Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-012  (Read 15293 times)

December 12, 2022, 12:18:02 am
Read 15293 times

Administrator

கவிதையும் கானமும்-012
« on: December 12, 2022, 12:18:02 am »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.



இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்தியா நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

December 12, 2022, 03:10:07 pm
Reply #1

RavaNaN

Re: கவிதையும் கானமும்-012
« Reply #1 on: December 12, 2022, 03:10:07 pm »
நெல்விளையும்  சோலைகளோ
கல்விளையும் சூளையாக 
ஏர்பூட்டிய உழவனோ
ஏக்கமாய் எதிர்பார்க்க

கண்கலங்கிட வான்மகளோ
விண்ணைவிட்டு மண்ணை சேர
ஏரியினை தூர்த்தவனோ
ஏக்கர்கணக்கில் ஏலமிட்டான்

மழைக்கும் வெயிலுக்கும்
மறைவாக நின்றவனை
மரம்நடத்தான் மன்றாட
மணிபிளான்ட்டை நட்டுவிட்டு
மார்தட்டி நின்றானே

கானகத்தை அழித்தவனோ
காகிதத்தில் அச்சடித்தான்
மரம்வளர்ப்போம்
மழைபெறுவோமென்று


இன்றோ மண்குடிக்க நீரில்லை
மரம்வளர்க்க நாதியில்லை
மாசுற்கு இங்கு இடமுண்டு
மாஸ்க்கோடு வலம்வந்து
மாற்றான் முகம் மறந்து
மண்ணிலே வாழ்கிறோம்
மண்ணில் மூழ்கும்வரை

                      -இப்படிக்கு இராவணன் என்கிற பச்சப்பிள்ளை
« Last Edit: December 12, 2022, 03:26:38 pm by RavaNaN »

December 12, 2022, 06:14:14 pm
Reply #2

Eagle 13

Re: கவிதையும் கானமும்-012
« Reply #2 on: December 12, 2022, 06:14:14 pm »
உணவே

மருந்து

அதை

தினமும்

அருந்து

உன்வாழ்யில் சிறந்து

விளங்கவேண்டுமென்றால்,

தினமும் உன்பாய் நல்ல விருந்து!

தமிழினமே!

நீ விவசாயத்தை விட்டு  சென்றோம்!
வேறு தொழிலுக்கு பறந்து !
விவசாயத்தை  முடக்கி விட்டால்! நாட்டின் வளர்சி எப்படி  வளரும் சிறந்து!
கல்தோன்றி மண்தோன்றா காலத்தில்

பிறந்த மூத்த குடியே!


விவசாயம் தான் முதல் தொழிலே! விதி வழியே!
.வெள்ளையனே,

 நாட்டை சிறைபிடித்தான் இயற்கை வளங்களை கண்டு!

இன்று! இந்தியனே, விளைநிலங்களை சிதறடிக்கிறான்!
வியாபார நோக்கம் கொண்டு!
மனிதா!

நீயோ வீடுகட்டி குடிபுகுந்தாய்

இயற்கை

வளங்களை ஏமாற்றி!

இயற்கை சீற்றங்களோ உன்னை

காட்டி கொடுத்தது உன் தவறுகளை


சுட்டிகாட்டி!

இந்த நாட்டின் முதுகெலும்பாம்

வேளாண்மை!

அதை சரிவர பரமரிக்காதாது நம்

ஒவ்வொருவரின் இயலாமை!

நம்

கையை

விட்டு சென்ற

விளைநிலங்களை மட்டும் விட்டுவிடுவோம்!
 இனி விவசாயத்தை அழிக்க நிணைப்பவர்களை விரட்டியடிப்போம்!

நாம் அனைவரும் ஒன்றினைவோம்.

விவசாயம் காக்க!

