முகமூடி மனிதன் கருமேகம் போல் அடர்ந்த தலை முடியும் மழை தருமோ?சிவந்த கண்களும் சீற்றங் கொண்ட பார்வையும் சொல்ல விழைவது என்னவோ?முகம் மறைப்பதா?முகமூடி அணிவதா?மங்கை மனதால் மையல் கொள்ள மயங்க வைக்கும் மான்விழியான். மறைமுகமாய் ஒலிக்கும் புன்னகையின் சத்தத்தினை ஒழித்து வைக்கும் ஓர வஞ்சனையான்.முகத் திரையை விலக்கி முழுமதியை முகத்தில் காட்ட மறுப்பானா?சுவாரசியமான பக்கத்தில் பத்திரமாய் ஒளிந்து கொண்ட காரணமற்ற வரிகளாவானா?முழுவதுமாக காட்டி விடும் உணர்ச்சிகளை மூடி மறைக்க போட்டுக் கொண்ட முகமூடியோ?களங்கமற்ற மனதினிலே காலம் கட்டமைத்த கழற்றி எறிய மறுத்த முகமூடியோ?நல்ல பெயரை எடுக்க நாளும் அணியும் முகமூடி.உண்மையற்ற மனிதனிடத்தில் உற்சாகமாய் ஏறிக் கொள்ளும் முகமூடி.நகலற்று நீயாக நீ இருந்தால் சுதந்திரமற்று சுற்றலில் விடும் முகமூடி. மூகமூடியற்று வாழ்ந்து விடும் மனிதனிங்கு எவனுமில்லை. நிஜத்தின் சாயம் அங்கங்கே ஒட்டிக் கொள்ள கழற்ற நினைக்கும் முகத்திரையும் விலக மறுத்து தானே மூடிக் கொள்ளும் காலமிது.
RoJa அக்கா பிறந்தநாள் கவிதைசிதறிய வார்த்தைகளின், அத்தனை வரிகளிலும் நீயே என் முதல் வரி!வஞ்சியவள், கொஞ்சி கொஞ்சி பேசும் அன்பின் அகராதி!மழலை மொழியில் பேசி, மனதை கவரும் குறும்புக்காரி!மழை நேர குடையாக, மனமிறங்கி உடன் நிற்பவள்!பாசமாக பேசி பேசி, பரவசப் படுத்துபவள்!பூவிதழினுள் புதைந்திருக்கும் மகரந்தம் போல், என் மனதினுள்ளே புகுந்து கொண்ட, பாசப் பிணைப்பு!ஆயிரம் ஆயிரம் கவலைகள் ஆழ்மனதில் இருந்தாலும், அன்போடு சிரிக்க வைக்கும் அவள் பாங்கு!உற்ற சகோதரியின், உள்ளூர ஊறிப் போன வார்த்தை, 'அம்மூ' எனும் அழகிய வார்த்தை!நித்தம் பேசும் நினைவுகள் எத்தனை,நீ இல்லா நாட்கள் எனக்கோ, பெரும் வேதனை!இப்பிறவியில் என்றும், எவ் விநாடியிலும், நான் மறவா ஓர் உறவு, என் 'அக்கா' எனும் அசைக்க முடியா அன்பின் உறவு.!அன்புடன்அம்மூ
Quote from: Barbie Doll on March 23, 2023, 09:57:10 pmRoJa அக்கா பிறந்தநாள் கவிதைசிதறிய வார்த்தைகளின், அத்தனை வரிகளிலும் நீயே என் முதல் வரி!வஞ்சியவள், கொஞ்சி கொஞ்சி பேசும் அன்பின் அகராதி!மழலை மொழியில் பேசி, மனதை கவரும் குறும்புக்காரி!மழை நேர குடையாக, மனமிறங்கி உடன் நிற்பவள்!பாசமாக பேசி பேசி, பரவசப் படுத்துபவள்!பூவிதழினுள் புதைந்திருக்கும் மகரந்தம் போல், என் மனதினுள்ளே புகுந்து கொண்ட, பாசப் பிணைப்பு!ஆயிரம் ஆயிரம் கவலைகள் ஆழ்மனதில் இருந்தாலும், அன்போடு சிரிக்க வைக்கும் அவள் பாங்கு!உற்ற சகோதரியின், உள்ளூர ஊறிப் போன வார்த்தை, 'அம்மூ' எனும் அழகிய வார்த்தை!நித்தம் பேசும் நினைவுகள் எத்தனை,நீ இல்லா நாட்கள் எனக்கோ, பெரும் வேதனை!இப்பிறவியில் என்றும், எவ் விநாடியிலும், நான் மறவா ஓர் உறவு, என் 'அக்கா' எனும் அசைக்க முடியா அன்பின் உறவு.!அன்புடன்அம்மூSISS DOLL❣ Rombe Alagane Kavithai..Unge Rendu Perukum Ulle Urevu Neenge Kavithai Vaasikkum Pothu Na Nallaave Unarthen..Kavithaiyil Aalam Iruntathu Athai Vaasithe Unggal Kuralil Oru Aluttham Irunthathu"Inthe Aalamum Alutthamum Unggal Iruvarin Urevil Endrendrum Thodare Vendum EN VAALTUKKAL❣