இல்லாமல் செய்தால் அல்லது குறைத்து கொண்டால் ஏனைய மூன்றும் நம்முடைய கட்டுப்பாட்டுக்கு வரும். உங்கள் பார்வையில்  இந்த நான்கில் அது என்ன?

2) பொருள் : மனித வாழ்க்கையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற உலகம், நாம் இறுதியில் சென்று சேர கூடிய உலகம் என்ற இரண்டு உண்டு. இரண்டு உலகத்திலும் நாம் இன்பமாக இருப்பதற்கு ஏதோ ஒன்று தேவை. வள்ளுவரின் வரிகளில் பார்த்தோம் என்றால், இவ்வுலகில் வாழ பொருள் தேவை. அவ்வுலகில் வாழ அருள் தேவை.

கேள்வி : உங்கள் பார்வையில் அருள் என்றால் என்ன?

3) இன்பம் : காலம் மற்றும் வயது முதிர்ச்சிக்கேற்றபடி நம்முடைய (மனிதர்களுடைய) எண்ணங்களில் இன்பம் என்ற சொல்லுக்குண்டான சரியான அர்த்தம் வேறுபடுகிறது. இருந்தாலும் , இன்பம் இரண்டு வகைப்படும். அது சிற்றின்பம் மற்றும் பேரின்பம்.

கேள்வி : உங்கள் பார்வையில் சிற்றின்பம் / பேரின்பம் என்றால் என்ன?


I randomized the list and order is below.

1.   Sarayu (1st Question)
2.   Sanjana (2nd Question)
3.   RiJiA (3rd Question)

There is no right or wrong, only sharing our thoughts towards it.




எனக்கான கேள்வி :

பொறாமை, ஆசை, சினம் , கடுமையான சொற்கள் .......நான்கில் ஒன்றை இல்லாமல் செய்தால் அல்லது குறைத்து கொண்டால் ஏனைய மூன்றும் நம்முடைய கட்டுப்பாட்டுக்கு வரும். உங்கள் பார்வையில்  இந்த நான்கில் அது என்ன?

நான் தேர்வு செய்வது : ஆசை

ஏன்னென்றால் ஆசை மூலியமாகவே மற்ற மூன்றும் பிறக்கிறது .

ஆசை பேராசை ஆகும் பொழுது பொறாமை பிறக்கிறது மற்றவர்களை பார்த்து  ...

தன்னுடைய ஆசைகள் நிறைவேறாவிட்டால் சினம் முளைத்துக்கொள்ளும் ... சினத்தின் பால் மக்கள் கடும் சொற்களை உச்சரிக்க நேரிடுவர் .

ஆகையால் என் பார்வை கோணத்தில் ஆசை ஒன்றை கையாண்டு கொண்டால் மற்ற மூன்றையும் கட்டு படுத்தி கொள்ளலாம் ...

 :)



Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on September 26, 2022, 02:41:28 am
எனக்கான கேள்வி :

உங்கள் பார்வையில் அருள் என்றால் என்ன?

 எனது பார்வையில் அருள் என்றால் இறைத்தன்மை ஆகும்.
அருள் என்பது கடவுள் தரும் கொடை. இரக்கத்தையும் நட்பையும் அடித்தளமாகக் கொண்ட கடவுளின் அருள் மனிதர்கள் ஆகிய  எமக்கு வழங்கப்படுகின்றது. அருள் நிரம்பிய வாழ்கை இருப்பின் வாழ்வில் இனிமையும் மேன்மையும் சேரும்.


 :)
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 26, 2022, 12:02:44 pm
Arjun  நான்  வைத்த task- கில்
இப்படி  ஓரு  twist  நான்  எதிர்  பார்க்கவில்லை.. பாராட்டுக்கள்👏👏👏👏👏👏

உங்கள்  3வது கேள்விக்கான  பதில்..

⭐(GOOGLE  SEARCH  ANS)
மனதை சுத்தம் செய்யும் நல்ல பழக்கவழக்கங்களை கற்று இறைவனை நோக்கி பயணம் செய்தால் பேரின்பம்.

⭐என்னுடைய  பதில்...
என்  தாய்  தந்தையை  மீண்டும்  பார்க்க  ஒரு  வாய்ப்பு  கிடைத்தால்  அதுதான்  எனக்கு பேரின்பம்...இப்பொழுது  எனக்கு  கிடைத்த  ஒரு  புதிய  உறவு  அதற்கு  சமம்...
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on September 26, 2022, 03:06:09 pm
Great sharing all your thoughts!!! Congratulations Sarayu, Sanjana & RiJiA..

அருள் பற்றி மட்டும் சில கூடுதல் தகவல்கள் :

திருவள்ளுவரின் குறளின் படி அருள் எனப்படுவது,

"அன்பினால்‌ பெறப்பட்ட அருள்‌ என்று கூறப்படும்‌ குழந்தை, பொருள்‌ என்று கூறப்படும்‌ செல்வமுள்ள செவிலித்‌ தாயால்‌ வளர்வதாகும்‌." (757 வது திருக்குறள்)

அன்பினுடைய முதிர்ச்சி நிலை தான் அருள்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 26, 2022, 06:29:33 pm
⭐Sarayu siss,SanJaNa siss  மற்றும்  Arjun - க்கு நன்றிகள்... இந்த  task  ரொம்ப  அழகா  கொண்டு  போனிங்க...வாழ்த்துக்கள் 👏👏👏💐💐💐
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 26, 2022, 08:01:55 pm
9வது கேள்வி:

⭐கலைந்திருக்கும்  இந்த  விளக்கத்தை சரியாக  சீர்  செய்யவும்  பின்பு  இந்த  விளக்கம்  அளித்தவர்  பெயரை  குறிப்பிடவும்.


நெடுங்காலம்  கடவுளின்  மலர்மீது  எப்போதும் மனமாகிய  இப்பூமியில்
சிறந்த  இருப்பவனாகிய  வாழ்வர் நினைப்பவர்  வாழ்வர்  திருவடிகளை சென்று.
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on September 26, 2022, 09:44:11 pm
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த
திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்

சாலமன் பாப்பையா
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 26, 2022, 11:08:47 pm
சரியான பதில் Arjun👏👏💐💐

⭐விடை: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த
திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்

சாலமன் பாப்பையா
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 27, 2022, 09:16:58 pm
10வது  கேள்வி: TASK FOR ARJUN SARAYU SISS and SanJaNa SISS...


⭐TASK:  Arjun
நான்  உங்கள்கிட்ட  ஒரு  திருக்குறள் pvt ah சொல்வேன்..அந்த  திருக்குறளை  sarayu siss or SanJaNa  siss  கண்டுபிடிக்க வைக்க  வேண்டும்...நான்  தரும்  அந்த  திருக்குறள் இங்க  இருக்கிற  திருக்குறள் அல்லது  வேறு...அவர்களுக்கு  clue தந்து  கண்டுபிடிக்க  வைக்க  வேண்டும்.. அந்த  clue  அவங்க இருவருடன்   main le cht பண்ணும்  போது   மட்டும்  தர  வேண்டும்..அல்லது  உங்கள்  பாடல்  வழியாகவும் தரலாம்...உங்கள்  உரையாடலில்  clue மறைமுகமாக  வைக்கலாம்.....நீங்க  எதில் clue தர போறீங்கலோ... பாடல்  அல்லது msg le  இருக்குன்னு  சொல்லிவிட்டு  கூட  தரலாம்....

⭐ Sarayu  siss  and SanJaNa  siss:

Arjun தரும் clue வைத்து  நீங்கள் கண்டுபிடித்த பின்  விடையை  இங்கு  பதவிடவும்...ஒரு வேலை தவறான பதில்  என்றால் Arjun   மறுபடியும்   clue  தர  தொடங்குவார் ... GOOD LUCK👍

Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on September 28, 2022, 04:04:00 pm
விடை:

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.(299)


குறள் விளக்கம் :
மு.வ : (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

சாலமன் பாப்பையா : உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 28, 2022, 08:38:48 pm
Arjun: thank you for supporting me👍

SanJaNa  siss super  சரியான  பதில் 👏👏💐
Sarayu  siss well try  congrats 👏 👏💐💐


⭐விடை:
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: வாய்மை

குறள் 299

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

மு.வ விளக்க உரை:
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.

கலைஞர் விளக்க உரை:
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும்
ஒளிமிக்க விளக்காகும்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 30, 2022, 07:59:05 pm
11வது கேள்வி:

திருக்குறளில் பயன்படுத்தாத  ஒரே  உயிரெழுத்து எது?
Title: Re: திருக்குறள்
Post by: AniTa on September 30, 2022, 08:05:26 pm
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 01, 2022, 12:07:30 am
HI ANITA SISS...WELL TRY👏👏 ஆனால்  பதில்  தவறு  siss...உங்கள்  பதில் ரொம்ப பக்கம்  இருக்கிறது..மீண்டும்  முயற்சி  செய்து பாருங்க...
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on October 01, 2022, 06:40:00 am
11வது கேள்வி   பதில் :

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 02, 2022, 10:34:40 am
சரியான  பதில்  SanJaNa  siss👏👏💐
நல்ல  முயற்சி  anitha siss👏👏💐


விடை: ஔ
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 02, 2022, 10:46:03 am
12வது கேள்வி;

திருவள்ளுவரை ஒரு  சிறப்பு  பெயர் வைத்து  அழைக்கப்படுவார் அது  என்ன  பெயர்?
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 02, 2022, 02:25:16 pm
எல்லோரும் அறிந்தது திருவள்ளுவருக்கு மொத்தம் 11 சிறப்பு பெயர்கள் உண்டு. அதில் நீங்கள் எதை குறிப்பிட்டு கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை.

இருந்தாலும், "தெய்வப்புலவர்" என்பது மற்றைய தமிழ் இலக்கியங்களில் திருவள்ளுவரை பற்றி குறிப்பிடும்போது பயன் படுத்த பட்ட சிறப்பு பெயர்.

தெய்வப்புலவர்
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 04, 2022, 02:22:26 am
சரியான  பதில்  Arjun 👏 👏
ஆம்  arjun  11 பெயரில்  ஒரு  பெயர்  குறிப்பிட்டது  சரியான  விடை..congrats 👍


⭐விடை:திருவள்ளுவர்,தேவர்,
முதற்பாவலர்
மாதாநுபங்கி,தெய்வப்புலவர்,
செந்நாப்போதார்,பெருநாவலர்
நான்முகனார், பொய்யா மொழி புலவர்,
பொய்யில் புலவர்,நாயனார்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 04, 2022, 07:17:15 pm
13வது கேள்வி:

திருக்குறள் பகுதியில் 7வது குறள்...

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

அங்கு  3 விளக்கம்  கொடுக்கப்பட்டுள்ளது..
மற்றும்  விளக்கம்  தந்தவர் பெயர் உட்பட...

நான்காவதாக  விளக்கம்:

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது..

கேள்வி: இந்த  விளக்கம் தந்தவர் யார்?..அவர் பெயரை குறிப்பிடவும்
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 04, 2022, 09:52:19 pm
Dr. M. Varatharaasanar
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on October 04, 2022, 09:54:52 pm
மு.வரதராசன்    (ARJUN ALLREADY ANSWR PANIDARU)
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 05, 2022, 12:08:37 am
சரியான  பதில்  Arjun  👏👏congrats 👏👏
Congrats  SanJaNa  siss💐💐


⭐விடை :மு.வரதராசன்...
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 05, 2022, 04:23:34 pm
14வது கேள்வி:

ஜி. யு. போப்  இந்த  பெயருக்கும் திருக்குறளுக்கும் என்ன  சம்மந்தம்?
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on October 05, 2022, 04:31:50 pm

ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். 

 திருக்குறளை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்


இதுவே ஜி யு போப் கும் திருக்குறளுக்கும் உள்ள சம்பந்தம்
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 05, 2022, 10:46:31 pm
சரியான  பதில்  AslaN  வாழ்த்துக்கள் 👏👏
அவரை  பற்றி  முழு  விளக்கம் அளித்ததற்கும் நன்றி AslaN 👍


⭐விடை :ஜி. யு. போப்  என்பவர்  திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர்..
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on October 05, 2022, 10:59:14 pm

மிக்க நன்றி RIJIA 🌹

திருக்குறள் வினா விடை பகுதியை மிக அருமையாக தொகுத்து வழங்குகிறீர்கள்.
அதிலும் மிகச்சிறப்பு செம்மொழியாம் தமிழில் தொகுத்து வழங்குவது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் GTC FORUM  சார்பாக 🙏
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 06, 2022, 03:49:19 pm
AslaN  உங்கள்  பாராட்டுக்கு  நன்றி..இந்த  பாராட்டு  நான்  Arjun ,sarayu siss, SanJaNa  siss ,anita siss  மற்றும்  உங்களுடனும்  பகிர்ந்து  கொள்ள  ஆசை  படுகிறேன்...உங்கள்  அனைவரின் ஆதரவு  இல்லாமல்  இது  சாத்தியம்  இல்லை...நன்றி..
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 06, 2022, 03:54:38 pm
15வது கேள்வி:

திருக்குறள் சிறப்புகளில் ஒன்று,

⭐ குறளில் “காற்று ” என்ற சொல் ஆறு முறை இடம்பெற்றுள்ளது. இதுவே ஒரே குறளில் அதிகப்படியாக வரும் சொல் ஆகும்.

