Advanced Search

Author Topic: என் கவிதை  (Read 14873 times)

March 08, 2023, 07:05:46 pm
Reply #45

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #45 on: March 08, 2023, 07:05:46 pm »
பெண் பெருமை

பெண்ணை வர்ணிக்கா இலக்கியமா?
ஆளுமைமிக்க அவந்தியோ..!
அன்னம் போன்ற நடையழகில்..! மெச்சுகின்ற உடையினிலே..!

கடமையில் கண்ணாய் இருப்பதாலா?
சலனமில்லா முற்ப்போக்காள்..!
பனிக்கட்டியாய் உருகினாள் சோகங்களில்..!
புகழ்ச்சியை புறந்தள்ளி ஓடுகின்றாள்..!

அனுபவங்களில் ஆயிரம் கதை கூறி குழந்தை தனை வளர்த்திடுவாள்..!
இறைப் பண்பில் எல்லை மீறி எல்லோரையும் தாங்கிடுவாள்..!
அமைதியில் ஆராவாரமற்று முடிவெடுப்பாள்..!

தாய்மை என்பதே தவ வாழ்க்கை..!
தரணியில் அதனால் பெரும்பேறு ..!
பெண்களில்லா அவனியிலே..! ஆண்கள் தேவை இருப்பதில்லை..!

ஆணும் காதலிக்கா கயல் மங்கையா?
சிலாகித்து வியந்தேன் பெண் பெருமை கண்டே..!

March 11, 2023, 08:41:40 pm
Reply #46

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #46 on: March 11, 2023, 08:41:40 pm »
.
« Last Edit: March 14, 2023, 11:34:50 am by Barbie Doll »

March 12, 2023, 09:03:35 am
Reply #47

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #47 on: March 12, 2023, 09:03:35 am »
தோற்றுப் போன உறவுகள்

சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டு, வெளிப்படைத் தன்மை எதிர்பார்க்கும் உறவுகள்!

உன் கருத்து, என் கருத்து என்றில்லாமல், ஒருவர் கருத்தியலுடன் ஒன்றிப் போகும் உறவுகள்!

வேண்டுமென்றே வலிய சிரிக்கும், வழக்கமான பாராட்டுக்கள், கிடைக்கப் பெறாத உறவுகள்!

அளப்பரிய வாழ்வின் ருசி மறந்து, அற்புதங்கள் நடக்குமா என எதிர்நோக்கும் உறவுகள் !

பொறுமையற்று, விருப்பங்கள் தேடப்படாமல், இன்னொருவரை எதிர்ப்பார்க்கும் உறவுகள்!

மனதின் குறுகலான எண்ணங்களுக்கு வழிவிட்டு, முடிவில் முட்டிக் கொள்ளும் உறவுகள்!

ஆழ்கடலின் எங்கோ ஓரிடத்தில், தேங்கிக் கிடக்கும் பூஞ்சைப் போன்று, அன்பை தேங்க விடும் உறவுகள்!

இவைதான் வாழ்வின் தடை செய்யப்பட்ட பக்கங்களை கொண்ட தோற்றுப் போன உறவுகள்!

March 13, 2023, 09:35:35 am
Reply #48

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #48 on: March 13, 2023, 09:35:35 am »
.
« Last Edit: March 14, 2023, 11:36:46 am by Barbie Doll »

March 14, 2023, 02:42:46 am
Reply #49

Sanjana

Re: என் கவிதை
« Reply #49 on: March 14, 2023, 02:42:46 am »
பெண் பெருமை

பெண்ணை வர்ணிக்கா இலக்கியமா?
ஆளுமைமிக்க அவந்தியோ..!
அன்னம் போன்ற நடையழகில்..! மெச்சுகின்ற உடையினிலே..!

கடமையில் கண்ணாய் இருப்பதாலா?
சலனமில்லா முற்ப்போக்காள்..!
பனிக்கட்டியாய் உருகினாள் சோகங்களில்..!
புகழ்ச்சியை புறந்தள்ளி ஓடுகின்றாள்..!

அனுபவங்களில் ஆயிரம் கதை கூறி குழந்தை தனை வளர்த்திடுவாள்..!
இறைப் பண்பில் எல்லை மீறி எல்லோரையும் தாங்கிடுவாள்..!
அமைதியில் ஆராவாரமற்று முடிவெடுப்பாள்..!

தாய்மை என்பதே தவ வாழ்க்கை..!
தரணியில் அதனால் பெரும்பேறு ..!
பெண்களில்லா அவனியிலே..! ஆண்கள் தேவை இருப்பதில்லை..!

ஆணும் காதலிக்கா கயல் மங்கையா?
சிலாகித்து வியந்தேன் பெண் பெருமை கண்டே..!

