Advanced Search

Author Topic: திருக்குறள்  (Read 58910 times)

October 13, 2022, 10:33:45 pm
Reply #90

RiJiA

Re: திருக்குறள்
« Reply #90 on: October 13, 2022, 10:33:45 pm »


22வது கேள்வி:

புகைப்படம் பாருங்க,என்ன இது? யார்? சிறப்புகள்  என்ன  என்ன? Clue நம்ப gtc ஒருவருடைய சுயவிவரத்தில் இருக்கிறது 🙂 அவங்களுடைய சுயவிவரத்தில் ஒரு  வித்தியாசமான  ஒன்றை  நீங்கள்  பார்த்தால் அதுதான் அந்த  clue🙂

October 14, 2022, 12:57:00 am
Reply #91

Arjun

Re: திருக்குறள்
« Reply #91 on: October 14, 2022, 12:57:00 am »
இது எல்லீஸ்பிரபுவின் கல்லறையில் உள்ள கல்வெட்டு.

200 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து தங்கக்காசு வெளியிட்ட ஆங்கிலேய ஆட்சியர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ்.

சென்னையில் உள்ள எல்லீஸ் சாலை இவர் பெயரால் அமைந்துள்ளது. மதுரையில் எல்லீஸ் நகர் இவர் பெயரால் உருவாக்கப்பட்டதுதான்.

எல்லீஸ் தமிழையும், வடமொழியையும் நன்கு கற்று மனுதர்ம சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துடன் திருக்ககுறளின் அறத்துப்பாலின் முதல் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் 1812-ல் மொழிபெயர்த்து உரை எழுதி அச்சிட்டிருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்பே ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும்.

இவருடைய கல்லறை ராமநாதபுரம் வடக்குத்தெருவில் உள்ள கிறிஸ்துநாதர் தேவாலய வளாகத்தில் உள்ளது. அவருடைய கல்லறைக் கல்வெட்டுக்கள் தமிழில் அழகிய கவிதை வடிவிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. இதில் அவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த செய்தி சொல்லப்படுகிறது.

I dont know who have the clue in his / her profile. Please answer in your reply.

But I have done some readings in google and found this answer. Hope the answer is correct. Thnx for such nice question to explore more in detail.

October 14, 2022, 09:54:52 am
Reply #92

RiJiA

Re: திருக்குறள்
« Reply #92 on: October 14, 2022, 09:54:52 am »
Arjun எப்படி  நான்  யோசித்தாலும் கண்டுபிடிக்கிறிங்க...ஆனால்  clue தெரிஞ்சிக்காம பதில் கண்டுபிடித்தது பாராட்டுக்குரியது... super smart Arjun  வாழ்த்துக்கள் 👏👏
முயற்சி செய்த  அனைவருக்கும் நன்றி..👏👏இந்த கேள்விக்கான  clue coffee BoY profile  cover pic le இருக்கு...தங்க நாணயம் தான் அதன் clue🙂

குறிப்பு:  இந்த  task-க்கு உதவிய coffee BoY-க்கு  அவர்க்கு நன்றி மற்றும் sarayu  siss-க்கும் நன்றி.


⭐விடை: சுருக்கமான பதில்  முழு  விவரம்  Arjun  அளித்த  பதிலில்  உள்ளது  படித்து  தெரிந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்..

1)பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் கல்லறை கல்வெட்டு அந்த புகைப்படம்
2)திருக்குறளை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
3)திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து தங்கக்காசு வெளியிட்ட ஆங்கிலேய ஆட்சியர்



October 14, 2022, 10:33:49 am
Reply #93

Arjun

Re: திருக்குறள்
« Reply #93 on: October 14, 2022, 10:33:49 am »
Thnx for detailed reply.

This time answered with google search only. I opened the image and able to read few texts in that. Based on that I started searching and found this answer.

1812 mattum thaan ithukku munnadi padichirukkirukken. coz of your question read new information. Thnx for that. 🙂

Coffee BoY Gold coin kuduppara answer pannathukku  ;D

October 15, 2022, 10:01:43 am
Reply #94

RiJiA

Re: திருக்குறள்
« Reply #94 on: October 15, 2022, 10:01:43 am »
HI ARJUN..நன்றி உங்க  பதிவிக்கு..
Hmm...தங்க  நாணயம்   CB  வந்தா கேளுங்க தந்தாலும்  தரலாம்🙂

October 15, 2022, 10:20:46 am
Reply #95

Sanjana

Re: திருக்குறள்
« Reply #95 on: October 15, 2022, 10:20:46 am »
ஆயுத பூஜைக்கு சுண்டல் தராத காபி பாய் (coffee boy) தங்க நாணயம் தருவாரா???

