Advanced Search

Author Topic: என் கவிதை  (Read 42309 times)

February 06, 2023, 03:28:21 pm
Reply #15

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #15 on: February 06, 2023, 03:28:21 pm »
என்னடா இருக்கு வாழ்க்கையிலே

என்னடா இருக்கு வாழ்க்கையிலே..!
போட்டி, பொறாமை சுமக்கும் சமுகத்திலே..!
நீ ஓயாமல் உழைத்தாலும் மதிப்பு இல்லை..!
பணம் கொட்டி கிடந்தாலும் ஆசை குறைவதில்லை..!
பொய்கள் நிறைந்த பூமியிலே..!
உறவுகள் துணையாய் வருவதில்லை..!
விரக்தியில் முடிவு எடுப்பதிலே..!
தடுமாற்றம் நிலவுது மனத்தினிலே..!


விரோதமும், குரோதமும் பெருகியதே..!
அன்பும், பண்பும் குறுகியதே..!
ஆவேசத்தால் அஹிம்சை ஓடியதே..!
வாழ்க்கை நெறிகள் தவறியதே..!
உண்மை ஒருநாள் உணர்ந்தாலும், எதுவும் மாறிட போவதில்லை..!


மனிதம் மறந்தாய் புரிந்து கொள்.!
அனைவரை மதிக்கவும் கற்றுக் கொள்..!
உயர்ந்த எண்ணங்களை விதைத்து கொள்..!
ஆழ்கடல் சிப்பியின் மதிப்பு போல் உன்னை மாற்றி கொள்..!


நித்தம் கதறும் இயற்கையடா..!
நிலையில்லாத வாழ்க்கையடா!
வீண் பேச்சு குறைத்து விழித்துக் கொள்..!
அமைதியை ஆயுதமாய் மாற்றிக்கொள்!

என்னடா இருக்கு வாழ்க்கையிலே..!!


February 09, 2023, 09:55:25 am
Reply #16

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #16 on: February 09, 2023, 09:55:25 am »
பணம்

பணமே நீதானே இங்கு எல்லாம்!

பணமே ஒரு மனிதனை இன்னொரு மனிதனிடம் இருந்து பிரித்தாய்..!
பணமே ஏற்றத்தாழ்வை மனிதன் மனதில் விதைத்தாய்..!

பணமற்றவனே உன் சொந்தங்கள் தூரமாகி போனதேன்..?
வறுமையால் நீ வாழ்விழந்து போனதேன்..?

உணவு பங்கிட்ட காலம் போய், பணம் பங்கிடும் காலம் வந்துவிட்டதா..?
இவ்வுலகில் அன்பிற்கும் பணம் தான் அளவீடா..?

பணத்தினால் கிடைப்பது உண்மையான மகிழ்ச்சியா?? 
பல நேரங்களில் அது உண்மை தான் என்ற பிம்பம் இங்கு உள்ளதா..?

பணம் ஒருவர் வாழ்க்கையின் வெற்றிக்கான பரிசா??
அதனாலே பணம் பின்னே ஓடுகிறோம் முழுசா..!

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது அன்று..!
பணம் இல்லா வாழ்க்கை குப்பையிலே என்பது இன்று..!

ஆன்மீகம், அறிவியல், மருத்துவம், கல்வி, சுற்றுலா எங்கு நோக்கினும் பணமே..!
பணம் சம்பாதியுங்கள் நம் கனவுகள் ஏறக்குறைய மெய்ப்படும் என் இனமே..!

பணம் இல்லாதவனுக்கு வயிற்று பசி..!
பணம் இருப்பவனுக்கு நிம்மதி பசி..!
பணத்துடன் மன நிம்மதியும் கிடைத்தவனே வாழ்வில் முழுமை பெற்றவனடா..!
பணமே நீ தானே இங்கு எல்லாம்..!


February 13, 2023, 01:40:37 pm
Reply #17

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #17 on: February 13, 2023, 01:40:37 pm »
புகைப்படம்

மறந்தேன் என்றெண்ணிய போதெல்லாம் புகைப்படமாக என் முன் வந்தாய்..!
மலரும் நினைவது, மகிழ்வான காலமது.. !
உறவுகளின் விரிசல், நம் அன்பின் விரிசலானது..!