கேள்வி: இது  திருக்குறளில் உள்ள  ஒரு  சிறப்பு...இதை  நன்றாக தெளிவாக படிக்கவும்..இதை  குறித்து என்னுடைய  கேள்வி  இதில்  என்னவாக இருக்கும்? அந்த  கேள்வி மற்றும் அந்த கேள்விக்கான  பதில் எனக்கு  வேண்டும்..🙂
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on October 06, 2022, 04:09:08 pm
உங்கள் கேள்வி:  “காற்று ” என்ற சொல்லுக்கு ஒத்த சொல் எது என்பதா?

அப்படி இருந்தால்....

பதில்: வளி

PS:அந்தக் காற்றைப் பற்றி  வள்ளுவர் ஐந்து குறட்பாக்களில் பேசுகிறார். ஓர் இடத்தில் `புயல்` என்றும், நான்கு இடங்களில் `வளி’ என்றும் காற்றைக் குறிப்பிடுகிறார்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 06, 2022, 04:56:47 pm
⭐சஞ்சனா  siss உங்கள்  முயற்சிக்கு பாராட்டு 👏👏
ஆனால்  பதில்  தவறு  siss...
மீண்டும்  முயற்சி  செய்யுங்கள்..👍
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 06, 2022, 05:06:14 pm
எனக்கு தெரிந்து காற்று என்ற சொல் ஒரே திருக்குறளில் ஆறு முறை இடம் பெறவில்லை. பற்று என்ற சொல் தான் ஆறு முறை இடம் பெற்று உள்ளது.  இதுவே ஒரு திருக்குறளில் அதிகம் இடம் பெற்று உள்ள வார்த்தை.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.


ஆனால் நீங்கள் காற்று என்று குறிப்பிட்டு இருப்பது எதற்கு என்று எனக்கு தெரியவில்லை. அதுதான் Question Twist ah?
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 06, 2022, 05:07:52 pm
ungaludaiya question sari endraal.. Let me do some research and tell you. Don't reveal the answer in your reply.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 06, 2022, 05:16:26 pm
HI Arjun..எனக்கு தெரிந்து காற்று என்ற சொல் ஒரே திருக்குறளில் ஆறு முறை இடம் பெறவில்லை. பற்று என்ற சொல் தான் ஆறு முறை இடம் பெற்று உள்ளது.  இதுவே ஒரு திருக்குறளில் அதிகம் இடம் பெற்று உள்ள வார்த்தை.(இதிலே இருக்கு பதில்,கிட்ட நெருங்கிட்டிங்க...) என்னுடைய  கேள்வி  என்னவாக  இருக்கும்?
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on October 06, 2022, 06:39:56 pm
உங்கள் கேள்வி: குறளில் “காற்று ” என்ற சொல் ஆறு முறை இடம்பெற்றுள்ளது. அது சரியா தவறா?

ஆறு முறை இடம் பெற்று உள்ள வார்த்தை எது?

பதில்: பற்று



Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 06, 2022, 06:42:23 pm
உங்களுடைய கேள்வி :
ஒரே குறளில் அதிகப்படியாக வரும் சொல் எது? எத்தனை முறை வருகிறது? அது எந்த திருக்குறள்?

பதில்:
பற்று என்ற சொல் அதிக முறை ஒரே திருக்குறளில் 6 முறை வருகிறது. இதுவே ஒரே குறளில் அதிகப்படியாக வரும் சொல் ஆகும். இது  திருக்குறளில் உள்ள  ஒரு  சிறப்பு.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.


அதிகாரம் :  துறவு
திருக்குறள் : 350
பால்: அறத்துப்பால் 
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 06, 2022, 07:52:55 pm
சரியான  பதில்  Arjun வாழ்த்துக்கள் 👏👏
நான்  பற்று - க்கு பதிலாக காற்று  என்று  மாற்றி  எழுதினேன் அதை  சரியாக  கண்டுபிடித்த உங்களை இன்னும் எப்படி பாராட்ட... பாராட்டுக்கள்...👏👏👏


முயற்சி  செய்த அனைவருக்கும்  வாழ்த்துக்கள் 👏👏💐💐


⭐விடை:காற்று  என்பது  தவறான சொல் பற்று என்பது   சரியான  சொல்...

கேள்வி:ஒரே குறளில் அதிகப்படியாக வரும் சொல் எது? எத்தனை முறை வருகிறது? அது எந்த திருக்குறள்?


பற்று என்ற சொல் அதிக முறை ஒரே திருக்குறளில் 6 முறை வருகிறது. இதுவே ஒரே குறளில் அதிகப்படியாக வரும் சொல் ஆகும். இது  திருக்குறளில் உள்ள  ஒரு  சிறப்பு.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

அதிகாரம் :  துறவு
திருக்குறள் : 350
பால்: அறத்துப்பால்
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 07, 2022, 03:45:02 pm

16வது கேள்வி:

1)GTC- யில் இசையில்  முடியும்  பெயர்  கொண்டவரிடம் உள்ளது முதல் எண்  அவரிடம்  கேட்டால்  கிடைக்கும்.
2)lovely  பிறந்த  தேதியில்  dimple  siss பிறந்த  தேதியை கழித்தால்?
3)OCTOBER  6-ம் தேதி வரைக்கும்  திருக்குறள் பகுதியில்  மொத்தம் எத்தனை  குறல்கள்  பதிவுடப்பட்டது?
4)இந்த  வாரம்  IshaN  SM PROGRAM  LE  எத்தனையாவது  இடம் பிடித்தார்?
5)திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறளும் எத்தனை அடி  கொண்டது?


இந்த 5 கேள்வியில் வரும் எண்கள் கலைந்து  இருக்கும்... அதை சரியாக  வரிசை  படுத்தினால், திருக்குறளுக்கும்  இந்த   எண்களுக்கும்  இருக்கும்  சம்மந்தம் என்னவென்று கிடைக்கும். அதை குறிப்பிடவும்...
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 07, 2022, 03:53:51 pm
1) 4
2) 11 - 7 = 4
3) 9
4) 1
5) 2

42194

திருக்குறளில் மொத்தம் 42,194 எழுத்துக்கள் உள்ளன
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 07, 2022, 04:05:48 pm
சரியான  பதில் Arjun Brilliant..வாழ்த்துக்கள்  Arjun👏👏
ரொம்ப  EASY ah kudutudeno?


⭐விடை:
1) 4
2) 11 - 7 = 4
3) 9
4) 1
5) 2

42194

திருக்குறளில் மொத்தம் 42,194 எழுத்துக்கள் உள்ளன..
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on October 07, 2022, 06:18:02 pm
NAAN epowume later than Question pakiren pola...Ans sons pirahu pakirene.......
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 08, 2022, 06:42:32 pm
(https://i.postimg.cc/xdJd32R5/20221007-200820.jpg) (https://postimg.cc/1gSPybbV)

17வது கேள்வி:

மேல் காணும் 3 புகைப்படமும் இணைத்து பார்த்தால் ஒரு வார்த்தை கிடைக்கும்..
அந்த வார்த்தையை குறிப்பிடவும்  பின் வார்த்தைக்கான விளக்கம்  எழுதவும்
..
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 08, 2022, 09:01:30 pm
நெருஞ்சி

நெருஞ்சிப்பழம் என்ற பழவகை மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 08, 2022, 10:03:29 pm
SUPER  Arjun 👏👏💐💐வாழ்த்துக்கள்
Arjun கேள்வி  easy இருக்க?


⭐விடை: நெருஞ்சி

நெருஞ்சிப்பழம் என்ற பழவகை மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது
.
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 08, 2022, 10:23:39 pm
Questions kastamnu solla mudiyala. But ennoda personal favorite passionate subject ndrathala might be easy for me.

your approach of question asking pattern is remarkable.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 08, 2022, 10:26:35 pm
THANK YOU Arjun💐
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 08, 2022, 10:35:21 pm
Sari naan oru kelvi post pannalama? Lastah potrukkura thirukkuralukku (Kural No 9) yetha question athu.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 08, 2022, 10:38:40 pm
OK Arjun NEENGE KELUNGE I TRY TO ANS
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 08, 2022, 10:49:32 pm
18வது கேள்வி:

Ok. Lastah Sarayu post pannirukkura Thirukkural.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை


எண்குணத்தான்  :

எட்டு குணங்களுடைய கடவுள் என்பது இதற்கு பொருள். இங்கு கடவுளுடைய 8 சிறப்பு குணங்களாக ஒரு சில உரையாசிரியர்கள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள். அந்த 8 குணங்கள் என்ன?


நீங்கள் யாருடைய உரை விளக்கத்திலிருந்து எடுக்கிறீர்களோ அந்த ஆசிரியர் பெயரையும் குறிப்பிடுங்கள்.

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 09, 2022, 12:01:48 am
பரிமேலழகர் தம் விளக்க உரையில் இவ்வாறு கூறுகிறார்


எண்குணங்களாவன:


1.   தன்வயத்தன் ஆதல்
2.   தூய உடம்பினன் ஆதல்
3.   இயற்கை உணர்வினன் ஆதல்
4.   முற்றும் உணர்தல்
5.   இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்
6.   பேரருள் உடைமை
7.   முடிவு இல் ஆற்றல் உடைமை
8.   வரம்பு இல் இன்பம் உடைமை

Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 09, 2022, 03:52:49 pm
RiJiA.. Your answer is perfectly correct. Congratulations!!  :) 👏👏💐💐

திருக்குறளுக்கு நிறைய பேர் உரை எழுதி இருந்தாலும் பரிமேலழகர் உரை விளக்கம் எப்பவுமே மிகச் சிறந்ததாக இருக்கும்ன்றது என்னோட கருத்து. My most favorite too.

Inimel neenga Question continue pannalam. Thnx for your time.  :)
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 09, 2022, 05:01:45 pm
நன்றி  Arjun...உங்களுக்கு பிடித்த ஒருவருடைய  விளக்கம் தந்ததில் எனக்கு  மகிழ்ச்சி..
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 10, 2022, 10:12:55 pm
19வது கேள்வி:

1)பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல்
உழப்பிக்கும் சூது.

2)தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.

மேலே 2 திருக்குறள்கள் உள்ளன... இதற்கான  கேள்வி  என்னவென்று யோசித்து பதிலளிக்கவும்..கேள்வியை  நான்  கேட்டுவிட்டால் பதில் சுலபமாக வரும்...🙂
கேட்க்காவிட்டாலும்  பதில் வரும் என்று தெரிந்த விஷயமே..🙂 காரணம் நீங்க எல்லாரும் brilliant 👏 🙂🙂
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 10, 2022, 11:19:21 pm
இந்த 2 திருக்குறள்களையும் சேர்த்து வைத்து 2 கேள்விகள் கேட்பதற்கு உண்டான வாய்ப்புகள் உண்டு.

கேள்வி 1) 

இந்த 2 திருக்குறள்களிலும் ஒரு சிறப்பு உண்டு. இதில் உள்ள ஒரு எழுத்து ஒரே ஒரு முறை மட்டுமே முழு திருக்குறளில் இடம் பெற்றுள்ளது. அந்த எழுத்துகள் என்ன.

பதில் :

ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட எழுத்து "ளீ" மற்றும் "ங'"

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல்
உழப்பிக்கும் சூது

இந்த குறளில் "ளீ"

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்

இந்த குறளில் "ங"

உங்களுடைய கேள்வி இந்த திருக்குறள் சிறப்பு பற்றியதாக இருக்கலாம்.

கேள்வி 2) 

இந்த 2 திருக்குறள்களில் திருவள்ளுவர் ஒரே ஒரு பொதுவான விஷயம் குறித்து பேசுகின்றார் ? அது என்ன? 

இந்த இரண்டு திருக்குறள்களிலும்  திருவள்ளுவர், ஒரு மனிதன் எப்போது "அருள்" தன்மையை இழக்கிறான் என்பது குறித்து பேசுகின்றார் .

எனக்கு தெரிந்தவரை இந்த 2 கேள்விகள் கேட்கப்படலாம். ஆனால் நீங்கள் என்ன கேள்வி கேட்க நினைத்தீர்கள் என்பதை பதிலில் சொல்லுங்கள்.   

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 10, 2022, 11:58:45 pm

வாழ்துக்கள்  Arjun👏👏💐💐
சரியான  பதில் அதுவும்  இரட்டை  பதில்  தந்த உங்களுக்கு சிறப்பு  பாராட்டு👏👏
நான் ஒரு  கேள்வி பதில்  தான் எதிர்பார்த்தேன்
உங்கள் 2வது  கேள்வி  பதில்  மூலம்  நான் புதிய  விஷயங்களை  தெரிந்து கொண்டேன் அதற்க்கு நன்றி.👍


விடை:
கேள்வி 1)

இந்த 2 திருக்குறள்களிலும் ஒரு சிறப்பு உண்டு. இதில் உள்ள ஒரு எழுத்து ஒரே ஒரு முறை மட்டுமே முழு திருக்குறளில் இடம் பெற்றுள்ளது. அந்த எழுத்துகள் என்ன.

