Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-045  (Read 5119 times)

July 29, 2024, 03:24:47 pm
Read 5119 times

RiJiA

கவிதையும் கானமும்-045
« on: July 29, 2024, 03:24:47 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-045


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: August 20, 2024, 04:22:38 pm by RiJiA »

July 30, 2024, 09:32:02 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-045
« Reply #1 on: July 30, 2024, 09:32:02 am »
                        இசை மழை!!!

இன்னிசைச் சுரங்கள் ஏழும்
எண்ணிலாப் பண்கள் கூட்டும்!
தன்னிலை மறக்கச் செய்யும்;
தவிப்புகள் அடங்கிப் போகும்!
முன்னுள்ள பொருளிலெல்லாம்
முன்பில்லா அன்பு தோன்றும்;
வன்மமும் கழிந்து போகும்!

இசைவெள்ளம் பெருக்கெடுக்க
இன்பவெள்ளம் மடையுடைக்க
மதியில் மத்தாப்பு! மனதில் தீபாவளி!

உயிரோடு கலந்துவிட்ட ஒருபாடல் கேட்கையிலே உணர்வுகள் பொங்கும்! கண்ணீரும் பெருகும்!

தெவிட்டாத கீதங்கள் கேட்கும் தருணங்கள்
மனதில் பூகொட்டும் இன்ப தேன்சொட்டும்!

உணர்வுகள் ஒன்றி ஒருபாடல் கேட்கையிலே
உடல் தாளம்போடும் மனம் துள்ளியாடும்!

மனதோடு ஒட்டிக்கொண்ட
மயக்கும்வரி காதுகலைதொட
உள்ளம் இளகிவிடும் உவகை பெருகிவிடும்!

ஒருகீதம் கேட்கையிலே ஒன்றாகும் சிந்தையிலே
மனசு கரையும்! மதியும் மயங்கும்!

உயிருக்குள் கலந்தகீதம் உள்ளத்தில் இருக்கும்கீதம்
எப்போதும் உணர்வூட்டும் எங்கும் எழுச்சியூட்டும்!

கோபத்தை கரைக்கும் இசை!
குணத்தை வளர்க்கும் இசை!
கருணையை பெருக்கும் இசை!

உயிர்களை இணைக்கும் இசை!
நேசத்தை பரப்பும் இசை!
அன்பை உணர்த்தும் இசை!

இது இறைவனால் நமக்கென்று
படைக்கப்பட்ட ஒன்று ...

இசை இல்லா இடம் இருக்கும் என்றால்...

அங்கே எனக்கு அனுமதி கொடுங்கள்...

அது செவ்வாய் ​கிரகமா..?
இல்லை செவி ​இல்லா உலகமா ..?
என்று பார்த்து வருகிறேன் ...

இசை...!

தாயின் கருவில் இதய துடிப்பாக
நாம் கேட்டது ...

தந்தையின் ​முத்தத்தில் நித்தம் நித்தம்
நாம் கேட்டது ...

சகோதரிகளின் கொலுசுகளின்
கோர்வையில் கொத்து கொத்தாய்
நாம் கேட்டது...

நண்பர்களின் சிரிப்புகளில் தினந்தோறும்
நாம் கேட்டது...

எத்தனை... எத்தனை...

இன்பம் இந்த இசையிலே...

கேட்ட காதுகள் இருந்தும் ...
காலங்கள் போதாது போலும்...

மனிதனாய் பிறந்தோர் எல்லாம்..
கன நேரமாவது இசையில்
மனங்கள் மயங்கியே
தீரவேண்டும்...

இன்னும் கூட ...

இதயம் தொட்டு சொல்கிறேன்...

இசையை விட ஒரு இன்பம்
கிடைத்துவிட்டால்...

அடுத்த நொடியே..!

என் ஆயுளை முடித்துகொள்கிறேன்....!