VERY NICE ONE...KEEP WRITING MA

March 14, 2023, 11:09:24 am
Reply #50

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #50 on: March 14, 2023, 11:09:24 am »
Thanks Sanjana sis ❤️

March 16, 2023, 07:58:32 pm
Reply #51

RiJiA

Re: என் கவிதை
« Reply #51 on: March 16, 2023, 07:58:32 pm »
தோற்றுப் போன உறவுகள்

சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டு, வெளிப்படைத் தன்மை எதிர்பார்க்கும் உறவுகள்!

உன் கருத்து, என் கருத்து என்றில்லாமல், ஒருவர் கருத்தியலுடன் ஒன்றிப் போகும் உறவுகள்!

வேண்டுமென்றே வலிய சிரிக்கும், வழக்கமான பாராட்டுக்கள், கிடைக்கப் பெறாத உறவுகள்!

அளப்பரிய வாழ்வின் ருசி மறந்து, அற்புதங்கள் நடக்குமா என எதிர்நோக்கும் உறவுகள் !

பொறுமையற்று, விருப்பங்கள் தேடப்படாமல், இன்னொருவரை எதிர்ப்பார்க்கும் உறவுகள்!

மனதின் குறுகலான எண்ணங்களுக்கு வழிவிட்டு, முடிவில் முட்டிக் கொள்ளும் உறவுகள்!

ஆழ்கடலின் எங்கோ ஓரிடத்தில், தேங்கிக் கிடக்கும் பூஞ்சைப் போன்று, அன்பை தேங்க விடும் உறவுகள்!

இவைதான் வாழ்வின் தடை செய்யப்பட்ட பக்கங்களை கொண்ட தோற்றுப் போன உறவுகள்!

💫ஆழ்கடலின் எங்கோ ஓரிடத்தில், தேங்கிக் கிடக்கும் பூஞ்சைப் போன்று, அன்பை தேங்க விடும் உறவுகள்💫

BEAUTIFUL  LINE DoLL❣SISS👏👏

March 17, 2023, 10:58:13 am
Reply #52

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #52 on: March 17, 2023, 10:58:13 am »
RiJiA sis Thank you so much 💕

March 23, 2023, 09:57:10 pm
Reply #53

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #53 on: March 23, 2023, 09:57:10 pm »
RoJa அக்கா பிறந்தநாள் கவிதை

சிதறிய வார்த்தைகளின், அத்தனை வரிகளிலும் நீயே என் முதல் வரி!
வஞ்சியவள், கொஞ்சி கொஞ்சி பேசும் அன்பின் அகராதி!

மழலை மொழியில் பேசி, மனதை கவரும் குறும்புக்காரி!
மழை நேர குடையாக, மனமிறங்கி உடன் நிற்பவள்!
பாசமாக பேசி பேசி, பரவசப் படுத்துபவள்!

பூவிதழினுள் புதைந்திருக்கும் மகரந்தம் போல், என் மனதினுள்ளே புகுந்து கொண்ட, பாசப் பிணைப்பு!

ஆயிரம் ஆயிரம் கவலைகள் ஆழ்மனதில் இருந்தாலும், அன்போடு சிரிக்க வைக்கும் அவள் பாங்கு!

உற்ற சகோதரியின், உள்ளூர ஊறிப் போன வார்த்தை, 'அம்மூ' எனும் அழகிய வார்த்தை!
நித்தம் பேசும் நினைவுகள் எத்தனை,
நீ இல்லா நாட்கள் எனக்கோ, பெரும் வேதனை!

இப்பிறவியில் என்றும், எவ் விநாடியிலும், நான் மறவா ஓர் உறவு, என் 'அக்கா' எனும் அசைக்க முடியா அன்பின் உறவு.!

அன்புடன்
அம்மூ

March 24, 2023, 01:45:41 pm
Reply #54

Sanjana

Re: என் கவிதை
« Reply #54 on: March 24, 2023, 01:45:41 pm »
So awesome...really proud of you sis ma..

March 25, 2023, 08:28:15 am
Reply #55

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #55 on: March 25, 2023, 08:28:15 am »
Thank you so much sis Sanjana 🦋❤️

March 25, 2023, 09:36:33 am
Reply #56

RiJiA

Re: என் கவிதை
« Reply #56 on: March 25, 2023, 09:36:33 am »
RoJa அக்கா பிறந்தநாள் கவிதை

சிதறிய வார்த்தைகளின், அத்தனை வரிகளிலும் நீயே என் முதல் வரி!
வஞ்சியவள், கொஞ்சி கொஞ்சி பேசும் அன்பின் அகராதி!

மழலை மொழியில் பேசி, மனதை கவரும் குறும்புக்காரி!
மழை நேர குடையாக, மனமிறங்கி உடன் நிற்பவள்!
பாசமாக பேசி பேசி, பரவசப் படுத்துபவள்!

பூவிதழினுள் புதைந்திருக்கும் மகரந்தம் போல், என் மனதினுள்ளே புகுந்து கொண்ட, பாசப் பிணைப்பு!

