உயிர்களுக்கு பசி இருக்கும் வரை இந்த உலகில், விவசாயம் இருந்து கொண்டிருக்கும்..
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
மாரி மழை பொழிந்து,
உழைப்பால் உண்டான உணவை உண்டு பசியாறிய மனிதன், பசியாற்றிய விவசாயம் மறந்ததேனோ? உணவை அறுவடை செய்யும் அவனை, அவன் உயிரை அறுவடை செய்யும் நிலைமைக்கு கொண்டு சென்றது ஏனோ?..
உயிர்களுக்கு வரமாக கிடைத்த வாழ்வாதாரமே விவசாயம்.., விவசாயம் தன்னை வாழ வைக்கும் என நம்பிக்கை கொண்டு உழைக்கும் விவாசாயி நிலை என்று மாறும் ?..
மழை பொழியும் என்று நம்பி வானம் பார்க்கும் விவசாயியை, ஏமாற்றாமல் இயற்கை மழையை கொடுத்தது.. ஆனால் அனைத்து உயிரினங்களுக்கும் உணவு கொடுக்கும் விவசாயிகளின் உழைப்பை மட்டும் உறிஞ்சி அவர்களுக்கான வாழ்வாதாரத்தை கொடுக்க மறுக்கும் இந்த உலகம் எத்தனை கொடுமையானது..!!
இந்த நிலை மாற விவசாயத்தை பாதுகாக்கும் முன், உழைக்கும் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாத்தல் அவசியம்.. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை, விவசாய வாழ்க்கைதான் என்று இந்த உலகம் உணர்ந்து கொள்ளும் தருணம் விவசாயம் அடுத்த நிலைக்கு உயரும்..
இந்த மண், மனிதன், அனைத்து உயிர்களை காக்கும் விவசாயம் காப்போம்..விவசாயிகளின் வாழ்க்கைக்கு வெற்றியை பரிசளிப்போம்..விவசாயத்தை பாதுகாப்போம்...