என்றும் GTC நட்💐களுடன்
« Last Edit: July 30, 2024, 03:11:34 pm by Limat »

July 30, 2024, 01:49:01 pm
Reply #2

Kanmani

Re: கவிதையும் கானமும்-045
« Reply #2 on: July 30, 2024, 01:49:01 pm »
 ;)இணையத்திலும் இதயத்திலும்
என்னவணிண் நினைவை
துலிறுட்டவது இந்த இசை தான்
உண் மேல் உள்ள மயக்கத்தை
நினைப்பூட்டுவது இசை மழை
இசையின் ஓசை அனைத்தையும்
 மறக்கடிக்கும்
என்னவணை தவிர...
வாத்தியங்களில் வெளிவரும் இசை
விரல்கள் மீட்டுவதால் வரும்
விரல்கள் மீட்டும்போது என்னவண் தீண்டலே நினைவுக்கு வரும்
மனிதனின் உண்ணத படைப்பு இசை
கடவுளின் அற்புத படைப்பு என்னவண் மட்டுமே
என்னவணிண் நினைவை
 பிரதிபப்பது கவிதை
கவிதைக்கு உயிர்ருட்வது இசை
இசையின் ஒவ்வொரு வடிவம்
என்னவணிண் ஒவ்வொரு மெல்லிய குரலிலே கேட்கும் காதல் வார்த்தை...
நினைவை தூதனுப்பி
உன்னை அழைத்து வரும் வலிமை
இந்த இசைக்கு மட்டுமே உள்ள திறமை
காரணம் தெரியவில்லை
காதில் கேட்கும் ஒவ்வொரு இசைத்துளியும்
அண்ணையின் அரவணைப்பும்
என்னவணிண் நிணைப்பும் அலைமோதும்..
இந்த இசையால் தோற்று மட்டும் போகவில்லை
உண்ணுள் தொலைந்தும் போய்விட்டேன்
உன்னைக் காண
அடம்பிடிக்கும் மனதை சமாளித்து வருகின்றேன்
இசையுடண் இணைந்து..
« Last Edit: July 30, 2024, 01:55:10 pm by Kanmani »

July 31, 2024, 02:32:12 pm
Reply #3

Shree

Re: கவிதையும் கானமும்-045
« Reply #3 on: July 31, 2024, 02:32:12 pm »

என் உயிர்த்துடிப்பு நீயே


உருவமே இல்லா உன்னை, என்னுள் புதைத்தது நீயே!
      விழி வழி காணக் கிடைக்காத நீ, செவி வழி ஈர்த்தாயே உன்னுள்.

என்னுள் வரும் வழியில் செல்வதோடு நில்லாமல்,
      இதயத் துடிப்பை கூட உன் வசம் செய்ததும் நீயே!
வசம் செய்தாயே போதாதா? வசியம் செய்துவிட்டது முறையா.

இனி உனை நீங்கி என் செய்வேனோ! என, மனதை வினவ விட்டதும் நீயே!
      சற்று சலனமே இல்லாமல் என்னுள் வசிக்க எண்ணிய நீ
செய்யும் மாயங்கள் போதும்.

சிறு துணிவோடு விலகிய என்னை, இறுக அணைத்து கொள்வது முறையா!
      என்ன துணிச்சல் உனக்கு, என் இந்த இனிய அவலத்தை பெருக்க.

மாயத்திற்கு உரிய உன்னில், மையமாய் மாற வைத்த நீ
      உன் ஜாலத்தால், என்னை ஏன் இப்படி கொல்கிறாய்?

என்னை அறியாமல் என் மனம் பறிக்க, உன்  உடைமையாய் கொண்டதும் நீயே!
       என்னுடன் ஏன் இந்த ஊடல், என்னை கொல்லாமல் கொல்வதற்கு?

என்னவள் என நீ என்னை மேலும் பற்றிக் கொள்ள நேரும் பொழுது
       என் மனம் உன்னை கொஞ்சி அரவணைக்காது என் செய்யும்

சிறிதேனும் விலகியே வசிப்பாய, இல்லை,
       என்னை உன்னோடு அணைத்தே கொல்வாயா.

