ழகரத்தை கொண்டு சிகரத்தை வென்றோம்!
தடைபெற்று நின்ற போதும்,
தமிழர் யார் என்று
போர்களம் கண்டோம் ,
வாடிவாசல் வேண்டி,
வீடு வாசல் விட்டு சென்றோம்!
கோடி மக்கள் ஒன்று கூடி,
தெருக்களில் நின்று நீதி தேடி,
உலகிற்கே முரசொலித்தோம்,
புரட்சி என்னவென்று காட்டி
இந்த தலைமுறைக்கும்
பரிசளித்தோம்!.
தெற்கு வங்கக்கரை வசனம் பாடியது,
தமிழர்க்கு குரல் கொடுக்க உலகே
ஒன்று கூடியது!
தொன்று தொட்ட காலம் முதல்
தமிழர்களின் அடையாளமாம் ஏறு தழுவுதல்!
பொங்கல் வந்ததும் விழாக்கோலம் நிலவுதல்!
கடந்த காலங்களில் நாட்டு காளைகளின்
வகைகள் எண்பத்தி ஏழாம்(87)!
ஆனால்,
இன்றோ ! அதில் பல வகைகள் மாயம்!
இதெல்லாம்,
எந்த விதத்தில் நியாயம்!
இதற்கெல்லாம் காரணம்,
மனிதன் மரபுகளை மீறியது'
என்று வரலாறு கூறுகிறது!
ஆதியில்
ஆயர்க்குலத்தோர் மங்கைகள்
ஆளுக்கோர் காளை கன்றுகளை
வளர்த்து,
தன் திருமண பருவத்தில்
அதை அடக்குபவரை மணமுடிக்க
உருவானதாம் இந்த சல்லிக்கட்டு!
இது இனி எந்தப்பொழுதும் விட்டுச்செல்லாது
தமிழன் இலக்கம் விட்டு|!.