நாம் அனைவரும் விவசாயிக்கு

வழிவிடுவோம்! நாட்டின் வறுமையை போக்க!.
நன்றி நன்றி!
« Last Edit: December 18, 2022, 07:13:58 pm by Eagle 13 »

December 12, 2022, 07:10:57 pm
Reply #3
Re: கவிதையும் கானமும்-012
« Reply #3 on: December 12, 2022, 07:10:57 pm »
ஏலே நா  உங்க விவசாயி !
என் வார்த்தைக்கு நீ கொஞ்சம் செவி சாயி !

தண்ணீர் விட்டா பயிர் வளர்த்தேன்
என் செந்நீர் விட்டே பயிர் வளர்த்தேன் !

என் நெஞ்சில் உறம் இருக்க
நிலத்தில் விளைய நஞ்சு உரம் எதற்கு  ?

வாஸ்து சாஸ்திரம் பார்த்ததில்ல !
வானிலை அறிக்கை கேட்டதில்ல !
விலைப்பட்டியல் ஏதும் கையில் இல்ல !
விலை உயர்ந்த ஏட்டுக்கல்வி எனக்கு தேவையில்ல !
என் பாட்டன் தந்த பாதையிலே ! பச்சமண்ணு பாசத்திலே
பாவி மக்கா உங்க பசியாத்த நா தினமும் பட்டினி கிடந்தேனே !

கழனியிலே கதிரடிக்கையிலே
நா பேசம் சொல்லும் சிதறாம
நான் வீசும் நெல்லும் சிதறாம ,
பக்குவமா பதப்படுத்தி பத்திரமா கொண்டு வந்தேனே !
பட்டணத்து மக்கா நீங்க பசியாற நா தினமும் வெயிலிலே வெந்தேனே !

நா காவிரி தண்ணீ கேட்டதுண்டு .
என் கவலை நீங்க அழுததுண்டு.
தேடிச் சோறு தின்னதுண்டு .
வானம் பார்த்து
தவித்ததுண்டு.
வாடி வதங்கி நின்னதுண்டு.
என் வயிறு வத்தி போனாலும்
நா என் மண்ணைவிட்டுப் போனதுண்டா ?

ஏலே ! நெல்லு போட்ட இடமெல்லாம் கல்லுநட்டு வச்சி 
காலி மனை விற்பனைக்குன்னு நீ போர்டு வெச்சா ?
உன் வசதிக்கு வீடு  இருக்கும் .
உன் வயித்துக்கு சோறு இருக்குமா ?
வயிறு பசிச்சா சோறுக்கு பதிலா
சுவர பிச்சியா சாப்பிடுவ ?

கையில் வேலை ஆயிரம் இருந்தும் விவசாயமே எங்க
வாழ்வாதாரமென்று வாழும் மானத் தமிழர் நாங்க நிறையா உண்டு.
கடவுள் வந்து சொன்னாலும் கழனி விட்டு போக மாட்டோம் !
வானம் பார்த்து நின்னாலும் வயலை விட்டு போக மாட்டோம் ! 
எங்க நிலத்தைத் தூண்டாடும் பாவிகளே !
நாளைக்கு உங்க புள்ள குட்டிகளை திண்டாட விட்டுறாதீங்க!
மண்ணுக்கு ஈரம் உண்டு
மனுஷ பய மனசுல ஈரம் உண்டா ?
பயிர் போனால் உயிர் போச்சு கேட்டுக்கோ சொல்லிட்டேன் !
பத்திரமா பாத்துக்கோ பசியாத்தும் என்னோட பச்ச மண்ண .....

December 14, 2022, 08:28:54 am
Reply #4

kittY

Re: கவிதையும் கானமும்-012
« Reply #4 on: December 14, 2022, 08:28:54 am »
★★★வறுமையின் நிறம் பச்சை★★★

இடியோ மின்னலோ
வெய்யிலோ மழையோ
இரவோ பகலோ மண்ணோடு நான் என்னோடு யார்...

நீலமே வானமாய்...
பசுமையே பூமியாய்
உழவனின் காதலால் மண்ணை உடைக்கின்றான்...
அதனுள் மர்மம் படைக்கிறான்...