என் முன் வந்து விடாதே. நீ என்ன ஆவாய் என்பதை நான் அறியேன்.
      விலகியே இரு என கூறிக் கொண்டே இருக்க, என் இதழ்
அதன் முத்திரையை பதிக்க நேரிடுமோ என அச்சம் கொள்கிறது.

என்னுள் உன்னை எனக்காய் என்று அடைக்கிறேன் சற்று அடக்கத்தோடு
      வெளி செல்ல விடமாட்டேன்.

இலையுதிர் காலத்தில் மரக்கிளையின் மேல் துடிக்கும் இலை போல
      என்னுள் துடிக்கும் என் உயிர்த்துடிப்பு நீயே!
« Last Edit: August 02, 2024, 07:47:07 am by Shree »
ஶ்ரீ

August 04, 2024, 08:31:22 pm
Reply #4

iamcvr

Re: கவிதையும் கானமும்-045
« Reply #4 on: August 04, 2024, 08:31:22 pm »
ஒரே மொழி

ஓசைகள்
இலக்கணத்திற்குட்பட்டு மொழிகளாயின.
மொழிகள் பரிணமித்து பரவலாகி
பல்லாயிரம் ஆகின
உணர்பவற்றை உலகறிவிக்க
உலகறிந்தவற்றை உள்ளறிவிக்க
அத்தனை மொழிகள் பரிணமித்த போதும்
அத்தனையையும் ஒன்றிணைத்ததொன்று
அத்தனையோடும் பரிணமித்தே வந்தது.

இசை
நான் அழும் வேளை சேர்த்து அழ 
நான் சிரித்தால் சேர்த்து சிரிக்க
நான் சோர்ந்து நிற்கும் வேளை
புது ரத்தம் பாய்ச்ச
நான் கோபத்தில் நிற்கும் வேளை மெல்ல சாந்தப்படுத்த
நான் மெய்மறந்து கொண்டாடித்தீர்த்திடவே 
கலப்படமில்லா கண்ணீரிலும்
சிறு நடிப்புமில்லாத சிரிப்பிலும் 
உணர்ச்சிகளின் தாலாட்டாய்
உடன் பிறவா நண்பனாய்
என் அத்தனை பக்கங்களிலும்
ஒரே மொழியில் தான் எழுதப்பட்டு வந்தது.
அவ் இசையாய் என் உலகம் நிறைந்தே இருக்கிறது.

இயற்கையிலும் இசை உணர்கிறேன்; 
அன்றாட வாழ்விலும் அவற்றை வேறு பிரித்து உள்வாங்குகிறேன்.
வாகன இரைச்சலில் இருந்து வானம்பாடியின் சத்தத்தை
குடும்பச் சண்டை குறை கூறல்களிலிருந்து
குழந்தையின் சிரிப்பை
தெருவோரக்கூச்சலில் இருந்து
தென்றலில் இலைகள்
முத்தமிட்டு முகம் உரசும் ஓசையை

நீர்த்திவலையின் துள்ளலை
குரைக்கப்பழகும் நாய்க்குட்டியின் மழலைமொழியை
சிறுவண்டின் சிணுங்கலை
பெருவெளியின் அமைதியை . . .

இசை எங்கும் வியாபிக்கிறது;
எனை இன்னும் ஆக்கிரமிக்கிறது;
மனப்பூர்வமாய் ஏற்கிறேன்.
கண்களை மூடிக்கேட்க
காட்சிகளும் என்னுள் விரிகிறது;
கலைஞனாகிறேன்.


