See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
என் கவிதை
அக்கா பூக்கள் காற்றில் அசையும் போது பேசும் இனிமையான மொழி போல பேசுபவள் என் அக்கா..!! மழைக்கால இசை போல என் மனதோடு பதிந்தவள் என் அக்கா..!! என் தந்தையை போன்றவள், என்னை காயப்படுத்தாதவள் என் அக்கா..! பகலில் சூரியன், இரவில் நிலா என என் வாழ்வின் வெளிச்சமானவள் என் அக்கா..!! யார் பிடிக்கும் என்றால் நீ தான் என்று சொல்லும் தடுமாற்றம் இல்லா அன்பு கொண்டவளே..! யாரோடும் ஒப்பீடு செய்ய முடியாத அன்பு கொண்டவளே..! முள்ளில்லா ரோஜாவே உன் அழகிய உலகில் நானும் ஒரு அத்தியாயம் ஆனேனே ..! வந்து வந்து போகும் கடலலை போன்றது அல்ல நம் அன்பு என்பேனே..! கடல் நீர் வற்றி போனாலும் குறையாதது நம் அன்பு என்பேனே..! மறுவார்த்தை பேசாமல் உங்கள் அன்பிற்கு கட்டுப்படுபவள் நானே..!! வண்ணத்துப்பூச்சியாக நீ இருந்தால் உன் சிறகாக நான் இருக்க விரும்புகிறேன்...! அள்ள முடியா அன்பை மட்டும் கொடுக்க விரும்புகிறேன் என் அன்பு அக்கா..! இது முடிவில்லா கவிதை.. என் உடன் பிறவா சகோதரிக்கான கவிதை..!! February 01, 2023, 10:44:37 am |
1 |
Barbie -சிறுகதை
கவிதையும் கானமும் இந்தவார புகைப்படத்திக்கான சிறுகதை ஆவியாகி அங்கும் இங்கும் அலைபவளே என் கண்ணில் மட்டும் பட்டுவிடாதே என்று ஒருவித பயத்துடனே அந்த பாழடைந்த வீட்டை கடந்து சென்று கொண்டிருந்தாள் கீர்த்தி.. அந்த பழைய வீட்டில் காதல் தோல்வியால் தூக்கு போட்டு செத்துப் போன இளவயது பெண் ஒருத்தியின் ஆவி அங்கு இருப்பதாகவும்.. அவள் வயதொத்த பெண்களை கண்டால் பிடித்து விடுவாள் என்றும் கீர்த்தி தங்கியிருக்கும் கல்லூரி விடுதியில் பரவலாக ஒரு பேச்சு இருந்தது... அவளுக்கு இரவு 11.மணி பேருந்தை பிடித்தாக வேண்டிய கட்டாயம்.. இந்த பேருந்தில் பறப்பட்டால் தான் அடுத்த நாள் நடக்கவிருக்கும் தன் அண்ணனின் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியும்.. தனக்கிருக்கும் ஒரே அண்ணன் அல்லவா என்று நினைத்து கொண்டே வேகமாக நடந்தாள் கீர்த்தி.. மணி சரியாக 10.35 .. 15 நிமிடம் நடந்தால் பேருந்தை பிடித்து விடலாம் என்று நினைத்து கொண்டு வேகமெடுத்து நடந்தாள்.. அப்போது அந்த குரல் கீர்த்திதிதிதிதி.,.. என்று சத்தமாக கேட்டு எதிரொலிப்புடன் அடங்கியது... ஒரு நிமிடம் கீர்த்திக்கு இதயம் துடிப்பது நின்று விட்டது போன்ற உணர்வு.. இருந்தும் மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு திரும்பி பார்க்காமல் வேகமாக நடந்தாள்.. முருகா.. விநாயகா.. ஓம் நமசிவாய என்று அத்தனை