Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-036  (Read 13124 times)

January 08, 2024, 10:34:37 pm
Read 13124 times

Administrator

கவிதையும் கானமும்-036
« on: January 08, 2024, 10:34:37 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-036


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
[/color
« Last Edit: January 22, 2024, 09:37:29 pm by Administrator »

January 09, 2024, 10:42:19 am
Reply #1

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-036
« Reply #1 on: January 09, 2024, 10:42:19 am »
ஏறு தழுவல்

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்


ஜனவரி மாதம் என்றால் நினைவுக்கு வருவது ஒன்று பொங்கல்
மற்றொன்று ஜல்லிக்கட்டு

துள்ளிப்பாய்த்து வரும் காளைகளை அடக்கும் வீரனுக்கு
வாரி வாரி வழங்குவார்கள் பரிசு

தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டு

அதில் துள்ளி விளையாடும் காளைகள் கம்பிரம் உடையவை

காளைகளைத் தன்  சொந்த பிள்ளைகளைப் போல வளர்ப்பவர்களுக்கு உண்டு

ஜல்லிக்கட்டில் தோற்று போனால் அதை மண்ணில் புதைப்பவர்களும் உண்டு

இப்படி புதைத்துத்தான் தொண்ணூற்றி இரண்டு வகையாக இருந்த காளைகள்

இப்பொழுது கைவிட்டு என்னும் வகைதான் என்ன ஒரு பரிதாப நிலை !!!

தமிழரின் பண்பாடு எப்படி மண்ணோடு போனதே காரணம் இயலாமைய்யா ?

இல்லை தொழில்நுட்ப வளர்ச்சியா ? இல்லை தனிமனிதனின் அலட்சியமா ?

அல்லது விவசாயத்தின் தாழ்ச்சியா ?

பழையகாலத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவந்த நாம்

இப்போதைய நிலைமையை எண்ணி பார்ப்போம் ?

மனிதர்களுக்கே இந்த நிலை என்றல் காளைக்குக் வெறும் கேள்விக்குறிதான் ?

ஜல்லிக்கட்டு தடை என்றதும் போராடினார்கள் மக்கள்

தமிழனின் மரபு அழியக் கூடாது என்பதற்காகத் தான்  அந்தப் போராட்டம்

அனால் நாம் முந்தய கால பண்பாட்டை மறந்து அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் !

கூட்டுக்குடும்பமாக இன்று எத்துனை குடும்பங்கள் வாழ்த்துக்கொண்டிருக்கின்ற

அழிந்துபோன காளைகளின் வகைகள்போல நாமும் நமது பண்பாட்டை அழித்துக்கொண்டிருக்கிறோம்

சிந்திப்போம் அன்பெனும் சிறகை விரிப்போம் எஞ்சியுள்ள காளைகளைக் காப்பது போல

நாமும் நமது குடும்பங்களோடு ஒன்றிணைத்து வாழ்வோம் விலைமதிக்க முடியாத நேரத்தை

அவர்களுக்காக ஓதுக்குவோம் சந்தோசமாக வாழ்வோம்!!!

தைத்திருநாளில்  வெறும் பொங்கல் சமைத்து உண்ணாமல்

அன்பின் விருந்து படைப்போம் தமிழரின் பண்பாட்டைக் காப்போம்


"கூடிவாழ்ந்தால் கோடிநன்மை "



நீலவானம்



January 09, 2024, 11:06:22 am
Reply #2

Limat

Re: கவிதையும் கானமும்-036
« Reply #2 on: January 09, 2024, 11:06:22 am »
கலாசாரத்தின் அங்கமடா எங்கள் வீரம்
பல சம்பவம் செஞ்சொமடா காலகாலம்
என்று மார்தட்டி சொல்லி வைப்போம் தமிழனின் துள்ளி திரியும் வீரம் பற்றி!
கொம்புவெச்ச சிங்கமடா எங்கள் காளை...
விவசாயத்தின் பெருமையும் நீயே!
விவசாயின் அன்பும் நீயே!
எங்களின் அடையாளமும் நீயே!
நாங்கள் உண்ணும் ஆகாரம்
சத்தாக மாற காரணம் நீயே!
எங்கள் உயிர் மறந்தது எங்களை
உன்னை நேசித்த பின்..
தூங்கி கிடந்த தமிழன் வீரம்
துள்ளி குதிக்க வேண்டிய நேரமிது..!
தூசி படிந்த தமிழன் மானம்
தூய்மையானதென காட்டவேண்டிய நேரமிது..!
ஓங்கி ஒலிக்கும் தமிழன் சத்தம்
ஓசோன் தாண்டியும் கேட்க வேண்டிய நேரமிது..!
ஒன்று படும் தமிழினம் கண்டு
ஒவ்வொரு நாடும் வியக்கும் நேரமிது..!
சாதி மதம் அரசியலால்
மதியிழந்த மக்கள் கூட்டம்
மண் பெருமை கான வேண்டி
மடை திறந்து ஒன்றுசேரும் நேரமிது..!
காளையைப்போல் திரிகிறாயே என்று பெயர் பெயர் வாங்கிய இளைஞர்களுக்கும் ராஜா அப்பு என செல்லப்பெயர் வைத்து மகனைப்போல வளர்க்கப்பட்ட காளைக்கும் இடையே நடக்கும் செல்ல சண்டை தான் இந்த வீர விளையாட்டு!
உன்னை காளையாய் பசுவாய் பார்க்காமல்
கடவுளாய் பிள்ளையாய் மதித்த நாங்களே
சில நேரங்களில் பண மோகத்தில் அறிய மறுத்தோம் உன் பெருமையை!
நீ உழைக்க நாங்கள் வாழ்க்கை
நடத்திய காலங்கள் ஏராளம்!
பெண்ணை தழுவ வேண்டுமென்றால்
முதலில் என்னை தழுவ வேண்டும் என்று கம்பீரமாய் நிற்கும் காளையின் அருமையையும் அதனை அடக்கி தன் வீரத்தை நிலை நிறுத்தும் தமிழனின் பெருமையையும் இந்த உலகிற்கு பறைசாற்றுவோம்....
GTC அன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களுடன் உங்கள்

