GTC FORUM

POEMS - கவிதைகள் => கவிதையும் கானமும் => Topic started by: Administrator on January 16, 2023, 10:29:03 pm

Title: கவிதையும் கானமும்-014
Post by: Administrator on January 16, 2023, 10:29:03 pm
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.




இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

(https://globaltamilchat.com/forum/upload1/KG/kk014.jpg)

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
Title: Re: கவிதையும் கானமும்-014
Post by: AniTa on January 17, 2023, 12:32:48 am
  சற்றும் அறிமுகம் இல்லாத ஒரு பந்தம்
ரத்த சம்பந்தம் இன்றி அன்புடன் அழைத்தது
அக்கா என்று...
அந்த அழைப்பை மனம் ஏனோ ஏற்றுக்கொண்டது.
இனம் புரியாத பாசம் வந்தது.
நிஜத்தில் ஒரு தம்பி இருப்பதினாலோ என்னவோ.

தினசரி நாளிதழாய் உன் மன குமுறல்கள்.
அதை படிக்கும் எனக்கு தரும் புன்னகைகள்.
தவறாமல் பதில் மடல் எழுதும் என் கரங்கள்.
வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிய வைக்கும்
முயற்சிகள்...

உன்னுடைய நற்பன்புகள், நன்னடத்தைகள்..
அதிசயத்து போனேன் பல தடவை.
நாட்கள் சென்றது எனதன்பு கூடியது.
நிழலை விட்டு நிஜத்திற்கு வந்தாய்.
உன் கனவுகள், முயற்சிகளை வரிசை படுத்தினாய்
அதை கேட்டு மனம் பெருமிதத்தில்.
என்னை போல் ஓர் உறவு பல கனவுகளுடன்...

வாழ்வில் சந்திக்கும் நல்லதை மட்டும்
உன்னுடன் எடுத்து செல்.
அது உனக்கான பலத்தையும் ஊக்கத்தையும் தரும்.
வாழ்வின் மிக முக்கிய தருணத்தில் உன் பயணம்,
அதில் நீ விவேகமாகவும் புத்திசாலியாகவும்
சென்றிட என் வாழ்த்துக்கள்...

என்னை சந்திக்க வருவாயா அக்கா என்ற
நீ கேட்ட வினா..
ஒரு கணம் முகத்தில் புன்னகை....
கடல் கடந்து இருந்தாலும் உன்னை
உன்னை விரைவில் வந்து சந்திப்பேன்,
அதற்கான காலநேரம் வரும்பொழுது.

இது படத்திற்கான கவிதை வரி அல்ல,
என் அன்பு தம்பிக்கு என் பாச வரிகள்.
என்றென்றும் எப்பொழுதும்
உன்னுடன் நான்.....


I dedicate this to my brother Yash 😄
Title: Re: கவிதையும் கானமும்-014
Post by: Killivalavan on January 17, 2023, 01:07:18 am

நீ தொலைவில் வரும் போது
என் ரத்தத்தில் பூவாய் பூக்கும்
புத்துணர்ச்சி !

உன் நெற்றில்
ஒட்டியிருந்த பொட்டை
என் வீட்டுக் கண்ணாடியில்
ஒட்டி வைத்து ரசிக்கும்
 ரசிகன் நான் !

நீ எழுதி அனுப்பிய கடிதத்தில்
உன் உதடு தடவிய பசையை
என் விரல்கள்
தேடிப்பார்த்து தடவிப் பார்க்கும்...

உன் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம்
என் உதட்டில்
தேனூறும்  உணர்வை
உணர்ந்திருக்கிறேன்...

நீ சாலையில்
நடந்து செல்லும் போது
அமாவாசை இரவு கூட
பவுர்ணமியாய் பிரகாசிக்கும்

இப்படி வெகுகாலம்  தொலைவில்
 இருந்தே உன்னை ரசித்தவன் நான்.

இன்று என் அருகில்   
எனை உரச நீ அமர்ந்து
என் தோள்மீது கை இடுகையில்   
இனம்புரியாத புது உணர்வில் நான்.

மயில் தோகையின் மென்மையையும் 
அளவில்லா அன்பையும் உன் ஸ்பரிஸம்
உணர்த்திடுதே ...
வாழ்வின் வரமான  இந்த நிமிடங்கள்
என்றென்றும் தொடர வேண்டும் ..



என்னவளோடான நெருக்கம்
இதே போல் தொடர
இறைவனை வேண்டுகிறேன்...


Tq for giving this wonderful opportunity.
BY killivallavan
Title: Re: கவிதையும் கானமும்-014
Post by: Yash on January 17, 2023, 11:51:02 am
கால்கள் நடைபோட
கதை பேசிய
நாட்களெல்லாம்
காலக் குறிப்பேட்டில்
நான் கண்ட போது
கதை சொல்கிறது ..

அவளோ..,,!!

