Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-025  (Read 12334 times)

May 28, 2023, 10:12:52 pm
Read 12334 times

Administrator

கவிதையும் கானமும்-025
« on: May 28, 2023, 10:12:52 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-025


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: June 12, 2023, 09:43:12 pm by Administrator »

May 28, 2023, 11:00:23 pm
Reply #1

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
Re: கவிதையும் கானமும்-025
« Reply #1 on: May 28, 2023, 11:00:23 pm »
முன்னோரின் கூற்றுபடி....
தோல்வியே வெற்றிக்கு முதல் படி....

தோல்வி என்பது வாழ்கையின் நியதி,
வெற்றி என்பது தோல்வியின் இறுதி,

தோல்வி இல்லையேல்
வாழ்வில் சுவாரஸ்யம் ஏதும் இல்லை...

தோல்வியை கற்றுக்கொண்டு
தோல்வியின் உந்துதலில்
பெற்றுக்கொள்வது வெற்றியே......

தோல்வியை தழுவ
பொறுமை அவசியம்,
தோல்வி என்ற போதிலும்,
துவளாத மனம் அவசியம்......

விடா முயற்சியே
வெற்றியின் ஓர் அங்கம்....
வீழ்ந்தாலும் தொடர்வது
மன உறுதியின் ஓர் அங்கமே....

வெற்றி இலக்கை அடைய
தோல்வி என்ற பாதையையும்,
தன்னம்பிக்கையும், மன வலிமையையும்
வெற்றியின் ஊக்கமே.....

வரலாற்று கதைகளில்
கஜினியின் படையெடுப்பு
17 முறையும் தோல்வியாம்....
விடாமுயற்சியின் தூண்டுதலால்
18 ஆம் முறை வெற்றியாம்....
என்று வரலாறு கூறுகிறது....

வீழ்பவன் எழ தன்னம்பிக்கை என்ற
கையை நீட்ட வேண்டும்
வெற்றி என்ற பாதைக்கு சாமரம்
வீச வேண்டும்....

தோல்வியை தோற்கடிப்பவன்
வெற்றி வீரன் ஆகிறான்.....

தோல்வியின் முடிவுரை
வாய்ப்புறுகையின் (வெற்றியின்) முதல் உரை.....
« Last Edit: May 28, 2023, 11:02:47 pm by Vaanmugil »

May 28, 2023, 11:36:28 pm
Reply #2

Sanjana

Re: கவிதையும் கானமும்-025
« Reply #2 on: May 28, 2023, 11:36:28 pm »
CONGRATS TO GTC FM AND GTC.. KAVITHAIYUM GAANAMUM REACHED ITS 25.TH PROGRAM.🎶🎤🎵💐💐💐
CONGRATS TO ALL POETS OF KG 💐💐💐
கவிதையும் கானமும் குழுவினருக்கு வாழ்த்துகள்
( RJ RIJIA,COFFEE BOY, DJ ISHAN, RJ MIST, OMICRON,DISCOVERY)💐💐💐💐💐💐💐💐💐


கவிதையும் கானமும் நிகழ்ச்சி இன்று தனது 25 வது நிகழ்ச்சியை கொண்டாடுவதும் ஒரு மாபெரும் வெற்றியே என கூறிக்கொண்டு எனது கவிதைக்குள் செல்கிறேன்..

தோல்வியின் விளிம்பில் வெற்றி !


தோல்வியின் விளிம்பில் வெற்றி !

தாவாடா ! மனிதா ! தாவு  ..

தோல்வி .. வெற்றியின் ஓர் அங்கம் ..

தோல்வியில்லாமல் வெற்றியில்லை ..

தோல்வியின் அறுவடையே

வெற்றிப் பாதையின் திறவு கோல் ..



வெற்றி மகிழ்வை  தரும்..

வெற்றி இறுமாப்பைத் தரும் ..

அகந்தையைத் தரும் ..

தோல்விதான் வாழ்க்கையின் புரிதலைத் தரும் ..

தோல்விதான் அனுபவ பாடத்தின் ஆணிவேர் ..

உலக அறிவியலின் தந்தை தோல்வியெனும் சக்தியே !



தாமஸ் அல்வா எடிசன் முதல் ஐன்ஸ்டீன் வரை

தோல்வியின் படிக்கட்டில் ஏறியே

வெற்றியைக் கண்டவர்கள் ..

தோல்வியை ஆய்வு செய்பவனே

வெற்றியின் கிரீடத்தை சூடுகின்றான் ..


