கவிதைகள் சொல்லவா
நித்தம் உன்னை நாட்குறிப்பில்
எழுதாத நாட்கள் இல்லை,
தொலைவில் நிலவினை கண்டபோதும்,
சில்லென் தென்றல் தீண்டும்போதும்,
மனம் கவரும் மலர் வாசம் நெஞ்சை வருடும்போதும்,
மழையில் நான் நனைகின்றபோதும்,
பனித்துளி இலைநுனியில் படரும்போது,
கவிதைகள் கொண்டு அலங்கரித்தேன்
உன்னை...,
இருளும் ஒளியும்,
நிசப்தமும் இசையும்,
சிரிப்பும் கண்ணீரும்,
சோகமும் மகிழ்ச்சியும் ,
உன்னைபற்றி சொல்லும்
எனது நாட்குறிப்பில்...,
சூரியனின் ஒளிகீற்று
தாமரையை தீண்டுவதுபோல
தினமும் என்னை தீண்டுகிறாய்
பெண்ணே உன் நினைவுகளால்...,
இரவில் நான் தூங்கும் முன்னும்
அதிகாலை கண் விழிக்கும் போதும்,
உன்பற்றியே எழுதும் என் பேனா...!
பல தடவைகள் மௌனம் கலைந்து
உன்னிடம் சொல்லா காதல்
எனது நாட்குறிப்பில்
கொட்டிகிடக்கிறது....