எளிமையின் சிகரமாய்

தூய்மையின் உள்ளமாய்

கருணை காட்டும் கண்களாய்
 
அன்பு நிறைந்த நெஞ்சமாய்


இயற்கையின் துணைகொண்டு இயல்பாய்ப் பழகும் தங்கத் தாமரை

அகராதியில் இல்லாத ஆழமான தமிழ் ததும்பும் சொற்களுக்கு சொந்தக்காரி😇

இவளோ..,,,!!

விட்டுக் கொடுக்கும் மனம் கொண்ட பட்டத்து ராணி

வட்ட நில முகம் கொண்ட பட்டுவண்ண தேனீ🫶

சொல்லும் சொல்லில் அன்பை வைத்து வெல்லும் வித்தையை அறிந்து கொண்டவள் அவள்


அத்தனை மனதையும் அரவணைக்க முடியாது எனினும் அணைந்து விடாமல் காப்பது அவள்

சிட்டுக் குருவியாய் சிறகடித்த பட்டு நிலா காலம் அது

மொட்டு விட்டு என் மனதை தொட்டு போ என்கிறது

திருட்டு மாங்காய் பறித்து திகட்ட கடித்து தின்றோம்

விரட்டி ஓடிச்சென்று தட்டான் பிடித்து நின்றோம்

குச்சி ஐஸ் வாங்கி வந்து எச்சில் ஒழுக சுவைத்தோம்

உச்சி வெயில் நேரத்திலும் பட்சி மொழி கதைத்தோம்

அவளின் சமையலறையோ.,,,!!

முடிசூடா ராணியாய் அடியெடுத்து வைக்க

படபடவென கடுகு சரவெடி வெடிக்க

வாசம் கொண்டு வரவேற்கும் பெருங்காயம்

அழவைத்து அரங்கேறும் வெங்காயம்

அத்தனையும் அவள் கைப்பக்குவத்தில் இணையும்போது சமையலின் வாசம்!! சகலமும் பேசும்!!
Title: Re: கவிதையும் கானமும்-014
Post by: Barbie Doll on January 17, 2023, 12:27:19 pm
அன்புள்ள சகோதரா..

உன்னை பற்றி நினைக்கையில் நாம் சேர்ந்து விளையாடிய நாட்களும், சண்டையிட்ட நாட்களுமே நினைவில் வருகிறது..!!

இரண்டு பேர் சண்டையில் நீதிபதி ஆகி தீர்ப்பு வழங்கும் தந்தையின் நிலை எத்தனை பரிதாபத்திற்க்குரியது ...!!

உன்னுடைய எத்தனை ரகசியங்கள் என்னால் உடைபட்டு அப்பாவின் கோபத்திற்கு ஆளாக்கியது.. !! 

இருந்தும் சகோதரா..!!  நீயே எப்போதும் என் நண்பன் ஆக இருக்கின்றாய்.. !!

இன்றும் உன் ரகசியங்கள் அறிந்த ஒரே பெண் நானே.. !!

கருவறை உறவே.. !
தொப்புள் கொடி சொந்தமே..!
நாம் ஒன்றாக பிறந்தோம், ஒன்றாக வளர்ந்தோம் ..!!

பகிர்தலில் ஆரம்பித்து அனைத்திலும் என் பாதியாக இருந்தாய் நீ..,!!

துன்பத்தில் இருக்கும் போதுதான் அறிந்தேன்  உன் உண்மை அன்பை.. எவ்வளவு பாசக்காரன் நீ...!!!

தந்தைக்கு இணையான அன்பை கொடுக்க எப்போதும் தயாராக இருப்பாயடா நீ..!!

உனக்கான வாழ்க்கையில் பாதி முடிவுகள் எடுக்கும் உரிமையை என்னை தவிர வேறு யாருக்கும் விட்டு தர மாட்டேனடா..!!

அளவில்லா அன்பிற்கு சொந்தக்காரனே.. !

அக்கறை மற்றும் அறிவுரை வழங்குவதில் தந்தையை மிஞ்சுபவனே... !

சகோதரியின் பாதுகாப்பில் அரணாக விளங்குபவனே... !

வாழ்க்கை முழுவதும் அனைத்திற்கும் துணையாக வர இருப்பவனே..!

உன்னுடன் எத்தனை நினைவுகள் கொட்டிக் கிடக்கின்றன..!!