தோல்வியின் விளிம்பில் தாவாதவன்

வெற்றியை இழந்து

இரண்டும் கெட்ட சூனியத்தில் வீழ்கிறான் ..

அதுவே வெற்றி தோல்வியை

புரியும் படி நிலையாகும் ..



முயற்சி திருவினையாக்கும் என்பர் ..

முயற்சி.. வெற்றி தோல்வியை

முடிவு செய்யும் காரணியாகும் ..

முயற்சி இல்லாவிடில்

வெற்றி தோல்வியைக் காணமுடியாது ..

தோல்வி கூட வெற்றிதான் ..



வெற்றியின் சிறப்பு

எதுவாக இருக்கவேண்டும்

நம்மையும் ..பிறரையும்

பாதிக்காமல் இருக்க வேண்டும் ..

அதுவரைதான் அது வெற்றி !

இல்லையேல் அதுவும் தோல்விதான்

அது தோல்விக்கே அழைத்துச் செல்லும்

வெற்றிப்பாதையாகும் ..


உன் வெற்றி ..

இந்த உலகிற்கு பயன்பட வேண்டும் ..

இந்த உலகையே மாற்றவேண்டும் ..

மனிதத்தைக் காக்கவேண்டும் ..

வெற்றி தோல்வியற்ற

உன்னத நிலையை உருவாக்க வேண்டும்

அதுவே " சமநிலை" எனும் வெற்றியாகும் ..

சமநிலை வெற்றியை நோக்கிச் செல்வோம்……….



NOTE:
இந்த புகைப்படத்துக்குத்தான் நான் இவ்வளவு வரிகள் எழுதி இருக்கேன்...இன்னும் சில வரிகள் எழுதினேன், ஆனால்  45 வரிகள் வரை எழுத  அனுமதி. அதைச் சுருக்க வேண்டியிருந்தது... வாழ்கையில் நாம் அனைவரும் கடந்து வந்த பாதையின் பின்பம் இந்த புகைப்படம்....அருமையான தேர்வு கவிதையும் கானமும் குழு...THANK YOU KG TEAM.

BY CHE (MY HERO):
"வெற்றிகளைக் கொண்டாடாமல், தோல்விகளைக் கடந்து வாழ்க."
« Last Edit: May 30, 2023, 01:16:26 pm by Sanjana »

May 28, 2023, 11:54:00 pm
Reply #3

Ishan

Re: கவிதையும் கானமும்-025
« Reply #3 on: May 28, 2023, 11:54:00 pm »
தோல்வி என்பது தண்டனை,
நாம் தொடர்ந்து செய்யும் தவறுகளுக்கு....
மறுபுறம் வெற்றி என்பது விருது
நாம் தொடர்ந்து செய்யும் சரியான விஷயங்களுக்கு
தோல்வி நம்மை விரக்தியில் தள்ளுகிறது,
வெற்றி நம்மை வானத்துக்கு உயரச் செய்கிறது,

நான் என்னைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன்,
நான் வெற்றியா தோல்வியா?
எந்தப் பக்கம் என்பதை
நான்  மட்டுமே முடிவு செய்ய முடியும்...

நான் எதிர்காலத்தை நோக்கி
முன்னேறுகிறேன்,
வாழ்க்கையை பின்னோக்கி மட்டுமே
புரிந்துகொள்கிறேன்.....

திரும்பிப் பார்க்கும்போது,
கடந்த காலத் தவறுகளை
நினைத்துப் புன்னகைக்கிறேன்......

நான் வெற்றியில் அல்ல,
தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டேன்
நான் தோல்வியுற்றபோது
நான் ஒருபோதும் விலகவில்லை
ஆனால் வெற்றிபெறும் வரை தோல்வியடைந்தேன்.....

தவறுகளில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்
பாடங்கள் தவறுகள் போல் மறைக்கப்படுகின்றன
தவறுகளில் இருந்து பாடம் கற்காமல்
இருப்பதுதான் ஒரே தவறு......

தவறுகள் தோல்விக்கு வழிவகுக்கும்
தோல்வி ஆபத்தானதும் அல்ல,
வெற்றி இறுதியானதும் அல்ல,
வெற்றி உறுதியான அடித்தளத்தை
அமைப்பதன் மூலம் கிடைக்கும்......

வெற்றிக்குப் பின்னால் தோல்விகளே
இதுவே வாழ்க்கையின் ரகசியம்.......

