துரோகத்தின் நிழல்முகமூடி அணிந்த முகங்கள் பல கண்டேன்.....
முகத்தினில் சிரிப்பும், மனத்தினில் வாளும் கண்டேன்....
கைகோர்த்து நடந்தவன், கையில் கத்தி வைத்தான்...
கண்ணோடு பேசினவன், கணக்கோடு பார்த்தான்....
நெஞ்சத்தைத் திறந்து நெருக்கத்தை வளர்த்தோம்..
நிழலெனத் தொடர்ந்து நிஜங்களைப் பகிர்ந்தோம்..
நம்பிக்கை கொடுத்து நட்பென்று நினைத்தோம்...
நட்பென வந்தவன் நஞ்சென்று உணர்ந்தோம்...
பாம்பொன்று புன்னகைத்தால் பாசமென்று நம்பாதே...
பட்டு போலப் பேசினாலும் பாம்பின் நஞ்சை மறந்திடாதே..
நெளிந்து வரும் நாகத்தின் நயத்தைப் போற்றாதே..
நெஞ்சுக்குள் நஞ்சேந்தும் நட்பினை ஏற்றாதே...
பொய்மையின் பாதையிலே, பெருமை என்றும் நிலைத்திடுமோ

??
துரோகத்தின் நிழலிலே, தூய்மை வந்து மலர்ந்திடுமோ

?
வாளினால் விழுந்த காயம், காலம் வந்து ஆற்றிடுமே......
வார்த்தையால் விழுந்த காயம்,வாழ்நாள் முழுதும் வாட்டிடுமே........
மலர்ந்த முகம் கண்டாலும், மனம் இனி மயங்காதே,...
முதுகிலே குத்திய கைகள், மறந்தாலும் மறையாதே....
நட்பெனும் பெயர் சூடினாலும், நம்பிக்கை இனி இல்லையே....
நிழலெனத் தொடர்ந்தாலும், நெருக்கம் இனி இல்லையே....
கண்ணாடித் துண்டுகள் காலடியில் சிதற,,,,,
கடந்த காலக் காட்சிகள் கண்முன்னே மிதக்க,,,,
ஒட்டிடலாம் கண்ணாடி , ஒட்டுமா நம்பிக்கை

உடைந்த நெஞ்சம் சேருமோ, உண்மையற்ற உறவில்

?
முன்னால் மலர்ந்த முகமே, முதுகிலே குத்தியதே,
மெல்ல வளர்ந்த நட்புமே, மறுபக்கம் நஞ்சானதே.....
நட்பெனும் பெயர் சூடினாலும், நம்பிக்கை இனி இல்லையே....
நிழலெனத் தொடர்ந்தாலும், நெருக்கம் இனி இல்லையே!!!!!!!
கோபம் கொழுந்தாய் நெஞ்சினிலே : கனலாக எரியட்டும்.....
கொடுத்த வலியின் சுவடுகள்: காலத்திற்குப் பாடமாகட்டும்....
வெறுப்பு பிறந்ததல்ல : வஞ்சகத்தின் விளைவு அது,......
விதைத்த வினை ஒருநாளில், விளைவாக வந்து நிற்குமே!!!!!!