பதில் :

ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட எழுத்து "ளீ" மற்றும் "ங'"

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல்
உழப்பிக்கும் சூது

இந்த குறளில் "ளீ"

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்

இந்த குறளில் "ங"

என்னுடைய கேள்வி இந்த திருக்குறள் சிறப்பு பற்றி.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 11, 2022, 11:05:47 am
TASK READY PANDREN🙂
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 11, 2022, 08:14:41 pm
20வது கேள்வி:

1)4 எண்கள் வைத்து ஒரு  task..
2)அந்த  4 எண்கள் வேணும்னா...
3)அந்த  முதல்  பாதி 2  எண்கள் குறிப்பு  என்னுடைய  profile  le ஒரு  குறளின்  விளக்கம் இருக்கு  அந்த  விளக்கம்  வைத்து  குறள் கண்டுபிடிங்க..அந்த (குறள் எண்) குறளின்  முன் பாதி 2 எண்கள்  கிடைத்து  விடும்.
4)பின் பாதி 2 எண்கள்  sarayu siss கிட்ட இருக்கு. நீங்க  கண்டுபிடித்த அந்த முன் பாதி  2 எண்களை அவரிடம்  சொல்லுங்க அது  சரி  என்று  அவர்  சொன்ன  பிறகு கவிதை சொல்லிவிட்டு அடுத்த  எண்கள் பெற்றுக்கொள்ளுங்கள்.கவிதை அவரைச் சார்ந்ததாக  இருக்க வேண்டும்..புடிச்சிருந்தா அந்த எண்கள் தருவாங்க 🙂

⭐அந்த  4  எண்கள்  வரிசை சரியாக இருக்கும்.....அந்த  எண்கள் திருக்குறளில் எதை குறிக்கிறது? கண்டு  பிடித்து  பதில்  அளிக்கவும்
🙂
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on October 11, 2022, 08:30:51 pm
வணக்கம் RIJIA ...

அந்த  முதல்  பாதி 2  எண்கள் :17   (KURAL 17 -உங்கள் profile  குறளின்  விளக்கம்)

பின் பாதி 2 எண்கள்  sarayu இடம் பெற்றுக்கொண்டேன் : 05

4 எண்கள் வைத்து வரும் இலக்கம்: 1705

விடை: 1705

அந்த  எண்கள் திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து - னி  குறிக்கிறது. இந்த எழுத்து 1705 முறை பயன்படுத்தப்படுள்ளது.








விடை சரியாக இருக்கும் என்று நினைக்கிறன்.....
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 12, 2022, 12:25:18 am
SanJaNa  siss  smart  move 👏 👏வாழ்த்துக்கள் 👏👏
Siss ஒரு  request  sarayu  siss  கிட்ட சொன்ன கவிதை  எங்க கூட  பகிர்ந்து கொள்ள  முடியுமா?anita siss, arjun,aslan சார்பில் நான் கேட்கிறேன்...உங்கள்  கவிதை  இங்கு  பதிவிடவும்..நன்றி



⭐விடை:1705

அந்த  எண்கள் திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து - னி  குறிக்கிறது. இந்த எழுத்து 1705 முறை பயன்படுத்தப்படுள்ளது.
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 12, 2022, 07:41:13 pm
Waiting for Kavithai  ;D Darling Darling Dalring nu paadiruppangalo  ;D

I missed a chance  ;D Sarayu thappichittanga  ;D

Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on October 12, 2022, 08:35:49 pm
Sarayu Darling கிட்ட சொன்ன கவிதை :

நான் பிறக்கும் போது நீ என்னுடன் இல்லை...
நான் வளரும் போது நீ என்னுடன் இல்லை....
இனி நீ இல்லாமல் என் வாழ்கை இல்லை
என் அன்பே சராயு...

DARLING I LOVE YOU....
(அன்பே நான் உன்னை காதலிக்கிறேன்...)

 
@Arjun:  YOU CAN WRITE ALSO A POAM ABOUT MY DARLING....WE ARE WAITING FOR THE POEM....
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 12, 2022, 08:52:47 pm
SanJaNa  siss கவிதை  ரொம்ப ரொம்ப  நல்ல  இருக்கு🙂👏👏👏👏பதிவிட்டதுக்கு நன்றி siss🙂
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 12, 2022, 09:48:47 pm
21வது கேள்வி:

1)திருக்குறள் ______ கரத்தில் தொடங்கி ______ கரத்தில்  முடிகிறது.

எந்த கரத்தில் தொடங்கி  எந்த கரத்தில்  முடிகிறது?


NEXT TASK YOSIKIREN🙂
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 12, 2022, 09:53:04 pm
திருக்குறள் "அ"கரத்தில் தொடங்கி "ன"கரத்தில் முடிகிறது.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 12, 2022, 11:50:09 pm
🙂🙂Arjun சரியான  பதில் 👏👏

⭐விடை :திருக்குறள் "அ"கரத்தில் தொடங்கி "ன"கரத்தில் முடிகிறது.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 13, 2022, 10:33:45 pm
(https://i.postimg.cc/xj7gDPNY/20221013-165525.jpg) (https://postimages.org/)

22வது கேள்வி:

புகைப்படம் பாருங்க,என்ன இது? யார்? சிறப்புகள்  என்ன  என்ன? Clue நம்ப gtc ஒருவருடைய சுயவிவரத்தில் இருக்கிறது 🙂 அவங்களுடைய சுயவிவரத்தில் ஒரு  வித்தியாசமான  ஒன்றை  நீங்கள்  பார்த்தால் அதுதான் அந்த  clue🙂
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 14, 2022, 12:57:00 am
இது எல்லீஸ்பிரபுவின் கல்லறையில் உள்ள கல்வெட்டு.

200 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து தங்கக்காசு வெளியிட்ட ஆங்கிலேய ஆட்சியர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ்.

சென்னையில் உள்ள எல்லீஸ் சாலை இவர் பெயரால் அமைந்துள்ளது. மதுரையில் எல்லீஸ் நகர் இவர் பெயரால் உருவாக்கப்பட்டதுதான்.

எல்லீஸ் தமிழையும், வடமொழியையும் நன்கு கற்று மனுதர்ம சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துடன் திருக்ககுறளின் அறத்துப்பாலின் முதல் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் 1812-ல் மொழிபெயர்த்து உரை எழுதி அச்சிட்டிருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்பே ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும்.

இவருடைய கல்லறை ராமநாதபுரம் வடக்குத்தெருவில் உள்ள கிறிஸ்துநாதர் தேவாலய வளாகத்தில் உள்ளது. அவருடைய கல்லறைக் கல்வெட்டுக்கள் தமிழில் அழகிய கவிதை வடிவிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. இதில் அவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த செய்தி சொல்லப்படுகிறது.

I dont know who have the clue in his / her profile. Please answer in your reply.

But I have done some readings in google and found this answer. Hope the answer is correct. Thnx for such nice question to explore more in detail.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 14, 2022, 09:54:52 am
Arjun எப்படி  நான்  யோசித்தாலும் கண்டுபிடிக்கிறிங்க...ஆனால்  clue தெரிஞ்சிக்காம பதில் கண்டுபிடித்தது பாராட்டுக்குரியது... super smart Arjun  வாழ்த்துக்கள் 👏👏
முயற்சி செய்த  அனைவருக்கும் நன்றி..👏👏இந்த கேள்விக்கான  clue coffee BoY profile  cover pic le இருக்கு...தங்க நாணயம் தான் அதன் clue🙂

குறிப்பு:  இந்த  task-க்கு உதவிய coffee BoY-க்கு  அவர்க்கு நன்றி மற்றும் sarayu  siss-க்கும் நன்றி.


⭐விடை: சுருக்கமான பதில்  முழு  விவரம்  Arjun  அளித்த  பதிலில்  உள்ளது  படித்து  தெரிந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்..

1)பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் கல்லறை கல்வெட்டு அந்த புகைப்படம்
2)திருக்குறளை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
3)திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து தங்கக்காசு வெளியிட்ட ஆங்கிலேய ஆட்சியர்


Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 14, 2022, 10:33:49 am
Thnx for detailed reply.

This time answered with google search only. I opened the image and able to read few texts in that. Based on that I started searching and found this answer.

1812 mattum thaan ithukku munnadi padichirukkirukken. coz of your question read new information. Thnx for that. 🙂

Coffee BoY Gold coin kuduppara answer pannathukku  ;D
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 15, 2022, 10:01:43 am
HI ARJUN..நன்றி உங்க  பதிவிக்கு..
Hmm...தங்க  நாணயம்   CB  வந்தா கேளுங்க தந்தாலும்  தரலாம்🙂
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on October 15, 2022, 10:20:46 am
ஆயுத பூஜைக்கு சுண்டல் தராத காபி பாய் (coffee boy) தங்க நாணயம் தருவாரா???

வேடிக்கையா இல்லை....நடக்கிறத சொல்லுங்கப்பா..... 8) ;D ;D ;D ;D
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 15, 2022, 11:33:27 am
SanJaNa  siss🙂🙂

23வது  கேள்வி:

திருக்குறளை தந்தை தந்த தாய்ப்பால் முப்பால் – என்று கூறியவர் யார்? .
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on October 15, 2022, 01:24:18 pm
வணக்கம்  Rijia,

திருக்குறளை தந்தை தந்த தாய்ப்பால் முப்பால் என்று கூறியவர் அறிவுமதி  ஆவர்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 16, 2022, 10:18:28 am
சரியான பதில்  SanJaNa siss 👏👏💐💐

⭐விடை:அறிவுமதி
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 17, 2022, 11:13:22 am
24வது கேள்வி:


1)ஒரு  அரசன் பிறப்பினால் மனிதனாக இரு‌ந்தாலு‌ம், செயலினால் கடவுள் என்று
மதிக்கப்படுவான் கூறும்  திருக்குறள் எது?
குறள் மற்றும் பரிமேலழகர் அவர்களுடைய இந்த குறளக்கான விளக்கம் குறிப்பிடவும்...


2)இந்த  குறளில் வரும்  எந்த  சொல் மன்னவன் இறைவன் போன்றவன் என்று பொருள் பண்ணாமல்,
மன்னவனே இறைவன் என்று பொருள்,என்று குறிப்பிடப்பட்டது
?
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 17, 2022, 03:50:40 pm

1) பதில் :
    அதிகாரம் : 39 - இறைமாட்சி
    திருக்குறள் எண் : 388
    திருக்குறள் :
    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
    இறையென்று வைக்கப் படும்

    பரிமேலழகர் உரை :
    முறை செய்து காப்பாற்றும் மன்னவன் - தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன்,
 
    மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - பிறப்பால் மகனேயாயினும், செயலால் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும்.

2) பதில் : மன்னவன் மக்கட்கு இறை
                 இந்த சொல் தான் மன்னவனே மக்கட்கு இறைவன் என்று பொருள் படும்படி கூறப்பட்டது.


Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 17, 2022, 05:14:28 pm
சரியான  பதில் Arjun வாழ்த்துக்கள் 👏 👏


⭐விடை :

1)குறள் : முறைசெய்து காப்பாற்றும்  மன்னவன் மக்கட்கு   இறையென்று வைக்கப் படும்

2)பரிமேலழகர் விளக்கம்:
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் - தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன்,

3)சொல்: மக்கட்கு


முழு  விவரங்களையும் வேண்டுமெனில் Arjun  தந்த பதிலில் படித்து  தெரிந்து கொள்ளவும்🙂
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 18, 2022, 02:21:31 pm
(https://i.postimg.cc/02v2wx8V/20221018-164444.jpg) (https://postimages.org/)

25வது கேள்வி: என்ன குறள்?


Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 18, 2022, 02:57:50 pm
அதிகாரம்: 11 செய்ந்நன்றி அறிதல்
திருக்குறள் : 104

திருக்குறள்

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வார் பயன்தெரி வார்.

விளக்கம்: உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவே ஒருவன் நன்மை செய்தாலும், அதனைப் பனையளவாக உளங் கொண்டு போற்றுவார்கள்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 18, 2022, 09:21:46 pm
சரியான பதில்  Arjun வாழ்த்துக்கள் 👏 👏

⭐விடை:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வார் பயன்தெரி வார்.
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on October 18, 2022, 10:52:52 pm
NAAN INI INKE VARALAINKO......EPO VANTHALUM ANS SOLIDURANAKLE.....HIHIHI :-[ 8)

(am not serious.....just kidding)
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 19, 2022, 01:07:20 am
26வது கேள்வி:

திருக்குறள் பகுதியில்  அதிகாரம் 2-ல் உள்ள   11 ,12 ,13 அதில் எதோ  ஒரு குறளில் உள்ள  ஏதோ ஒரு செல்லுக்கு  உணவு , நீர் என்று பொருள்படும்.அது  என்ன சொல்  எந்த  குறள்?
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 19, 2022, 06:57:27 pm
நீங்கள் ஒரு சொல் என்று குறிப்பிட்டு இருப்பதால் 11  வது  திருக்குறளை எடுத்து கொள்ளலாம்.

குறள் 11:

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

அமிழ்தம் என்ற சொல்லுக்கு சாவா மருந்து  என்றும் பொருள் கொள்ளலாம். மனிதன் உயிர் வாழ நீர் மற்றும் உணவு அவசியம். இங்கு கேள்வி ஒரு சொல் என்று இருப்பதால் இந்த திருக்குறள் நீங்கள் கேட்ட கேள்விக்கு ஏற்ற பதிலாக இருக்கலாம்.



