Advanced Search

Author Topic: திருக்குறள்  (Read 190056 times)

November 16, 2022, 10:30:18 am
Reply #135

RiJiA

Re: திருக்குறள்
« Reply #135 on: November 16, 2022, 10:30:18 am »
SUPERB SanJaNa SISS👏👏சரியான  பதில் வாழ்த்துக்கள்💐💐



⭐விடை:

பால் : அறத்துப்பால்
அதிகார எண்: 3
அதிகாரம் : நீத்தார் பெருமை

குறள் 26:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

November 16, 2022, 04:12:46 pm
Reply #136

RiJiA

Re: திருக்குறள்
« Reply #136 on: November 16, 2022, 04:12:46 pm »
இந்த ஆயுதம் வசப்படாத பொருளை வளைத்து வசப்படுத்தும் கருவியாக கொள்ளப்படுகிறது. இந்த ஆயுத்ததின் சக்தியாக வசியம் கருதப்படுகிறது. உயிர்களின் ஆனவத்தை அடக்கி உயிர்களை வசப்படுத்துதல் இந்த ஆயுதத்தின் தன்மையாகும்.


35வது கேள்வி:

அதிகாரம் 3-ல் ஒரு  குறளில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில்  இந்த  ஆயுதத்தின் பெயர் குறிப்பிட்டுள்ளார் அந்த ஆயுதத்தின் பெயர்  குறிப்பிடவும்.

November 17, 2022, 09:39:59 am
Reply #137

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #137 on: November 17, 2022, 09:39:59 am »
விடை:-

குறள் எண் -  24  இல் குறிப்பிடப்பட்ட அறிவு என்னும் ஆயுதமேRijia கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் .


🔥குறள்-24🔥


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.



« Last Edit: November 17, 2022, 09:44:45 am by AslaN »

November 17, 2022, 01:42:11 pm
Reply #138

RiJiA

Re: திருக்குறள்
« Reply #138 on: November 17, 2022, 01:42:11 pm »
Hi Aslan  எப்படி இருக்கீங்க..ந‌ல்ல  முயற்சி வாழ்த்துக்கள் 👏

உங்கள்  பதில் தவறு  இல்லை..ஆனால்  பதில் அது இல்லை🙂
எனக்கு  தெரியும் இந்த  பதில்தான்   வரும்னு 🙂
அப்படி  சுலபமா  நான் கேள்வி கேட்டா
நீங்க  எல்லாரும் கண்டுபிடிச்சிருவிங்க🙂

வேற ஒரு பதில் இருக்கு மீண்டும் முயற்சி  செய்ங்க👍
« Last Edit: November 17, 2022, 01:44:07 pm by RiJiA »

November 17, 2022, 02:13:20 pm
Reply #139

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #139 on: November 17, 2022, 02:13:20 pm »
 நான் நலமாக இருக்கிறேன் RIJIA நீங்கள் நலமா?


குறள்-25  இல் உள்ள ஆசை என்பதே பதில் ஆக இருக்கும் என்பது எனது கருத்து  ஆசைக்கே வசியம் செய்யும் தன்மை இருப்பதாக நினைக்கிறன்.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.


மன்னிக்கவும் தவறாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் முயற்சி செய்து பார்க்கிறேன்.
« Last Edit: November 17, 2022, 02:17:07 pm by AslaN »

November 17, 2022, 02:32:15 pm
Reply #140

RiJiA

Re: திருக்குறள்
« Reply #140 on: November 17, 2022, 02:32:15 pm »
நான்  நல்ல  இருக்கேன் Aslan..நன்றி 🙂
மீண்டும்  நல்ல  முயற்சி 👏

ஒரு  குறிப்பு  தருகிறேன்:

நீங்கள்  முதலில்  பதிவிட்ட குறள் எண் 24-ல் உள்ள ஒரு  விளக்கத்தில்  அந்த  வார்த்தை  உள்ளது 🙂


இன்னும்  ஒரு  குறிப்பு வேணும்னா சொல்லுங்க  தருகிறேன்
« Last Edit: November 17, 2022, 02:43:37 pm by RiJiA »

November 17, 2022, 04:21:40 pm
Reply #141

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #141 on: November 17, 2022, 04:21:40 pm »



🔥குறள்-24🔥

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️கலைஞர் விளக்கம்:⚜️

🌟உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

துறவறம் என்பது விடையாக இருக்கும் என நினைக்கின்றேன் .

தங்களது விடை பற்றிய குறிப்புக்கு மிக்க நன்றி 🙏

November 17, 2022, 04:40:44 pm
Reply #142

RiJiA

Re: திருக்குறள்
« Reply #142 on: November 17, 2022, 04:40:44 pm »
 Aslan இந்த  குறிப்பு  வைத்து  அந்த   வார்த்தையை  கண்டு பிடிங்க 🙂

இந்துத் தொன்மவியலில் பல கடவுளர் இந்த ஆயுதம் வைத்துள்ளார்கள்.விநாயகர், பைரவர், சதாசிவ மூர்த்தி, துர்க்கை ஆகியோர் இந்த ஆயுதத்தினை வைத்துள்ளார்கள். துரக்கோலின் மேற்பகுதியில் கொக்கியோடு இக்கருவி அமைந்திருக்கும். இந்த ஆயுதத்தினை துறட்டி என்பார்கள். இந்த ஆயுதம் வசப்படாத பொருளை வளைத்து வசப்படுத்தும் கருவியாக கொள்ளப்படுகிறது. இந்த ஆயுத்ததின் சக்தியாக வசியம் கருதப்படுகிறது. உயிர்களின் ஆனவத்தை அடக்கி உயிர்களை வசப்படுத்துதல் இந்த ஆயுதத்தின் தன்மையாகும்.