கடவுள் பெயரையும் உச்சரித்தவாரே நடந்தாள்.. அந்த குரல் மறுபடியும் கேட்டது.. கீர்த்திதிதிதிதிதி.... இந்த முறை இன்னும் சத்தமாக கேட்டது... கீர்த்திக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஓட ஆரம்பித்தாள்.. பயத்துடனே ஓடியதால் என்னவோ அவள் கையில் இருந்த கைப்பேசி கீழே விழுந்து விட்டது.. இப்போது கீர்த்திக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.. ஓடி கொண்டிருந்தவள் மூச்சிரைக்க நின்றாள்.. அய்யோ என் கைப்பேசி.. திரும்பி போக மனமில்லாமல் அப்படியே நின்றாள்.. ஒரு நிமிட யோசனைக்கு பிறகு சரி எடுத்து விடலாம் என்று நினைத்தவாறே திரும்பி பார்க்காமல் பின்னோக்கி நடந்தாள்.. கால்களால் தேடியவாறே நடந்தாள்.. இன்று இந்த ஆவியின் கையால் தான் எனக்கு சாவு என்று அழுகையுடன் சேர்ந்த பயத்துடனே.. நடந்தவளுக்கு கால்களில் எதோ ஒன்று தட்டு பட்டது.. அது அவளுடைய கைப்பேசி தான்.. அப்பாடா.. கிடைத்தது விட்டது என்று குனிந்து எடுத்து விட்டு எழும்ப முற்பட்ட போது மீண்டும் அந்த குரல்... கீர்த்தி என்று மிக பக்கமாக கேட்டது... இது நமக்கு பரிச்சயமான குரல் ஆயிற்றே என்று நினைத்தவாறு திரும்பி பார்த்தாள்.. அங்கு அவளுடைய அறை தோழி மூச்சிரைக்க ஓடி வந்தாள்.. அடியே.. நீ கிளம்பிய அவசரத்தில் நாளை உன் அண்ணனுக்கு வாங்கிய பரிசு பொருளை மறந்துவிட்டாய்.. இந்தா ... என்றவாறே எவ்வளவு நேரம் உன்னை கூப்பிடுவது.. காது கேட்காதா உனக்கு என்று திட்டிய வாரே அவள் திரும்பி சென்றாள்... கீர்த்தி எதுவும் பேசாமல் பிரமை பிடித்தவள் போல் நடந்து ஒருவாராக பேருந்தை பிடித்து ஜன்னலோரமாக உட்கார்ந்து கொண்டாள்... பேருந்து புறப்பட்டது... அப்போது தான் யோசித்தாள் நான் பரிசு பொருள் எதுவும் வாங்க வில்லையே என்று.. அப்படியென்றால் இது... இது.. என்ன.. என்று பரிசினை பிரிக்க ஆரம்பித்தாள்.. அதில் ஒரு பட்டு புடவை அதனுடன் ஒரு வாழ்த்து அட்டை.. அதில் திருமண வாழ்த்துக்கள் என்று எழுதி இருந்தது... அவள் மூளையில் கீர்த்திதிதிதி... என்ற குரல் ஒலித்து கொண்டே இருந்தது.... அந்த சத்தத்துடனே தூங்கி போனாள்... திடீரென்று யாரோ அவளை எழுப்பினார் அவள் கண்விழித்து பார்த்த போது பேருந்து அவள் ஊருக்கு வந்திருந்தது.. நடத்துனர் தான் அவளை எழுப்பி இருக்கிறார்.. வேகமாக எழுந்து பேருந்தை விட்டு இறங்கினாள்.. அப்போது கையில் இருந்த பரிசினை பேருந்தில் விட்டு விட்டோம் என்று எடுக்க மறுபடியும் பேருந்தில் ஏறினாள்.. ஆனால் அங்கு எந்த பரிசு பொருளும் இல்லை.. மறுபடியும் குழப்பத்துடனே.. வீட்டை நோக்கி நடந்தாள்.. இந்த திகிலான மனநிலை அவளை விட்டு போக பல மாதங்கள் பிடித்தது... February 02, 2023, 11:49:59 am |