உணவு மற்றும் நீர் இந்த இரண்டிற்கும் மழை அவசியம். ஆதலால் இங்கு மழையை அமிழ்தம் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

நன்றி (Credit to) : தேவநேய பாவாணர் உரை

குறள் 13: இந்த திருக்குறளும் உணவு மற்றும் நீர் குறித்து பேசுகிறது.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 20, 2022, 11:30:09 am
சரியான  பதில்  Arjun பாராடுக்கள் 👏 👏


விடை :

1)சொல்: தானமிழ்தம்

குறள் 11:

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 20, 2022, 07:53:15 pm
(https://i.postimg.cc/0jx3gb2z/Screenshot-20221020-221339-Chrome.jpg) (https://postimages.org/)closest shell fuel station (https://gasstation-nearme.com/shell)

27வது கேள்வி:திருக்குறள் பகுதியில் அதிகாரம் 2-ல் இந்த  புகைப்படம்  எந்த  குறளுக்கு பொருந்தும்?
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on October 20, 2022, 08:22:02 pm
பதில்:

குறள் 16: விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது


மு.வ விளக்கம்: வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

சாலமன் பாப்பையா விளக்கம்: மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

கலைஞர் விளக்கம்: விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 21, 2022, 02:57:00 pm
சரியான  பதில்  SanJaNa  siss  பாராட்டு 👏👏


⭐விடை :குறள் 16: விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 22, 2022, 09:49:33 am
28வது கேள்வி:

திருக்குறள் பகுதியில்  வரும்  அதிகாரம் 2-ல்  குறள் 16,17,18 -ல் இவற்றில் வரும் குறளில்  ஒரு  சொல்லுக்கு பறவைகளுக்கு எ‌ன்று  பொருள்...அது  என்ன  சொல் மற்றும்  திருக்குறளையும் குறிப்பிடவும்..
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on October 22, 2022, 12:13:25 pm
பதில்:   வானோர்  (am not sure, because  வானோர் means தேவர்கள்)

குறள் 18: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

மு.வ விளக்கம் மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது
சாலமன் பாப்பையா விளக்கம் மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது
கலைஞர் விளக்கம் வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 24, 2022, 09:55:04 am

SanJaNa  siss வாழ்த்துக்கள் உங்கள்  பதில்  சரிதான்...வானோர்க்காக என்று  Google  search le  பறவைகளுக்காக  என்று  பொருள்  வந்தது... அதனால் தான் கேள்வி அப்படி கேட்டேன்.... உங்கள்  பதிலும்  சரியான  பதில்தான்...வாழ்துக்கள் 👏👏


விடை:

சொல்:வானோர்

குறள்:குறள் 18: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 28, 2022, 08:35:54 am
29வது கேள்வி:

கண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்.
இது ஒரு நவீன கால கவிஞரின் பாடல் வரிகள். தமிழில் இது போல 1000 பாடல்கள் இப்போது இருக்கிறது.

ஆனால், இப்போது இருக்கும் கவிஞர்களுக்கு எல்லாம் முன்னோடியான நம்முடைய புலவர் திருவள்ளுவர் இதே பொருள் படும்படி பல 100 ஆண்டுகளுக்கு முன்னே திருக்குறளை எழுதியிருக்கிறார். அது என்ன திருக்குறள்?
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on October 28, 2022, 02:49:03 pm
பதில்:   குறள் 1100

கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின், வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல.


மு.வரதராசன் விளக்கம்:
கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.


சாலமன் பாப்பையா விளக்கம்:
காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.


சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
கண்ணோடு கண் இணையாக பார்த்து உறவாடினால் வாய்ச்சொற்கள் பயன் அற்றுப் போகின்றன.


English Couplet 1100:
When eye to answering eye reveals the tale of love,
All words that lips can say must useless prove.


Couplet Explanation:
The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers).
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 29, 2022, 09:41:01 am
ச‌ரியான  பதில் sanjana siss...SUPERB👏👏
வாழ்துக்கள் siss💐💐


⭐விடை:பதில்:   குறள் 1100

கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின், வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 31, 2022, 10:25:08 am
(https://i.postimg.cc/9QVPpQ7S/20-neerindru-amaiyaadhu-ulakenin-yaaryaarkkum.jpg) (https://postimages.org/)

30வது கேள்வி:

இந்த  புகைப்படத்திற்கு தொடர்புடைய   திருக்குறள் எது? மற்றும் இந்த ஓவியம்  வரைந்தவர்  யார்? 🙂
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on October 31, 2022, 11:03:42 am
கேள்வி 1 :

அதிகாரம் 2 – வான்சிறப்பு
குறள் 20:

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு

மு.வ விளக்கம்

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்

கேள்வி 2 :

திருக்குறள் ஓவியம் : ஓவிய ஆசிரியர் செ. நடராஜன், நல்லூர், விஜயாபுரம்

Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on October 31, 2022, 12:39:45 pm
VERY NICE ARJUN.....
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 31, 2022, 06:55:56 pm
HI Arjun...உங்கள்  பதில்  சரியானது  வாழ்த்துக்கள் 🙂👏👏


⭐விடை:

கேள்வி 1 :

அதிகாரம் 2 – வான்சிறப்பு
குறள் 20:

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு


கேள்வி 2 :

திருக்குறள் ஓவியம் : ஓவிய ஆசிரியர் செ. நடராஜன், நல்லூர், விஜயாபுரம்
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 01, 2022, 08:41:58 am
31வது கேள்வி:

Sarayu sis இப்போது பதிவிடும் அதிகாரம் 2. இந்த திருக்குறள் அதிகாரத்திலுள்ள ஒரு திருக்குறளில் தொடர்ச்சியான 3 சொற்கள் திருக்குறளுக்கு முந்தைய காலத்து தமிழ் இலக்கியம் ஒன்றிலும் அப்படியே (வார்த்தை மாறாமல்) பயன் படுத்த பட்டு இருக்கிறது.

அது எந்த  திருக்குறள்?
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on November 03, 2022, 12:00:36 pm
அதிகாரம் 2 – வான்சிறப்பு
குறள் 20:

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு

நீர் இன்று அமையா உலகு - நற்றிணையில் பயன்படுத்த பட்டுள்ளது.

விளக்கம் & Credit : Pls visit


http://interestingtamilpoems.blogspot.com/2013/09/blog-post_1824.html
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 03, 2022, 05:17:19 pm
சரியான  பதில்  Arjun 👏 👏

⭐விடை:அதிகாரம் 2 – வான்சிறப்பு
குறள் 20:

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு

நீர் இன்று அமையா உலகு - நற்றிணையில் பயன்படுத்த பட்டுள்ளது
.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 07, 2022, 04:05:19 pm
                          (https://i.postimg.cc/tT8KV9Sx/In-Shot-20221107-175901106.jpg) (https://postimg.cc/CBHP3pVh)

32வது கேள்வி:

இந்த 2 புகைப்படங்களில் இருந்து சில எழுத்துகளை எடுத்து இணைத்தால் ஒரு வார்த்தை கிடைக்கும். அந்த வார்த்தை இடம் பெற்ற திருக்குறள் குறிப்பிடவும்.
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on November 08, 2022, 11:40:56 am
அந்த வார்த்தை:

எழுபது


அந்த வார்த்தை இடம் பெற்ற திருக்குறள் :

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.


மு.வரதராசன் விளக்கம்:
தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:
தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.

சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
மடத்தனமான ஆலோகர் அருகில் இருப்பது எதிரிகள் எழுபது கோடி இருப்பதுபோல் ஆகிவிடும்.



Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 09, 2022, 02:18:12 pm
Hi SanJaNa  siss...நல்ல  முயற்சி  siss👏
ஆனால் பதில்  தவறு  siss...மறுபடியும்  முயற்சி  செய்ங்க 💐

குறிப்பு:
அந்த வார்த்தை திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மலர்களில் ஒன்று.
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on November 10, 2022, 04:10:26 pm
THX FOR THE CLUE

அந்த வார்த்தை:
அனிச்சம்


குறள் 1120:

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.



மு.வரதராசன் விளக்கம்:
அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.


சாலமன் பாப்பையா விளக்கம்:
உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.


சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும் பெண்களின் பாதத்திற்கு நெருஞ்சிப் பழத்தின் முள்போல் வலி உண்டாக்கும்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 10, 2022, 06:51:00 pm
சரியான  பதில்  SanJaNa  siss 👏👏👏

⭐விடை:அனிச்சம்
திருக்குறளும் சரியான விடை..
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 11, 2022, 12:05:37 pm
33வது கேள்வி:

Sarayu  siss மற்றும்  Aslan அதிகாரம் 3-ல்
4 குறள்கள் பதிவு  செய்துள்ளனர். அதில்  ஒரு  குறளுக்கான  முழு விளக்கத்திருந்து
ஒரு  சிறு  பகுதி  மட்டும்  எடுத்து அந்த  விளக்கம்  இங்கு   பதிவு செய்துள்ளேன். அது  எந்த  குறளக்கான   விளக்கம்,யார்  தந்த விளக்கம் மற்றும் முழு  விளக்கம்  இங்கு  பதிவிடவும்.



விளக்கம்:
முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on November 11, 2022, 12:34:10 pm
அதிகாரம்:நீத்தார் பெருமை
குறள் எண்:22

திருக்குறள் :

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

உரைவிளக்கம் : பரிமேலழகர் உரை:

துறந்தார் பெருமை துணைக் கூறின் - இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும்.

(முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.)

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 11, 2022, 02:30:29 pm
சரியான பதில்  Arjun👏👏👏

⭐விடை :

1) குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

2)உரைவிளக்கம் : பரிமேலழகர் உரை:

துறந்தார் பெருமை துணைக் கூறின் - இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும். (முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.).
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 15, 2022, 09:19:17 am
(https://i.postimg.cc/KzScXjQQ/20221115-114021.jpg) (https://postimages.org/)

34வது கேள்வி:

AslaN  அவர்கள் அதிகாரம் 3-ல் கொடுக்கப்பட்ட குறள்களில் இந்த  புகைப்படம்  எந்த  குறளை விளக்குகின்றன?
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on November 15, 2022, 10:43:45 am
விடை :

குறள் 26:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.


மு.வ விளக்கம்:⚜️

🌟செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்




⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.




⚜️கலைஞர் விளக்கம்:⚜️

🌟பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.[/size]
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 16, 2022, 10:30:18 am
SUPERB SanJaNa SISS👏👏சரியான  பதில் வாழ்த்துக்கள்💐💐



⭐விடை:

பால் : அறத்துப்பால்
அதிகார எண்: 3
அதிகாரம் : நீத்தார் பெருமை

குறள் 26:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 16, 2022, 04:12:46 pm
இந்த ஆயுதம் வசப்படாத பொருளை வளைத்து வசப்படுத்தும் கருவியாக கொள்ளப்படுகிறது. இந்த ஆயுத்ததின் சக்தியாக வசியம் கருதப்படுகிறது. உயிர்களின் ஆனவத்தை அடக்கி உயிர்களை வசப்படுத்துதல் இந்த ஆயுதத்தின் தன்மையாகும்.


35வது கேள்வி:

அதிகாரம் 3-ல் ஒரு  குறளில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில்  இந்த  ஆயுதத்தின் பெயர் குறிப்பிட்டுள்ளார் அந்த ஆயுதத்தின் பெயர்  குறிப்பிடவும்.
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on November 17, 2022, 09:39:59 am
விடை:-

குறள் எண் -  24  இல் குறிப்பிடப்பட்ட அறிவு என்னும் ஆயுதமேRijia கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் .


🔥குறள்-24🔥


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.



Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 17, 2022, 01:42:11 pm
Hi Aslan  எப்படி இருக்கீங்க..ந‌ல்ல  முயற்சி வாழ்த்துக்கள் 👏

உங்கள்  பதில் தவறு  இல்லை..ஆனால்  பதில் அது இல்லை🙂
எனக்கு  தெரியும் இந்த  பதில்தான்   வரும்னு 🙂
அப்படி  சுலபமா  நான் கேள்வி கேட்டா
நீங்க  எல்லாரும் கண்டுபிடிச்சிருவிங்க🙂

வேற ஒரு பதில் இருக்கு மீண்டும் முயற்சி  செய்ங்க👍
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on November 17, 2022, 02:13:20 pm
 நான் நலமாக இருக்கிறேன் RIJIA நீங்கள் நலமா?


குறள்-25  இல் உள்ள ஆசை என்பதே பதில் ஆக இருக்கும் என்பது எனது கருத்து  ஆசைக்கே வசியம் செய்யும் தன்மை இருப்பதாக நினைக்கிறன்.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.


மன்னிக்கவும் தவறாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் முயற்சி செய்து பார்க்கிறேன்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 17, 2022, 02:32:15 pm
நான்  நல்ல  இருக்கேன் Aslan..நன்றி 🙂
மீண்டும்  நல்ல  முயற்சி 👏

ஒரு  குறிப்பு  தருகிறேன்:

நீங்கள்  முதலில்  பதிவிட்ட குறள் எண் 24-ல் உள்ள ஒரு  விளக்கத்தில்  அந்த  வார்த்தை  உள்ளது 🙂


இன்னும்  ஒரு  குறிப்பு வேணும்னா சொல்லுங்க  தருகிறேன்
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on November 17, 2022, 04:21:40 pm



🔥குறள்-24🔥

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️கலைஞர் விளக்கம்:⚜️

🌟உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

துறவறம் என்பது விடையாக இருக்கும் என நினைக்கின்றேன் .

தங்களது விடை பற்றிய குறிப்புக்கு மிக்க நன்றி 🙏
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 17, 2022, 04:40:44 pm
 Aslan இந்த  குறிப்பு  வைத்து  அந்த   வார்த்தையை  கண்டு பிடிங்க 🙂

இந்துத் தொன்மவியலில் பல கடவுளர் இந்த ஆயுதம் வைத்துள்ளார்கள்.விநாயகர், பைரவர், சதாசிவ மூர்த்தி, துர்க்கை ஆகியோர் இந்த ஆயுதத்தினை வைத்துள்ளார்கள். துரக்கோலின் மேற்பகுதியில் கொக்கியோடு இக்கருவி அமைந்திருக்கும். இந்த ஆயுதத்தினை துறட்டி என்பார்கள். இந்த ஆயுதம் வசப்படாத பொருளை வளைத்து வசப்படுத்தும் கருவியாக கொள்ளப்படுகிறது. இந்த ஆயுத்ததின் சக்தியாக வசியம் கருதப்படுகிறது. உயிர்களின் ஆனவத்தை அடக்கி உயிர்களை வசப்படுத்துதல் இந்த ஆயுதத்தின் தன்மையாகும்.
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on November 17, 2022, 04:56:18 pm
⚜️கலைஞர் விளக்கம்:⚜️

🌟உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

இதில் அங்குசம் என்று இருக்கும் ஆயுதம் தான் நீங்கள் சொன்ன குறிப்புக்கு அர்த்தம்.

