கால்கள் நடைபோட
கதை பேசிய
நாட்களெல்லாம்
காலக் குறிப்பேட்டில்
நான் கண்ட போது
கதை சொல்கிறது ..
அவளோ..,,!!
எளிமையின் சிகரமாய்
தூய்மையின் உள்ளமாய்
கருணை காட்டும் கண்களாய்
அன்பு நிறைந்த நெஞ்சமாய்
இயற்கையின் துணைகொண்டு இயல்பாய்ப் பழகும் தங்கத் தாமரை
அகராதியில் இல்லாத ஆழமான தமிழ் ததும்பும் சொற்களுக்கு சொந்தக்காரி😇
இவளோ..,,,!!
விட்டுக் கொடுக்கும் மனம் கொண்ட பட்டத்து ராணி
வட்ட நில முகம் கொண்ட பட்டுவண்ண தேனீ🫶
சொல்லும் சொல்லில் அன்பை வைத்து வெல்லும் வித்தையை அறிந்து கொண்டவள் அவள்
அத்தனை மனதையும் அரவணைக்க முடியாது எனினும் அணைந்து விடாமல் காப்பது அவள்
சிட்டுக் குருவியாய் சிறகடித்த பட்டு நிலா காலம் அது
மொட்டு விட்டு என் மனதை தொட்டு போ என்கிறது
திருட்டு மாங்காய் பறித்து திகட்ட கடித்து தின்றோம்
விரட்டி ஓடிச்சென்று தட்டான் பிடித்து நின்றோம்
குச்சி ஐஸ் வாங்கி வந்து எச்சில் ஒழுக சுவைத்தோம்
உச்சி வெயில் நேரத்திலும் பட்சி மொழி கதைத்தோம்
அவளின் சமையலறையோ.,,,!!
முடிசூடா ராணியாய் அடியெடுத்து வைக்க
படபடவென கடுகு சரவெடி வெடிக்க
வாசம் கொண்டு வரவேற்கும் பெருங்காயம்
அழவைத்து அரங்கேறும் வெங்காயம்
அத்தனையும் அவள் கைப்பக்குவத்தில் இணையும்போது சமையலின் வாசம்!! சகலமும் பேசும்!!