November 17, 2022, 04:56:18 pm
Reply #143

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #143 on: November 17, 2022, 04:56:18 pm »
⚜️கலைஞர் விளக்கம்:⚜️

🌟உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

இதில் அங்குசம் என்று இருக்கும் ஆயுதம் தான் நீங்கள் சொன்ன குறிப்புக்கு அர்த்தம்.

விடை : அங்குசம்
கேள்வியை ஆராயாமல் விடை அளித்ததன் விளைவு தான் இத்துணை முயற்சி.
பயிற்சி இல்லாமல் விடை அளித்ததே இதற்கு காரணம்
மிக்க நன்றி தங்களது குறிப்பிற்கு RIJIA 🙏


இந்த பகுதியில் விடை அளிக்க இத்துணை முயற்சி அளித்தது நானாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன் 😄😄😄
« Last Edit: November 17, 2022, 04:58:43 pm by AslaN »

November 17, 2022, 05:20:15 pm
Reply #144

RiJiA

Re: திருக்குறள்
« Reply #144 on: November 17, 2022, 05:20:15 pm »
Hmmm🙂சரியான பதில் AslaN👏👏💐💐
இத்தனை முயற்சி செய்த உங்களை  பாராட்டியே ஆக  வேண்டும்..வாழ்த்துக்கள்  AslaN👏💐மற்றும்  நன்றி என்  கேள்விக்கு சலிக்காமல் இத்தனை முறை பதில் அளித்ததற்கு🙂


⭐விடை: அங்குசம்


⭐கலைஞர் விளக்கம்:

     உறுதியென்ற அங்குசம் கொண்டு,
     ஐம்பொறிகளையும் அடக்கிக்    காப்பவன்,
     துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.


⭐குறள்-24:

     உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
     வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
« Last Edit: November 17, 2022, 05:21:53 pm by RiJiA »

November 17, 2022, 05:26:48 pm
Reply #145

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #145 on: November 17, 2022, 05:26:48 pm »
உங்களுக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் RIJIA 👍 இத்துணை முறை சலிக்காமல் எனக்கு குறிப்பு தந்ததிற்கு 👏

November 19, 2022, 12:53:38 am
Reply #146

RiJiA

Re: திருக்குறள்
« Reply #146 on: November 19, 2022, 12:53:38 am »
36வது கேள்வி:

학식이 있는 사람의 위대함은 세계의 경전에 표시되어 있다. (二十八)

இந்த விளக்கம் அதிகாரம் 3-ல் எந்த  குறளக்கானது?மற்றும் இது  என்ன மொழி என்று  குறிப்பிடவும் 🙂

November 19, 2022, 04:47:36 am
Reply #147

Sanjana

Re: திருக்குறள்
« Reply #147 on: November 19, 2022, 04:47:36 am »
விடை: குறள்-28

❝நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்❞



மு.வ விளக்கம்:

🌟பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

🌟நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

கலைஞர் விளக்கம்:

🌟சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.



இது கொரியன் (KOREAN) மொழி !!

November 19, 2022, 12:57:42 pm
Reply #148

RiJiA

Re: திருக்குறள்
« Reply #148 on: November 19, 2022, 12:57:42 pm »
சரியான  பதில் SanJaNa siss 👏 👏

⭐விடை: குறள்-28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்


⭐மொழி:கொரியன் (KOREAN)

November 20, 2022, 07:47:43 pm
Reply #149

RiJiA

Re: திருக்குறள்
« Reply #149 on: November 20, 2022, 07:47:43 pm »
37வது கேள்வி:

இவர்  காவல் உதவி ஆணையர்,இவர் தனது பெற்றோர் மற்றும் அவரது சகோதரருடன் வசிக்கிறார். மருத்துவத் துறை தொடர்பான தொடர் கொலைகளை விசாரிக்கிறார்.மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு குற்ற மோசடியை அவிழ்த்து விடுகிறார், அவருக்கு ஒதுக்கப்பட்ட ஒரு பெண்ணைக் காணவில்லை என்பது ஒரு தீங்கற்ற வழக்கு, இருப்பினும், வழக்கு இருட்டடிப்பு மற்றும் சிக்கலானதாக மாறுவதால், அவரது பணி ஒவ்வொரு நாளும் கடினமாகிறது.

நான்  கேட்கும்  அந்த திருக்குறள்  இந்த  திரைப்படத்தின் பெயர்  கண்டுபிடித்து விட்டல்  குறள் தெரிந்து விடும்.இந்த திரைப்படத்தின்  பெயர்  பக்கத்தில்  இருக்கு  அந்த திருக்குறள் குறிப்பு.

நான்  கேட்கும்  அந்த  திருக்குறள் எது?

மேலும்  குறிப்பு வேண்டும்  என்றால் கேட்கலாம்🙂
« Last Edit: November 20, 2022, 07:53:00 pm by RiJiA »