May 29, 2023, 12:44:33 am
Reply #4

Ruban

Re: கவிதையும் கானமும்-025
« Reply #4 on: May 29, 2023, 12:44:33 am »
நண்பனே தோல்வியைக் கண்டு நீ ஓடாதே
தோல்வியை தாண்டி ஓடு
தோல்வி என்பது பெரிதாய் இருந்து உன்னை பயமுறுத்தினால்
நீ அதை பெரியதாய் எண்ணாதே
அதை தாண்டி செல் நீ
அதை தாண்டி செல்லும்பொழுது
வெற்றியின் வழியோ அழகாய் தெரியும்.

வெற்றி என்பது சிறு புள்ளிதான்
அந்த சிறு புள்ளையை அடைய வேண்டும் என்றால்
தோல்வி என்னும் பெரும் மையத்தை நீ தாண்ட வேண்டும்
தோல்வி உன்னை பயமுறுத்தலாம்
தோல்வி உன்னை நிலை குலைய வைக்கலாம்
தோல்வி உன்னை சோர்வடைய வைக்கலாம்
ஆனால் தோல்வியை எதிர்கொள்ளும் பொழுது
வெற்றி என்னும் மகுடம் உன்னிடத்தில் சேரும்.

மகுடத்தை அடைய மண்ணைக் கவினாலும் தவறில்லை
தோல்வியை கண்டு பின்னிட்டு ஓடாதே நண்பனே
தோல்வியைத் தாண்டி முன்னிட்டு முன் சென்று ஓடு
தோல்வி எனும் தடைகளைத் தாண்டு
தோல்வி என்னும் பிளவுகளைத் தாண்டு
தோல்வி எனும் சமுத்திரத்தின் அலைகளைத் தாண்டு 
தாண்டு தாண்டிக் கொண்டே இரு நண்பனே.

தோல்வி என்பது முடிவல்ல
வெற்றி என்றுமே நிரந்தரம் இல்லை
தோல்வியும் வெற்றியும் இரண்டுமே
உன்னை உயர்த்தும் படிகட்டுகள் தான்
தோல்வியிலே நீ கற்றுக் கொள்கிறாய்
வெற்றியிலே உன்னை நீயே வீரன் என்று அறிந்து கொள்கிறாய்
நண்பா நீ உன் வாழ்க்கையில் சிறந்தவனாய் விளங்க
வெற்றியும் தோல்வியும்  இரண்டும் அவசியம்.

இவை இரண்டையும் நீ பழக்கப்படுத்திக் கொண்டால்
இந்த உலகத்தில் உன்னை விட சிறந்தவன் யாருமில்லை 
வெற்றி என்பது கைகளை போன்றது
தோல்வி என்பது கால்களை போன்றது
நண்பனே நீ ஒரு கடினமான பொருளை எடுத்து நகற்ற வேண்டுமென்றால்
கைகள் மட்டும் போதாது கால்களும் வேண்டும் 
செயல்பட கால்களும் கைகளும் அவசியம்.

இந்த உலகத்தில் நீ சிறப்பானவனாக செயல்பட
வெற்றியும் தோல்வியும் அவசியம்
தோல்வியை கண்டு நின்று விடாதே
வெற்றிகாய் முன்னேறிக் கொண்டே இரு
உன்னால் முடிந்தவரை முன்னேறிக் கொண்டே இரு
வெற்றி உனதே.
« Last Edit: May 29, 2023, 01:24:39 am by Ruban »
💚 RuBaN 💚

May 29, 2023, 02:51:01 pm
Reply #5

kathija

Re: கவிதையும் கானமும்-025
« Reply #5 on: May 29, 2023, 02:51:01 pm »
வெற்றியின் படிக்கட்டுகள் :

இங்கு கொடுக்க பட்டிருக்கும் படம் தோல்வி - வெற்றி,இருந்த போதிலும் என் கண் முன்னே  எதிர்மறையான எண்ணம் மறைந்து வெல்வோம் என்ற எண்ணம் மேல்லோங்கியதால் எனது கவிதைக்கு வெற்றியின் படிக்கட்டுகள் என தலைப்பிட்டுள்ளேன்.