இன்று உன் புகைப்படம் காண்கையில் மெலிதாக சிறு புன்னகை மனதில்..!
மீண்டும் திரும்ப முடியாத வலிகள் நிறைந்த புன்னகை அது.. !

புகைப்படத்தை அழித்து விட்டு மீண்டும் மீட்டெடுக்கிறேன்.. !
மறந்து விடலாம் என்றாலும், விடாமல் துரத்தும் நினைவாக புகைப்படத்தில் நீ...!

February 14, 2023, 08:36:11 pm
Reply #18

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #18 on: February 14, 2023, 08:36:11 pm »
சந்தித்தேனே உன்னை

மீள் நிலவே!
மீட்ட முடியா கனவே!

இரை தேடும் மீனே!
இரவில்லா ஒளியே!

எண்ணங்களின் வண்ணமே!
என் நடைபாதையே!

பதுக்கி வைத்த தங்கமே!
பழக்கமில்லா முகவரியே!

திகட்டாத தேனே!
தினம் எழுதும் நாட்குறிப்பே!

இயற்கையின் பெரும்படைப்பே!
இசை பாடும் இன்னிசையே!

செந்தமிழின் இனிமையே!
செக்க சிவந்த புன்னகையே!

சற்றே சிந்தித்தேனே!
சட்டென சந்தித்தேனே!

சந்தித்தேனே உனை!
சிந்தை மயங்கி சந்தித்தேனே உனை..!


February 18, 2023, 10:48:26 am
Reply #19

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #19 on: February 18, 2023, 10:48:26 am »


நினைவலை


கண்ணாடியில் பதிந்த அவள் முகம்!
கண நேர காதல், கனவுகள் கொல்ல வந்த விந்தை!

விதைகள் முளைத்த மணல் வெளி!
நிசப்தம் நிலவும் மனதின் மொழி!

நிஜமான சோகம் நேற்றே போகும்!
நினைத்தாலும் நெருங்கி வரப் போவதில்லை. !

விவர்வையில் நனைந்த தூக்கம்!
சில்லென்ற காற்று வீசும்!
அங்கே அவள் பூவிதழ் விரித்தாள்.. !
காற்றோடு பறந்து போனேன்..!

எதிர் நீச்சல் போட்டேன்!
உன் நினைவலை மறக்க!

அர்த்தங்கள் பொதிந்த பொக்கிஷம் நீ!
அனைத்திலும் வெற்றி எந்தன் உத்வேகம் நீ!

சிறகுகள் விரித்து உயரே பறப்பேன்!
சிகரங்கள் அதனை தேடி பறப்பேன்!
சரித்திரம் நம்மை பேசிட வைப்பேன்!

வாஞ்சைகள் நிறைந்த முகமாய் நீயும்!
வலிகள் தாண்டி மனம் வருடுகின்றாய்!

அகப்பையில் அள்ளி பருகிட வேண்டும்!
உன் அன்பில் தானே வாழ்ந்திட வேண்டும்..!

 
« Last Edit: February 22, 2023, 01:24:47 pm by Barbie Doll »

February 19, 2023, 07:35:46 pm
Reply #20

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #20 on: February 19, 2023, 07:35:46 pm »


மாற்றம் ஒன்றே மாறாதது

நிகழ்வுகள் ஓரிடத்தில் இருப்பதில்லை!
பார்வைகள் ஒன்றை மட்டும் பார்ப்பதில்லை!

நினைவுகள் தினம் தினம் முளைப்பதில்லை!
கனவுகள் நீண்ட நேரம்
நீள்வதில்லை!

காதலியின் மடல்கள் வந்து கொண்டே இருப்பதில்லை!
மௌனம் வெகு நேரம்
நீடிப்பதில்லை!

ஆறுதல்கள் என்றுமே பிடிப்பதில்லை!
ரகசியங்கள் உடையாமல் இருப்பதில்லை!

நொடிக்கு நொடி மாறுதல்கள்..!
பக்கத்திற்கு பக்கம், குறிப்பேடுகளில் கூட புது புது, அத்தியாயம் ..!

