Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-066  (Read 10197 times)

April 07, 2026, 06:26:13 pm
Read 10197 times

RiJiA

கவிதையும் கானமும்-066
« on: April 07, 2026, 06:26:13 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-066


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.





மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: April 13, 2026, 06:11:48 pm by RiJiA »

April 08, 2026, 07:15:11 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-066
« Reply #1 on: April 08, 2026, 07:15:11 am »

நீ கொடுத்த காப்பியின் மனத்தையும் அதில் வரும் ஆவியில் என் இதயமும் ஆவியாய் போகிறதே மாமா என்று நீ அழைத்த நொடியினில் என்னை மறந்து உன் அழகை ரசித்த அந்த நொடியில் என் நெஞ்சில் தோன்றிய சில வரிகள்

மணமணக்கும் மல்லிகைக்கும் மயங்காதவன் நான்

நீ மாமா மாமா வென்று அழைக்கையில் மயங்கி விட்டேன்

இதுவரை இன்பத்தையே அறியாதவன் நான்

நீ மாமா மாமா வென்று அழைக்கையில் பல கோடி இன்பமடைகிறேன்

மனக்கவலையால் மறத்துப்போன என் உள்ளத்திற்கு

மாமா மாமா வென்று நீ அழைக்கையில் மருந்தாய் ஆறுதல் அளிக்கிறதடி

நான் தோல்வியினால் துவண்டு விழும் போதெல்லாம்

மாமா மாமா வென்று நீ அழைக்கும் மந்திரமே மனதில் வந்து ஆயிரம் யானை பலத்தை கொடுத்து எழுந்து அனைத்திலும் என்னை வெற்றி பெற செய்கிறதடி

உன் தித்திக்கும் தேன் குரலால் மாமா மாமா மாமா வென்று நீ என்னை அழைக்கும் தாரக மந்திரம் போதும்மடி எனக்கு
மரணத்தை வென்று மகிழ்வுடன் என்றும் நான் வாழ!!!

எப்போது நீ அழகு???
நிம்மதி நான் தேடி
உன்மடி சாயும்போது
என் தலை நீ கோதி
ஆறுதல் சொல்கையில்
அடி பெண்ணே நீ அழகு...

ஆயிரம் முறை முயன்று
சில முறை நான் தோற்று
தேம்பி அழும் நிலை கொண்டு
உன் தோள் நான் சாய
ஆறுதல் சொல்லும் போது
அடி பெண்ணே நீ அழகு...

அன்பாய் உன் குறு நகையும்
அம்மாவின் நினைவு சொல்லும்
உன் அன்படி ஆயிரம் வேண்டும்
எப்போதும் நீ வேண்டும்...
என்று நீ உணர்ந்து எனக்காக
நான் இருக்கிறேன் என்ற
நம்பிக்கையும் நீயும்
எப்போதும் அடி பெண்ணே
எந்நாளும் எனக்கழகு...

April 08, 2026, 09:29:07 am
Reply #2
Re: கவிதையும் கானமும்-066
« Reply #2 on: April 08, 2026, 09:29:07 am »
மௌனத்தில் நனைந்த நினைவுகள்

எழுத்து பிறக்காத விரல்களில்,
மெதுவாய் தொட்ட ஒரு தொடுதல்—
அந்த நொடியே
என் வாழ்வின் முதல் நினைவாய் நின்றது…
அந்த தொடுதல் போயினாலும்,
அதன் வெப்பம் மட்டும்
இன்னும் உள்ளத்தில் கரைகிறது…

பேசாத சொற்கள் கூட,
ஒரு சிரிப்பின் ஒளியில்
உயிர் பெற்ற நாட்கள்…
அருகில் இருந்த ஒவ்வொரு நொடியும்,
என்னுள் ஒரு உலகம் கட்டியது…

தொலைவில் நின்ற ஒவ்வொரு தருணமும்,
அந்த உலகத்தை மெதுவாக உடைத்தது…
புரியாத பாடங்கள் கூட,
ஒரு குரலில் தெளிந்தது…
இன்று அந்த குரல் மட்டும் இல்லை…
விழுந்த தருணங்களில்,
எழுப்பிய கரம் நினைவில் இருந்தாலும்,
அந்த கரம் இனி இல்லை என்பதே வலி…