நெல் மணி நீ விவசாயிகளின் கண்மணி...
நீ விதைத்த விதைகள்...எங்கள் வாழ்வின் உயிர் நாடி..
நன்றி மறவா நல்லவனே உமக்கு நன்றி சொல்ல சிறு பங்கு கவிதை இது....

மண்ணோடு விண்ணுக்கு வந்த காதல்..இந்த மண்ணோடும் உழவனுக்கும் வந்த ஒருதலை காதல் தான் விவசாயம்... விவசாயி வியார்வை சிந்தியாதால் விண் மேகம் கண்ணீர் சிந்தியதே....

பட்டம் பதவி பேர் புகழ் அனைத்தும் மண்ணோடு போராடும் விவசாயின் சோற்றுக்காக தான்...

காட்டில் வேலை செய்பவன் கேவலமாம்
கணினி இல் வேலை செய்பவன் கௌரவமாம்.... என்று நினைப்பவர்களுக்கு தெரியவில்லையா அரிசியை இன்டெர்நெட்டில்  டவுன்லோட் செய்ய முடியாது என்று....
தகுதி பார்க்கும் மக்களே.. விவசாயின் கால் படாமல் உனக்கு ஏது மா சோறு இதை உன் இதய இன்டெர்நெட்டில் கொஞ்சம் தேடி பாரு....

போலியாக நடிக்க தெரியாத கெளரவ தொழிலே விவசாயம்....
கஷ்டத்தை இஷ்டப்பட்டு செய்கின்ற உழவரே உம்மை நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்க கூடாது....

December 15, 2022, 12:12:18 pm
Reply #5

Sanjana

Re: கவிதையும் கானமும்-012
« Reply #5 on: December 15, 2022, 12:12:18 pm »
"வா நண்பனே !
வயலுக்கு செல்லலாம் !
சேற்றில் கால் வைத்து
நாம் விவசாயம் செய்யலாம் !
நாற்று நடவு செய்து
மக்களின் உணவை அறுவடை செய்யலாம்!!"

"படித்து, படித்து பட்டதாரி ஆகி
வெளிநாடு சென்ற காலம் போகட்டும்!!
மறந்து, மறந்து தாய்நாட்டை மறந்து
விவசாயத்தை மறந்த காலம் மறையட்டும்!!
இனி உள்ளூரிலேயே உழைத்திடுவோம்,
உழவன் என்று சொல்லி நம் நெஞ்சை நிமிர்த்திடுவோம்!!
நம் நாகரீகங்களின் புதுமையை மறந்து
விவசாயத்தின் பெருமையை உணர்ந்திடுவோம்!!
நம் நாட்டை விவசாயம் செய்து வளர்த்திடுவோம்!!"

"இளைஞர் கூட்டம் இணைந்துவிட்டால்
இன்பம் எங்கும் பரவி நிற்குமே!!
வாலிபர் கூட்டம் வயலில் நடந்தால்
வறண்ட நிலமும் பசுமை காணுமே!!"

"வானம் பார்த்து
ஏறு பூட்டி
விதை விதைத்து
முப்போகம்
விளைச்சல்யென்று
விவசாயம் பார்த்து
தலை நிமிர்ந்து
நடந்து சென்றான்
விவசாயி... ம்ம்
அது அந்த காலம்...!!"

"ஏர் ஓட்டம் இல்லையென்றால்
தேர் ஓட்டம் இல்லை என்பதை
எல்லோரும் நினைவில் வைத்து
நாட்டின் விவசாயத்தை
பாதுகாக்க சபதம் கொள்வோம்!!"
« Last Edit: December 15, 2022, 08:56:50 pm by Sanjana »

December 16, 2022, 04:08:55 pm
Reply #6

Barbie Doll

Re: கவிதையும் கானமும்-012
« Reply #6 on: December 16, 2022, 04:08:55 pm »
உயிர்களுக்கு பசி இருக்கும் வரை இந்த உலகில், விவசாயம் இருந்து கொண்டிருக்கும்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

மாரி மழை பொழிந்து,
உழைப்பால் உண்டான உணவை உண்டு பசியாறிய மனிதன், பசியாற்றிய விவசாயம் மறந்ததேனோ?  உணவை அறுவடை செய்யும் அவனை, அவன் உயிரை அறுவடை செய்யும் நிலைமைக்கு கொண்டு சென்றது ஏனோ?..

