சரிவர பேச தெரியாத நாட்களில்- பிறரிடம்
அதிகமாய் பேசிய நினைவு கேள்!
- பள்ளிப்பருவம்!
சிற்றுண்டி பேரின்பமாகும் - தினமும்
விளையாடுதான் தன் நாட்கள் ஆரம்பம் ஆகும்
தொலைக்காட்சி இருக்காத நாட்களில், தினந்தோரும்
அனைவரும் வீடுவாசல்களில் கூடி மகிழந்தோம்!
இரவில்,
வீதிகளில் தினமும் ஒரு விளையாட்டு!
அதற்காக ஒரு தனிப்பாட்டு!
வார இறுதி நாட்களில் விடுமுறை என்பதால்,
உடலும் மனமும் வீட்டில் தங்காது!
ஒரு விடு முறை நாள் கூட,
நழுவி செல்லாது,
அம்மாவிடம் திட்டு வாங்காது!
திங்கட்கிழமை வந்தால் எங்குவோம்?
எப்போது வெள்ளிக்கிழமை வரும் என்று!
இன்றும் கூட நான் நினைக்கிறேன்?
திங்கட்கிழமை வந்தால்!
இன்னுமா பள்ளி செல்கின்றேன் என்று!
பிறந்ததிலிருந்து என்னவென்று அறியாமல் சமத்துவம் பயின்றோம்!
இன்றும் கூட,
வேற்றுமையில் நாம் ஒற்றுமை ஆக இருக்க முயன்றோம்!
இதுவரை கல்வி படிப்பிற்கு மட்டுமே அடித்தளம் இல்லை!,
இன்றைக்கு,
கல்வியில் பணமும் பிற மொழிகள் மணமும்
உயர்ந்து நிற்பது நாட்டிற்கே தொல்லை!.
நன்றி!!.