பேருந்து பயணங்களில்,
நெருக்கமாக இருந்த அமைதி—
பேசாமல் கூட பல உணர்வுகள் சொன்னது…
பக்கவாட்டில் திரும்பிப் பார்த்த பார்வைகள்,
இன்று நினைவாக மட்டுமே மீண்டும் வருகிறது…
தொடர்வண்டி பயணங்களில்,
கூட்டத்தின் நடுவிலும்
ஒரே உருவம் தான் தெரிந்தது…
இன்று அதே கூட்டத்தில் நின்றாலும்,
கண்கள் தேடும் உருவம் இல்லை…

அருகில் இருந்த நேரம் நின்றது,
இன்று நேரம் மட்டும் ஓடுகிறது…
நிலையம் தோறும் பிரிந்த தருணங்கள்,
இன்று முடிவில்லா வெறுமை…
சொல்லப்படாத காதல்,
மௌனத்தில் மறைந்தாலும்—
இதயம் அதை மறக்கவில்லை…
நினைவுகள் மட்டும் மீதமாய்,
மெதுவாய் கண்ணீராக மாறுகிறது…

காதல் என்றால்—
பிரிந்த பின்பும்
உள்ளத்தில் உயிரோடு இருப்பதே… ✨
« Last Edit: April 08, 2026, 09:32:13 am by Peacemaker »

April 08, 2026, 11:25:25 am
Reply #3
Re: கவிதையும் கானமும்-066
« Reply #3 on: April 08, 2026, 11:25:25 am »
நீ என்னை பார்ப்பாயா

ஒளிந்து கண்டேனே...
மறைந்து நடந்தேனே...
கரைந்து சென்றேனே...

என்னை பார்ப்பாயா ?

தயங்கி கிடந்தேனே...
மயங்கி விழுந்தேனே...
இயங்கி மீண்டேனே...

என்னை பார்ப்பாயா ?

நீ செய்த குறும்பையுமே...
என் மனசு விரும்பியதாமே...
என்னிடம் திரும்பவில்லையே...

என்னை பார்ப்பாயா ?

உன்னோடு பேசும் எந்த நாள்...
என்னோட வாழ்வோ அந்த நாள்...
சந்தோசம் பொங்கும் இன்ப நாள்...

என்னை பார்ப்பாயா ?

கனவினில் வாழும் வாழ்க்கையை...
நிஜத்தினில் வாழ பார்க்கிறேன்...
ஒருமுறை வாய்ப்பு கொடுப்பாயா...

நீ என்னை பார்ப்பாயா ?[/b][/left]

- முகேஷ் ராஜா


After Long time i have wriitten This poetry....

Thank you Wings Nanbii Enna Again Kavitha elutha vachathukku...❤️

Thank you to GTC giving me this chance...❤️

This Kavithai dedicated to all Cute One side lovers...❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

April 09, 2026, 04:46:30 pm
Reply #4

Neelavaanam

Re: கவிதையும் கானமும்-066
« Reply #4 on: April 09, 2026, 04:46:30 pm »
மெய் மறந்தேன் பெண்ணே

மெய் சிலிர்த்தேன் பெண்ணே உன் அழகினில்
மெல்லிசை போல என் உள்ளம் உருகிட
உன் பார்வை என்னைத் தொடும் நொடியிலே
உலகமே நின்றது காதல் என்னும் மொழியிலே

மலரின் வாசம் கூட உன்னிடம் தோற்குமடி
நிலவின் ஒளி கூட உன் முகத்தில் மறைந்ததடி
உன் சிரிப்பில் விழுந்தது பழுதானது என் இதயம்
என் உயிர் முழுவதும் உன் காதல் உதயம்

உன் கை பிடித்த அந்த சிறு நேரம்
என் வாழ்நாளில் காணாத இனிய பேரானந்தம்
உன் அருகில் நின்ற ஒவ்வொரு நொடியும்
உன் அழகை கண்டு புதிய பிறவியாகும் என் மனம்

உன் பெயரை சொல்லும் என் உதடுகள்
என் உள்ளத்தில் பதிந்த காதல் எழுத்துகள்
உன் நினைவுகள் வந்து தழுவும் போதெல்லாம்
என் உள்ளம் பூவாய் மலர்ந்து நான் ஒளிர்கின்றேன்