உயிர்களுக்கு வரமாக கிடைத்த வாழ்வாதாரமே விவசாயம்.., விவசாயம் தன்னை வாழ வைக்கும் என நம்பிக்கை கொண்டு உழைக்கும் விவாசாயி நிலை என்று மாறும் ?..

மழை பொழியும் என்று நம்பி வானம் பார்க்கும் விவசாயியை, ஏமாற்றாமல் இயற்கை மழையை கொடுத்தது.. ஆனால் அனைத்து உயிரினங்களுக்கும் உணவு கொடுக்கும் விவசாயிகளின் உழைப்பை மட்டும் உறிஞ்சி அவர்களுக்கான வாழ்வாதாரத்தை கொடுக்க மறுக்கும் இந்த உலகம் எத்தனை கொடுமையானது..!!


இந்த நிலை மாற விவசாயத்தை பாதுகாக்கும் முன், உழைக்கும் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாத்தல் அவசியம்.. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை, விவசாய வாழ்க்கைதான் என்று இந்த உலகம் உணர்ந்து கொள்ளும் தருணம் விவசாயம் அடுத்த நிலைக்கு உயரும்..

இந்த மண், மனிதன், அனைத்து உயிர்களை காக்கும் விவசாயம் காப்போம்..விவசாயிகளின் வாழ்க்கைக்கு வெற்றியை பரிசளிப்போம்..விவசாயத்தை பாதுகாப்போம்...
« Last Edit: December 16, 2022, 04:41:43 pm by BestFriend »

December 19, 2022, 01:12:58 am
Reply #7

Ishan

Re: கவிதையும் கானமும்-012
« Reply #7 on: December 19, 2022, 01:12:58 am »
விண்ணையும் மண்ணையும்
நன்கு உணர்ந்த
காலத்தையும் நேரத்தையும்
கண்டுபிடித்த
மானுட பிறப்பின் முதல் விஞ்ஞானி.

நீரின் மேன்மை அறிந்து
நிலத்தின் வளம் அறிந்து
மண்ணின் மகிமை அறிந்து
விதையின் விதியை கண்டறிந்துவன்.

கால்நடைகளை அரவணைத்து
காடுமேடுகளையும் கழனியாக்கி
இயற்கையோடு பின்னிப்பிணைந்து
தலைக்கணம் கொள்ளாமல் தன்னிலை மாறாத தங்கமகன்.

மண்ணை பொன்னாக மதித்து
விதையை வீரியமாக்கி
உழவுவை உயிராக கருதி
விளைந்து நிற்கும் நெல்மணி கதிர்தனை கடவுளாக போற்றுபவன்.

மாசு இல்லா சூழ்நிலை
கள்ளம் கபடமற்ற மனம்
உழைக்கும் சிந்தனை
எளிய வாழ்க்கை முறை
உலகத்துக்கே உணவு அளிக்கும் உன்னதம்
எல்லோர் மனதிலும் எப்போதும் குடியிருக்கும் நம்ம அன்பு "விவசாயி "

குழந்தையின் பசி போக்க உணவூட்டும்
அன்னை தெய்வம் என்றால்.
நம் பசி போக்க உளவூட்டும்
விவசாயியும் தெய்வம் தான்.

விவசாயமும் விவசாயியும்
உலகத்தின் இரு கண்கள்.
இரண்டும் இல்லாமல் நாளைய
தலைமுறை என்ன செய்யும்.
சிந்திப்போம் செயல்படுவோம்.
முக்கிய தேவைகளுள் முதலாம்
தேவை விவசாயம்.
விவசாயம் காப்போம்.
விவசாயியை காப்போம்
 

 
« Last Edit: December 19, 2022, 08:46:22 am by Ishan »