Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-019  (Read 317 times)

March 06, 2023, 07:09:44 pm
Read 317 times

Administrator

 • Administrator

 • *****

 • 115
  Posts

  • View Profile
கவிதையும் கானமும்-019
« on: March 06, 2023, 07:09:44 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-019


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

March 08, 2023, 10:32:56 am
Reply #1

Barbie Doll

 • Winner

 • ***

 • 353
  Posts

 • Daddy's Girl

  • View Profile
Re: கவிதையும் கானமும்-019
« Reply #1 on: March 08, 2023, 10:32:56 am »

விளக்கு வைத்த நேரத்திலே, மின்மினி பூச்சி கண்டேனம்மா!
இரவை விரட்ட போராடி, அங்கும் இங்கும் ஓடுதம்மா!
கார் இருளில், கண் மயக்கும் நடனம் ஒன்றை ஆடுதம்மா!

ஒளியை பரப்பி, அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்துதம்மா!
குழந்தைகளும், கொண்டாடும் அற்புதத்தை காட்டுதம்மா!
ஒற்றை ஒளியை, சுமந்து கொண்டு உலகம் சுற்றும் மின்னலம்மா!

குழந்தையாகி மகிழ்ந்தேனே!
கவலை தனை மறந்தேனே!

ஒளியை தேடி ஓடி வரும், எத்தனை ஜீவன் உலகிலம்மா!
நன்மை, தீமை, அறிந்திருந்தால் நாளும் வெற்றி கிடைக்குமம்மா!

மனிதருள்ளும், தெரிந்தோ தெரியாமல், தவறிழைப்போர் கண்டேனம்மா!

ஒருவர் வாழ்வில், வெளிச்சமாய்  இருந்தால், எத்தனை சுகமென, உணர்ந்தால் புரியுமம்மா!

முயற்சியற்று, முயல்வோரை இகழ்ந்து, மூடர் போல்.. வாழ்ந்தது போதுமம்மா!

புத்தக வாசம்!
உணவின் அருமை!
உடையின் அழகு!
பணத்தின் பலம்!
உற்ற நண்பன்!
உண்மை உறவுகள்!
கனவுகளின் எல்லை!

இவை, அறிந்திரா எத்தனை ஜீவன்கள் மண்ணில் உள்ளதம்மா!
இயன்ற மட்டும், ஒருவர் வாழ்வில், விளக்காய் இருந்தால் போதுமம்மா!

வறுமையிலே உதவிடம்மா!
குடிசையிலே விளக்கேற்றிடம்மா!
பசிக்கு தான் உணவிடம்மா!
உழைப்பிலே உயர்ந்திடம்மா!
தோல்வியில் உடனிரம்மா!
அழுகையில் ஆறுதலாய் இரம்மா!
அன்பிலே உண்மையாய் இரம்மா!
உயர்வுக்கு ஊக்கமாயிரம்மா!

மூங்கிலில், காற்று நுழைந்தால்.. கானம் பிறக்குமம்மா!
ஒருவர் வாழ்வின், தன்னம்பிக்கையாய்.. நீ இருந்தால் நிம்மதி கிடைக்குமம்மா!

நீர் தெளிக்கும், மேகமாக.. நின்று விடம்மா!
கனவுதனை, எட்டிப் பிடிக்க.. வெளிச்சமாக மாறிவிடம்மா!
 
கம்பன் கவிதை கேட்டு, காற்றில் பறக்கும் மின்மினியே!
அந்தி நேர ஆவலாய், அணையா விளக்காய் ஒளிர்ந்தாயே!
வெற்றி வெளிச்சம், மக்கள் பக்கம் வீசினால் , என்றும் அது பிரகாசமே!

« Last Edit: March 08, 2023, 06:36:27 pm by Barbie Doll »

March 09, 2023, 02:10:21 pm
Reply #2

Sirpi

 • Newbie

 • *

 • 3
  Posts

 • HI...FRDS....

  • View Profile
Re: கவிதையும் கானமும்-019
« Reply #2 on: March 09, 2023, 02:10:21 pm »
சிறகு கொண்ட
சின்ன
தேவதையே!
உன்னை கண்டவுடன்
என் மனம் சிறகடிக்கிறது!
உன் அழகு
என்னை
சிதறடிக்கிறது!!

