Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-013  (Read 15109 times)

December 25, 2022, 11:44:59 pm
Read 15109 times

Administrator

கவிதையும் கானமும்-013
« on: December 25, 2022, 11:44:59 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.



இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்தியா நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

December 26, 2022, 01:39:03 am
Reply #1
Re: கவிதையும் கானமும்-013
« Reply #1 on: December 26, 2022, 01:39:03 am »
எதிர்ப்பாராத ஓர் த்ரோகத்தின்
சகதிக்குள் சிக்குண்டு
திணறி வெளியே வந்த போது.

அளவீடே அன்றி நேசித்த
பிறகான காலமதில்...!
விலகுதல் ஒன்று
திடீரென ஏற்பட்ட போது.

பெருந்துயர்களின்
பெரு வெளியொன்றில்
அப்படியே மொத்தமாய்
தனித்து விடப்பட்ட போது.

அருகே ஒட்டி உறவாடிய ஓர் நெஞ்சம் அவ்வப்போது
விலகலை நேர்த்தியாய்
உணர்த்தும் போது.

அதி கனமான நம்பிக்கைகள்
மிகச் சாதாரணமாக
நசுக்கி உடைக்கப்படும் போது.

சலனமே இல்லாமல்
மிகச் சிறப்பாக பேச்சற்று
ஒதுங்கி விடும் போது
ஒதுக்கப்படும் போது.

முன்போல் நேசப் பரிமாற்றங்கள்
அற்றுப் போய்
ஏக்கங்களோடு
தூரமாக்கப்படும் போது.

ஆனந்தமாய் நகர
புன்னகையை தந்தோரே...!
உயிர் வதைக்கும்
அழுகைக்கு காரணியாய் மாறும் போது.

நிரந்தரமென்று
எதுவுமே இல்லை என்பதை
பிற்பாடு காலம் உணர்த்தும் போது.

இச்சந்தர்பங்கள் எல்லாம் தரும்
அளவற்ற வலிகளுக்கு
பழகிக் கொண்டு
அதனூடாக கிடைக்கப் பெற்ற
நிகரற்ற அனுபவங்கள்
உணர்த்திவிட்டுச் சென்ற
எல்லாமும் தான்,

வாழ்வின் நகர்தலில்
நீங்காத இடத்தை
நினைவுகளால்
நிரப்பிக் கொண்டிருக்கிறது.

December 27, 2022, 04:13:45 am
Reply #2

Mellisai

Re: கவிதையும் கானமும்-013
« Reply #2 on: December 27, 2022, 04:13:45 am »
தனி அறையில் என் கண்களை மூடிக்கொண்டேன்.
தனிமையின் இருளில் என்னை நானே தேடிக் கொண்டேன்.
என்னை நான் தேடும் அந்த இருளில்
என்னை தேடி வந்த ஒவ்வொரு கரங்களையும் நான் பிடித்துக் கொண்டேன்.

அடிமையின் கரங்கள் அவை யென்றால் அறுத்து விடலாம்.
இவைஅன்பின் கரங்கள் ஆயிற்றே !
அனைத்துக் கொண்டேன்
அன்போடு அணைத்துக் கொண்டேன்.

என் தலையை தொட்டது என் தாயின் கரங்கள் !
என் விரல்களைப் பற்றியது என்னை விட்டுக் கொடுக்காத என் அண்ணனின் கரங்கள் !
என்னை கட்டி அணைத்தது
மண்ணை விட்டுப் போனாலும் என்னை விட்டு போகாத அக்காவின் கரங்கள் !
இறுதியாய் என்னை தட்டி எழுப்பியது
அந்தப் பிஞ்சுக் கரங்கள்
இருளில் இருக்காதே வா என்னோடு என்று .
சட்டென விழித்தேன் நான் சுமக்காத என் மகன் அவனுக்காக.

என்னவரே ! 🔅
உன்னிடம் சரணடைய துடிக்கும்
என் கரங்களில் நான் விழித்தேன்.
எனக்காய் இத்தனை கரங்கள் இருந்தும்
என் கரங்கள் உன்னை சேர்ந்திடவே துடிக்கிறேதே !
எப்படி சொல்வேன் என்ற தயக்கத்திலே‌
என் கரங்களை வைத்தே என் முகத்தைமூடி அழுது கொள்கிறேன்.

