அவனும் நானும்.....
அந்தி சாயும் நேரம்
யாரும் இல்லா சாலையோரம்
அவன் கை இடுக்குகளில் என் கை கோர்த்து
கால்கள் போகும் தூரம் கடந்து செல்கிறோம்....
இது என்னவனோடு செல்லும்
புது பயணமோ, புது உலகமோ...
இயற்கையின் வரவழைப்பும்,
சாலையோர பூக்களும்,
மரங்களும் சாய்ந்து கொண்டு
ஏதோ சலசலப்பு உரையாடுகிறதே....
இவனோடு போகும் நேரம்
இன்னும் நீள ஏக்கம்தான் கூடுகிறதே....
எனக்குள் ஏனோ நாணம்தான் தேங்குகிறதே.....