எல்லா புகழும் இசைக்கே!
« Last Edit: August 15, 2024, 07:19:20 am by iamcvr »

August 09, 2024, 01:53:30 pm
Reply #5
Re: கவிதையும் கானமும்-045
« Reply #5 on: August 09, 2024, 01:53:30 pm »
தன்னந்தனியாக நான் நின்றிருந்தேன்
வழித் துணையாக வந்தவள் நீ தானே !
காற்றாய் தொட்டாய் !
காதில் விழுந்தாய் !
இதயத்தில் நுழைந்தாய் !
இடைவிடாது நின்றாய் !
பேரைக் கேட்டேன்
இசை என்றாய்  !
இணைந்தாய் என்னோடு
இசைத்தாய் என் நெஞ்சோடு !
காற்றின் மொழி நீ !
காதல் வலி நீ !
அன்னை மடி நீ !
அன்பின் பிடி நீ !
மங்கையின் சினுங்கல் நீ ! - அவள்
சலங்கையின் முனங்கல் நீ !
மழலையின் சிரிப்பு நீ !
என்னை மயக்கும் மந்திர விரிப்பு நீ !
எந்திர உலகில் என்ன இது மாயம் !
ஆற்றுகிறாய்
என் இதய காயம் !
இசை மகளே உன்னை ஆராதிக்கிறேன் !
வசை பாடும் வாயெல்லாம்
இசை பாடுது இங்கே !
தரிகிடதோம் நீ பாட
தடம் மாறுது என் மனசு !
வழியெங்கும் தேடினேன் உன்னை 
வகை வகையாய் வாத்தியங்களுக்குள்ளும் பலர்
வார்த்தைகளுக்குள்ளும்  குடிபோனாய் நீ !
நல்ல வேளை என் தோழி Rijia குரலிலும் குடிபோனாய் நீ !
உன்னை கண்டு கொண்டேன் இங்கே கவிதையும் கானமுமாய்  !   
கானக் குயில் Rijia குரலில் கவிதையே கானமாய்
கண்டு கொண்டேன் இங்கே உன்னை !

August 14, 2024, 06:50:02 pm
Reply #6

Misty Sky

Re: கவிதையும் கானமும்-045
« Reply #6 on: August 14, 2024, 06:50:02 pm »
"இசை உலகெங்கிலும் திசையெங்கும் நிறைந்திருக்கும் இசை"
"இசை இல்லாத இடங்களும் இல்லை
இசையை நேசிக்காத இதயங்களும் இல்லை"
"எங்கும் இசை, எதிலும் இசை திசையெங்கும் நிறைந்திருக்கும் இசை"

"இசை நம் உயிருள்ள ஆன்மாவை  இசைவிப்பது இசையே"
"இசை நம் மனதினை மகிழ்ச்சியடையச் செய்வது இசையே"
"இசை நம் உள்ளத்தை சாந்தப்படுத்தி மனதை அமைதி பெறச் செய்வது இசையே"
"இசை நம் உடலில் உற்சாகத்தை உண்டாக்கி நம்மை நடனமாடச் செய்வது இசையே"
"இசை நம் உணர்வுகளைத் தூண்டி நமக்கு உயிரோட்டம் அளிப்பது இசையே"
"இசை நம் உடலை கட்டுப்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்கி நம்மை நலமாக வைத்திருக்க உதவுவது இசையே"
"இசை நம் இதயத்தை இதமாக்கி நம்மை புத்துணர்ச்சி அடையச் செய்வது இசையே"
"எங்கும் இசை, எதிலும் இசை திசையெங்கும் நிறைந்திருக்கும் இசை"

"இசை நம் கண்களுக்கு சுகமான உறக்கத்தை அளிப்பதும் இசையே"
"இசை நம் நெஞ்சில் கனிவான இரக்கத்தை ஏற்படுத்துவதும் இசையே"
"இசை நம் மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்த உதவுவதும் இசையே"
"நம் மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்த உதவுவதும் இசையே"