விடை : அங்குசம்
கேள்வியை ஆராயாமல் விடை அளித்ததன் விளைவு தான் இத்துணை முயற்சி.
பயிற்சி இல்லாமல் விடை அளித்ததே இதற்கு காரணம்
மிக்க நன்றி தங்களது குறிப்பிற்கு RIJIA 🙏


இந்த பகுதியில் விடை அளிக்க இத்துணை முயற்சி அளித்தது நானாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன் 😄😄😄
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 17, 2022, 05:20:15 pm
Hmmm🙂சரியான பதில் AslaN👏👏💐💐
இத்தனை முயற்சி செய்த உங்களை  பாராட்டியே ஆக  வேண்டும்..வாழ்த்துக்கள்  AslaN👏💐மற்றும்  நன்றி என்  கேள்விக்கு சலிக்காமல் இத்தனை முறை பதில் அளித்ததற்கு🙂


⭐விடை: அங்குசம்


⭐கலைஞர் விளக்கம்:

     உறுதியென்ற அங்குசம் கொண்டு,
     ஐம்பொறிகளையும் அடக்கிக்    காப்பவன்,
     துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.


⭐குறள்-24:

     உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
     வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on November 17, 2022, 05:26:48 pm
உங்களுக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் RIJIA 👍 இத்துணை முறை சலிக்காமல் எனக்கு குறிப்பு தந்ததிற்கு 👏
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 19, 2022, 12:53:38 am
36வது கேள்வி:

학식이 있는 사람의 위대함은 세계의 경전에 표시되어 있다. (二十八)

இந்த விளக்கம் அதிகாரம் 3-ல் எந்த  குறளக்கானது?மற்றும் இது  என்ன மொழி என்று  குறிப்பிடவும் 🙂
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on November 19, 2022, 04:47:36 am
விடை: குறள்-28

❝நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்❞



மு.வ விளக்கம்:

🌟பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

🌟நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

கலைஞர் விளக்கம்:

🌟சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.



இது கொரியன் (KOREAN) மொழி !!
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 19, 2022, 12:57:42 pm
சரியான  பதில் SanJaNa siss 👏 👏

⭐விடை: குறள்-28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்


⭐மொழி:கொரியன் (KOREAN)
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 20, 2022, 07:47:43 pm
37வது கேள்வி:

இவர்  காவல் உதவி ஆணையர்,இவர் தனது பெற்றோர் மற்றும் அவரது சகோதரருடன் வசிக்கிறார். மருத்துவத் துறை தொடர்பான தொடர் கொலைகளை விசாரிக்கிறார்.மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு குற்ற மோசடியை அவிழ்த்து விடுகிறார், அவருக்கு ஒதுக்கப்பட்ட ஒரு பெண்ணைக் காணவில்லை என்பது ஒரு தீங்கற்ற வழக்கு, இருப்பினும், வழக்கு இருட்டடிப்பு மற்றும் சிக்கலானதாக மாறுவதால், அவரது பணி ஒவ்வொரு நாளும் கடினமாகிறது.

நான்  கேட்கும்  அந்த திருக்குறள்  இந்த  திரைப்படத்தின் பெயர்  கண்டுபிடித்து விட்டல்  குறள் தெரிந்து விடும்.இந்த திரைப்படத்தின்  பெயர்  பக்கத்தில்  இருக்கு  அந்த திருக்குறள் குறிப்பு.

நான்  கேட்கும்  அந்த  திருக்குறள் எது?

மேலும்  குறிப்பு வேண்டும்  என்றால் கேட்கலாம்🙂
Title: Re: திருக்குறள்
Post by: Arjun on November 21, 2022, 04:02:06 pm
திரைப்படத்தின் பெயர் : குற்றம் 23

So, நீங்கள் கேட்ட குறள் 23:

அதிகாரம்: நீத்தார் பெருமை

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

மு.வரதராசன் விளக்கம்:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.


Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 22, 2022, 10:15:10 am
Hi Arjun🙂சரியான பதில் வாழ்த்துக்கள் 👏👏

⭐விடை:

திரைப்படத்தின் பெயர்:குற்றம் 23
நான் கேட்ட  குறள் எண்:23
அதிகாரம்: 3 நீத்தார் பெருமை

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 22, 2022, 02:27:57 pm
38வது கேள்வி:

1)விளக்குத்தகழி;சட்டி ,     விரிவு, ஓர்அளவு; வெள்வேல்மரம்.

2)வானம்; தேவலோகம்; மேகம்; திசை; வீம்பு; செருக்கு

1+2 = என்ன வார்த்தை?

அந்த  வார்த்தை  எந்த  குறளில் இடம்பெற்றுள்ளது?

Title: Re: திருக்குறள்
Post by: AslaN on November 23, 2022, 12:23:15 am

1. விளக்குத்தகழி; சட்டி , விரிவு, ஓர்அளவு; வெள்வேல்மரம்.

அகல்

2.வானம்; தேவலோகம்; மேகம்; திசை; வீம்பு; செருக்கு.

விசும்பு

அகல் + விசும்பு = அகல்விசும்பு

அந்த வார்த்தை இடம் பெற்றுள்ள குறள் :-


குறள் -25:-

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 23, 2022, 10:35:04 am
சரியான  பதில் AslaN 👏 👏பாராட்டுகள் 💐


⭐விடை:

1)அகல் + 2) விசும்பு= அகல்விசும்பு

குறள் 25:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on November 23, 2022, 05:17:58 pm
SUPERB MACHI..Naanum try panne..mudiyalai...
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 23, 2022, 08:50:39 pm
(https://i.postimg.cc/597SJzXF/In-Shot-20221123-231511254.jpg) (https://postimg.cc/grhZqnqY)

39வது கேள்வி

என்ன  குறள்?
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on November 24, 2022, 01:11:39 am

குறள்-21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 24, 2022, 08:52:29 am
நல்ல முயற்சி AslaN 👏👏ஆனால் பதில் தவறு.
மீண்டும் முயற்சி செய்ங்க👍
Title: Re: திருக்குறள்
Post by: Sivarudran on November 30, 2022, 04:32:48 pm
பேறிவுடையவன்
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 30, 2022, 05:08:51 pm
(https://i.postimg.cc/dtNgRgTK/20221130-193331.jpg) (https://postimages.org/)

39வது கேள்விக்கான முழு புகைப்படம் பதிவு  செய்துள்ளேன் இப்ப சொல்லுங்க என்ன குறள்?
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on November 30, 2022, 05:59:59 pm
விடை:-


🔥குறள்-22🔥


❝துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று❞
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on November 30, 2022, 06:08:15 pm
சரியான பதில் AslaN   பாராட்டுகள் 👏 👏

⭐விடை: குறள்-22


❝துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று❞


Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 01, 2022, 11:53:14 am
40வது கேள்வி:

கிலே  கொடுக்கப்பட்டுள்ள  திரைபடம் குறிப்பை வைத்து அந்த திரைப்படம் பெயர் கண்டுபிடிங்க.அந்த திரைப்பட பெயரை  வைத்து குறள் பதிவிடவும்.

திரைப்படம் குறிப்பு:

ஒரு திருமணமான பெண், கணவன் மற்றும் மகளுக்காக தன் கனவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தன் உண்மையான சுயரூபத்தை மீட்டெடுத்து சாதனையாளராக மாறுகிறாள்.
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on December 07, 2022, 12:17:12 pm
திரைப்படம் : ராட்சசி

திருக்குறள் கேள்விக்கு பதில் தர குறிப்பு தரவும் ???
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 07, 2022, 12:27:11 pm
Hi Aslan...முயற்சிக்கு  பாராட்டு 👏ஆனால் பதில்  தவறு..37வது  கேள்வி  மற்றும்  விடை  பாருங்க  இந்த  கேள்விக்கான  பதில்  நீங்கள்  சுலபமாக கண்டுபிடிக்கலாம்🙂
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 09, 2022, 10:04:03 am
40வது கேள்விக்கு ஒரு குறிப்பு ..

அந்த திரைபடத்தில் கதாநாயகி பெயர் வசந்தி.
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on December 09, 2022, 10:10:33 am
திரைப்படம் : 36 வயதினிலே

 
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 09, 2022, 10:17:08 am
AslaN   பாராட்டுக்கள்....👏👏திருக்குறள் குறிப்பிடுங்க..
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on December 09, 2022, 10:20:09 am
கொஞ்சம் கடினம் தான் முயற்சி செய்கிறேன் RIJIA 😊
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 09, 2022, 10:25:45 am
Aslan நீங்கள்  கண்டு  பிடித்த திரைப்பட பெயரிலே  இருக்கு அந்த  திருக்குறள் குறிப்பு. 37வது  விடை  பாருங்க  புரியும் 🙂
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on December 09, 2022, 04:47:13 pm

விடை:-

குறள்-36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

மு.வரதராசன் விளக்கம்:
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 09, 2022, 10:29:09 pm
வாழ்துக்கள் AslaN சரியான பதில்👏👏

⭐விடை: திரைப்படம்  பெயர்> 36 வயதினிலே


குறள்-36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 12, 2022, 03:02:48 pm
41வது கேள்வி:

கிலே  கொடுக்கப்பட்டுள்ள  விளக்கம் கலைந்திருக்கு அதை சரி  செய்து பின் அந்த விளக்கத்துக்கான  குறளை பதிடவும்.

விளக்கம்:

செய்யும்  வாழ்நாளுக்கான  அந்த மற்றவர்களுக்குச்  பலன் நல்லவைதான் வாழ்நாளில்
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on December 14, 2022, 02:39:12 pm
விடை:

வாழ்நாளில்  மற்றவர்களுக்குச் செய்யும் நல்லவைதான், அந்த வாழ்நாளுக்கான பலன்.

குறள்-38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.


மு.வரதராசன் விளக்கம்:
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.


சாலமன் பாப்பையா விளக்கம்:
அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.


சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
வாய்த்த நாள் வீணாகாமல் நல்லது செய்தால் அது ஒருவருக்கு வாழ்நாள் வழியை மூடும் கல்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 14, 2022, 04:43:28 pm
SUPER SISS..சரியான பதில்💐பாராட்டுக்கள்👏👏

⭐விடை:

வாழ்நாளில்  மற்றவர்களுக்குச் செய்யும் நல்லவைதான், அந்த வாழ்நாளுக்கான பலன்.

குறள்-38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 15, 2022, 07:57:38 pm
(https://i.postimg.cc/8PXGMrTy/20221215-222228.jpg) (https://postimages.org/)

42வது கேள்வி:

இந்த புகைப்படம்  எந்த  குறளக்கானது?
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on December 16, 2022, 12:41:24 am
விடை:

குறள் 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.


மு.வரதராசன் விளக்கம்:
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.


சாலமன் பாப்பையா விளக்கம்:
பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.


சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
அழிக்கும் குணம்,அளவற்ற ஆசை,கடுங் கோபம்,வன்மையான வார்த்தை இவை நான்கும் இல்லாமல் இருப்பதே அறம்.

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 16, 2022, 02:02:24 pm
சரியான  பதில் SISS SUPERB 💐👏👏

⭐விடை:

குறள் 35:

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 17, 2022, 11:47:18 am
43வது கேள்வி:


1)____________=ஒழுக்க நெறிகளுடன்

2)____________=வீட்டு வாழ்க்கையை

3)____________=என்று பெருமையைப் பெறுகிறவன்

4)____________=சிறப்புற வாழ்ந்து காட்டுகிறவன் ஆவான்

5)____________=மற்றபடி தகுதி, பகுதி, செல்வம், கொண்டு சமுதாயத்தில் உயர்ந்துள்ள மற்றவர்களை விடத்
தலைமையானவன்


ஒரு  குறளில் வரும்  ஒவ்வொரு  சொல்லுக்கும் உள்ள  விளக்கம்  இது..காலியான  இடத்தை  நிரப்பி, முழு  குறளை பதிவிடவும்.
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on December 18, 2022, 04:21:24 pm

விடை:

1)_______ இயல்பினான்_____=ஒழுக்க நெறிகளுடன்

2)_____இல்வாழ்க்கை_______=வீட்டு வாழ்க்கையை

3)________ வாழ்பவன்___=என்று பெருமையைப் பெறுகிறவன்

4)_____ வாழ்பவன்_என்பான்______=சிறப்புற வாழ்ந்து காட்டுகிறவன் ஆவான்

5)____முயல்வாருள்_எல்லாம் தலை பொருள்_______=மற்றபடி தகுதி, பகுதி, செல்வம், கொண்டு சமுதாயத்தில் உயர்ந்துள்ள மற்றவர்களை விடத்
தலைமையானவன்

குறள் 47:
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை பொருள்
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 18, 2022, 04:37:32 pm
சரியான பதில் siss👏👏💐

⭐விடை:

குறள் 47:

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை பொருள்
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on December 18, 2022, 04:47:10 pm
WOW REALLY:...NICE....THX
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 19, 2022, 01:44:25 pm
44வது கேள்வி:

1)_________=அறவழியிலே, இல் வாழ்க்கை.