வெற்றியின் முதல் படி தோல்வி
வெற்றியின் முதல் படி தோல்வி


முதல் படியிலே நின்று நாம்
எப்படி போவது என்று நினைப்பவரே
இங்கு அதிகம்


தூரம் அதிகம்
திரும்பி விடலாம்

தூரம் அதிகம்
திரும்பி விடலாம்

என்று செல்பவர்கள் இன்னும் சில

முயற்சிப்போம் என்று
சிறிது தூரம் சென்றதும்

திரும்புபவர் பலர்

என்னதான் இருக்கிரது அதில்
முயற்சிப்பவர்களே

வெற்றிக் கனியை பெருகின்றனர்

அவ்வளவு எளிதாக கிடைத்து
விடுமா கனி

அவ்வளவு எளிதாக கிடைத்து
விடுமா கனி

மரத்தின் விதையானது
பல போராட்டங்களை
கண்டே

கனி என்னும் இறுதி பருவத்தை அடைகிறது

அது போலவே வெற்றியை
அடைய நம் மனத்திற்கு
கடிவாளம் இட வேண்டும்

தோல்வியின்  ஒரு ஒரு
கண்ணீர் துளியும்

நாம் அடைய போகும்
ஆனந்தத்தின் தண்ணீர்

 நாம் அடைய போகும்
ஆனந்தத்தின் தண்ணீர்

கண்ணீர் என்னும் தண்ணீரை
ஊற்ற ஊற்ற வெற்றி என்னும்
மரம் வளரும்

மரம் விருட்சமாகும் நேரம்
கண்ணீர் எல்லாம்
 பொன் நீர் ஆகும்

கண்ணீர் எல்லாம்
 பொன் நீர் ஆகும்

நினைத்தும் கிடைத்து விட்டால்
அதற்கு பயன் ஏது

தோல்வி நம்மை தழுவும் போது
எல்லாம்
மனமே இது அதற்கான
வழி இல்லை

ஓ மனமே நிச்சயம் இது அதற்கான
வழி இல்லை

என்று மனதை
அமைதி படுத்து

இருட்டு என்று நினைத்தால்
பயம் தோன்றும்

அதை எதிர்த்து நடந்தால்

இருள் விலகும்
மாயா இருள் விலகும்

பாதை புலப்படும்

அறியாமையால் எழும்
பயம் என்னும் பகைவனை
எதிர்த்து நில்லுங்கள்

முடியாது என்று நினைத்தால்
பாதை அனைத்தும் மறையும்

முடியும் என்று நினைத்து
உன் அடியை எடுத்து வை

நீ போகும் பாதை எங்கும்
வழி தோன்றும்


நம் மனம் ஒன்றை உறுதியாக
ஏன் இறுதியாக நம்பும் போது
அந்த எண்ணமே அவனை
உயர்த்தும்


வழியில் தோன்றும்
களைகளை தூக்கி
வீசி நம்பிகையோடு
நடை போடுங்கள்



இன்றில்லை யென்றாலும்
என்றாவது ஒரு நாள்
உன் வெற்றி உன்னை பற்றும்


வெற்றியின் முத்தம் விலைமதிப்பற்றது

அதை பெற உன்னை
செதுக்கும் உளி
தான் உன் தோல்வி

பட்ட கஷ்டம் என்றும்
வீண் போவதில்லை

கஷ்டப்படாமல் இஷ்டபடு
கஷ்டப்படாமல் இஷ்டபடு

அந்த கஷ்டம் கூட
உன்னிடம் இரக்கம் காட்டும்

பாதை கடினமாக கடினமாக
உன் வெற்றி பக்கம் வரும்

கலங்காதே மனமே
முடியாதது எதுவும்

இவ் உலகிலே இல்லை

முடியும் என்று சொல்பவனை
இந்த உலகம் ஏற்றுக் கொள்ளாது

முடித்து காட்டுபவனையே
கொண்டாடும்

உன்னால் அனை‌த்து‌ம்
முடியும்
நம்பிகையோடு
எதிர்த்து நில்

வெற்றி என்னும் கனியை
பற்றும் வரை

இந்த வாய்ப்பளித்த என் சகோதரிக்கு
என் நன்றி

💕💕💕💕💕
« Last Edit: May 30, 2023, 06:39:49 am by kathija »

May 29, 2023, 03:58:12 pm
Reply #6

Dhiya

Re: கவிதையும் கானமும்-025
« Reply #6 on: May 29, 2023, 03:58:12 pm »
மனமே வெற்றியும் தோல்வியும் எதிரும் புதிரும் அல்ல... வெற்றி பறிக்க முடியாத எட்டாக் கனியும் அல்ல..

இரண்டுமே நாணயத்தின் இரு பக்கங்கள் போல், பகலும் இரவும் போல் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை...


இதை அறியாத நீ வெற்றிக்கு குதூகளித்தும் தோல்விக்கு துவண்டும் போகிறாய்...

உனக்கு சாதகமானதை வெற்றி என்றும் பாதகம் ஆனதை தோல்வி என்றும் அனுமானித்து கொள்கிறாய்....

ஒவ்வொரு தோல்வியிலும் வாய்ப்பை தேடுபவனே சிறந்த போராளி..