என்ன பயமோ ?
என்ன தயக்கமோ ?
என் ஆழ்மனதில் என்ன குழப்பமோ ?
இறைவா இதில் யார் பிழையோ ?
நல்ல மகளாக இருப்பதோ ?
இல்லை நான் பெண்ணாக
பிறந்ததுவோ ?
எத்தனை எத்தனை கேள்விகள் என்னுள் ?
அத்தனையும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்
எனக்குள்ளே நான் சுமந்து திரிகிறேன்
விடைகளைத் தேடி.
🌞🔅🔆☀🌞🔅🔆⛅🌅☀️
P/S: Special Credit To My Deva, Sivarudran For Helping Me with The Kavithai. Nanbenda
#MuluvuthumKarpanaigalInthaKavithai~
« Last Edit: December 27, 2022, 05:59:48 am by Mellisai »

December 28, 2022, 05:34:52 pm
Reply #3

Barbie Doll

Re: கவிதையும் கானமும்-013
« Reply #3 on: December 28, 2022, 05:34:52 pm »
நிழலாக துரத்தும் பயத்தினை விட்டு நிஜத்திற்கு வாருங்கள் என்பதற்கான கவிதை இது... !!!

நம்மால் படிக்க முடியுமா என்ற பயம், படித்தால் சரியான வேலை கிடைக்குமா என்ற பயம், மற்றவர் முன் பேச பயம், சிரிக்க பயம் , கேள்வி கேட்க பயம், கேள்விகளை எதிர் கொள்ள பயம், இப்படி எத்தனை பயம் நம் வாழ்க்கையில்?..

எதற்காக இத்தனை பயம் நம்மில்??
ஒரு நொடி கூட நிரந்தரம் இல்லாத வாழ்வில் இத்தனை பயம் அவசியம் தானா ??
முகம் இல்லா முகமூடி ஆக்கும் இந்த பயத்தை நாம் விட்டு தள்ள வேண்டாமா??
இந்த பயம் நம்முடனே பயணிக்கும் ஆட்கொல்லி அல்லவா.. !
நம் எதிர்கால கனவை நனவாக்க விடாமல் தடுக்கும் ஆற்றல் மிக்கது அல்லவா...!


நம்பிக்கையை விதைத்து பயத்தை களைந்தெடுக்கும் நேரமல்லவா இது...!!!
தோற்று விட்டோமே என்று முயற்சி செய்ய பயந்தால் வெற்றியின் வழி தன் பாதைகளை மூடிக் கொள்ளும்..!
இதற்கு தீர்வு தான் என்ன ??


ஆழ் கடலில் துடுப்பின்றி படகில் தனியே மாட்டிக் கொள்ளும் நிலையைக் கூட இந்த வாழ்க்கை நமக்கு கொடுக்கலாம்... !!
பயம் இருப்பவர் ஆழ் கடலில் மூழ்குவார்..!!
பயம் விலக்கு பவர் தன் கைகளையே துடுப்பாக்கி கரை சேருவார்..!!

பேருந்தின் கடைசி படிக்கட்டில் பயணிக்க பயம் தான்.. !!
இருந்தும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று மனம் சொல்லும்... !!
அதுபோல  தான் வாழ்க்கையும் எத்தனை பயங்கள் நம்மை பின்னோக்கி இழுத்தாலும் நம் நம்பிக்கை என்னும் முயற்சியால் முன்னோக்கி செல்வோம்.. !!!

December 28, 2022, 08:08:22 pm
Reply #4

kittY

Re: கவிதையும் கானமும்-013
« Reply #4 on: December 28, 2022, 08:08:22 pm »
வெள்ளை மனதோடும் துள்ளி விளையாடும் இந்த சிறுவர்கள் தான் தேசத்தை ஆளப்பொகும் நாளைய தலைவர்கள்....
 
சாதிக்கப் பிறந்த சாதனையாளர்களின் சாதனைகளோ சாகடிக்கப்படுகின்றன..எங்கும் குழந்தைகளின் கூக்குரல் சில வரிகளாக.....

பொய் அறியாத பண்பு குழந்தையின் அன்பு...
சின்னஞ்சிறு பூக்களே
எழில் மின்னும் இள மொட்டுக்களே பள்ளிக்கூட சோலைக்குள்ளே துள்ளி பறக்கும் சிட்டுக்களே!

நாங்கள் கூட வீட்டிற்குள் அடைக்கப்பட்ட விளையாட்டு கைதிகள் தானே....
கிட்டிபுல், கிளித்தட்டு, கிளை மரத்து ஊஞ்சல் அன்று.... புழுதி அள்ளி விளையாடும் பொற்காலம் அதை மாற்றி கணினி உள்ளே விளையாடும் காலமாக மாற்றியதேனோ.... அன்பான நெஞ்சங்கள் துள்ளி எழும்! பயம் அது கண்டால் அடங்கி விடும்...கோபத்தை காட்டி விடாதே ! எம்       இறக்கைகளை உடைத்து விடாதே!!!

