Advanced Search

Author Topic: திருக்குறள்  (Read 189966 times)

September 23, 2022, 12:30:30 pm
Reply #15

Arjun

Re: திருக்குறள்
« Reply #15 on: September 23, 2022, 12:30:30 pm »
Thooya arivu udaiyavan (Iraivan)

September 23, 2022, 07:13:42 pm
Reply #16

RiJiA

Re: திருக்குறள்
« Reply #16 on: September 23, 2022, 07:13:42 pm »
சபாஷ்  சரியான  பதில்  Arjun 👏🎉

⭐விடை:
Thooya arivu udaiyavan (Iraivan),
தூய்மையான அறிவு வடிவானவன் என்றுப் பொருள்படும்(இறைவன்)
« Last Edit: September 23, 2022, 07:15:35 pm by RiJiA »

September 23, 2022, 11:42:21 pm
Reply #17

RiJiA

Re: திருக்குறள்
« Reply #17 on: September 23, 2022, 11:42:21 pm »
6வது கேள்வி:

எந்த அதிகாரம் மட்டுமே திருக்குறளில் இருமுறை வருகிறது?

September 23, 2022, 11:47:28 pm
Reply #18

Sanjana

Re: திருக்குறள்
« Reply #18 on: September 23, 2022, 11:47:28 pm »
குறிப்பறிதல் என்ற அதிகாரம் மட்டுமே திருக்குறளில் இருமுறை வருகிறது.

September 24, 2022, 12:11:24 pm
Reply #19

RiJiA

Re: திருக்குறள்
« Reply #19 on: September 24, 2022, 12:11:24 pm »
SUPER SISS   சரியான  பதில் 👏🎉

⭐விடை:  குறிப்பறிதல்

September 24, 2022, 07:22:36 pm
Reply #20

RiJiA

Re: திருக்குறள்
« Reply #20 on: September 24, 2022, 07:22:36 pm »

7வது  கேள்வி:

திருக்குறளின் முதல் பெயர் முப்பால்.  அந்த மூன்று முப்பால் பெயர்களை குறிப்பிடவும்....

September 24, 2022, 11:44:58 pm
Reply #21

Sanjana

Re: திருக்குறள்
« Reply #21 on: September 24, 2022, 11:44:58 pm »
அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், 'முப்பால்' என்றும் அழைக்கப்படுகிறது.

September 25, 2022, 02:51:32 am
Reply #22

RiJiA

Re: திருக்குறள்
« Reply #22 on: September 25, 2022, 02:51:32 am »
சரியான  பதில்  SanJaNa  siss👏👏

⭐விடை: அறம், பொருள், இன்பம் அல்லது காமம்

September 25, 2022, 02:53:34 am
Reply #23

RiJiA

Re: திருக்குறள்
« Reply #23 on: September 25, 2022, 02:53:34 am »
8வது kelvi: TASK FOR Arjun, மற்றும் sarayu  siss,

Arjun 7வது கேள்விக்கான  பதில்  அறம், பொருள், இன்பம்  இதில்  ஏதாவது  ஒரு  வார்த்தையை   தேர்வு  செய்து  ஒரு முழுமையான வாக்கியம்  அமைக்கவும்.அந்த வாக்கியம்  கேள்வி  குறியாக  இருக்க  வேண்டும்..அந்த  கேள்விக்கு  sarayu  siss  பதில்  அளிக்க  வேண்டும்...🙂

September 25, 2022, 11:03:57 am
Reply #24

Arjun

Re: திருக்குறள்
« Reply #24 on: September 25, 2022, 11:03:57 am »
RiJiA, Great!!! different approach in question asking pattern. Appreciate it!!! I don't want to stop with one paragraph whereas you three are very active in this thread. So I have written 3 paragraphs and so each of you can share your views for one question.

1) அறம் :
அறம் என்றால் என்ன? திருவள்ளுவரின் வரிகளால் விளக்க வேண்டும் என்றால், பொறாமை, ஆசை, சினம் , கடுமையான சொற்கள் இந்த நான்கும் இல்லாமல் இருப்பதுவே அறம்.

கேள்வி : இந்த நான்கில் ஒன்றை இல்லாமல் செய்தால் அல்லது குறைத்து கொண்டால் ஏனைய மூன்றும் நம்முடைய கட்டுப்பாட்டுக்கு வரும். உங்கள் பார்வையில்  இந்த நான்கில் அது என்ன?

2) பொருள் : மனித வாழ்க்கையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற உலகம், நாம் இறுதியில் சென்று சேர கூடிய உலகம் என்ற இரண்டு உண்டு. இரண்டு உலகத்திலும் நாம் இன்பமாக இருப்பதற்கு ஏதோ ஒன்று தேவை. வள்ளுவரின் வரிகளில் பார்த்தோம் என்றால், இவ்வுலகில் வாழ பொருள் தேவை. அவ்வுலகில் வாழ அருள் தேவை.

கேள்வி : உங்கள் பார்வையில் அருள் என்றால் என்ன?