இந்த மாற்றங்கள், வந்து கொண்டே இருப்பது ஒன்றே, என்றும் மாறாதது..!


« Last Edit: February 22, 2023, 01:22:39 pm by Barbie Doll »

February 20, 2023, 04:50:53 am
Reply #21

Sanjana

Re: என் கவிதை
« Reply #21 on: February 20, 2023, 04:50:53 am »
Dear Barbie Doll.

Am really proud of you.I still remember your first poem.Now you seems to be an expert.Keep rocking.Write more and more...

February 20, 2023, 08:59:54 am
Reply #22

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #22 on: February 20, 2023, 08:59:54 am »
Dear Barbie Doll.

Am really proud of you.I still remember your first poem.Now you seems to be an expert.Keep rocking.Write more and more...


Thank you dear sis 💖, Thanks for your Kind words..
« Last Edit: February 22, 2023, 01:17:59 pm by Barbie Doll »

February 22, 2023, 10:08:43 pm
Reply #23

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #23 on: February 22, 2023, 10:08:43 pm »
RiJiA sis Birthday Poem செந்தமிழின் சொல்லெடுத்து செவ்வனே பேசுபவள்!

வார்த்தைகளின் வித்தகி!
அர்பணிப்புகளின் அகராதி!
முத்தமிழும் முத்தமிடும் மொழியழகி!

கிறுக்கல்களை காவியமாக்கும் கவிதாயினி!
சிறு புன்னகையிலே உரையாடுபவளே!

கடிகாரம் தேவையில்லை இவள் வாய் மொழி கேட்க!
அன்பிலும், அமைதியிலும்‌ அகிலம் வென்றவளே!

நேர்த்தியான உரையாடல், நேசக்கரம் நீட்டுபவள்!
திறமையுடன், தன்னடக்கமும் தன்னகத்தே பெற்றவள்!

அகிலமும் பரவட்டும் உன் குரல்.!
அளவில்லா ஆனந்தம் பெருகட்டும் இன்று முதல்.!

கனவுகள் மெய்ப்பட கர்ஜித்து எழுந்திடு.!
தன்னிகரில்லா தனி வழியில் என்றுமே பயணித்திடு.!


February 23, 2023, 09:08:39 pm
Reply #24

RiJiA

Re: என் கவிதை
« Reply #24 on: February 23, 2023, 09:08:39 pm »
DoLL  Siss ❣Nejemava Unge  Improvement Day by Day Top Level Siss 👏👏Enakaage Time Eduthu Ivvalavu  Alaga Kavithai Elutirkunge...Thank You So much ❣Siss Innum neenge  Naraiya  Elututanum All The Very Best siss DoLL ❤
« Last Edit: February 23, 2023, 09:11:15 pm by RiJiA »

February 23, 2023, 10:26:18 pm
Reply #25

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #25 on: February 23, 2023, 10:26:18 pm »
RiJiA sis Thank you so much 💕

March 03, 2023, 02:02:53 am
Reply #26

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #26 on: March 03, 2023, 02:02:53 am »
அன்பில் நான்


மனம்தான் கல்லாகி போனதா!
சோகங்களின் குவியலால், மனம்தான் கல்லாகி போனதா!

பாசத்தின் எல்லையிலே
வலிகள் மட்டும்தான் எஞ்சியதா!

சிரிப்பொலி சத்தத்திலே,
மௌனமாய் மனம் வடிக்கும் கண்ணீர்தான் எஞ்சியதா!

இதயம் கனத்து, இதழ்கள் சிரிக்க மறந்தேனே!
ஒளியாய் இருந்து, இருளாய் போன நாட்களே!
முள்ளாய் குத்தும், உந்தன் அமைதி கதறி அழத் துடிக்கிறதே!

உறக்கம் தொலைத்து, உன்னருகே ஏங்கி தவிக்கிறேன்!
உன் யதார்த்த வாழ்வில், ஏற்றுக் கொள்ள முடியா தருணம் இது!

உழைத்த நாள் போதும் என்றா ஓய்வெடுக்கிறாய்?
நேற்று வர்ணித்த அழகிய முகம் பொலிவிழந்து போனதே?

