Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1] 2
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-021 வெட்கம் பெண்மைக்கே உரிய அழகிய அணிகலன்...

மல்லிகைக் கூம்பாக இருக்கும் அவள் முகம், தண்ணவனை கண்டதும் அந்தி வானமாய் சிவக்கும்...

சூழ்ந்த சபையில் அவன் பெயரை பிறர் சொல்ல ரகசியமாய் சிவக்கம்....

ரம்பைகள் கோடி இருப்பினும் அவன் பார்வையின் தேடல் தன்னில் முடிவதில் கர்வத்தில் சிவக்கும்....

கோபியரின் கண்ணனாக அவன் பிறப்பினும், ராமனாக தன்னையே நாடும்போது பெருமிதத்தில் சிவக்கும்...

துயர் சூழ்ந்த பொழுதிலும் ஆறுதல் செய்யும் அவன் மின்னல் கீற்று புன்னகைக்கு நிறைவாய் சிவக்கும்...

நொடிப் பொழுதும் உன்னைப் பிரியேன் என்று அவன் கண்கள் செய்யும் சண்டித்தனத்திற்கு குறும்பாய் சிவக்கும்...

தன்னை வீழ்த்தும் மாயக்கண்ணனின் யுக்திகள் அறிந்தும் அவன் குறும்புகளுக்கு இரசிகையாகிச் சிவக்கும்..

ஊடலின் சமரசத்தில் கம்பீரமான அவன் குரல் தனக்காக குழையும்பொழுது மென்மையாய் சிவக்கும்...

கள்வனாக இருந்தவன் கணவனாக மாலையிடும்போது இவ்வுலகையே வென்று விட்ட மகிழ்ச்சியில் சிவக்கும்....

 

April 05, 2023, 10:18:30 pm
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 Hi friends, I wish to play my fav songs on 20/04/2023
April 16, 2023, 09:21:51 pm
3
Re: HAPPY BIRTHDAY CUTE & BULLETT இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எனது அன்பு தோழன் BULLETT மற்றும் அன்பு சகோதரி CUTE 🎉🎊🎂
April 21, 2023, 12:04:48 am
2
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#027
Hello SM TEAM, Epdi irukinga?  Oru pudhu paadaloda ungala marubadi sandhikradhula magizchi...

Indha week nan request panra song PS2 la "Veera Raaja veera song.. "

படம்: பொன்னியின் selvan-2
இசையமைப்பாளர்: A.R. ரகுமான்
பாடல் வரிகள்: இளங்கோ கிருஷ்ணன்
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், K.S. சித்ரா அம்மா, ஹரிணி


இராஜ இராஜ சோழனின் ஆட்சி, வீரம், படை பலம், கொடை மற்றும் கலை திறன் யாவும் தமிழன் ஆக பிறந்த எவரையும் பெருமிதம் கொள்ள வைக்கும்....

அவருக்காக பாடலை எழுதும் யுகத்தில் பிறந்ததும், தமிழனாக பிறந்து தமிழை அறிந்து அதை ரசிக்க முடிந்ததே எனது பாக்கியம்....

பிடித்த வரிகள்:
இந்த பாடலின் இறுதி அடிகள் (நான் மெய்சிலிர்த்த நொடிகள், Chorus voice la kekrappa goosebump moment nga... Enaku mattum dha apdi irundhucha nu youtube comment section chk panna ellarume goosebumps nu potrukanga☺️)
"எம்தமிழ் வாழ்க வாழ்க…
வீர சோழம் வாழ்க…
நற்றமிழ் வாழ்க வாழ்க…
நல்லோர் தேசம் வாழ்க…"

தமிழனாக பிறந்த அனைவருக்கும் இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்...

 Thank you SM team, ovvoru muraiyum ungaloda time and efforts potu users ah entertain panradhuku thank you so much..

May 07, 2023, 07:47:02 pm
1
Re: Happy Birthday ALJIN இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் aljin தம்பி
May 12, 2023, 12:28:42 am
1
Re: கவிதையும் கானமும்-024 ஊடல் பொழுதினில் நான் வெல்ல நினைப்பது அவனை அல்ல என்னை, அவனிடமே செல்லும் என் மனதை...

