Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-056  (Read 45 times)

July 07, 2025, 01:44:41 pm
Read 45 times

RiJiA

கவிதையும் கானமும்-056
« on: July 07, 2025, 01:44:41 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-056


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.




மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: July 07, 2025, 10:55:35 pm by RiJiA »

Today at 07:39:25 pm
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-056
« Reply #1 on: Today at 07:39:25 pm »

புயலையும் தென்றலாய் வசப்படுத்தும் எமது GTC கவிஞர்களுக்கு எனது சிறு கிறுக்கல்கள் சமர்ப்பனம்....


சிற்பியும் நாங்களே சிலையும் நாங்களே!


மனிதனுக்குள் ஒருவனாக
பூமியிலே பிறக்கிறோம் !
தாய்மொழி குழைத்த பால் குடித்து
தாமாய் இங்கே வளர்கிறோம்!

கற்பனையின் இறக்கை கட்டி
எங்கெங்கோ பறக்கிறோம்!
கண் காணா தேசமெல்லாம்
கால் பதித்து பார்க்கிறோம்!

வானவில்லை கையிலேந்தி
வானத்திலே திரிகிறோம்!
நிலாப்பெண்ணை நினைவிலேந்தி
உலாவொன்று வருகிறோம்!

கடல் அலைகள் கால்கள் தொட
அதையும் கவிதை என்கிறோம்!
காதலின் கரங்கள் பிடித்து
அழகுப் பூக்கள் என்கிறோம்!

சமூகத்தின் அவலம் கண்டு
எழுத்தில் நியாயம் கேட்கிறோம்!
கண்ணீரற்ற அழுகையினால்
காகிதங்கள் நிறைக்கிறோம்!

தாய்மையின் உணர்வுகளை
தனக்குள்ளும் சுமக்கிறோம்!
கவிதையாம் பிள்ளைகளை
தரணிக்காக வளர்க்கிறோம்!

ஊருக்காக கவிதையெழுதி
உள்ளம் பூரிக்கிறோம்!
ஊர் உறங்கும் வேளையிலும்
உணர்வுகொண்டு விழிக்கிறோம்!

மனதில் வந்த ஊனத்திற்கு
மருந்தொன்று அளிக்கிறோம்!
மலரினது மௌனத்திற்கும்
காதல்கொண்டு துடிக்கிறோம்!

பெருமை கண்டு பெருமிதங்கள்
கொள்ளாதவர்களாய் இருக்கிறோம்!
சிறுமை கண்டு பொறுமைகொண்டு
சிரித்துக்கொண்டே மறக்கிறோம்!

வாழ்த்துக்களின் ஏணி கொண்டு
உயரம் ஏறி மகிழ்கிறோம்!
வானத்திலும் பாதை அமைத்து
ஒய்யாரமாய் நடக்கிறோம்!

இருபதின் இளமையோடு
அறுபதிலும் வாழ்வோம்!
இன்பதுன்பம் இரண்டினையும்
ஒன்றை போலப் பார்க்கிறோம்!

உயிரைவிட்ட உடலாய்
இந்தப் பூமியிலே புதைவோம் !
புதைந்த பின்னும் இப்புவியிலே
இன்பக் கவிதைகளாய் வாழ்வோம் !

தமிழ்மொழி எனும் பளிங்கினை
சிந்தனை எனும் சிற்றுளிகொண்டு
கற்பனை துணையுடன் உருகொடுத்து
சமுதாய நோக்குடனே என்றும் நாம்
கவிதைகள் பலபல வடிவமைக்கும்
சிற்பியும் நாமே சிலையும் நாமே !

சீரான எண்ணமுடன் சீர்மாறாமல்
சீர்கெட்ட சமூகமும் திருந்திடவே
சீரான பாதையில் சென்றிடவே
சிதைந்திட்ட நெஞ்சங்கள் சீர்பெற
சிந்தையின் துளிகளால் வடித்திடும்
சிற்பியும் நாமே சிலையும் நாமே !

பாரேப்பார்க்கும்படி பாடல்களை படைப்பவன் கவிஞன் ..!
பரதேசியாக வாழ்ந்தாலும் பார்பாராட்டும்படி
வாழ்பவனே நல்ல மனிதன்..!

என்றும் நட்புடன் நான் உங்கள்