இன்று கல்வி கூட கைபேசியில் அடங்கி விட்டன! அதற்குள்ளே பிஞ்சி உள்ளங்கள் முடங்கி விட்டன.....சொந்தங்கள் தொலை தூரம் மனதிலே ஒரு பாரம்...

பட்டாம்பூச்சிகளாய் சிறகுவிரிப்பாய்!
எட்டாச் சிகரத்தையும் ஏறி மிதிப்பாய்!
பயத்தை சற்று விலக்கி விடுவாய்!
மனதிலே வீரம் கொள்வாய்!

அவசரகால உலகமிது!!
இன்னல்கள் வந்து சேரும் சமூகமிது...தனிமை படுத்தியது ஏனோ!
சொந்தங்கள் கரம் தேடி அலையும் பிஞ்சு உள்ளங்கள் நாம்...மற்றோர் கரம் கண்டு அஞ்சுவது ஏனோ.... மனித நேயம் மறந்து விட எங்களை அடக்கும் கரங்களை விளங்கிடுவோம்!

மனிதரில் உண்டு பல இனம்-தீய மனிதனின் உள்ளம் சுகயீனம்...
நல்லதை ஏற்று நடந்திடு! நீ கெட்டதை ஏற்க மறுத்திடு!! சுற்றி நடப்பதை நன்றாக புரிந்திடு அதற்கு ஏற்றாற் போல் திட்டமிடு..

சொந்தமும் சொர்க்கம் தான் அந்த சொர்க்கமும் தொலைவில் தான்... சொர்க்கத்தை பார்ப்பதும் வாரத்தில் ஒரு முறை தான் அதுவும் தொலைபேசி எனும் அலைபேசியில் தான்.....

சின்னஞ் சிறு மலரே! உன் ஏக்கங்கள் தொலையட்டும்... உன் சிறகுகள் உடைக்கும் கரங்கள் உடையட்டும் உன் அன்பு நெஞ்சங்கள் நெருங்கட்டும் உறவுகள் தொடரட்டும்! கல்வியை கையில் எடு
அறிவை மெருகூட்டு... புது புது சாதனை படை... அதையே கேடய(ம்)மாக்கு!

ஒளி வீச துடிக்கும் நட்சத்திரங்களே மறைத்திடும் நிழல்களை விலக்கிடுவோம். பிஞ்சு நெஞ்சங்களின் மலர்வுக்கு வழி செய்வோம்....

December 28, 2022, 09:04:19 pm
Reply #5

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: கவிதையும் கானமும்-013
« Reply #5 on: December 28, 2022, 09:04:19 pm »
முதலில் இந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்த Cofee Boy அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. தலைப்பைப் பார்க்கும் பொழுதே கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது😇💐

RiJiA சகோதரி அவர்களே இந்த கவிதையை உங்களுடைய அழகான குரலில் கேட்பதற்கு மகிழ்ச்சி! அதற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்😇💐


வாடாத பூ முகம் கொண்டவள் அவள்

பாடாத கவிஞர்கள் உண்டா அவளை

அவள் தேடுகிற பாதையில் முட்கள் அதிகம்

பட்டால் அவளால் தாங்குவது கடினம்

நரகம் கொதிக்கும் நெருப்பைப் போல  பல அரக்கன் நடக்கும் தரையில் அவள் பாதம் வேண்டாம்

அடிமை என்ற சொல் மறைந்தது

மடமை என்ற சொல் மறைந்ததா??

காலை மலரும் பூ அவளது அழகிய கூந்தலில் அழகாய் சிவக்கலாம்

மாலை வந்தால் அது அவளால் கசக்க பட வேண்டும்

எத்தனையோ மாற்றங்களை பெண்ணுலகம் கண்டதுண்டு

ஆனால் இச்சையோடு பார்க்கும் கண்கள் மாறல இன்று

மாதம் மூன்று நாட்கள் மட்டுமல்ல வேதனை

ஆளான பின்னாலே அத்தனை நாளும் சோதனை


பாரதி தேடும் பெண்ணாய் பாதி மனம் மாறிடுச்சே

மீதி மனம் மாறாத சமூகத்தால் வாடிடிச்சே!!