பிறப்பு முதல் இறப்பு வரை மயிலிறகு போல் சண்டையும், கடலளவு பாசத்துடனும் பயணிக்கலாம் வா என் அன்பு சகோதரனே..!!
Title: Re: கவிதையும் கானமும்-014
Post by: Intraneurals on January 18, 2023, 10:16:19 am
சகோதரன் சகோதரி:

சக உதரன் சக உதிரி சகோதர சகோதரி!
உதிரம்  மெய்யே
ஐம்பொறியில் கண் குற்றமிழைக்காத வரை
திருந்துவதும் திருத்தப்பட வேண்டியதும் பார்வையை!
நினைவெதுவோ பார்வை அதுவே
பார்வையெதுவோ நினைவு அதுவே
நினைப்பும் மறப்புமாய் இருக்கின்ற மாயம் மாய்கையே!
உதிரத்தில் சகவென்றிரு
சகத்தில் சக உதரன் உதிரியாகிடு நெஞ்சே!
Title: Re: கவிதையும் கானமும்-014
Post by: kittY on January 18, 2023, 05:47:19 pm
தம்பி எனும் தங்கத்துக்கு....👫

என் அழகான சொந்தம் ஒன்று எனக்கு பின்னால் பிறந்தாயோ அதிகாரம் செய்யும் அக்காவாக நானும்....சேட்டை செய்ய நீயும் பிறந்தாயே என் செல்ல தம்பி.....

அண்ணன் இல்லாத ஏக்கம் என்னுள் இருந்தாலும்... உன்னை பார்க்கும் போது அது காணாமல் போனது அன்பு செல்ல என்  சகோதரா....

பக்கத்தில் இருந்த போது பகைவன் போல் பார்ப்பேன்... நீ தொலை தூரம் சென்றதும் வேதனையில் துடித்து  போனேன்..
சிறு சிறு சண்டைகள் சேட்டைகள்
உன்னை அழவைத்து பார்க்கும் ஆனந்தத்தை கடவுள் எனக்கு மட்டும் கொடுத்தார்...

பார்பதற்கு தான் நாம் சண்டை காரர்கள்.... உண்மையில் நாம் பாசக்காரர்கள்....
 இன்று சண்டை போட நீ இல்லை கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாய்... கடலளவு பாசத்துடன் உன் வருகைக்கு ஏங்கி கொண்டிருக்கின்றேன்... அன்பு சகோதரா.... நீ என் சகோதரன் உருவத்தில் இருக்கும் என் நண்பன் தான்....

எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை சகோதரன்... சகோதரனாய் நீ எனக்கு  கிடைத்தது எனக்கு மிகவும் பெருமிதம்....
வார்தயால் அதை விவரிக்க தேவையில்லை வார்த்தைக்கும் பஞ்சம் வந்து விடும்....

என் அன்பு சகோதரா என் சேட்டைக்கு சொந்தக்கார..... உனக்காக நான் ஒரே ஒரு அக்காவாக...எனக்கு நி ஒரே ஒரு தம்பியாக இருப்பதில் கர்வம் கொள்கிறது மனம்.....
நம் இந்த சேட்டை சண்டை பயணம் குறும்புத்தனம் வாழ்நாளும் தொடர வேண்டும் என் நெஞ்சோடு ஒரு ஏக்கம்.....என் செல்ல தம்பியே.....👫
Title: Re: கவிதையும் கானமும்-014
Post by: Sanjana on January 18, 2023, 11:50:41 pm

நண்பனின்  நினைவில்....

நட்பு எவ்வளவு முக்கியம் தெரியுமா?
நீங்கள் அவர்களை இழக்கும்போது மட்டுமே
அதன் வலி உங்களுக்குத் தெரியும்
உங்களுக்கு ஒரு நண்பர் இருந்தால்,
அவரை உயிராக, பிரியா உறவாக வைத்திருங்கள்
ஏனென்றால் நண்பர்கள் இல்லாமல் நீங்கள் ஏழை.

நண்பனே ...
அமர்ந்து பேசிய புல்வெளியும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உன்னோடு பழகிய காலங்கள் யாவும்
கனவாய் என்னை மூடுதடா
அழகிய காலமும் நீதான் கொடுத்தாய்
அழியாத ரணமும் நீதான் கொடுத்தாய்
நெருப்பாலும் முடியாதடா
உன் நினைவுகளை அழிப்பதற்கு...

நீ பேசி போன வார்த்தைகள் எல்லாம் காதில் கேட்கும்
காயங்கள் ரணமாய் கொள்ளும்
விடைகளே கேள்வியாய் ஆகிறதே
காலங்கள் ஒடும் இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
மண்ணை விட்டு போனாலும் என்னை விட்டு போகவில்லை
உடல் மட்டும் தான் விடைப்பெற்றது
உயிர் என்றும் என்னோடுதான்...

தென்றல் வந்து போனது போல் என் வாழ்வில் வந்தாய்
சுவாசிக்கு முன்பே விட்டுப் பிரிந்தாய்
கல்லாறையில் கூட ஐன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடா
நண்பா நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே
பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன்...



I DEDICATE THIS TO MY DEAREST CHILDHOOD FRIEND VIKRAM...MISS YOU A LOT DA VIKI...

KG இல் பங்கேற்பதற்கான இந்த வாய்ப்பிற்கு நன்றி. KG டீம் தனது பணியை மிகவும் சிறப்பாக  செய்கிறது...தொடருங்கள்