கொடிய நாகத்தின் நஞ்சில் கூட உயிரை காக்கும் மருந்து கிடைக்கும் பொழுது, உன்னை துவள வைக்கும் தோல்விகளை ஏன் படிக் கற்களாய் காண மறுக்கிறாய்....


வெற்றியும் தோல்வியும் சமம் ஆக காணும் உள்ளம் தெளிந்த நீர் வெள்ளம்...

தெளிந்த சிந்தை தடைகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும்..

வெற்றி தோல்வி என்னும் துருவங்களை இணைக்க நம்பிக்கை என்னும் பாலம் உள்ளது...

அந்த நம்பிக்கை பிறரிடம் வைத்து பொய்க்கும்போது அவநம்பிக்கையாய் மாறும்...


அதுவே உனக்குள் பிறக்கும் போது தன்னம்பிக்கையாய் மாறி சுடர் விடும்....


பண்பட்ட மனதிற்கு உந்து சக்தி தேவை இல்லை... தனக்குள் ஒளிவிடும் சுடரே வெற்றிக்கு இட்டு செல்லும்....

வெற்றி கிடைத்தவுடன் ஓய்ந்து விடாதே அது உன் முயற்சியின் பலனை அதிர்ஷ்டத்தின் பலனாக மாற்றி விடும்...

வெற்றி கிடைத்தவுடன் கர்வம் கொள்ளாதே.. தோல்விக்கு இட்டு செல்லும் பாசக்கயிறு அவன்...

இரண்டையும் சமமாக பார், திறந்த மனதுடன் புதிதாய் கற்றுக்கொண்டே இரு... போராளியாக போராடிக் கொண்டே இரு.. உன்னை வெல்ல எவரும் இலர்...
« Last Edit: May 29, 2023, 04:23:44 pm by Dhiya »



May 29, 2023, 04:29:02 pm
Reply #7

Barbie Doll

Re: கவிதையும் கானமும்-025
« Reply #7 on: May 29, 2023, 04:29:02 pm »


புதிர் போன்ற வாழ்க்கையும் ஒரு புதிரடா..!
அறிய முற்பட்டும், அறிய முற்படாமலும்.. தோற்று போன புதிர்கள் எண்ணிக்கையே வெற்றிக்கு நிகரடா..!

நாளை என்றும் நம் நம்பிக்கையே ..
நடப்பதை நாளும் எதிர்நோக்கிடாமல்..
இதுவே நடக்கும் உலகை உருவாக்கு..
தொடரும் நொடிகள் நமக்கானது.. !
அதில் தொடர்ந்து செல்லும் பாதை பல முட்களானது..!

வெறுமனே கிடைப்பதில் இல்லை நிம்மதி..!
போராடி கிடைப்பதில் உள்ளது வெகுமதி..!!
சிரிப்புக்கான தேடலில் பல அழுகை இருக்கும்...!
நிம்மதிக்கான தேடலில் பல துன்பம் இருக்கும்...!

வெற்றியின் ஆரம்பமே தோல்வியில் தொடங்கும் பல புதிர்கள் தானடா..!
புதிர்கள் விலகும் நேரம் வெற்றி பயணத்தின் தொடக்கம் தானடா..!

வலிகளிலே தேங்காமல் வாழ்க்கை பயணத்தில் எதிர்‌ நீச்சல் அடிப்போம்..!
வாழ்வில் ஒளிந்திருக்கும் அத்தனை சுவாரசியங்களையும் ரசிக்க தோல்விகள் பல கடந்தே பயணிப்போம்..!

அடடா தோற்று விட்டேனே.. இனி என்ன இருக்கிறது? என எதிர்மறை எண்ணங்களில் துவண்டு போகாமல் கற்றும் கடந்தும் போக தோல்விகளில் கற்றுக் கொள்வோம்..!

தனித்துவங்களின் உச்சம் வெற்றி..!
ஆயிரம் விளக்குகளின் ஒளி வெற்றி..!
எண்ணற்ற கதைகளின் முடிவு வெற்றி..!
கிடைக்கும் நாள் தெரியாமல் ஒட வைப்பதும் வெற்றி..!

வெற்றிகள்.. பல தோல்விகளினாலே பிறக்கிறது.. !!

என் பேனாவின் எழுத்துக்களும் வெற்றியை நோக்கிய தேடலுடனே பயணிக்கிறது.. !!
திகட்டாத தேடல் இந்த வெற்றியின் தேடல்...!!
என்றோ ஒருநாள் இந்த வெற்றியும் நமக்கானதாகும்..!!
நம்பிக்கையுடன் பயணிப்போம்..