சட்டை செய்யாமல் எழுந்து வந்து கன்னம் தடவி முத்தமிடு!
காலம் முழுதும் உன்னுடனிருப்பேன் என் ஆயுளும் உனக்கே வந்துவிடு!

காத்திருக்கும் எத்தனை உள்ளங்கள் உனதருகே!
உணர்விழந்து உறக்கமாய் உறங்குவதை விட்டு எழுந்து வா!


March 03, 2023, 02:27:12 am
Reply #27

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #27 on: March 03, 2023, 02:27:12 am »


காத்திருப்பு

சாளரமாய் சாரல் வீசும், சாலையோர பூஞ்செடியே!
சத்தமில்லா சண்டையிடும், சந்திரனின் ஒளியே!
சக்கரையாய் சுவையூட்டும், சம்பந்தி விருந்தே!
பிரிவென்று பிதற்றுகின்றாய், பிழையென்ன வந்ததே!


முகம் மலர்ந்து அனுப்பி வைக்கும், அன்பில் பிரிவு துயரமிது!
வார்த்தைகளில் பிரிவை பகிரும், தைரியமற்ற மனதிது!
மேகமது மழையாக காத்திருக்கும், கடமையிது!
போய்வா என்றும், பொய்யாய் பூக்கும் புன்னகையிது!
சட்டெனத் திரும்பி, சமாதானம் சொல்லும் வார்த்தையது!

மெல்ல சிரித்து, சோகம் மிகுத்த கண்களோடு, காத்திருக்கும் காலமிது!


March 03, 2023, 11:19:16 am
Reply #28

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #28 on: March 03, 2023, 11:19:16 am »
கனவான காதல்

மௌனம் கலைந்து மறக்க முடியாத ஞாபகங்களின் உணர்வலைகளில் வழியே மூழ்கி தவிக்கின்றேனோ..!

எழுத்தில்லா தமிழ் போல வார்த்தை இல்லா மௌனம் பிரிவின் ஆரம்பமோ..!

அவசரமாய் தந்தியடிக்க அலைமோதும் மனது தவிர்க்க முடியாத முடிச்சுக்களுள்ள பிரச்சனையின் ஆரம்பமோ..!

இது நெருக்கடிகளுக்கு அப்பாற்பட்டு நிலையான முடிவெடுக்க தத்தளிக்கும் மனதோ..!

காத்திருக்கிறேன் உனக்காக என்று வாக்களிக்க மறுதலிக்கும் திடமில்லா மனதோ..!

சிறகுகளை வெட்டிவிட்டு சிறகொடிந்த வாழ்க்கையாகி சிந்தித்து முடிவெடுக்க முடியாத பாழ்ப்பட்ட மனதோ..!

உதிர்ந்த இலையாக முடிந்து போன வாழ்க்கையில் மீண்டும் பூக்காத பூவா இவள்!

நொறுங்கிய கண்ணாடியில் சில்லு சில்லாக உடைந்த பிம்பங்களில் நிலைத்து விட்டது நம் காதல்!

March 03, 2023, 04:50:00 pm
Reply #29

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #29 on: March 03, 2023, 04:50:00 pm »
உனக்கென்னப்பா?


சமூகத்தில் பலர்,
எதிர்கொள்ளும் கேள்விகளோ! உரிமையற்ற உணர்வு போன்ற வலி!

சொல்லின் கூர்மை அறியா பலர் உபயோகிக்கும் ஆயுதம்!

ஆசானற்று வெறுமனே மூடி திறக்கும் புத்தகமாய் மனச் சீற்றத்தை விதைக்கும் வினா!

உறவுகள், பேரன்புகள், நட்புகள், நலம் விரும்பிகள் இவர்களும் விதிவிலக்கல்ல.!

முயற்சியில் சறுக்கல்!
இலக்கு நோக்கிய பயணம்!
அன்பில் இடைவெளி!
அனைத்திலும் துரத்தும் விமர்சனம்!
எங்கு நோக்கி ஓடினும் மனிதமற்று துரத்தும் கேள்விகளின் மன அழுத்தம்.!

என்றுதான் திருந்துவர் இதுபோன்றோர்?
தன்னம்பிக்கை உடைக்க கேள்வியெழுப்பும் இவர்கள் இல்லா உலகம் எங்கே.?