1 |
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
மழலையின் மகத்துவம்....... பெண்மையின் கர்ப்பத்தில் செதுக்கிய உயிரே...... உந்தன் அழகுக்கு இவ்வுலகில் மயங்கா மானிடன் உண்டோ ? உந்தன் மழலை பேச்சிற்கு பலரும் மெய் மறந்து கிடக்கிறோம்.... உந்தன் புன்னகைக்கு இவ்வுலகம் அடிமையே Beautiful lines sisy vaanmugil 💞 March 08, 2023, 06:38:40 pm |
1 |
Re: என் கவிதை
பெண் பெருமை பெண்ணை வர்ணிக்கா இலக்கியமா? ஆளுமைமிக்க அவந்தியோ..! அன்னம் போன்ற நடையழகில்..! மெச்சுகின்ற உடையினிலே..! கடமையில் கண்ணாய் இருப்பதாலா? சலனமில்லா முற்ப்போக்காள்..! பனிக்கட்டியாய் உருகினாள் சோகங்களில்..! புகழ்ச்சியை புறந்தள்ளி ஓடுகின்றாள்..! அனுபவங்களில் ஆயிரம் கதை கூறி குழந்தை தனை வளர்த்திடுவாள்..! இறைப் பண்பில் எல்லை மீறி எல்லோரையும் தாங்கிடுவாள்..! அமைதியில் ஆராவாரமற்று முடிவெடுப்பாள்..! தாய்மை என்பதே தவ வாழ்க்கை..! தரணியில் அதனால் பெரும்பேறு ..! பெண்களில்லா அவனியிலே..! ஆண்கள் தேவை இருப்பதில்லை..! ஆணும் காதலிக்கா கயல் மங்கையா? சிலாகித்து வியந்தேன் பெண் பெருமை கண்டே..! March 08, 2023, 07:05:46 pm |
1 |
Re: என் கவிதை
தோற்றுப் போன உறவுகள் சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டு, வெளிப்படைத் தன்மை எதிர்பார்க்கும் உறவுகள்! உன் கருத்து, என் கருத்து என்றில்லாமல், ஒருவர் கருத்தியலுடன் ஒன்றிப் போகும் உறவுகள்! வேண்டுமென்றே வலிய சிரிக்கும், வழக்கமான பாராட்டுக்கள், கிடைக்கப் பெறாத உறவுகள்! அளப்பரிய வாழ்வின் ருசி மறந்து, அற்புதங்கள் நடக்குமா என எதிர்நோக்கும் உறவுகள் ! பொறுமையற்று, விருப்பங்கள் தேடப்படாமல், இன்னொருவரை எதிர்ப்பார்க்கும் உறவுகள்! மனதின் குறுகலான எண்ணங்களுக்கு வழிவிட்டு, முடிவில் முட்டிக் கொள்ளும் உறவுகள்! ஆழ்கடலின் எங்கோ ஓரிடத்தில், தேங்கிக் கிடக்கும் பூஞ்சைப் போன்று, அன்பை தேங்க விடும் உறவுகள்! இவைதான் வாழ்வின் தடை செய்யப்பட்ட பக்கங்களை கொண்ட தோற்றுப் போன உறவுகள்! March 12, 2023, 09:03:35 am |
1 |
Re: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி
நெப்போலியன்
March 14, 2023, 10:58:22 am |
1 |
காதலே