January 09, 2024, 07:51:38 pm
Reply #3
Re: கவிதையும் கானமும்-036
« Reply #3 on: January 09, 2024, 07:51:38 pm »
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !
தாவிக்குதித்துச் செல்லடா தடையை மீறி வெல்லடா !
ஈராயிரம் ஆண்டுகளாய்
எம் இனப்பெருமை ஏறுதழுவுதல் என்றே
திமிரி நிற்க்கும் திமிலை வீரத் திமிரோடு பிடித்தே செல்லடா !
முகத்திற்கு முன்னிற்கும் காளைக் கோடுகளை முந்திச்சென்றே மோதிடடா !
வாடிவாசல் காளைகளின் வால் பிடித்தே வாழ்த்திடடா தமிழின் பெருமையை !
தாழ்ந்து போகாதவன் தமிழன் !
வீழ்ந்து போகாதவன் தமிழன் !
தடைகளைக் கண்டு சோர்ந்து போகாதவன் தமிழன் !
கட்டவிழ்த்து வரும் காளைகளை கட்டியணைத்தே -நம் இனவீரம் சொல்லடா !
சங்க இலக்கியம் பேசிய வீரத்தினை சங்கம் வைத்தே வீடு தோறும்
சொல்லடா !
சரித்திரம் பேசும் தமிழின் வீரத்தினை சாக விடமாட்டோம் என சத்தமிட்டு சொல்லடா !
வீரத்தின் விளைநிலம் தமிழ் இனம் என்றே
வீதி எங்கும் நிற்கும் எம் காளைகளைப் பாருங்கள் !
காளை அடக்குதல் எம் கலாச்சாரம் !
காளைக் கோடுகளை பாய்ந்துப்பிடித்தல் எம்
பாரம்பரியம் !
தடையை தகர்ப்போம் !
தாவிக் குதிப்போம் !
தமிழனாய் நிற்போம் !
சலங்கை ஒலிக்கட்டும் !
ஜல்லிக்கட்டு நடக்கட்டும் !

January 12, 2024, 07:31:53 am
Reply #4

queen

Re: கவிதையும் கானமும்-036
« Reply #4 on: January 12, 2024, 07:31:53 am »
         ★வீரமனம் கொண்ட தைப்பொங்கல்★

பொங்கல் திருநாளாம் அது எங்கள் திருநாளாம்....
தங்க தமிழனின் தனிகரற்ற ஒரு நாளாம்...

இயற்கைக்கு நன்றி சொல்ல வந்த தமிழனின் பண்பாட்டை.. பாருக்கே எடுத்து சொல்லும் ஒரு நாளம் இன்று.....
அதில் நானும் பங்கெடுப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் உங்களுடன் இணைந்து....
 தமிழன் இயற்கைக்கு நன்றி சொல்ல நினைத்தான்...நான் அந்த தமிழனுக்கு நன்றி சொல்ல நினைக்கின்றேன்....

உயிர் வாழ உணவு தரும் உலவனுக்கும்....
உறுதுணை புரியும் கதிரவனுக்கு....
உழுது உழைக்கும் மாட்டிற்கும்... நன்றி சொல்ல வந்த நாளாம் திருநாளாம்....

பசுமாட்டை குளிப்பாட்டி...
கொஞ்சும் சலங்கை கட்டி....கொம்பில் வண்ணம் பூசி... உவகையுடன் உணவூட்டும் திருநாளாம்..

மஞ்சள் கொத்தோடும் மாமரத்து இழையோடும்
இஞ்சி தண்டோடு
எறும்பூறும் கரும்போடு வட்ட புது பானை வாயெல்லாம் பால்பொங்க வந்த திருநாளாம் இன்று....