கனவிலும் நீயே, விழித்தாலும் நீயே
என் கண்களின் உள்ளே பதிந்த தேவதையே
உன்னை நேசிப்பது வார்த்தை அல்ல பெண்ணே
அது உயிரோடு கலந்த உணர்ச்சி வெளிப்பாடு

உன்னை சுவாசித்து நான் வாழ்கிறேன்
உன்னோடு இருக்கவே நான் பிறந்தேன்
உன்னை காதலித்ததாலே நான் என்னை கண்டேன்
என் இதயத்தின் அர்த்தம் நீயே ஆனாய்

இதயத்தில் ஏன் இவ்வளவு பாரம்?
நீ என்னுள் வந்து குடியேறியதாலோ…
இனிமையான வலியாய் நீ இருந்தாலும்
அதை விட நான் மகிழ்வது இந்த உலகத்தில் என்ன ?

நான் என்றால் நீயே, நீ என்றால் நானே
இரு உயிர்கள் ஒன்றாய் இணைந்ததே
மெய் மறந்தேன் பெண்ணே உன் அழகினில்
என் உயிரே நீயாகி விட்டதடி பெண்ணே

மெய் மறந்தேன் பெண்ணே…
காணாத அழகை கண்டாற்போல் என் வாழ்வு மாறியது
உன்னை கண்ட நொடியிலே என் உலகம் பிறந்தது


என்றும் அன்புடன்
நீலவானம்

« Last Edit: April 09, 2026, 07:37:39 pm by Neelavaanam »

April 09, 2026, 06:26:15 pm
Reply #5
Re: கவிதையும் கானமும்-066
« Reply #5 on: April 09, 2026, 06:26:15 pm »
Tittle - ஜிம்மிக்கி ராஜ்யம்

மழை இல்லாத மாலை நேரம்,
மழையின் கீதம் என் காதில் ஒலிக்க.,
காரணம் அவள் அல்ல,
அவள் காதுல ஆடுற ஜிம்மிக்கிதான்! 🎻😄

காபி கப் ல இருந்து நீராவி எழுந்துச்சு,
அந்த ஜிம்மிக்கி தான்,
என் கவனத்தை full ah hijack பண்ணிச்சு!

டீ கப் முன்னாடி hero மாதிரி ukkandhen,
கூலா பேசணும்னு Mindset பண்ண,

Cup la tea cool ஆகிடுச்சு,
என் brain full ah boil ஆகிடுச்சு! ☕😂

அவள் ஜிம்மிக்கி slow motion la swing aana odane,
என் dialogue எல்லாம் cut ஆயிடுச்சு

அவள் ஜிம்மிக்கி left right aada,,
என் heart beat கூட,
அதோட rhythm கு sync ஆகுது!

Physics Class la Pendulam பத்தி படிச்சிருக்கேன்,
அது  அவள்  கம்மலை பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன்🤣

லவ் பண்றேன்னு சொல்லுவதற்கு பயமா இருந்தாலும்

ஜிமிக்கி எங்கே வாங்கினே என்று கேட்டுட்டு எழுந்து வந்துட்டேன்!

என் லைஃப்ல ஆச்சு Final  twist-uh

நான் ஜிமிக்கி பாக்குற  habit-ku illa switch-u! 🔌🤣

கதை முடியல இன்னும்,,

உனக்கு எப்ப தாண்டா கல்யாணம் ஆகும்னு என்
அம்மா சொல்றது நினைவுக்கு வர,

இந்த ஜிமிக்கிய தினமும் பார்க்க டிக்கெட் கிடைக்குமா
என்று அவளைக் கேட்க

என்னை நோக்கி அவள் திரும்பிய முகம் மலர்ந்த புன்னகையுடன் "டிங்" என்று அந்த ஜிமிக்கி சம்மதம் தெரிவித்தது😅❤️

April 09, 2026, 07:45:50 pm
Reply #6

Wings

Re: கவிதையும் கானமும்-066
« Reply #6 on: April 09, 2026, 07:45:50 pm »
என் மௌன புன்னகையின் பின்னால்,
மறைந்திருக்கும் ஒரு அழகான பெயர் — நீ…

என் இதயம் பெரிதாக ஒன்றும் கேட்கவில்லை…
தூரத்தில் இருந்தாலும்,
உன் சிரிப்பை ரசிக்கும் ஒரு வாய்ப்பு போதும்.