2)_________=இல்லறத்தை நடத்துவானேயாயின்.

3)_________=அறவழிக்குப் புறவழியான                       மறவழியில்  அதாவது  தீயவழியில்

4)_________=சென்று பெறக்கூடிய நன்மை

5)_________=என்ன? (ஒன்றுமில்லை).

ஒரு  குறளில் வரும்  ஒவ்வொரு  சொல்லுக்கும் உள்ள  விளக்கம்  இது..காலியான  இடத்தை  நிரப்பி, முழு  குறளை பதிவிடவும்.

Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on December 20, 2022, 02:27:09 am
விடை:

1)____அறத்தாற்றின்_____=அறவழியிலே, இல் வாழ்க்கை.

2)___ஆற்றின்______=இல்லறத்தை நடத்துவானேயாயின்.

3)___புறத்தாற்றில்______=அறவழிக்குப் புறவழியான                       மறவழியில்  அதாவது  தீயவழியில்

4)______போஒய்ப் பெறுவது___=சென்று பெறக்கூடிய நன்மை

5)_____ எவன்____=என்ன? (ஒன்றுமில்லை).

குறள் 46:

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ எவன். 
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 20, 2022, 02:47:12 pm
Super Siss சரியான பதில் 💐👏👏

⭐விடை : குறள் 46:

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ எவன்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 21, 2022, 11:08:56 pm
45வது கேள்வி:

அதிகாரம் 5- இல் முதல்  மூன்று  குறளில்  இல்வாழ்க்கை  நடத்துபவர்களுக்கு 11 கடமைகள் சொல்லி இருக்கிறார் வள்ளுவர். அந்த  11 கடமைகள்  செய்ய  பொருள்  வேண்டும்  அந்த பொருள்  அடங்கிய குறள் எது?
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 27, 2022, 05:07:48 pm
45வது கேள்விக்கான  குறிப்பு:
விடை  அதிகாரம் 5 -ல் உள்ளது.
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on December 28, 2022, 02:14:11 am
விடை : குறள் 45:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 28, 2022, 10:42:16 am
Hi SanJaNa  Siss நல்ல முயற்சி👌ஆனால் பதில்  தவறு Siss மீண்டும் முயற்சி  செய்ங்க 👍

குறிப்பு: முதல் 3 குறளில் 11 கடமைகளை  சொன்ன வள்ளுவர் அதுக்கு  அடுத்து வரும் குறளில் அதன் பொருள்  விளக்கம்  வைத்துள்ளார்
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on December 29, 2022, 06:06:32 am
விடை:

குறள் 44:

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 29, 2022, 01:50:46 pm
Wow Siss Super 👏👏👏சரியான பதில் பாராட்டுக்கள் 💐

விடை : குறள் 44:

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on December 30, 2022, 01:53:55 am
THANK  YOU RIJIA.....
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 03, 2023, 04:38:51 pm
46வது கேள்வி:

என்ன  குறள்?



(https://i.postimg.cc/DyBX5FsJ/20230103-190549.jpg) (https://postimages.org/)
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on January 06, 2023, 04:32:59 am
விடை:

குறள் 53:

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 06, 2023, 02:20:34 pm
Super Siss சரியான பதில் 💐👏👏👏

⭐விடை :குறள் 53:

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 12, 2023, 12:42:40 am
47வது கேள்வி:

என்ன குறள்?

(https://i.postimg.cc/vTd2Gsfb/20230112-030853.jpg) (https://postimages.org/)
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on January 12, 2023, 05:28:22 am
⭐விடை :

குறள் 55:

❝தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.❞

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 16, 2023, 04:30:20 pm
Superb Siss சரியான  பதில் 👏👏💐

விடை :குறள் 55:

❝தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.❞


Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on January 16, 2023, 04:43:10 pm
THANK YOU SIS.....
Title: Re: திருக்குறள்
Post by: SuNshiNe on January 17, 2023, 08:41:49 am
Congratulations all
Thread is going to have 50th questions soon 💥🤝🤝
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 17, 2023, 11:59:44 am
Thank You Sara Siss ❤😊
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 17, 2023, 12:33:28 pm
48வது கேள்வி:

என்ன  குறள்:

The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.
Title: Re: திருக்குறள்
Post by: Barbie Doll on January 17, 2023, 01:28:33 pm
குறள்:65

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

விளக்கம்:

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on January 17, 2023, 02:14:02 pm
விடை :

குறள் 65:

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 17, 2023, 03:43:01 pm
Wow SanJaNa  Siss 👏& DoLL  Siss👏  சரியான பதில் Siss வாழ்துக்கள்💐

BarBie DoLL  Siss Welcome To Thirukural Thread 💐🍫


⭐விடை:குறள் 65:

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

Title: Re: திருக்குறள்
Post by: Barbie Doll on January 17, 2023, 08:28:44 pm
Thank you RiJiA sis 💕
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 18, 2023, 11:08:52 am
49வது கேள்வி:

தீபாவளி கவிதையும் கானமும் நிகழ்ச்சியில் நான் ஒரு  பாடல் பாடினேன்...அந்த பாடலின்  முதல் சொல்  மற்றும்  இந்த  திருக்குறளின்  முதல்  செல்லும்  ஒரே  மாறி  தொடங்கும்..(அந்த  பாடல்  மலேசிய ஆல்பம்  பாடல் இது குறிப்பு)
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on January 18, 2023, 05:35:14 pm
DIWALI MUDINCHU ROMBA NAAL ACHE...ENAKU SONG GNABAHAME ILLIYA SIS....
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 18, 2023, 06:13:18 pm
Hmm Siss சின்ன குறிப்பு தரேன்...அது தீபாவளி குறித்த பாடல்  தான் அது...YouTube le  மலேசிய ஆல்பம் தீபாவளி  பாடல்னு இப்படி தேடி பாருங்க Siss....மற்றும்  ஒரு  குறிப்பு  குறள் அதிகாரம் எண் 6.
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on January 18, 2023, 08:01:58 pm

விடை:

குறள்-60

❝மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.❞

பாடல் : மங்கல ஒளி வீசும் தீபாவளி
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 18, 2023, 11:26:50 pm
Aslan நிஜமா நீங்கள் இதுக்கு விடை  அளித்தது எனக்கு  ஆச்சரியமாக உள்ளது..அதுவும்  சரியான  பதில்  வாழ்த்துக்கள் 👏💐குறிப்பு வைத்து  கண்டு  புடிச்சிங்களா அல்லது அந்த  பாடல்  நினைவில்  உள்ளதா?



⭐விடை:குறள்-60

❝மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.❞

பாடல் : மங்கல ஒளி வீசும் தீபாவளி
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on January 19, 2023, 09:36:08 am

மிக்க நன்றி RIJIA 🙏

குறிப்பை வைத்து தான் ✍️
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 19, 2023, 10:35:54 am
வணக்கம்..திருக்குறள் பகுதியில் இதுவரை  பதில் அளித்த Arjun💐,Aslan💐 Sara Siss❤,SanJaNa Siss❤Anita Siss❤,BarBie DoLL  Siss ❤மற்றும் முயற்சி செய்த அனைவருக்கும் என்  பாராட்டுக்களும்👏 நன்றிகளும்🙏
இப்போ  நம்ப 50வது கேள்விக்கு  வந்தாச்சு.அதனால இந்த  வினா விடை பகுதிய பற்றி ஒரு  சில  கேள்வி கேட்கலாம்.😊


1) 49 கேள்விகளில் உங்களுக்கு பிடித்த  கேள்வி எது?

2)எந்த  கேள்விக்கும் நீங்க கஷ்டம்  பட்டு  பதில் அளிச்சிங்க?

3)திருக்குறள் வினா விடை பகுததியில் RiJiA சரியான கேள்வி  கேட்குறாங்கலா மற்றும் சரியான முறையில்  கொண்டு போறாங்கலா?

4)என்னிடம் எதும்  கேள்வி  கேட்கனுமா? 😊

இந்த  நான்கு  கேள்விகளில் எத்தனை  கேள்விக்கு  வேணும்னாலும்  பதில் அளிக்கலாம்.உங்கள் விருப்பம்.

என்னையும்  நம்பி  என்  மேல  நம்பிக்கை  வைத்து இந்த  பகுதியை வழிநடத்த கொடுத்த என்  Sara Siss-க்கு மற்றும் சில  task-க்கு உதவிய Arjun,Sara Siss,
SanJaNa  Siss,Mellisai Siss மற்றும்  CB-க்கு நன்றிகள் 🙏
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on January 26, 2023, 11:05:13 am

 
1.எனக்கு பிடித்த கேள்வி எண் 40.

2.கடினமாக பதில் அளித்த கேள்வி  எண் 35.

3.நல்ல சிறப்பான முறையில் கொண்டு செல்கிறீர்கள் வாழ்த்துக்கள் RIJIA அவர்களுக்கு 👏👍
மேலும் நல்ல முறையில் இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல GTC Forum சார்பாக வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏

4. ஆம் எனது  கேள்வி என்னவென்றால் திருக்குறள் கேள்விக்கான நிழற்படங்களை எப்படி தேர்வு செய்வீர்கள் ?
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 26, 2023, 07:28:07 pm
வணக்கம்  AslaN 💐..உங்கள்  பாராட்டுக்கு  நன்றி🙏 எனது  கேள்விகளை மதித்து பதில்  அளித்ததற்கு நன்றிகள்.ம்ம்...நிழற்படங்களை
நான் GOOGLE-இல் தான் தேர்வு  செய்கிறேன்..சில  திருக்குறள்  கேள்விகளுக்கு 2 மணி  நேரம் செலவு  செய்துள்ளேன்..🙂சில திருக்குறளுக்கு மற்றும் சில  வார்த்தைகள்  வைத்து  connection   விளையாட்டு  மாறி  கேள்வி  கேட்டேன்.இந்த  கேள்விகளுக்குதான்
நிழற்படங்கள் தேவைப்படும்..மற்றும் அதிக நேரம் தேவைப்படுகிறது..நன்றி🙂
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on January 31, 2023, 10:23:47 am

RIJIA  தங்களது மேலான முயற்சி மற்றும் பதிவிற்கான நேரம் கடந்த தேடுதலுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்🙏👏
மென்மேலும் தங்கள் பணி தொடர GTC  அரட்டை,GTC பண்பலை GTC FORUM சார்பாக வாழ்த்துக்கள் 🎉👏🙏

இத்துடன் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் Coffee Boy, SARA, ASLAN சார்பாக நன்றிகள்🙏
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on February 01, 2023, 06:16:00 pm
(https://i.postimg.cc/yxtYrb1n/20230201-204254.jpg) (https://postimages.org/)

50வது கேள்வி:  என்ன  குறள்?
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on February 02, 2023, 01:56:37 am
விடை:

குறள்-69

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on February 06, 2023, 10:51:17 am
SuperB Siss 👏சரியான  பதில் 👏👍👌💐வாழ்த்துக்கள்  SanJaNa siss 😊

⭐விடை:குறள்-69

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on February 07, 2023, 11:25:59 am
Thank you Rijia sis...
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on February 20, 2023, 05:01:57 pm
51வது  கேள்வி:

முடிந்த  கவிதையும் கானமும் நிகழ்ச்சியில்  BarBie DoLL Siss கவிதைக்கு  என்ன  பாடல்  ஒளிபரப்பு  செய்யப்பட்டது?அந்த  பாடலில்  வரும்  திருக்குறள்  என்ன? அதை  கண்டு பிடித்து... AslaN அவர்கள் திருக்குறள்  பகுதியில் அந்த திருக்குறளுக்கு கொடுக்கப்பட்டுள்ள  விளக்கத்தையும் இங்கே  பதிவுடவும்.

Title: Re: திருக்குறள்
Post by: Barbie Doll on February 20, 2023, 07:12:52 pm
பாடல்: ஒரு நாள் சிரித்தேன்( விண்ணை தாண்டி வருவாயா)

குறள்:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

பால் : அறத்துப்பால்
அதிகார எண் : 8
அதிகாரம் : அன்புடைமை / The Possession of Love

⚜️மு.வ விளக்கம்:⚜️

⭐அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்✨



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

⭐அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்✨
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on February 28, 2023, 12:50:02 pm
Siss DoLL❣சரியான பதில் super siss 👏👏வாழ்த்துக்கள் 💐

⭐விடை:

⭐பாடல்: ஒரு நாள் சிரித்தேன்( விண்ணை தாண்டி வருவாயா

⭐குறள்:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

⭐மு.வ விளக்கம்:

⭐அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்



சாலமன் பாப்பையா விளக்கம்:

⭐அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on March 07, 2023, 09:23:02 pm
52வது கேள்வி:

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு __________ என்று கூறுவர்.

விடுபட்ட  இடத்தை நிரப்பி....அந்த விளக்கத்தின் திருக்குறளை குறிப்பிடவும்.
Title: Re: திருக்குறள்
Post by: Barbie Doll on March 07, 2023, 10:31:11 pm
விடை:

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்.

குறள்:

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on March 08, 2023, 10:35:06 am
DoLL  Siss❣ நல்ல  முயற்சி  வாழ்த்துக்கள்  siss👏👏
இந்த  பதில்  தவறில்லை..ஆனால்  அந்த விளக்கத்திற்க்கு ஏற்ற குறள் பதிவிடவும.