3) இன்பம் : காலம் மற்றும் வயது முதிர்ச்சிக்கேற்றபடி நம்முடைய (மனிதர்களுடைய) எண்ணங்களில் இன்பம் என்ற சொல்லுக்குண்டான சரியான அர்த்தம் வேறுபடுகிறது. இருந்தாலும் , இன்பம் இரண்டு வகைப்படும். அது சிற்றின்பம் மற்றும் பேரின்பம்.

கேள்வி : உங்கள் பார்வையில் சிற்றின்பம் / பேரின்பம் என்றால் என்ன?

I randomized the list and order is below.

1.   Sarayu (1st Question)
2.   Sanjana (2nd Question)
3.   RiJiA (3rd Question)

There is no right or wrong, only sharing our thoughts towards it.

September 25, 2022, 09:16:48 pm
Reply #25

SuNshiNe

Re: திருக்குறள்
« Reply #25 on: September 25, 2022, 09:16:48 pm »

எனக்கான கேள்வி :

பொறாமை, ஆசை, சினம் , கடுமையான சொற்கள் .......நான்கில் ஒன்றை இல்லாமல் செய்தால் அல்லது குறைத்து கொண்டால் ஏனைய மூன்றும் நம்முடைய கட்டுப்பாட்டுக்கு வரும். உங்கள் பார்வையில்  இந்த நான்கில் அது என்ன?

நான் தேர்வு செய்வது : ஆசை

ஏன்னென்றால் ஆசை மூலியமாகவே மற்ற மூன்றும் பிறக்கிறது .

ஆசை பேராசை ஆகும் பொழுது பொறாமை பிறக்கிறது மற்றவர்களை பார்த்து  ...

தன்னுடைய ஆசைகள் நிறைவேறாவிட்டால் சினம் முளைத்துக்கொள்ளும் ... சினத்தின் பால் மக்கள் கடும் சொற்களை உச்சரிக்க நேரிடுவர் .

ஆகையால் என் பார்வை கோணத்தில் ஆசை ஒன்றை கையாண்டு கொண்டால் மற்ற மூன்றையும் கட்டு படுத்தி கொள்ளலாம் ...

 :)

ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

September 26, 2022, 02:41:28 am
Reply #26

Sanjana

Re: திருக்குறள்
« Reply #26 on: September 26, 2022, 02:41:28 am »
எனக்கான கேள்வி :

உங்கள் பார்வையில் அருள் என்றால் என்ன?

 எனது பார்வையில் அருள் என்றால் இறைத்தன்மை ஆகும்.
அருள் என்பது கடவுள் தரும் கொடை. இரக்கத்தையும் நட்பையும் அடித்தளமாகக் கொண்ட கடவுளின் அருள் மனிதர்கள் ஆகிய  எமக்கு வழங்கப்படுகின்றது. அருள் நிரம்பிய வாழ்கை இருப்பின் வாழ்வில் இனிமையும் மேன்மையும் சேரும்.

 :)

September 26, 2022, 12:02:44 pm
Reply #27

RiJiA

Re: திருக்குறள்
« Reply #27 on: September 26, 2022, 12:02:44 pm »
Arjun  நான்  வைத்த task- கில்
இப்படி  ஓரு  twist  நான்  எதிர்  பார்க்கவில்லை.. பாராட்டுக்கள்👏👏👏👏👏👏

உங்கள்  3வது கேள்விக்கான  பதில்..

⭐(GOOGLE  SEARCH  ANS)
மனதை சுத்தம் செய்யும் நல்ல பழக்கவழக்கங்களை கற்று இறைவனை நோக்கி பயணம் செய்தால் பேரின்பம்.

⭐என்னுடைய  பதில்...
என்  தாய்  தந்தையை  மீண்டும்  பார்க்க  ஒரு  வாய்ப்பு  கிடைத்தால்  அதுதான்  எனக்கு பேரின்பம்...இப்பொழுது  எனக்கு  கிடைத்த  ஒரு  புதிய  உறவு  அதற்கு  சமம்...
« Last Edit: September 26, 2022, 02:54:54 pm by RiJiA »

September 26, 2022, 03:06:09 pm
Reply #28

Arjun

Re: திருக்குறள்
« Reply #28 on: September 26, 2022, 03:06:09 pm »
Great sharing all your thoughts!!! Congratulations Sarayu, Sanjana & RiJiA..

அருள் பற்றி மட்டும் சில கூடுதல் தகவல்கள் :

திருவள்ளுவரின் குறளின் படி அருள் எனப்படுவது,

"அன்பினால்‌ பெறப்பட்ட அருள்‌ என்று கூறப்படும்‌ குழந்தை, பொருள்‌ என்று கூறப்படும்‌ செல்வமுள்ள செவிலித்‌ தாயால்‌ வளர்வதாகும்‌." (757 வது திருக்குறள்)

அன்பினுடைய முதிர்ச்சி நிலை தான் அருள்.

September 26, 2022, 06:29:33 pm
Reply #29

RiJiA

Re: திருக்குறள்
« Reply #29 on: September 26, 2022, 06:29:33 pm »
⭐Sarayu siss,SanJaNa siss  மற்றும்  Arjun - க்கு நன்றிகள்... இந்த  task  ரொம்ப  அழகா  கொண்டு  போனிங்க...வாழ்த்துக்கள் 👏👏👏💐💐💐