ஆணாக பிறந்து இருக்கலாமே என்று ஏங்காத பெண்ணாய் பார்த்துக் கொள்வதே!! பெண்களுக்கான நாம் கொடுக்கும் உண்மையான சுதந்திரம் ஆண் இனமே!!🧢

புரியும் என்று நம்புகிறேன்!! உணர்ந்தால் நலமே🙏🏼
« Last Edit: December 29, 2022, 10:18:24 am by Yash »

December 28, 2022, 10:48:30 pm
Reply #6
Re: கவிதையும் கானமும்-013
« Reply #6 on: December 28, 2022, 10:48:30 pm »
பசுந்தளிரே !
பைங்கிளியே !
பத்துமாத கருவறை இருள் பழகிப்போனது தானே உனக்கென்றே !
அஞ்சும் பிஞ்சு உனை  அடியோடு
 அழிக்க துடிக்கும் அரக்கர்கள் அலையும்
உலகில் நீ அவதி கொள்ளாதே என்றே அச்சப்பட்டே
ஆள் இல்லா அறையில் அடைத்து வைத்தாளோ உன் தாய் !
பாழாகிப்போன நாட்டில்
அங்கே பயிர்களை பலிகேட்கும்
பெருச்சாளிகளின் சலசலப்பால்
பாவம் பெத்தவள் மனதில் இங்கே படபடப்பு.

பல பிசாசகளின் பேய் கரங்கள் உன்னை பலியெடுப்பதால்
பள்ளிச் சாலைகள் உனக்கு சிறையானதோ !

பயம் கொள்ளாதே !
பாய்ந்து விளையாடும் வயதில் நீ ஓய்ந்து ஒடுங்காதே !
இந்த
ஓநாய்கள் சூழ் உலகில்
நீ ஒதுங்கி சென்றாலும்
உன்னை பதுங்கி தாக்கும்
பாவிகள் தான் இங்கே ஏராளம் !

இருண்ட அறையில்
மருண்டு போகாதே !
எழுந்து வா வெளியே !
சூரிய கதிர்கள்
ஓர் அறைக்குள்
சுனங்கிப்போவதா ?

சுடர்விட்டு வெளியே வா !
சுடுகாட்டு பேய்களை
சுட்டெரிக்க சுழன்று வா !
ரத்தம் கொதிக்க
யுத்தம் கொள்
ரெளத்திரம் பழகு
சாட்டையை சுழற்று
சரித்திரம் அதிரட்டும் !

கண்ணாமூச்சி ஆடிடும்
பட்டாம்பூச்சி நீ
கண் கலங்கி
கவலை கொள்வதா ?
உன் மீது கரம் உயர்த்தி
வரம்பு மீறும் வௌவால்களின் நரம்பறுக்க
கையில் பிரம்பு எடு !

முள் இல்லா ரோஜா
நீ என்பதால் கிள்ளி
ஏறிவாரோ ?
முன்னோர் தந்த வீரக்கலைகளை உன்னுள் உரமாக்கு
மோகம் கொண்ட மூடர்களுக்கு இனி நீ
முள்ளாகு !
« Last Edit: December 28, 2022, 10:53:02 pm by Sivarudran »

December 29, 2022, 11:27:55 pm
Reply #7

Sanjana

Re: கவிதையும் கானமும்-013
« Reply #7 on: December 29, 2022, 11:27:55 pm »
வலிகளைத் தாங்கி
வறுமைகளைத் தாங்கி
வாழ்க்கை முழுவதும்
வலிகளே வாழ்க்கையா?

கருவிலேயே கருவறுக்கும்
கயவர்கள் நிறைந்தவர்கள்
காமனுடன் கைகோர்த்து
கனவை அழிப்பவர்கள்...

மழலை நான்
மாது என உணரும் முன்பே
மடிந்தேன் மிருகங்களின்
மெய் பசிக்கு விருந்தாகி...

ஆலயத்தின் சிலையும்
கண் திறவாது
நீதி மன்ற சிலையின்
கண்கட்டும் அவிழாது
என்றே அரங்கேறியதா?
என் கோர நிலையை பார்க்க மறுத்ததா?...

பெண்ணாலே உந்தன்
பாவத்தால் பெற்றவளும்
பாவமாகிறாள் உன்னாலே
பாலியல் வன் கொடுமை
பிஞ்சின் மனதையே பறித்துப்
படு குழியில் புதைத்து விடுகிறிர்கள்...



KG இல் பங்கேற்பதற்கான இந்த வாய்ப்பிற்கு நன்றி. KG டீம் தனது பணியை நன்றாக  செய்கிறது...தொடருங்கள்....
« Last Edit: December 30, 2022, 01:31:02 am by Sanjana »