உலகில்
உயிரற்றவைகள் தான் வெளிச்சத்திற்கு
உயிர் கொடுக்கின்றன!
மின் மினியே
நீ மட்டும் தான்
உயிரோடு
வெளிச்சம் தருகிறாய்!
அதனை காணும் போது என் உயிருக்குள்
வெளிச்சம்
தருகிறாய்!!

"ஞாயிரும்" ஒளி கொடா,
"திங்களும்" ஒளி
கொடா
இருளில்,
மின்மினியே,
உன் ஒளி அழகில்,
தனது "செவ்வாய்" மூடி,
"வெள்ளி"யென
மேனி வெளுத்து,
குதுகளிக்கிறது,
இக் குழந்தை
தேவதை!!

குழந்தையின்
பார்வைக்கு
நீ குட்டி நிலா!
இன்று ஒரு நாள்
அது தான்,
ஆம்ஸ்ட்ராங்!!

மின் மினியே!
என்
கண்ணொளிக்கு
மின் ஒளி தருகிறது
வெப்பம்!
ஆனால்
உன் ஒளி
தருகிறது
அழகு தெப்பம்!!

மிளிரும்
மின் மினியே,
கூட்டுக்கு வெளிச்சம் தரும் நீ,
என் கூற்றுக்கும்
வெளிச்சம் தருவாய் என்ற
நம்பிக்கையோடு
நான்!SIRPI
நன்றி
Appukutty

March 10, 2023, 02:17:51 am
Reply #3

Sanjana

 • Super VIP

 • ***

 • 2640
  Posts

 • NEVER STOP TO LOVE

  • View Profile
Re: கவிதையும் கானமும்-019
« Reply #3 on: March 10, 2023, 02:17:51 am »
நட்பின் நேரம்

மென்மையான இரவு நேரம்
காடுகள் ஓய்வெடுக்கும் நேரம்
பனியில் நிலா உலா வரும் நேரம்
தேவதைகள் பனி புல்லில் ஓய்வெடுக்கும் நேரம்
தேவதைகள்  மிகவும் அற்புதமாக நடனமாடும் நேரம்

குட்டி தேவதை தனிமையில் அமர்ந்திருக்கும் நேரம்
மின் மினி அவ்வழியே வருகை தரும் நேரம்
மின் மினி வெளிச்சம் தரும் நேரம்
தேவதை முகம் பிரகாசிக்கும் நேரம்
இருட்டாக இருந்த தேவதை  மனம் ஒளி பெறும் நேரம்
இருவரும் இணையும் அழகான நேரம்

இருவரின் சுக துக்கங்களை பரிமாறும் நேரம்
இருவரும் அன்பை பரிமாறும் நேரம்
இருவரின் மனதில் மகிழ்ச்சி உண்டாகும் நேரம்
இருவரும் நட்பு கொண்டாடும்  நேரம்
நிரந்தரமா என தெரியாத நட்பு உறவாடும் நேரம்

அதிகாலையில் கதிரவன் ஒளிவீசும் நேரம்
இருவரும் மனமின்றி விடைபெறும்  நேரம்
இது நட்பின் மௌன நேரம்
காலத்துக்கு அழியாத நட்புடன் பறந்து செல்லும் நேரம்
இருவரின்  நட்பு சிறந்ததென போற்றும் நேரம்
நட்புக்கு இலக்கணமாக அமையும் நேரம்
நட்பு என்றுமே நிலைக்கும் என உணர்த்தும் நேரம்

என்றும் நட்புடன் உங்கள் சஞ்சனா« Last Edit: March 10, 2023, 02:21:27 am by Sanjana »

March 10, 2023, 01:55:21 pm
Reply #4

Yash

 • Newbie

 • *

 • 43
  Posts

 • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

  • View Profile
Re: கவிதையும் கானமும்-019
« Reply #4 on: March 10, 2023, 01:55:21 pm »
தங்க சுடர் ஒளி ஒன்றை

தற்செயலாய் காணப் பெற்றேன்

வெண்ணிலவின் ஒளி வியக்கத்தக்கது!
 