நீ என்னைப் பார்க்கும் அந்த நொடியில்,
என் உள்ளே பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன…

அது சில நொடிகள் தான் என தெரிந்தும்,
அந்த நொடி அழகிய நினைவு.

சில நேரங்களில் நீ என்னைப் பார்க்கிறாய்…
அது போதும்,
என் நாள் முழுவதும் ரசித்து சிரிக்க .

நீ ஒரு ஓவியம் நானோ எட்டி நின்று ரசிக்கும் ஒரு பார்வை

ஓவியம் எனது என்று சொல்ல ஆசை இருந்தும்…
ரசிக்க கிடைப்பதே போதும்.

உலகிற்கு சாதாரணம் போல் தோன்றும்
உன் சிறு சிறு செயல்களும்…
எனக்கோ அளவிட முடியாத பொக்கிஷம்.

ஒரு சிறு பார்வை…
ஒரு சிறு சொல்…
அல்லது ஒரு அமைதியும் கூட…

என் மனதில்
பெரும் மகிழ்ச்சிகளாக மாறுகின்றன.

என் கண்களில்,
நீ நிலா போல —
தூரத்தில் இருந்தும்
என் இரவுகளை அழகாக்குபவன்.

உன் குரல்…
என் நெஞ்சுக்குள் வந்து
இனிமையான இசையாக தங்குகிறது…

என் உள்ளத்தை மெதுவாக உருக்குகிறது.

உன் கோபத்திலும் கூட
நான் மயங்கி விடுகிறேன்…
அதையும் நான் நேசிக்கிறேன்.

நீ சில நேரம் என்னை புறக்கணித்தாலும்…
அதில் நான் வருத்தம் காணவில்லை…

ஏனெனில்,
உன்னை பார்க்கும் அந்த சிறு சந்தோஷம்
அதற்கும் மேலானது.

உன் நடை… உன் இருப்பு…
அமைதியான ஒரு நம்பிக்கை…

சொல்லாமல் பேசும்
பல கதைகள் உன்னுள் இருக்கின்றன.

ஒருநாள்
என் பெயர் உன் உதடுகளில் இல்லாமல் போகலாம்…

ஆனால்,
உன் பெயர்
என் மனதில் என்றும் ஒலிக்கிறது.

உனக்கு,
நான் ஒரு சாதாரண முகமாக இருக்கலாம்…

ஆனால் எனக்கு…
என் இதயம் யோசிக்காமல்
தேர்ந்தெடுத்த ஒரு அழகான உலகம் — நீ.

நீ என்னைப் பார்க்காமல்
கடந்து சென்றாலும்…

என் மனம் மட்டும்
உன்னையே தேர்ந்தெடுக்கிறது —
அமைதியாக… மகிழ்ச்சியாக.

பேசாமல் இருக்கும் இந்த காதலுக்குள்,
நான் ஒரு சிறிய உலகம் உருவாக்கி விட்டேன்…

அங்கு கனவுகளோடு....
மகிழ்ச்சியே அதிகம்.

நீ எனது அல்ல…

ஆனாலும்,
என் இதயத்தின்  பெரும்  இடம்
என்றும் உன்னுடையதே…

மென்மையாக…
தூய்மையாக.

உரிமை இல்லாமல்…
அழுத்தம் இல்லாமல்…

நான் தூரத்தில் நின்று
உன்னை பார்க்கிறேன்…

சிரிக்கிறேன்…
நேசிக்கிறேன்…
அமைதியாக.

ஒருநாள் நீ என் பார்வையில் இருந்து மறைந்தாலும்…

இந்த பாசம் மறையாது…

ஒரு அழகான நினைவாக
என்னுடன் இருக்கும்.

ஏனெனில்…
தூரத்தில் இருந்தும் உன்னை நேசித்தது
என் வாழ்க்கையின்
மிக அழகான பகுதி.

April 09, 2026, 10:59:30 pm
Reply #7

MDU

Re: கவிதையும் கானமும்-066
« Reply #7 on: April 09, 2026, 10:59:30 pm »
உன் காதல் ஒரு மழை அல்ல ஒரு புயல்



நான் உன்னை பார்த்துக் கொண்டே இருக்கும் அந்த நிமிடங்களில் உன் கண்களில் விழும் ஒளி
என் உள்ளத்தின் இருண்ட மூலைகளையும் மெதுவாகத் தொட்டு ஒரு புதிய உயிரை உண்டாக்கிறது.