குறிப்பு: விளக்கத்தில் விடுப்பட்ட இடத்தில்  நிரப்பிய  அந்த  வார்த்தையில் தொடங்கும் அந்த  குறள்.
Title: Re: திருக்குறள்
Post by: Barbie Doll on March 08, 2023, 10:38:55 am
குறள்:
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on March 08, 2023, 04:05:59 pm
சரியான  பதில் BarBie DoLL Siss  வாழ்த்துக்கள் 👏💐❣


⭐விடை : குறள்-60

❝மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு"


மு.வ விளக்கம்:

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.


Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on March 17, 2023, 04:02:44 pm
(https://i.postimg.cc/Y2TpT2TX/20230317-182934.jpg) (https://postimages.org/)

53வது கேள்வி:

என்ன  குறள்?
Title: Re: திருக்குறள்
Post by: Barbie Doll on March 17, 2023, 04:10:55 pm
குறள்:

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on March 17, 2023, 07:55:57 pm
சரியான  பதில்  DoLL SISS❣👏👏👏


⭐விடை: குறள் 77

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on March 27, 2023, 09:54:14 am
54வது கேள்வி:

என்ன  குறள்?



(https://i.postimg.cc/d0kS8SZB/20230327-122143.jpg) (https://postimages.org/)
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on March 27, 2023, 12:16:54 pm
விடை: 

குறள் 79:

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.


விளக்கம்:
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும். - மு. வரதராசன்

குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்? - பேராசிரியர் சாலமன் பாப்பையா

அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்? - கலைஞர் மு. கருணாநிதி
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on April 12, 2023, 09:08:37 am
சரியான  விடை  sanjana  siss வாழ்த்துக்கள் 💐👏👏

விடை : குறள் 79:

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on April 16, 2023, 10:58:15 am
THANK YOU RIJIA SIS...
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on April 17, 2023, 06:17:43 pm
55வது கேள்வி:

என்ன  குறள்?



Title: Re: திருக்குறள்
Post by: Barbie Doll on April 19, 2023, 04:06:39 pm
விடை:

குறள்: 62

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on April 21, 2023, 09:32:58 am
சரியான  பதில்  SISS DoLL 👏👏💐

⭐விடை:குறள்: 62

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on April 24, 2023, 10:45:11 am
56வது கேள்வி:

வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on April 24, 2023, 11:07:57 am
விடை:

வீரமாமுனிவர் திருக்குறளை லத்தீன் மொழியில் முதன் முதல் மொழிபெயர்த்தார்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on April 25, 2023, 05:25:48 pm
சரியான  பதில்  SanJaNa  SISS👏👏💐💐

⭐விடை:லத்தீன் (LATIN)

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on April 27, 2023, 10:16:34 am
57வது கேள்வி:


இன்சொற்கள்  என்று  வள்ளுவர்  எந்த  சொற்களை குறிக்கிறார்?
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on April 29, 2023, 11:40:56 am
விடை:

இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்,வாய்மையுடையதாக இருக்கும் சொற்கள்
இன்சொற்கள்  என்று  வள்ளுவர் குறிக்கிறார்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on May 05, 2023, 07:01:22 pm
சரியான  பதில்  SanJaNa  siss👏👏💐💐

விடை:

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
—மு. வரதராசன்
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on May 05, 2023, 07:02:59 pm
58வது கேள்வி:

இது  என்ன  குறள்?


Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on May 06, 2023, 12:29:17 pm
விடை: குறள் 595

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on May 07, 2023, 03:14:24 pm
Super Siss சரியான பதில் 👏👏💐💐


விடை: குறள் 595

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on May 07, 2023, 10:11:49 pm
THANK YOU RIJIA SIS...
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on May 08, 2023, 09:27:32 am
59வது கேள்வி:

இது  என்ன  குறள்?


Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on May 09, 2023, 12:47:32 pm
விடை: குறள் 788

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on May 09, 2023, 04:39:43 pm
Super siss சரியான பதில் 👏👏💐💐

விடை:குறள் 788

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on May 10, 2023, 01:36:57 am
THANK YOU RIJIA SIS...
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on May 16, 2023, 12:10:56 pm
60வது கேள்வி:

இது  என்ன  குறள்?


Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on May 17, 2023, 03:34:28 am
விடை: குறள் 71

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on May 22, 2023, 10:53:36 am
விடை: குறள் 71

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.


சரியான  பதில் SanJaNa siss superb 👏 👏💐💐
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on May 22, 2023, 10:55:01 am
61வது கேள்வி:

இது  என்ன  குறள்?


Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on May 23, 2023, 06:28:21 pm
விடை:  குறள் 411

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on May 25, 2023, 07:56:10 pm
விடை:  குறள் 411

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை


சரியான  விடை  sanjana  siss👏👏💐💐
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on May 25, 2023, 08:11:02 pm
62வது கேள்வி:

திருக்குறளில் இடம்பெறாத எண் எது
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on May 26, 2023, 03:47:15 pm
விடை:

திருக்குறளில் இடம்பெறாத எண் ஒன்பது ( 9).
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on May 29, 2023, 01:12:46 pm
விடை:

திருக்குறளில் இடம்பெறாத எண் ஒன்பது ( 9).


சரியான  விடை sanjana siss👏👏💐💐
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on May 29, 2023, 01:19:06 pm
63வது கேள்வி:

என்ன  குறள்?


(https://i.postimg.cc/SRqJkFVf/20230529-154720.jpg) (https://postimg.cc/njRHGWyX) (https://treetop100babynames.com/exotic-baby-names-boys)
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on May 29, 2023, 08:27:52 pm
விடை:

குறள் 396
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on June 01, 2023, 06:52:12 pm
விடை:

குறள் 396
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.



சரியான  விடை  sanjana  siss 👏👏💐💐
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on June 01, 2023, 06:56:43 pm
64வது கேள்வி:

என்ன  குறள்?


(https://i.postimg.cc/Vs2drPLh/3.jpg) (https://postimg.cc/c6Ms2j37)
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on June 01, 2023, 11:59:02 pm
விடை:

குறள் 100:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on June 03, 2023, 07:10:48 pm
விடை:

குறள் 100:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.



சரியான  விடை  sanjana siss👏👏💐💐
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on June 03, 2023, 07:13:20 pm
65வது கேள்வி:

என்ன  குறள்?


(https://i.postimg.cc/d35jqvfq/5.jpg) (https://postimg.cc/wRsm2KHP)
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on June 25, 2023, 11:02:07 am
விடை:

குறள் 202:

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on June 25, 2023, 02:33:15 pm
விடை:

குறள் 202:

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.


சரியான  பதில்  siss👏👏💐💐
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on June 26, 2023, 05:02:13 pm
66வது கேள்வி:

என்ன  குறள்?


(https://i.postimg.cc/P5xjmmqf/inshot-20181225-083616450.jpg) (https://postimg.cc/Vd3pw0M2)
Title: Re: திருக்குறள்
Post by: AslaN on June 27, 2023, 12:14:39 am


செவுக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

மு. வரதராசன் உரை : செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on June 28, 2023, 12:07:01 pm


செவுக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

மு. வரதராசன் உரை : செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.


Hi AslaN  சரியான  பதில்  வாழ்த்துக்கள் 👏👏💐💐
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on June 28, 2023, 12:16:47 pm
66வது கேள்வி:

என்ன  குறள்?


(https://i.postimg.cc/W3VJLNx1/inshot-20181226-092452919.jpg) (https://postimg.cc/TykPn6Rz)
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on June 28, 2023, 10:29:03 pm
விடை:

குறள் 126:
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on June 29, 2023, 09:03:41 am
விடை:

குறள் 126:
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து


Super Siss சரியான  பதில் 👏👏💐💐
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on June 29, 2023, 09:19:52 am
67வது கேள்வி:

குறள் 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை

திருவள்ளுர்  'துப்பாக்கி' என்ற சொல்லிற்கு  என்ன பொருள்  காண்கிறார் ?

A) மழைநீர்   
B) பாதுகாத்தல்
C) உணவு     
D) உண்டாக்குதல்
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on June 29, 2023, 08:07:40 pm
விடை:

C) உணவு

Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on June 29, 2023, 09:47:51 pm
Siss நல்ல முயற்சி 👏👏ஆனால்  பதில்  தவறு siss,,மீண்டும் முயற்சி  செய்ங்க வாழ்த்துக்கள் 👍


Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on July 04, 2023, 10:16:15 am
விடை:

A) மழைநீர்   
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 04, 2023, 05:31:04 pm
Siss Sry பதில் தவறு.. மீண்டும்  முயற்சி  செய்ங்க 👍
Title: Re: திருக்குறள்
Post by: Sanjana on July 08, 2023, 04:05:03 pm
ELLAME THAPPA SOLURENO SIS.....?
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 09, 2023, 03:23:21 pm
ELLAME THAPPA SOLURENO SIS.....?

Siss❣ Paruvale..Nalla Muyarchi👏👏👏👏

விடை: D) உண்டாக்குதல்
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 11, 2023, 09:13:12 am
68வது கேள்வி:

என்ன  குறள்?


(https://i.postimg.cc/MpMhdJ7n/inshot-20190103-093856306.jpg) (https://postimg.cc/pmvGL71v)
Title: Re: திருக்குறள்
Post by: KakaShi on July 11, 2023, 11:16:11 am
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 11, 2023, 11:18:13 am
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.


சரியான  பதில்   வாழ்த்துக்கள்  KakaShi 👏👏👏
Title: Re: திருக்குறள்
Post by: KakaShi on July 11, 2023, 11:25:22 am
(https://i.postimg.cc/Zq5VnzmW/Screenshot-2023-07-11-11-24-38-494-com-brave-browser-edit.jpg) (https://postimages.org/)
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 11, 2023, 11:55:46 am
ANS= D: குன்றிமனி
Title: Re: திருக்குறள்
Post by: KakaShi on July 11, 2023, 11:59:07 am
RiJiA Dude Correct
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 11, 2023, 12:08:18 pm
Hi Friends Ivvalavu Naal Tirukural Thread LE Naa Qus Kedudu Irunten..Ipe Nambe Friends  Kum Anthe Vaaipu Tarelam..Ini Yaru Venumnaalum Tirukural Thread Le Qus Podelam👍

Naanum Ans Panne Try Pandren😊

Let's Starts.....
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 11, 2023, 12:11:46 pm
69வது கேள்வி :என்ன  குறள்

(https://i.postimg.cc/zGM5YL97/inshot-20190102-103300764.jpg) (https://postimg.cc/sMpbp2fG)
Title: Re: திருக்குறள்
Post by: KakaShi on July 12, 2023, 11:07:25 am
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 12, 2023, 11:33:32 am
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை


சரியான  பதில்  KakaShi  வாழ்த்துக்கள் 👏👏
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 12, 2023, 01:46:27 pm
70 வது கேள்வி :என்ன  குறள்?


(https://i.postimg.cc/8CCdGs2K/inshot-20181229-085501403.jpg) (https://postimg.cc/fV6SjWTm)
Title: Re: திருக்குறள்
Post by: KakaShi on July 14, 2023, 09:30:07 am
தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 14, 2023, 09:32:40 am
தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்

சரியான பதில்  KakaShi Superb 👏👏👏
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 14, 2023, 10:19:45 am
71வது கேள்வி :என்ன  குறள்?

(https://i.postimg.cc/qqthzwPY/20230714-124916.jpg) (https://postimg.cc/RJBVY7VQ)
Title: Re: திருக்குறள்
Post by: Vaanmugil on July 14, 2023, 07:37:35 pm
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 15, 2023, 08:47:42 am
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

VAANMUGIL  SISS  சரியான  பதில் வாழ்த்துக்கள் 👏👏💐💐
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 15, 2023, 08:59:18 am
72வது கேள்வி :என்ன  குறள்?

(https://i.postimg.cc/NfpfM1zB/inshot-20181228-090033126.jpg) (https://postimg.cc/LngMQZSb)
Title: Re: திருக்குறள்
Post by: Vaanmugil on July 15, 2023, 07:50:03 pm
72வது கேள்வி :என்ன  குறள்?

(https://i.postimg.cc/NfpfM1zB/inshot-20181228-090033126.jpg) (https://postimg.cc/LngMQZSb)




புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 15, 2023, 08:10:28 pm
சரியான  பதில் Vaanmugil  siss வாழ்த்துக்கள் 👏👏💐💐
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 15, 2023, 11:57:26 pm
73வது கேள்வி :என்ன  குறள்?

(https://i.postimg.cc/MKhBqwWC/inshot-20181227-080445474.jpg) (https://postimg.cc/qzxqx96w)
Title: Re: திருக்குறள்
Post by: Vaanmugil on July 18, 2023, 10:33:14 am
73வது கேள்வி :என்ன  குறள்?

(https://i.postimg.cc/MKhBqwWC/inshot-20181227-080445474.jpg) (https://postimg.cc/qzxqx96w)

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 19, 2023, 09:54:09 am
சரியான  பதில்  siss வாழ்த்துக்கள் 👏👏💐💐
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 19, 2023, 07:25:05 pm
74வது கேள்வி :என்ன  குறள்?


(https://i.postimg.cc/C5qzjLw3/6d96f26d3a6f4d7fb92386a4060569ed.jpg) (https://postimages.org/)
Title: Re: திருக்குறள்
Post by: Vaanmugil on July 20, 2023, 12:38:56 am
74வது கேள்வி :என்ன  குறள்?


(https://i.postimg.cc/C5qzjLw3/6d96f26d3a6f4d7fb92386a4060569ed.jpg) (https://postimages.org/)

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 21, 2023, 12:37:24 pm
74வது கேள்வி :என்ன  குறள்?


(https://i.postimg.cc/C5qzjLw3/6d96f26d3a6f4d7fb92386a4060569ed.jpg) (https://postimages.org/)

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.