மண்ணின் வாசம்   மயக்கத்தக்கது!

கண் முன்னே தோன்றிய இந்த மின்மினி பூச்சியின்  சுடர் ஒளியோ

என்னை ஆர்ப்பரித்தது!!

அரங்கேற்றும் பச்சை தாவரத்தில் அவை

சுடர்தந்த ஒளிவிளக்காய்,
அலங்கரித்து நின்றன!!

பல்லாயிரக்கணக்கான எறும்புகளோ
அந்த சுடர் ஒளியை நோக்கி வருவதைக் கண்டேன்

பின்னே  இருந்த அந்த இயற்கையின் பேரழகும்

அந்த சுடர் ஒளியின் முன், பொலிவிழுந்து போனது!!

அந்த இயற்கையும் வியந்தன,
புத்த புதுமையும் பிறந்தன!!

கனமான என் குரலை மௌனமாக்கியது அந்த ஒளி

கலப்பில்லாத என் கண்களைக் கூட கவர்ச்சி ஆக்கியது அந்த ஒளி

காணற்கரிய இந்த காட்சியை அளித்தது யார் என மனதில் கேள்வி!!

இந்த சித்திரக் காட்சி எனக்கு சொல்வது தான் என்ன??

சின்னதாய் ஒரு நினைவு

அமைதியற்ற நாட்களில்
வெறுமையுற்ற மனநிலையில்,
வீழ்ந்து கிடக்கும் பொழுதெல்லாம்

ஒளியூட்டும் மின்மினி பூச்சியின்  இக்காட்சி!

தனிமையுற்ற  நாட்களில் எனக்கு தன்னம்பிக்கையை சேர்க்கும்..


இடர்பாடுகள் உடைய இந்த நேரத்தில்  தேவதையிடம் வரம் கேட்கலாம் என நினைத்த தருணத்தில்,

அந்த சுடர் ஒளியின் மூலம் "தன்னம்பிக்கையே தேவதை" என உணர்த்திய
அந்த மின்மினி பூச்சிக்கு  என்னுடைய நன்றிகள்!!
« Last Edit: March 10, 2023, 02:22:58 pm by Yash »

March 11, 2023, 12:45:11 pm
Reply #5

Ishan

 • Star Member

 • ***

 • 105
  Posts

  • View Profile
Re: கவிதையும் கானமும்-019
« Reply #5 on: March 11, 2023, 12:45:11 pm »
அழகு தேவதையே
அரிதில் காணும் பூமகளே,
உன் அழகு வியப்பை கண்டு,
வியப்பில் அழகை காண
இம்மின்மினியும் வெளிச்சம் கூட்டுதடி....

மின்மினியின் வெளிச்சத்தில்
உன் பிஞ்சு விரல்கள்
எத்தனை அழகு! அடடா !
அதில்,
உன் மறைவு புன்னகைக்க்கு
நான் மயங்கினேன் பாரடி....

ஒளிரும் இம்மின்மினியின் அழகில்
தேவதையே, உன் வரவு எனக்கு வரமடி
உற்சாகத்தில் நான் உனக்கு
பிரகாசிக்கிறேன் நானடி....

பசும்புல்லின் தாரகையே...
தஞ்சம் அடைந்தேனடி
உன் குறுஞ்சிறு அழகிலும்
உன் குறுஞ்சிறு புன்னகையிலும்

இந்த வரம் போதுமடி
என் வாழ்வு ஒரு நாள் என்றாலும்
உனக்கு ஒளி தந்த
சேவகன் என்று உலகுக்கு கூற்வேனடி....
« Last Edit: March 14, 2023, 01:38:31 pm by Ishan »

March 12, 2023, 01:21:33 pm
Reply #6

kittY

 • Winner

 • ***

 • 12
  Posts

  • View Profile
Re: கவிதையும் கானமும்-019
« Reply #6 on: March 12, 2023, 01:21:33 pm »
காரிருள் சூழ்ந்திட வயிற்றிலே சுடா வெப்பத்தை சுமந்து மின்னலுக்கே சிறு மின்னலாய் ஆனாயோ...
அதனால் தான் என்னவோ உனக்கு மின் மினி என்று பெயர் வந்ததோ...