"இசை ஒவ்வொரு குழந்தையின் பிறப்பிலும் அக்குழந்தையின் அழுகைச் சத்தமும் ஓர் இசையே"
"அக்குழந்தையின் அழகிய மழலைச் சிரிப்புச் சத்தமும் ஓர் இசையே"
"இசை ஒவ்வொரு மனிதனின் திருமணத்திலும் வாசிக்கும் மேள தாளங்களின் சத்தமும் ஓர் இசையே"
"இசை ஒவ்வொரு மனிதனின் இறப்பிலும் சோகமிகுந்த ஒப்பாரிச் சத்தமும், தாரை தப்பட்டைச் சத்தமும் ஓர் இசையே"
"இசை மனிதனின் ஒவ்வொரு இன்பத் தருணத்திலும் இசையே, மனிதனின் ஒவ்வொரு துன்பத் தருணத்திலும் இசையே"
"எங்கும் இசை, எதிலும் இசை திசையெங்கும் நிறைந்திருக்கும் இசை"

"இசை இயற்கையின் கொள்கை அழகில் கடல் அலைகளில் இருந்து வரும் ஓசைச் சத்தமும் ஓர் இசையே"
"இசை இயற்கையின் இன்பச் சாரலில் அருவியில் இருந்து வரும் ஓசைச் சத்தமும் ஓர் இசையே"
"இசை இயற்கையின் தென்றல் காற்றில் இருந்து வரும் ஓசைச் சத்தமும் ஓர் இசையே"
"இசை மயிலின் அகவலும், குயிலின் கூவலும், தேனீயின் ரீங்காரமும், வண்டின் இரைச்சலும் ஓர் இசையே"
"இசை ஆதி, பறை, வீணை, வயலின், கிட்டார், சித்தார், தம்புரா, யாழ், புல்லாங்குழல், மகுடி, கடம், நாதஸ்வரம், ஆர்மோனியம், பியானோ, டிரம்ஸ் இவற்றில் இருந்து வரும் இசை ஒலிகளில் நம் மன வலிகளை மறந்து இசையில் நம் இதயத்தை தொலைத்தோம்"
"இசையில்லாத இடம் செழிப்பில்லாத பாலைவனத்தைப் போன்றது"
"இசையைக் காதலிப்போம்
ஒற்றுமையை வளர்ப்போம்
இன்பம் பெறுவோம்"

"ஏ.ஆர். ரகுமான் இசைக்கு பெருமை சேர்த்த ஆஸ்கார் நாயகனே"
"தன் இசையால் திரையுலகை ஆளும் மன்னவனே"
"ரோஜாவில் முதல் ஆரம்பத்தில் தொடங்கி ராயன் வரை இசையால் சாதித்தவர்"
"அனைவரும் வியக்கும் வகையில் இசையமைத்தவர்"
"தன் இசையால் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தவர்"
"பாடல்களைப் பாடி இசையமைப்பதில் வல்லவர்"
"சிறிதும் தலைக்கனம் கர்வமில்லாத தூய மனம் கொண்ட நல்லவர்"
"எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று சொன்னவர்"
"முயற்சி திருவினையாக்கும் என்று நிருபித்துக்காட்டியவர்"
"தன் கடும் முயற்சியால் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று காட்டியவர்"
"வந்தே மாத்திரம் பாடலுக்கு இசையமைத்து, பாடலைப் பாடி
வையகம் முழுக்க அறியப்பட்டவர்"
"தமிழ் மொழி மட்டுமில்லாது பிற மொழிகளுக்கும் இசையமைத்து உலக மக்களால் போற்றப்பட்டவர்"
"ஏ.ஆர். ரகுமான் இசைக்கு பெருமை சேர்த்த ஆஸ்கார் நாயகனே, அகிலம் போற்றும் தென்னவனே"
"உன் இசைப் பயணத்தை என்றும் நீ தொடர்க..."
"வளமோடு, நலமோடு நீ நீடூழி வாழ்க...  வளமோடு, நலமோடு நீ நீடூழி வாழ்க..."
"எல்லாப் புகழும் இறைவனுக்கே"
"எல்லாப் புகழும் இறைவனுக்கே"
சந்தோஷமிக்க மனநிறைவுடன் முடிக்கின்றேன்!!!

இப்படிக்கு
உங்கள் MISTY SKY 💙💙
« Last Edit: August 14, 2024, 06:57:49 pm by Misty Sky »