நீ என் அருகில் நின்றால் காற்று கூட தன் திசையை மறந்து விடுகிறது,
உன் கண்களில் விழும் ஒளி என் இதயத்துக்குள் ஒரு ரகசிய தீபத்தை ஏற்றுகிறது.

நீ பேசும் ஒவ்வொரு மென்மையான சொல் என் உள்ளத்தின் ஆழத்தில்
அலைபாயும் இசையாக மாறுகிறது.

காற்றே அவள் அருகில் சென்றால் என் காதலை மெதுவாக அவள் காதோரம் சொல்லிவா.
அவள் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சிலும் அவள் நினைவின் நிழலை நான் கலந்திருக்கிறாய் என்று.

உன் கையை பிடித்த அந்த நொடியிலிருந்து என் உயிர் எப்பவும் உன்னோடு மட்டும் தான்.
எப்பவும் உன் கூட நான் இருப்பேன் சிரிப்பிலும் கண்ணீரிலும் வாழ்க்கையின் எல்லா சூழ்நிலையிலும்.

நம் இருவரின் கைகளும் கை சேர்ந்திருக்கும் அந்த நேரம் கூட காற்று சற்று நின்று ரசிக்கிறது.
நாம் மட்டும் பேசிக்கொண்டிருக்கும்போது காற்று கூட மெதுவாக வீசுகிறது நம்மை ரசித்து கொண்டே.

உன் தோளில் சாயும் அந்த ஒரு நொடி உலகமே சற்று நின்று நம்மை மட்டும் பார்த்து சிரிக்கிறது
காதல் என்ற வார்த்தை எத்தனை முறை கேட்டாலும் நீயே அதற்கான ஒரே அர்த்தம் என்று

தொலைவில் இருந்தாலும் உன்னை நேசிக்கிறேன் தொலைதூரம் தான் ஆனா என் உணர்வுகள் உன் அருகில்தான்
உன் குரல் கேட்காத நாள்கள் கூட என் நெஞ்சில் நீ பேசிக்கொண்டே இருக்கிறாய்.

ஒவ்வொரு இரவும் நிலவிடம் கேட்கிறேன் அவளை பார்த்தாயா? என்று
தூரம் என்னை உன்னிடம் இருந்து பிரித்தாலும் என் காதலை பிரிக்க முடியவில்லை

நீ அருகில் இல்லாத குறைதான் ஆனா நீ என் வாழ்க்கையில் இருப்பது பெரிய அதிர்ஷ்டம்…
ஒருநாள் இந்த தூரம் முடியும் நாட்களுக்காக என் கண்கள் காத்திருக்கிறது

உன் கண்கள் பேசும் மொழி என் இதயத்துக்கு மட்டும் புரியும் ரகசியம்
நீ ஒரு வார்த்தை சொல்லாமலே நான் ஆயிரம் காதலை உணர்ந்துவிடுறேன்.

உன் கண்களில் விழும் ஒளி என் இதயத்துக்கு எழுதும் கவிதை.
உன் சிரிப்பின் சின்னத் துளி என் வாழ்வை முழுக்க மாற்றும் மழை

உன் பெயரை சொல்லும் போதும்  என் நெஞ்சில் நிம்மதி ஊற்றுகிறது.
உன் அருகில் நின்ற ஒரு நொடி என் ஆயுள் முழுக்க நினைவாகிறது.

உன் கையைத் தொட்ட அந்தத் தருணம் நேரமே நின்று பார்த்தது .
உன் இதயத் துடிப்பை கேட்கும் போது என் உலகமே உன்னுள் மறைந்து போனது.

நீ அருகில் இருந்தால் நான் கவிதை நீ தொலைவில் இருந்தால் நான் ஏக்கம்.
நீயே என் காதல், என் மூச்சு,என் வாழ்வின் அழகான ரகசியம்.

உன் அருகில் நின்றாலே என் மூச்சே திசை மாறுகிறது…
உன் தோளில் விழும் என் விரல்கள் உன் இதயத்துடிப்பைத் தேடி ஓடுகிறது.

உன் உதட்டின் வெப்பம் என் உள்ளே எரியும் தீயை எழுப்புகிறது.
ஒரு முத்தம் கூட என் உலகத்தை முழுக்க உருக்கி விடுகிறது.