இரவை ரசிக்க நீ வந்தாய் உன்னை ரசிக்க நான் வந்தேன்...
வெப்பம் இல்லாத அந்த ஒளியை உருவாக்க இன்றுவரை எந்த மனிதனாலும் முடியவில்லை....

இரவிலே
மரக்கிளையிலே அமர்ந்து மின் மினி பேரழகு தான்... ஆமாவசை இரவிலே பொளர்ணமியாய் சுற்றி திரிய நீ இருக்க... எந்த விளக்கும் தேவையில்லை எம் கைகளுக்கு.... கற்பனைக்கு எட்டா அளவு உன் வருகையோ ஒரு ஆச்சரியம் நிறைந்த விசித்திரம்....

உம் ஒளியை காண எம் கண்களுக்கு தான் இன்னும் ஒளி தேவை...
பகலிலே உறக்கம் கொண்டு  இரவிலே ஊர்வலமா
 வானில் தெரிவது விண்மீன்....பூமியில் திரிவது மின்மினி...
உம் அழகை காண குட்டி தேவதையாய் நான் இருக்க.... நிசப்தம் இல்லா இரவில் நித்தம் ஒரு கதை பேசிட வாராயோ மினிமியே என் கண்ணில் பட்ட கண்மணியே.... இந்த தேவதையையும் ரசிக்க வைத்து விட்டாயே உன் வெப்பம் இல்லா ஒளியால் என்னை கவர்ந்து விட்டாயே.....

யாரை தேடி அலைகிறாய் இந்த இரவில்...உன்னை தேடி நான் அலைகிறேன்... உன் வருகையால் என் கண்கள் மின்னலடிக்கிடிக்கின்றது.. என் இதயம் இடி இடிக்கிறது.... உன்னை காணும் இந்த நித்தம் ஒரு பயணம் முடிவில்லா பயணம்.....

உன்னை காணும் அழகிலே இனிய இரவிலே உன் வருகையை பார்த்து மரக்கிளையிலே பூத்திருப்பேன்.... அடடே கதை பேசி பேசி  விடியலும் வந்துவிட்டது... உன் ஒளியும் மங்கி விட... நானும் இனி மறைய போகிறேன்... நித்தமும் ஒரு இரவில் சப்தம் இல்லா பயணம் இது....

March 14, 2023, 01:32:23 pm
Reply #7

Vaanmugil

 • Newbie

 • *

 • 33
  Posts

  • View Profile
Re: கவிதையும் கானமும்-019
« Reply #7 on: March 14, 2023, 01:32:23 pm »
மின்மினிப்பூச்சியே,
கண்ணாம்பூச்சியே
மண்ணின் தேவதையே,
வேனிற் காலத்தில் ஒளிரும் அழகியே....

இரவில் தென்படும் மின் விளக்கே,
இறகை கொண்ட மின்மினியே,
புதரின் உள்ளே கொட்டி கிடக்கும்,
வண்டின கூட்டத்தின் சுடர் ஒளியே,
இருளின் பேரழகே.....

பாராயோ.....
பார்ப்பவரின் கண்களுக்கு
நான் ஒளிர்விடும் நட்சத்திரம் என்றும்
பறவையின் கூட்டில் ஒளிரும் மின்விளக்கு
என்றும் கூறாயோ !.....

சின்னஞ்சிறு குழந்தையை
ஆச்சிரியத்திலும், அழகாய்
ஆழ்ந்த சந்தோசத்திலும்
மிதக்க வைக்கும் மின்மினி 
என்றும் கூறாயோ !.....

ரசிக்க வைத்து,
ரகசியமாய் ஒளிர்ந்து அழகூட்டும்
நான் வயல்களின் அரசி என்றும்
உயிர் ஒளி என்றும் கூறாயோ !....

அழகு மின்மினியே,
அதிசயம் என்றும் உன் ஒளியே......« Last Edit: March 14, 2023, 01:56:46 pm by Vaanmugil »