வேடிக்கையா இல்லை....நடக்கிறத சொல்லுங்கப்பா..... 8) ;D ;D ;D ;D

October 15, 2022, 11:33:27 am
Reply #96

RiJiA

Re: திருக்குறள்
« Reply #96 on: October 15, 2022, 11:33:27 am »
SanJaNa  siss🙂🙂

23வது  கேள்வி:

திருக்குறளை தந்தை தந்த தாய்ப்பால் முப்பால் – என்று கூறியவர் யார்? .

October 15, 2022, 01:24:18 pm
Reply #97

Sanjana

Re: திருக்குறள்
« Reply #97 on: October 15, 2022, 01:24:18 pm »
வணக்கம்  Rijia,

திருக்குறளை தந்தை தந்த தாய்ப்பால் முப்பால் என்று கூறியவர் அறிவுமதி  ஆவர்.

October 16, 2022, 10:18:28 am
Reply #98

RiJiA

Re: திருக்குறள்
« Reply #98 on: October 16, 2022, 10:18:28 am »
சரியான பதில்  SanJaNa siss 👏👏💐💐

⭐விடை:அறிவுமதி

October 17, 2022, 11:13:22 am
Reply #99

RiJiA

Re: திருக்குறள்
« Reply #99 on: October 17, 2022, 11:13:22 am »
24வது கேள்வி:


1)ஒரு  அரசன் பிறப்பினால் மனிதனாக இரு‌ந்தாலு‌ம், செயலினால் கடவுள் என்று
மதிக்கப்படுவான் கூறும்  திருக்குறள் எது?
குறள் மற்றும் பரிமேலழகர் அவர்களுடைய இந்த குறளக்கான விளக்கம் குறிப்பிடவும்...


2)இந்த  குறளில் வரும்  எந்த  சொல் மன்னவன் இறைவன் போன்றவன் என்று பொருள் பண்ணாமல்,
மன்னவனே இறைவன் என்று பொருள்,என்று குறிப்பிடப்பட்டது
?
« Last Edit: October 17, 2022, 02:40:56 pm by RiJiA »

October 17, 2022, 03:50:40 pm
Reply #100

Arjun

Re: திருக்குறள்
« Reply #100 on: October 17, 2022, 03:50:40 pm »

1) பதில் :
    அதிகாரம் : 39 - இறைமாட்சி
    திருக்குறள் எண் : 388
    திருக்குறள் :
    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
    இறையென்று வைக்கப் படும்


    பரிமேலழகர் உரை :
    முறை செய்து காப்பாற்றும் மன்னவன் - தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன்,
 
    மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - பிறப்பால் மகனேயாயினும், செயலால் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும்.

2) பதில் : மன்னவன் மக்கட்கு இறை
                 இந்த சொல் தான் மன்னவனே மக்கட்கு இறைவன் என்று பொருள் படும்படி கூறப்பட்டது.


« Last Edit: October 17, 2022, 03:54:05 pm by Arjun »

October 17, 2022, 05:14:28 pm
Reply #101

RiJiA

Re: திருக்குறள்
« Reply #101 on: October 17, 2022, 05:14:28 pm »
சரியான  பதில் Arjun வாழ்த்துக்கள் 👏 👏


⭐விடை :

1)குறள் : முறைசெய்து காப்பாற்றும்  மன்னவன் மக்கட்கு   இறையென்று வைக்கப் படும்

2)பரிமேலழகர் விளக்கம்:
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் - தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன்,

3)சொல்: மக்கட்கு


முழு  விவரங்களையும் வேண்டுமெனில் Arjun  தந்த பதிலில் படித்து  தெரிந்து கொள்ளவும்🙂

October 18, 2022, 02:21:31 pm
Reply #102

RiJiA

Re: திருக்குறள்
« Reply #102 on: October 18, 2022, 02:21:31 pm »


25வது கேள்வி: என்ன குறள்?



October 18, 2022, 02:57:50 pm
Reply #103

Arjun

Re: திருக்குறள்
« Reply #103 on: October 18, 2022, 02:57:50 pm »
அதிகாரம்: 11 செய்ந்நன்றி அறிதல்
திருக்குறள் : 104

திருக்குறள்

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வார் பயன்தெரி வார்.

விளக்கம்: உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவே ஒருவன் நன்மை செய்தாலும், அதனைப் பனையளவாக உளங் கொண்டு போற்றுவார்கள்.

October 18, 2022, 09:21:46 pm
Reply #104

RiJiA

Re: திருக்குறள்
« Reply #104 on: October 18, 2022, 09:21:46 pm »
சரியான பதில்  Arjun வாழ்த்துக்கள் 👏 👏

⭐விடை:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வார் பயன்தெரி வார்.