அன்புள்ள அப்பா.....
தாயின் பாதி தந்தையே.....
கர்ப்பத்தில் சுமகிறாள் அவள்.
வாழ்வின் எல்லை வரை,
மார்பிலும், மனதிலும் சுமக்கிறாய் நீயே....
பூமிக்கு வந்தவுடன்
பூவாய் தாங்குகிறாய்....
உன் முதல் பார்வை புன்னகை கண்ணீரில்
என்னை ஏந்துகிறாய் நீயே....
நான் காணும் முதல் உறவு !
என் புது உறவு என் தந்தை நீயே....
பசி என்று அழுதால் அணைப்பாள் அவள்,
என் பசி அறிந்தும், தன் பசி மறந்து
தாலாட்டில் துயில வைப்பாய் நீயே....
தத்தித் தவழும் வேளையில்,
என்னை போல் அங்கு நீயும்
சிறு குழந்தை ஆகிறாய் என் தந்தையே.....
பாகன் போல் நானும் மாற
நீ அந்நேரம் மண்டியிட்டு
மகிழ வைப்பாய் தந்தையே......
என் பிஞ்சு விரல் பிடித்து
உன் பாதம் தொடர
சிறந்த வழிகாட்டியும் நீயே.....
பருவம் வந்தாலும்,
உன் மடியில் துயிலும்
இன்பம் வேறில்லை தந்தையே.....
அன்றும் என்றும்
சிறு குழந்தை போல என்று
எண்ணுகின்ற என் தந்தையே.....
புது உறவு புகுந்த வீடு என்று
அழைப்பில் காத்திருக்க
ஊரார் உறவினர் கூடியிருக்க
கட்டியணைத்து கண்ணீர் மல்க
முத்தமிட்டு துன்பம் காணும்
என் அன்புள்ள அப்பவே....
இவ்வுலகில் மிகவும்
அரிதான, அழகான, ஆழமான உறவு
என் தந்தை நீ என்பதும்,
உன் மகள் நான் என்பதுமே.....
I love you DAD.....