அவனின் ஒவ்வொரு உணர்வுகளையும் உள்வாங்கி ரசிக்கும் நான் அவனின் ஊடலையும் காதலுக்கு நிகராக ரசிக்கிறேன்..

ஏன் எனில் அவன் ஊடலில் வெளிப்படும் அக்கறை காதல் கரையும் நொடிகளை விட பொக்கிஷம் ஆனவை..


என் உணவை மறக்கும் வேளையில் அவனின் கோபம் தாய்க்கு நிகரானது
.

வீடு திரும்ப தாமதம் ஆகும் நொடிகளில் அவனின் கோபம் தந்தைக்கு நிகரானது


என் துயரங்களை அவனிடம் மறைக்க முயன்றும் அவன் அறியும் தருணத்தின் கோபம் உற்ற தோழிக்கு நிகரானது.அவனின் கருத்தை ஒதுக்கி நான் சுயமாய் எடுக்கும் முடிவுகளில் அவனது கோபம் ஆசானுக்கு நிகரானது...

பிறர் உடனான ஊடலில் ரௌத்திரம் கொள்ளும் அவன் முகம், என்னுடன் சிறு பிள்ளையாய் சண்டை இடுவது என்ன விந்தையோ...

பல பரிமாணங்களில் அவன் ஊடல் கொண்டாலும் அவனிடமே மையல் கொள்ளும் மனதை நான் வரமாக பெற்றேனோ...


இல்லை ஊடல் பொழுதிலும் தாய் பறவையாய் தன் சிறகுகளுக்குள் காக்கும் அவனையே நான் வரமாக பெற்றேனோ....

இனி அவனுடனான அனைத்து பிறவிகளிலும்
நான் வேண்டுவது...

ஊடலில் அவன் சூரியனாய் என்னை பொசிக்கினாலும் அவனுக்காகவே மலரும் சூரிய காந்தியாக பிறக்க வேண்டும்...

சுயமரியாதையில் கட்டுண்டு அவனை விலக நினைக்கும் மனதை பெறாமல் இருக்க வரம் வேண்டும்....

அவன் பாறையாய் இருகினாலும் பாறையின் இடையில் வேர் விட்ட கொடியாய் அவனுள் மலர வேண்டும்....

ஒவ்வொரு ஊடலின் இறுதியிலும் அவன் கண்களை காதலுடன் சங்கமிக்கும் வரம் வேண்டும்.....


 

May 25, 2023, 02:08:13 am
3
Re: கவிதையும் கானமும்-025 மனமே வெற்றியும் தோல்வியும் எதிரும் புதிரும் அல்ல... வெற்றி பறிக்க முடியாத எட்டாக் கனியும் அல்ல..

இரண்டுமே நாணயத்தின் இரு பக்கங்கள் போல், பகலும் இரவும் போல் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை...


இதை அறியாத நீ வெற்றிக்கு குதூகளித்தும் தோல்விக்கு துவண்டும் போகிறாய்...

உனக்கு சாதகமானதை வெற்றி என்றும் பாதகம் ஆனதை தோல்வி என்றும் அனுமானித்து கொள்கிறாய்....

ஒவ்வொரு தோல்வியிலும் வாய்ப்பை தேடுபவனே சிறந்த போராளி..


கொடிய நாகத்தின் நஞ்சில் கூட உயிரை காக்கும் மருந்து கிடைக்கும் பொழுது, உன்னை துவள வைக்கும் தோல்விகளை ஏன் படிக் கற்களாய் காண மறுக்கிறாய்....


வெற்றியும் தோல்வியும் சமம் ஆக காணும் உள்ளம் தெளிந்த நீர் வெள்ளம்...

தெளிந்த சிந்தை தடைகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும்..

வெற்றி தோல்வி என்னும் துருவங்களை இணைக்க நம்பிக்கை என்னும் பாலம் உள்ளது...

அந்த நம்பிக்கை பிறரிடம் வைத்து பொய்க்கும்போது அவநம்பிக்கையாய் மாறும்...


அதுவே உனக்குள் பிறக்கும் போது தன்னம்பிக்கையாய் மாறி சுடர் விடும்....


பண்பட்ட மனதிற்கு உந்து சக்தி தேவை இல்லை... தனக்குள் ஒளிவிடும் சுடரே வெற்றிக்கு இட்டு செல்லும்....