கேள்விகள் கரைதனில் நடந்து, கால் நனைத்து நடத்தலில், அகமகிழ்ந்து நினைவுகளின் அசைபோடுதலுடன் கழிகிறது அந்தி நேரம்! அன்று மலர்ந்த, அழகிய பூவின் வாசம் நுகர்ந்து, நறுமணத்தினுடே மலர்ந்த அவன் முகம்! கண்ணாடி பார்த்து, சிகையலங்காரம் செய்கையில், பிம்பமாக தோன்றி மறையும் அவன் முகம்! வைத்தியமில்லா நோயொன்று, இதயம் திருடிச் செல்கையில், அமைதியுடன் நோக்கும் அவன் கண்கள்! தலைப்பிட மறந்து, என்றோ ஒருநாள் எழுதப்பட்ட மடலில், பளிச்சிடும் அவன் பெயர்! காரணமில்லா கேள்வியா? இது காதலுக்கான அறிகுறியா? யார் சொல்வார் இதற்கான பதிலை? கேள்விகளுடனே கரைகிறது இந்த நொடி. March 14, 2023, 11:36:11 am |
2 |
நட்பின் ப்ரியங்கள்
நட்பின் காத்திருப்பு மீள முடியா அழகான தருணங்களை, நமக்களிப்பது என்றுமே நட்புதான்! கண்கள் பார்த்து சிரித்தே, ஆயிரம் கதைகள் பேசுவோம், கைப் பிடித்து நடந்து சென்று, உலகை ஆண்டுவிட்டது போல், உவகை கொள்வோம்! இணைபிரியா குறும்புகள், இணைந்தே இருக்கும் நம் பெயர்கள், மேஜைகளில் கிறுக்கப்பட்ட நம் ஓவியங்கள், நம் நட்பை நினைவு கூறும் நட்பின் சின்னங்கள்! கொட்டிக் கிடக்கும் சந்தோசத்தின் நடுவில், கொஞ்சமாக சண்டைகளும் இருக்கும்! துன்பத்தில் ஆறுதலாகவும், இன்பத்தில் ஆராவாரமாகவும் உடனிருப்போம்! முதல் பிரிவின், ஆழம் உணர வைக்கும் நட்பு, தாய்க்கு பின் பாசமுடன் பரிமாறும் அன்பு! இன்று சந்திக்க முடியா தொலைவிலிருந்தும், என்றும் நம் நட்பின் தூரம் பக்கமே! இரண்டொரு மாதங்களுக்கு ஒரு முறை, பேசிக் கொண்டாலும், என்றும் மாறாது நம் அன்பின் உரையாடல்! பழகிய நாட்களும், பகிர்ந்த நிகழ்வுகளும், கொண்டாடிய தருணங்களும், தோள் கொடுத்த நிமிடங்களும், கண்ணீர் துடைத்த கரங்களும், திரும்பி வர ஏங்குகிறேன்! இது நட்பின் காத்திருப்பு! March 15, 2023, 11:33:21 pm |
1 |
Re: என் கவிதை
RoJa அக்கா பிறந்தநாள் கவிதை சிதறிய வார்த்தைகளின், அத்தனை வரிகளிலும் நீயே என் முதல் வரி! வஞ்சியவள், கொஞ்சி கொஞ்சி பேசும் அன்பின் அகராதி! மழலை மொழியில் பேசி, மனதை கவரும் குறும்புக்காரி! மழை நேர குடையாக, மனமிறங்கி உடன் நிற்பவள்! பாசமாக பேசி பேசி, பரவசப் படுத்துபவள்! பூவிதழினுள் புதைந்திருக்கும் மகரந்தம் போல், என் மனதினுள்ளே புகுந்து கொண்ட, பாசப் பிணைப்பு! ஆயிரம் ஆயிரம் கவலைகள் ஆழ்மனதில் இருந்தாலும், அன்போடு சிரிக்க வைக்கும் அவள் பாங்கு! உற்ற சகோதரியின், உள்ளூர ஊறிப் போன வார்த்தை, 'அம்மூ' எனும் அழகிய வார்த்தை! நித்தம் பேசும் நினைவுகள் எத்தனை, நீ இல்லா நாட்கள் எனக்கோ, பெரும் வேதனை! இப்பிறவியில் என்றும், எவ் விநாடியிலும், நான் மறவா ஓர் உறவு, என் 'அக்கா' எனும் அசைக்க முடியா அன்பின் உறவு.! அன்புடன் அம்மூ March 23, 2023, 09:57:10 pm |
1 |
Re: என் கவிதை
Thank you so much sis Sanjana 🦋❤️
March 25, 2023, 08:28:15 am |
1 |