ஹோலி பண்டிகை கவிதை
வண்ணங்கள் பலவிதம்!
மன எண்ணத்தின் எதிர்ப்பதம்!
பச்சை, சிவப்பு, மஞ்சள் என வண்ண மழை தூவுது !
வானவில்லை தேடுது, கொண்டாட்டம் பிறகுது!
தூய்மையான நிறத்திலே, நிறங்கள் துள்ளி விளையாடுது!
அறியாமை அகலவே, பண்டிகைகள் பிறந்தது!
வானவில்லின் வண்ணங்கள், மண்ணில் வந்து ஆடுது!
வாசல் தோறும் வண்ணங்கள், கோலங்களாய் மாறுது!
சொக்க வைக்கும் வண்ணங்கள், சோக்கான வண்ணங்கள்!
கண்களுக்கு விருந்தாய், வர்ணஜாலம் நடக்குது!
காற்றில் வண்ணம் கலக்குது!
காதலுடன் பறக்குது!
விதவிதமான அழகுடன், சித்திரமாய் தெரியுது!
வண்ணமயமான வாழ்க்கை தொடங்கட்டும்!
வாழ்வின் வசந்தங்கள் எட்டுத்திக்கும் பரவட்டும் !