ஆயிரம் ஆயிரம் கவலைகள் ஆழ்மனதில் இருந்தாலும், அன்போடு சிரிக்க வைக்கும் அவள் பாங்கு!

உற்ற சகோதரியின், உள்ளூர ஊறிப் போன வார்த்தை, 'அம்மூ' எனும் அழகிய வார்த்தை!
நித்தம் பேசும் நினைவுகள் எத்தனை,
நீ இல்லா நாட்கள் எனக்கோ, பெரும் வேதனை!

இப்பிறவியில் என்றும், எவ் விநாடியிலும், நான் மறவா ஓர் உறவு, என் 'அக்கா' எனும் அசைக்க முடியா அன்பின் உறவு.!

அன்புடன்
அம்மூ

SISS DOLL❣ Rombe Alagane Kavithai..Unge Rendu Perukum Ulle Urevu Neenge Kavithai Vaasikkum Pothu Na Nallaave  Unarthen..Kavithaiyil Aalam Iruntathu Athai Vaasithe Unggal Kuralil Oru Aluttham Irunthathu"Inthe Aalamum Alutthamum Unggal Iruvarin Urevil Endrendrum Thodare Vendum  EN VAALTUKKAL❣

« Last Edit: March 25, 2023, 04:04:44 pm by RiJiA »

March 26, 2023, 04:40:37 pm
Reply #57

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #57 on: March 26, 2023, 04:40:37 pm »
RiJiA Sis Thank you so much 💗

April 15, 2023, 04:13:47 pm
Reply #58

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #58 on: April 15, 2023, 04:13:47 pm »
முகமூடி மனிதன்

கருமேகம் போல் அடர்ந்த தலை முடியும் மழை தருமோ?
சிவந்த கண்களும் சீற்றங் கொண்ட பார்வையும் சொல்ல விழைவது என்னவோ?

முகம் மறைப்பதா?
முகமூடி அணிவதா?

மங்கை மனதால் மையல் கொள்ள மயங்க வைக்கும் மான்விழியான்.
மறைமுகமாய் ஒலிக்கும் புன்னகையின் சத்தத்தினை ஒழித்து வைக்கும் ஓர வஞ்சனையான்.

முகத் திரையை விலக்கி முழுமதியை முகத்தில் காட்ட மறுப்பானா?
சுவாரசியமான பக்கத்தில் பத்திரமாய் ஒளிந்து கொண்ட காரணமற்ற வரிகளாவானா?

முழுவதுமாக காட்டி விடும் உணர்ச்சிகளை மூடி மறைக்க போட்டுக் கொண்ட முகமூடியோ?
களங்கமற்ற மனதினிலே காலம் கட்டமைத்த கழற்றி எறிய மறுத்த முகமூடியோ?

நல்ல பெயரை எடுக்க நாளும் அணியும் முகமூடி.
உண்மையற்ற மனிதனிடத்தில் உற்சாகமாய் ஏறிக் கொள்ளும் முகமூடி.
நகலற்று நீயாக நீ இருந்தால் சுதந்திரமற்று சுற்றலில் விடும் முகமூடி.

 மூகமூடியற்று வாழ்ந்து விடும் மனிதனிங்கு எவனுமில்லை.
 
நிஜத்தின் சாயம் அங்கங்கே ஒட்டிக் கொள்ள கழற்ற நினைக்கும் முகத்திரையும் விலக மறுத்து தானே மூடிக் கொள்ளும் காலமிது.

April 15, 2023, 04:20:05 pm
Reply #59

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #59 on: April 15, 2023, 04:20:05 pm »
காய்ச்சல்

தொட்டு பார்க்கும் அன்னையின் கரம் போல காலை கண்விழிப்பில் கதகதப்பு தாண்டி ஒரு உஷ்ணம் என்னை தொட்டு செல்கிறது.

தேநீருடன் தொடங்கும் நாளின்று நா வரண்டு சுவை உணர்வுகள் கசந்து கிடக்கிறது.

சோர்ந்து போன கண்களும் தூங்க மனமின்றி வெறுமனே கண்களை மூடிக் கொண்டது.

சுறுசுறுப்பாக காற்றில் பறக்கும் கால்களும் சுமையாக சுருண்டு கிடக்கிறது.

நிழலாக பின்தொடரும் அம்மா கூட கஞ்சியும், காய்ந்து போன ரொட்டியையும் கையில் வைத்து காத்திருக்கிறாள்.

மாத்திரையின் வாசம் நினைக்கும் போதே குமட்டல் வந்து ஓட வைக்கிறது.

சக்கரம் ஓயாமல் ஓடிக் கொண்டிருந்தால் என்றோ ஒருநாள் அச்சாணி முறிந்து அதன் அஸ்திவாரம் அசைந்து போகும்.

மனித வாழ்க்கையிலும் ஓய்வாக காய்ச்சல் வந்ததாக எண்ணி ஓட்டத்திற்கு இடைவெளி கொடுப்போம்.