உன் கழுத்தில் சாயும் என் நெஞ்சம் உன் விரல்களில் சிக்கிக் கொள்ளும் என் மூச்சு
அந்த நொடியில் நான் நான் இல்லை உன் காதலின் வடிவமாக.

உன் தோல் தொடும் ஒவ்வொரு நொடியும் என் ரத்தமே இசை பாடுகிறது.
உன் கண்கள் என்னை நோக்கும்போது நேரமே தன் வேகத்தை மறந்து நிற்கிறது.

நீ என் அருகில் இருந்தால் உலகமே தேவையில்லை.
நீ என் மார்பில் சாய்ந்தால் என் உயிரே முழுக்க நிறைவு அடைகிறது.

உன் கண்கள் பேசும் காதல் கதை என் உள்ளம் முழுதும்  உனதாகி விடுகிறது.
ஒரு பார்வை மட்டும் போதும் நான் முழுவதும் உனதாகி விடுகிறேன்.

உலகம் முழுக்க குண்டுகள்  சத்தம் கேட்டு கொண்டிருந்தாலும் ,
நீ  சிரிக்கும் அந்த நொடியில் என் மனசுக்கு மட்டும் அமைதி கிடைக்கிறது.

உன் காதல் ஒரு மழை அல்ல ஒரு புயல்.
அதில் நான் தப்பிக்க விரும்பவில்லை முழுக்க முழுக்க மூழ்க விரும்புகிறேன்.
 


MB‑க்கு சமர்ப்பணம்

மௌனத்தில் கரைந்தது,
மெல்லிய மென்மையாய் திரும்பி வந்து,
ஒரு இதயத் துடிப்பாகவும்,
ஒரு மூச்சாகவும்,
ஒரு அர்த்தமாகவும் மாறி
அந்த மாற்றத்தின் நடுவில்,
அது உன்னைத் தேடி வந்தது.
என் அமைதியான எண்ணங்களுக்கு குரல் கிடைக்கும் இடம்,
மறைந்து போன ஒளி மீண்டும் வடிவம் பெறும் இடம்
அதுவே நீ

இப்படிக்கு,
உங்கள் MDU இது என் எழுத்து அல்ல என் உள்ளத்தின் ஒரு பகுதி.

« Last Edit: April 10, 2026, 08:42:39 pm by MDU »

April 11, 2026, 07:24:58 am
Reply #8

Crowny

Re: கவிதையும் கானமும்-066
« Reply #8 on: April 11, 2026, 07:24:58 am »
விழிகளின் மொழிகள்....

அடுக்கு மௌனங்கள் சூழ்ந்திருக்க,
அதிசய மொழியொன்று அங்கங்கே...

உதடுகள் பிரிந்து உரைக்காதப் பேச்சை,
உன் இரு விழிகள் கவிதையாய் வாசிக்குதே!

பேசும் வார்த்தைகள் பாதியில் நிற்க,
பேசாத மௌனமோ பல்லவி பாடுதே...

காதல் கடலில் விழுந்தவன் தத்தளிக்க,
கரை சேர்க்கும் துடுப்பாய் உன் பார்வை மாறுதே!

உன் கண்கள் பேசும் விந்தையை
கண்டுபிடிக்கத் தெரியாமல் - நான்
ஊமைப் பார்வையாளனாய்
உன்னருகே உறைந்து கிடக்கிறேன்!

எழுதாத ஒரு நீண்ட காவியத்தை
உன் கருவிழிகள் வாசிக்க - அதை
என் இதயம் மட்டும்
இசை தப்பாமல் ரசிக்கிறது!

உன் விழிகள் ஒரு புத்தகமென்றால்,
ஆயுள் முழுக்க நான் ஒரு வாசகனாய் இருப்பேன்.

பேசத் தெரியாத மொழியொன்றை,
உன் கருவிழிகள் எனக்குக் கற்றுத் தருகின்றன...
அதில் காதலைத் தவிர
வேறெந்த இலக்கணமும் இல்லை..

ஒரு ரகசியம் சொல்லவா.... சண்டை வரும்போதெல்லாம் வார்த்தைகள் தேடாமல்.... நாணத்தை தேட இரு விழிகள் நான்கு விழிகளோடு பேசிப்பார்..... இனி அடிக்கடி சண்டை போடுவாய், அந்த பார்வையில் தொலைவதற்காக....