பொங்கல் நாளிலே வீரத்தை நினைவூட்டும் வீரனை தேடி வந்ததே ஜல்லிக்கட்டு....

ஜல்லிக்கட்டு காளை அது துள்ளிக்கிட்டு ஓடுது.... தன்னை அடைக்கிட இங்கே எவரும் உண்டோ தேடி தேடி பார்க்குது....  வென்று விட வந்தோரை முட்டி முட்டி சாய்க்குது.... வீரமில்லா சோர்ந்தவனை கலத்தை விட்டு விரட்டுது... துணிச்சலோடு வந்தவனை நேர் நின்னு எதிர்க்குது... சுற்றிநின்னு பார்ப்பவர்களுக்கு புது உற்சாகமூட்டுது...

தோற்றாலும் கடைசியிலே வீரம் வெல்ல வைக்குது....
வென்ற காளை மனிதர்களை நினைவில் நின்று மிரட்டுது....
சரித்திரத்தில் தடம் பதித்து காலம் கடந்து நிற்குது....  ஜல்லிக்கட்டு காளை அது என்றும் போற்றத் தக்கது...

அன்பு பொங்க
ஆசைகள் பொங்க
இன்பம் பொங்க
இனிமை பொங்க
என்றும் வீட்டில் மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்...

January 15, 2024, 02:36:03 pm
Reply #5

Eagle 13

Re: கவிதையும் கானமும்-036
« Reply #5 on: January 15, 2024, 02:36:03 pm »
ழகரத்தை கொண்டு சிகரத்தை வென்றோம்!
தடைபெற்று நின்ற போதும்,
தமிழர் யார் என்று
போர்களம் கண்டோம் ,
வாடிவாசல் வேண்டி,
வீடு வாசல் விட்டு சென்றோம்!
கோடி மக்கள் ஒன்று கூடி,
தெருக்களில் நின்று நீதி தேடி,
உலகிற்கே முரசொலித்தோம்,
புரட்சி என்னவென்று காட்டி
இந்த தலைமுறைக்கும்
பரிசளித்தோம்!.
தெற்கு வங்கக்கரை வசனம் பாடியது,
தமிழர்க்கு குரல் கொடுக்க உலகே
ஒன்று கூடியது!
தொன்று தொட்ட காலம் முதல்
 தமிழர்களின் அடையாளமாம் ஏறு தழுவுதல்!
பொங்கல் வந்ததும் விழாக்கோலம் நிலவுதல்!
கடந்த காலங்களில் நாட்டு காளைகளின்
வகைகள் எண்பத்தி ஏழாம்(87)!
ஆனால்,
இன்றோ ! அதில் பல வகைகள் மாயம்!
இதெல்லாம்,
எந்த விதத்தில் நியாயம்!
இதற்கெல்லாம் காரணம்,
மனிதன் மரபுகளை மீறியது'
என்று வரலாறு கூறுகிறது!
ஆதியில்
ஆயர்க்குலத்தோர் மங்கைகள்
ஆளுக்கோர் காளை கன்றுகளை
வளர்த்து,
தன் திருமண பருவத்தில்
அதை அடக்குபவரை மணமுடிக்க
உருவானதாம் இந்த சல்லிக்கட்டு!
இது இனி எந்தப்பொழுதும் விட்டுச்செல்லாது
தமிழன் இலக்கம் விட்டு|!.

January 17, 2024, 07:56:37 am
Reply #6

karthick sri

Re: கவிதையும் கானமும்-036
« Reply #6 on: January 17, 2024, 07:56:37 am »
ஜல்லிக்கட்டு

காளை துள்ளுமே மைதானத்தில்
கவிதை ஒடுமே நெஞ்சினில்
பொங்கும் பொங்களில்
வாழ்த்து சொல்ல வந்தேன்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


கொம்பு வச்ச சிங்கம்னு சொன்னானடா அந்த கவிகன்,
எனக்குத்தானடா தெறியும் நீ என்னோட செல்ல நாய்க்குட்டி என்று..!

வீட்டில் ஒருவனடா, ஒன்றாய் வளந்தோம்மடா
பாய்ந்து வந்தால் வாடிவசல் அதிருமடா,
திமிர் கொண்டு வந்தவனை திமில் கொண்டு வென்றாயடா.
உன்னால் பரிசு வென்றேன்நடா நான்...


கொம்பு சீவிய காளை
சீரிவரும் வேலை
அடக்க பார்பான் அடங்காதே,
யார் என்று பார்போம்,
வெல்லட்டும் அந்த அசல் வீரன்
அதுவும் பெருமைதானடா..!!


உழவனுக்கு சொந்தக்காரன்,
உழவுக்கு கெட்டிக்காரன்,
உன்னை போற்றதானடா இந்த கொண்டாட்டமே,
வா புள்ளி வைத்து, பூ சுத்தி பொட்டு வைத்து,
ஒன்றாய் மகிழ்வோம் வா.







« Last Edit: January 17, 2024, 08:06:33 am by karthick sri »