சரியான  பதில்  siss வாழ்த்துக்கள் 👏👏💐💐
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 21, 2023, 11:51:52 pm
75வது கேள்வி :என்ன  குறள்?

(https://i.postimg.cc/dtC9xqyq/inshot-20181231-082613292.jpg) (https://postimg.cc/D82sW36D)
Title: Re: திருக்குறள்
Post by: Vaanmugil on July 22, 2023, 03:25:34 pm
75வது கேள்வி :என்ன  குறள்?

(https://i.postimg.cc/dtC9xqyq/inshot-20181231-082613292.jpg) (https://postimg.cc/D82sW36D)


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 28, 2023, 09:57:40 am
75வது கேள்வி :என்ன  குறள்?

(https://i.postimg.cc/dtC9xqyq/inshot-20181231-082613292.jpg) (https://postimg.cc/D82sW36D)


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று


சரியான பதில் siss வாழ்த்துக்கள் 👏👏💐💐
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 28, 2023, 09:59:00 am
76வது கேள்வி :


(https://i.postimg.cc/XYRLtZTR/20230728-121938.jpg) (https://postimages.org/)host an image (https://postimages.org/)
Title: Re: திருக்குறள்
Post by: Vaanmugil on July 29, 2023, 08:32:00 pm
76வது கேள்வி :


(https://i.postimg.cc/XYRLtZTR/20230728-121938.jpg) (https://postimages.org/)host an image (https://postimages.org/)



Sis  AnS. C. குறிப்பறிதல்
Title: Re: திருக்குறள்
Post by: Vaanmugil on July 29, 2023, 08:36:49 pm
77வது கேள்வி :


திருக்குறளில் ஒரே சொல் ஆறு முறை இடம்பெற்ற குறள் எது?
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 30, 2023, 12:01:35 am
76வது கேள்வி :


(https://i.postimg.cc/XYRLtZTR/20230728-121938.jpg) (https://postimages.org/)host an image (https://postimages.org/)



Sis  AnS. C. குறிப்பறிதல்

CORRECT  ANS SISS 👏👏💐💐
Title: Re: திருக்குறள்
Post by: KakaShi on July 30, 2023, 12:10:11 am
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை
[/size][/font]
Title: Re: திருக்குறள்
Post by: Dhiya on July 30, 2023, 01:41:22 pm
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு..

Vaan sis neenga ketta qn ku indha kural crcta.. patru 6 times vandhuruku
Title: Re: திருக்குறள்
Post by: Vaanmugil on July 30, 2023, 01:56:02 pm
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு..

Vaan sis neenga ketta qn ku indha kural crcta.. patru 6 times vandhuruku

Correct ans sis
👏👏🥰
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on July 31, 2023, 06:12:48 pm
78வது கேள்வி

இது  எந்த  குறளின் விளக்கம்?


Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.
Title: Re: திருக்குறள்
Post by: Vaanmugil on August 02, 2023, 10:38:06 am
78வது கேள்வி

இது  எந்த  குறளின் விளக்கம்?


Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on August 14, 2023, 04:39:21 pm
சரியான விடை  SISS 👏👏💐💐வாழ்துக்கள்
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on August 14, 2023, 04:55:07 pm
79வது கேள்வி:

(https://i.postimg.cc/YS2VtsLv/4.jpg) (https://postimg.cc/w1PFVFVz)
Title: Re: திருக்குறள்
Post by: Vaanmugil on August 14, 2023, 08:59:52 pm
79வது கேள்வி:

(https://i.postimg.cc/YS2VtsLv/4.jpg) (https://postimg.cc/w1PFVFVz)


முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.....
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on August 17, 2023, 12:04:55 pm
சரியான  பதில்  siss வாழ்த்துக்கள் 👏👏💐💐
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on August 17, 2023, 12:43:32 pm
80வது கேள்வி:

(https://i.postimg.cc/tTTySnG4/20230817-151116.jpg) (https://postimages.org/)
Title: Re: திருக்குறள்
Post by: Vaanmugil on August 28, 2023, 03:29:33 pm
80வது கேள்வி:

(https://i.postimg.cc/tTTySnG4/20230817-151116.jpg) (https://postimages.org/)

பதில் : c ) 37
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on August 30, 2023, 05:58:55 pm
சரியான  பதில் Vaanmugil siss வாழ்த்துக்கள்👏👏💐💐
 


விடை: C 37
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on August 31, 2023, 06:09:35 pm
81வது கேள்வி:

திருக்குறளில் "கோடி " என்ற சொல் எத்தனை  இடங்களில்  இடம்பெற்றுள்ளது?
Title: Re: திருக்குறள்
Post by: Vaanmugil on September 05, 2023, 08:52:17 pm
81வது கேள்வி:

திருக்குறளில் "கோடி " என்ற சொல் எத்தனை  இடங்களில்  இடம்பெற்றுள்ளது?



பதில் : ஏழு
Title: Re: திருக்குறள்
Post by: Vaanmugil on September 05, 2023, 08:55:58 pm
82வது கேள்வி:

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?
பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?
காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 06, 2023, 09:41:57 am
81வது கேள்வி:

திருக்குறளில் "கோடி " என்ற சொல் எத்தனை  இடங்களில்  இடம்பெற்றுள்ளது?



பதில் : ஏழு


சரியான  பதில்  Vaanmugil SISS  வாழ்த்துக்கள் 👏👏💐💐
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 06, 2023, 09:47:43 am
82வது கேள்வி:

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?
பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?
காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?


பதில்:  1) அறத்துப்பாலில் 380
               2) பொருட்பாலில் 700
               3) காமத்துப்பாலில்    250
Title: Re: திருக்குறள்
Post by: Vaanmugil on September 06, 2023, 04:54:05 pm
82வது கேள்வி:

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?
பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?
காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?


பதில்:  1) அறத்துப்பாலில் 380
               2) பொருட்பாலில் 700
               3) காமத்துப்பாலில்    250



சரியான பதில் Rijia sis 👏👏👏💐
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 07, 2023, 01:46:44 pm
83வது கேள்வி:

திருக்குறளில்  அதிகம்  பயன்படுத்தப்பட்ட  ஒரே  எழுத்து  எது  மற்றும்  எத்தனை முறை?
Title: Re: திருக்குறள்
Post by: NATURE LOVER on September 12, 2023, 02:48:18 am
83வது கேள்வி:

திருக்குறளில்  அதிகம்  பயன்படுத்தப்பட்ட  ஒரே  எழுத்து  எது  மற்றும்  எத்தனை முறை?

னி
Title: Re: திருக்குறள்
Post by: NATURE LOVER on September 12, 2023, 02:51:34 am
83வது கேள்வி:

திருக்குறளில்  அதிகம்  பயன்படுத்தப்பட்ட  ஒரே  எழுத்து  எது  மற்றும்  எத்தனை முறை?

னி
1705
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on September 12, 2023, 03:11:28 am
சரியான  பதில்  NATURE LOVER  வாழ்த்துக்கள் 👏👏💐💐

விடை: னி  1705
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 02, 2023, 03:39:15 pm
84வது கேள்வி:


திருக்குறள் பெருமையை போற்றி புகழும் நூல் எது?
Title: Re: திருக்குறள்
Post by: KakaShi on October 14, 2023, 02:13:35 am
84வது கேள்வி:


திருக்குறள் பெருமையை போற்றி புகழும் நூல் எது?


Quote
Thiruvalluvamaalai
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 20, 2023, 11:09:03 pm
84வது கேள்வி:


திருக்குறள் பெருமையை போற்றி புகழும் நூல் எது?


Quote
Thiruvalluvamaalai

சரியான  பதில்  KakaShi  வாழ்துக்கள் 👏👏👏
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on October 20, 2023, 11:42:06 pm
https://youtube.com/v/uo_YlyDWtXA?si=tx_ojloWfUxHn7Nm

85வது கேள்வி:

இந்த பாடலில்  கவிஞர் வைரமுத்து  ஒரு திருக்குறளை குறிப்பிட்டுள்ளார் அதை கண்டு பிடிக்கவும்
Title: Re: திருக்குறள்
Post by: Appu kuTTy on October 22, 2023, 11:29:04 am
ANS--கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள...  8)
Title: Re: திருக்குறள்
Post by: karthick sri on November 26, 2023, 12:37:12 pm
குறள் -2
 
கல்வி கற்றதின் சிறந்த பயன் யாதென்றால்

வாலறிவன் அதாவது இறைவனின்

திருவடிகளை வனகுவது ஆகும்.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 14, 2023, 12:40:31 am
சரியான  பதில்  Appu KuTTy 👏👏👏
நல்ல  முயற்சி  karthick sri 👏👏👏
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on December 14, 2023, 12:42:51 am
86வது கேள்வி:



(https://i.postimg.cc/wBbGCq5N/20231214-030740.jpg) (https://postimages.org/)
Title: Re: திருக்குறள்
Post by: Mini Mouse on December 24, 2023, 01:48:15 am
விடை:  B Santali
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 04, 2024, 10:41:48 am
விடை:  B Santali

Siss நல்ல  முயற்சி 👏👏👏 விடை  தவறு  மறுபடியும்  முயற்சி  செய்யுங்கள் மற்றவர்களும் முயற்சி செய்யலாம்
Title: Re: திருக்குறள்
Post by: Barbie Doll on January 09, 2024, 09:32:57 am
விடை: வாக்ரி போலி
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 14, 2024, 09:35:07 am
விடை: வாக்ரி போலி

சரியான விடை BarBie  DoLL siss வாழ்த்துக்கள் 👏👏👏
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 14, 2024, 10:25:39 am
87வது கேள்வி:


என்ன  குறள்?

If each his own, as neighbours' faults would scan,
Could any evil hap to living man?
Title: Re: திருக்குறள்
Post by: Mini Mouse on January 16, 2024, 03:09:46 am
குறள் 190:

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 17, 2024, 04:55:37 pm
குறள் 190:

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.


சரியான  பதில்  siss வாழ்த்துக்கள் 👏👏👏
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 17, 2024, 05:17:48 pm
88வது கேள்வி:

என்ன  குறள்?

(https://i.postimg.cc/7LVt2RXC/20240117-194545.jpg) (https://postimg.cc/8F7b8t2D)
Title: Re: திருக்குறள்
Post by: Mini Mouse on January 25, 2024, 11:06:01 pm
குறள் 788:

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 29, 2024, 09:57:31 am
குறள் 788:

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.


சரியான  பதில்  siss  வாழ்த்துக்கள் 👏👏👏
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on January 29, 2024, 10:04:46 am
89வது கேள்வி:

என்ன  குறள்?


(https://i.postimg.cc/nzZZJgg1/20240129-123200.jpg) (https://postimg.cc/WD9xmW2D)
Title: Re: திருக்குறள்
Post by: karthick sri on February 03, 2024, 01:01:17 am
பதில் -
குறள்-843
புல்லரிவான்மை(அறிவில் குறை)

அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செருவார்கும் செய்தல் அரிது

விளக்கம்:  அறிவில்லாதவர் தாங்களே தங்களை வருத்திக் கொள்வர், அது போன்ற துன்பத்தை பகைவராலும் செய்ய இயலாது.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on February 04, 2024, 01:03:00 am
பதில் -
குறள்-843
புல்லரிவான்மை(அறிவில் குறை)

அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செருவார்கும் செய்தல் அரிது

விளக்கம்:  அறிவில்லாதவர் தாங்களே தங்களை வருத்திக் கொள்வர், அது போன்ற துன்பத்தை பகைவராலும் செய்ய இயலாது.

சரியான பதில் karthick sri வாழ்த்துக்கள் 👏👏👏
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on February 04, 2024, 01:04:19 am
90வது கேள்வி:

என்ன  குறள்?


(https://i.postimg.cc/JnPkpPZj/20240204-033027.jpg) (https://postimg.cc/ph5rTQ0d)
Title: Re: திருக்குறள்
Post by: Mini Mouse on February 12, 2024, 02:14:26 pm
பதில்:

குறள் 102:
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on February 20, 2024, 03:02:05 pm
பதில்:

குறள் 102:
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.



சரியான பதில் Siss வாழ்த்துக்கள்👏👏👏
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on February 20, 2024, 03:03:52 pm
91வது கேள்வி:

என்ன  குறள்?


(https://i.postimg.cc/X7kjQ9fY/20240220-172955.jpg) (https://postimg.cc/JGtChDYf)
Title: Re: திருக்குறள்
Post by: Mini Mouse on February 27, 2024, 04:28:56 pm
பதில்:

குறள் 624:
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on March 06, 2024, 09:23:28 am
பதில்:

குறள் 624:
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

சரியான பதில்  siss வாழ்த்துக்கள் 👏👏👏
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on March 06, 2024, 09:49:25 am
92வது கேள்வி:

என்ன  குறள்?


(https://i.postimg.cc/sgs6s5hC/20240306-115854.jpg) (https://postimg.cc/56KqmYgs)
Title: Re: திருக்குறள்
Post by: Mini Mouse on March 10, 2024, 02:23:45 am
பதில்:

குறள் 1032:
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on March 12, 2024, 12:54:10 am
பதில்:

குறள் 1032:
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

சரியான  பதில்  siss  வாழ்த்துக்கள் 👏👏👏
Title: Re: திருக்குறள்
Post by: RiJiA on March 12, 2024, 02:03:17 pm
93வது கேள்வி:

என்ன  குறள்?


(https://i.postimg.cc/8kqStjqY/20240312-163031.jpg) (https://postimages.org/)