கல்வி கற்கும் வயதில் கல் உடைக்கிறாய்!.
ஓடி விளையாடும் வயதில் ஓடுகளை அடுக்குகிறாய்!
வறுமையினால் வயதை தொலைக்கிறாய்!
பசி மற்றும் பட்டினியால் பறித்தவிக்கிறாய்!.
அனைவருக்கும் தேநீர்
கொடுங்கள்!
கார்ல் மார்க்ஸ்!
அதை ஒரே மாதிரியான கோப்பையில்
கொடுங்கள்!
டாக்டர் B.R.அம்பேத்கர்!
அதை ஒரே அளவில் கொடுங்கள்!
தந்தை பெரியார்!.
அதை பசியில் இருப்பவருக்கு முதலில் தாருங்கள்!.
புரட்சி கலைஞர் விஜயகாந்த்!.
வெயிலோடு நீ விளையாடவில்லை!
மழையில் நீ காகித கப்பல் விடவில்லை!
பட்டாம்பூச்சியும் நீ பிடிக்கவில்லை!
கொட்டாங்குச்சியில் கூட உன்னிடம்
பொம்மைகள் இல்லை!
தட்டான் பிடிக்கும் வயதில் எச்சில் தட்டை
கழுவுகிறாய்!
இரக்கமற்ற உலகில் நல்ல உள்ளம்
கொண்ட இதயத்தை தேடுகிறாய்
!
நீ பட்டமும் விடவில்லை - உன் வாழ்வில்
பட்டமும் பெறபோவதில்லை!
இளமையில்,
ஏட்டுக்கல்வி கிடைக்காவிட்டால்,
எட்டாக்கனி ஆகிவிடும் உன் வாழ்க்கை!
வறுமையில் வாடிவிட்ட உனக்கு எப்படி
அமையுமோ?
எதிர்கால சேர்க்கை!.
குழந்தை தொழிலாளர்களை போக்க
அரசு,
இலவசகல்வி மதிய உணவு போன்ற
திட்டங்களை கொண்டு வந்தது!.
அதை கண்டு கொள்ள கூட்டம்
இன்றுவரை, எங்குதான் சென்றதோ?
கம்யூனிசம் பற்றி கேட்டால்,
முதலாளித்துவ கைக்கூலிகள்,
கடவுள் உண்டா? இல்லையா?,
எனக் கதைக்கிறார்கள்!
இன்றளவும்,
அனைவருக்கும் அனைவரும் சமம்
என்ற உரிமையை தர மறுக்கிறார்கள்!.