Advanced Search

Author Topic: Sivarudran Kavithaigal  (Read 36317 times)

November 18, 2022, 03:14:15 pm
Read 36317 times

Sivarudran

Sivarudran Kavithaigal
« on: November 18, 2022, 03:14:15 pm »

மானே தேனே பொன்மானே !
மரகதமே மயிலிறகே!
அன்னமே எந்தன் பொன் வண்ணமே !
மன்னவன் மாமன் உனக்கு
தாலாட்டு பாடுறேனே
தலை சாய்த்து தூங்கிடுவாயோ!
கட்டி வைரமே கனியமுதே
தேன் கிண்ணமே !
தென்னவன் நான் உனக்கு தெம்மாங்கு பாடுறேனே
தேம்பாதே நீ உறங்கு !
தந்தையாய் நான் இருப்பேன்
நீ தவிக்கயிலே தாயாவும் நான் இருப்பேன்.
காலமெலாம் காவக்காரன் உன் கூட இருப்பேன்
கண் முடி நீ உறங்கிடு .

November 18, 2022, 03:20:16 pm
Reply #1

Sivarudran

தனிமையே அவளாய்
« Reply #1 on: November 18, 2022, 03:20:16 pm »
தனிமையின் காலடி சத்தமாய் அவளது கொலுசின் ஓசை.

தனிமையின் மொழியாய் ஆளற்ற அறையில் அவளின் உளறல்கள்.

தனிமையின் பிம்பமாய் திரும்பும் திசை எங்கும் அவளின் முகம்.

மொத்தத்தில் தனிமையே அவளாய்.
அது தருவதே சுகமாய்.
என் நாட்கள் கழிவதோ தனியாய்.

November 20, 2022, 08:08:48 pm
Reply #2

RiJiA

Re: தனிமையே அவளாய்
« Reply #2 on: November 20, 2022, 08:08:48 pm »
Alagane kavithai....🙂
« Last Edit: November 20, 2022, 08:11:37 pm by RiJiA »

November 20, 2022, 08:10:32 pm
Reply #3

RiJiA

Re: தாய்மாமன் தாலாட்டு
« Reply #3 on: November 20, 2022, 08:10:32 pm »
ல்,ள் madrum ழ் ilame yelutiya thaimaaman taladu..very nice👌
« Last Edit: November 20, 2022, 08:12:17 pm by RiJiA »

December 28, 2022, 11:24:52 pm
Reply #4

Sivarudran

Re: Sivarudran Kavithaigal
« Reply #4 on: December 28, 2022, 11:24:52 pm »
என்ன கதை ?

என் கதை சொல்ல
எனக்கும் இங்கு ஆசை உண்டு.
என்னவென்று கேட்க
எனக்கு இங்கு யாரும் உண்டோ ?
என்னுள் வாழ்ந்த கதை சில உண்டு
நான் வீழ்ந்த கதை பல உண்டு .
எனக்கென எழுதி வைத்த கதை ஏதும் உண்டோ?
அதை எடுத்து சொல்ல எனக்கு ஆள் உண்டோ ?
என் எண்ணமெல்லாம்
வண்ணமாக இனியொரு கதை
எனக்கென உண்டோ ?


January 02, 2023, 04:33:31 am
Reply #5

Sanjana

Re: Sivarudran Kavithaigal
« Reply #5 on: January 02, 2023, 04:33:31 am »
VERY NICE MY DEAR FRIEND.....

December 05, 2023, 10:47:53 am
Reply #6

Sivarudran

Re: Sivarudran Kavithaigal
« Reply #6 on: December 05, 2023, 10:47:53 am »
காதல்


கண்ணாடியில் அடிக்கடி முகம் பார்க்கும் !
 கடிகார நேரத்தை நொடிக்கு நொடி
கண்கள் உத்துப் பார்க்கும் ! 
கை விரல் ஐந்தும் அடிக்கடி தலைமுடியைக் கோதிக் கொள்ளும்!
காரியமே இல்லாமல் காதலி வீட்டு முன்பு
கர்ணம் போட்டு வித்தை காட்டும்!
அவள் வெளியே
எட்டிப் பார்க்கும் நேரத்தில்
குட்டி இதயம் வெளியே எகிரி குதிக்கும் !
கண்கள் உருண்டு திரளும் !
கைகள் நடுங்கி பரபரக்கும் !
காரியமே இல்லாமல் கால்கள் அங்கும் இங்கும் நடை போடும் !
அவள் அழைப்பு ஏதுமின்றி 
அலைபேசி துவண்டு கிடக்கும் !
பாழாய் போன காதலால் படாத பாடுபடுதே 
பாதி ஆண்களின் வாழ்க்கை ‌.

November 18, 2024, 01:38:15 pm
Reply #7

Sivarudran

Re: Sivarudran Kavithaigal
« Reply #7 on: November 18, 2024, 01:38:15 pm »
யாருமற்ற இருண்ட அறையில்
துவண்டு கிடக்கும் சூரியன் நான் !

இருள் சூழ்ந்த அறையில் ஒளிராமல்
ஓய்ந்து ஒளிர்த்துக் கொள்ளும்
ஒளிப் பந்து நான் !

இருளையே எரித்துவிடும் ஒளிப்பிழம்பு நானென்று தெரியாமல்
இருண்ட அறையின் நடுவே அமர்ந்து இருக்கும் அக்னி தேவன் நான் !

எனக்கு நானே ஒளியாக இருந்த போதிலும்
எகிரி குதிக்க வழி தேடியே பல நேரங்களில் இருண்டு போகிறேன் நான் ! 

என்னால் அறை முழுவதும் வெளிச்சமாகிய போதும்
எனக்கு நானே இருளாகிப் போகிறேன் இங்கே !

வழித்தேடி விழி துவண்ட போதே
இருண்ட அறையில் இருந்து
என் ஒளிக் கதிர்கள் பாய்ந்து வெளிச் செல்ல 
பூட்டின் சிறுவழி
இடம் தரவே இங்கு ஒளிரும் சாவியாகவே நான் !

November 18, 2024, 08:12:23 pm
Reply #8

RiJiA

Re: Sivarudran Kavithaigal
« Reply #8 on: November 18, 2024, 08:12:23 pm »
யாருமற்ற இருண்ட அறையில்
துவண்டு கிடக்கும் சூரியன் நான் !

இருள் சூழ்ந்த அறையில் ஒளிராமல்
ஓய்ந்து ஒளிர்த்துக் கொள்ளும்
ஒளிப் பந்து நான் !

இருளையே எரித்துவிடும் ஒளிப்பிழம்பு நானென்று தெரியாமல்
இருண்ட அறையின் நடுவே அமர்ந்து இருக்கும் அக்னி தேவன் நான் !

எனக்கு நானே ஒளியாக இருந்த போதிலும்
எகிரி குதிக்க வழி தேடியே பல நேரங்களில் இருண்டு போகிறேன் நான் ! 

என்னால் அறை முழுவதும் வெளிச்சமாகிய போதும்
எனக்கு நானே இருளாகிப் போகிறேன் இங்கே !

வழித்தேடி விழி துவண்ட போதே
இருண்ட அறையில் இருந்து
என் ஒளிக் கதிர்கள் பாய்ந்து வெளிச் செல்ல 
பூட்டின் சிறுவழி
இடம் தரவே இங்கு ஒளிரும் சாவியாகவே நான் !

Very  Nice 👏