வெற்றி கிடைத்தவுடன் ஓய்ந்து விடாதே அது உன் முயற்சியின் பலனை அதிர்ஷ்டத்தின் பலனாக மாற்றி விடும்...

வெற்றி கிடைத்தவுடன் கர்வம் கொள்ளாதே.. தோல்விக்கு இட்டு செல்லும் பாசக்கயிறு அவன்...

இரண்டையும் சமமாக பார், திறந்த மனதுடன் புதிதாய் கற்றுக்கொண்டே இரு... போராளியாக போராடிக் கொண்டே இரு.. உன்னை வெல்ல எவரும் இலர்...

May 29, 2023, 03:58:12 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#030 Hello SM TEAM, indha week nan request panna pora song nan pizhai nee mazhalai
Song: Nan pizhai
Movie: kaathu vaakula rendu kaadhal
Lyricist: vignesh shivan
Music Director : Anirudh
Singers: Ravi G and Shashaa Tirupati


Fav lines:
அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடைமுறையை
ரசிக்கும் ரசிகணும் ஆனேன் ஆஹா ஓ ஓ

அவன் அருகினிலே
கணல் மேல் பனிதுளி ஆனேன்
அவன் அணுகயிலே
நீர் தொடும் தாமரை ஆனேன்

Indha song gtc family ku dedicate panren..
Thank you

June 18, 2023, 09:00:43 pm
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12 I wish to play my fav songs on 7th of July 2023
July 02, 2023, 03:29:01 pm
1
Re: கவிதையும் கானமும்-027
கலி யுகத்தில் கடவுள் தோன்றுவதில்லை என்பர், காவல் தெய்வமாய் நீங்கள் இருப்பதை அறியாதவர்....

தொல்காப்பியத்தின் நடுகல் தொடங்கி இன்றைய புதுக்கவிதை வரை உங்கள் வீரத்தை பறைசாற்றாத நூல் தமிழில் உண்டோ...

மதம் மொழி இனம் அனைத்தையும் கடந்து பாரதம் ஒன்றே மூச்சு தாய் திருநாட்டை காப்பதே கடமை என்று ஒன்றாய் சேர்ந்த சக்தி நீங்கள்...

கடும் குளிரிலும் அசாதாரண சூழ்நிலையிலும் உன் மன உறுதியினால் இயல்பாய் பொருந்திப் போனவன் நீ....

கைபேசி அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் மட்டுமே கொண்டு வருடம் முழுக்க குடும்பத்தை மனதில் சுமப்பவன் நீ...

தீய சக்திகளிடம் இருந்தும் பேரிடரின் பொழுதும் உன் உயிரை துட்சமாய் மதித்து எங்கள் உயிரை காப்பவன் நீ....

உன்னை ஈன்றவளும் உனக்குள் கலந்தவளும் உன்னால் பிறந்தவளும் பெருமிதம் கொள்ளும் பேராண்மை நீ...

ஒரு நடிகனுக்கு கிடைக்கும் புகழை விட ஒரு ராணுவ வீரனுக்கு பேரும் புகழும் கிடைத்திடல் வேண்டும்...

ஒவ்வொரு ராணுவ வீரனின் குடும்பத்திற்கும் அரசு வேலை கிடைக்க வேண்டும்....

போரில் வீர மரணம் எய்தியவரின் குடும்பத்தை தாங்கிப் பிடிக்க கரங்கள் நீள வேண்டும்...

அவன் தலைமுறையே பசி இன்றி தன்மானத்துடன் நிறைவாய் வாழ வழி செய்ய வேண்டும்...

வீரக்கனவனை இழந்த கைம்பெண்ணை மணக்க மனங்கள் பெரிதாக வேண்டும்....

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல் வீட்டிற்கு ஒரு ராணுவ வீரனை அனுப்பும் உறுதி வேண்டும்....

காவல் தெய்வமாய் நீ இருப்பதால் கவலை இன்றி நாங்கள் உறங்குகிறோம்... அதற்கு கைமாறாய் உன் குடும்பத்தையே காக்கும் பொறுப்பு எங்களுக்கும் உண்டு... நிம்மதியுடன் உறங்கு தோழா....

வந்தே மாதரம்....


July 08, 2023, 12:45:47 pm
3