Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-005  (Read 5510 times)

September 19, 2022, 08:30:56 pm
Read 5510 times

Administrator

கவிதையும் கானமும்-005
« on: September 19, 2022, 08:30:56 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.



இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்தியா நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

September 20, 2022, 07:17:45 pm
Reply #1

Eagle 13

Re: கவிதையும் கானமும்-005
« Reply #1 on: September 20, 2022, 07:17:45 pm »
மனிதா!
இப்பூமி!
உனக்கு மட்டுமா? சொந்தம் !
எல்லா உயிர்களும் இப்பூமிக்கு பந்தம்!
முதலில்   விறகுக்காக மரங்களை அழித்தாய்!
பின்பு!,
காற்றுடன் மாசுக்களை இணைத்தாய்
உங்கள் தேவைக்காக மரத்தை அழித்துவிட்டாய்!
இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக உயிர்களிடமிருந்து பிரித்தாய்! 
அதன் வாழ்வில் மரங்கள்!
நிழல்கள், பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் விதைகளும் கொடுக்கின்றன!
  மட்டுமல்லாமல்,
மண்ணரிப்பு  மேலும் தடுக்கிறது!
இன்று!
காட்டு விலங்குகளும் வாழமுடியாமல் தவிக்கின்றன,
ஓரு சில வருடங்கள் பருவ மழையும் கிடைக்கவில்லை!
மனிதா
உங்கள் தேவைக்கு   மரங்கள் அகற்றப்பட்டன மற்றும் வீடுகள் கட்டப்பட்டன!
உங்கள் நிலத்தில் காடும் சேர்ந்தது!
விளைநிலங்களும் மண்ணோடு மண்ணாகி நிறுவி விட்டாய்! 
அன்றாடம் விருந்தானா உணவுகளை இன்று!
மருந்துகளுடன் உட்கொள்கின்றாய்!
உனது வாழ்வின் நாட்கள் எண்ணிகையே குறைத்து கொண்டாய்!
இயற்கையோடு இணைந்த உனது வாழ்வை பிரித்துக்கொண்டாய்!
மரங்கள் இயற்கையின் வரம்!.
அதனை போற்றி காப்போம் தினம்!.
நன்றி!.
 
« Last Edit: September 21, 2022, 09:43:52 am by Eagle 13 »

September 23, 2022, 08:23:29 am
Reply #2

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: கவிதையும் கானமும்-005
« Reply #2 on: September 23, 2022, 08:23:29 am »
மரமே உன்னை காதலிக்கிறேன் அவள் என நினைத்து!!

மரம் எத்தனை அன்பு நிறைந்தவள்!!

பளபளக்கும் பச்சை பட்டாடை அணிந்தவள்!!

இயற்கை தாயாக வளம் வருகிறாள்  அவள்!!

உலகிலுள்ள ஜீவன்களுக்கு உயிர் மூச்சாக விளங்குகிறாள் அவள்!!

பூகோள நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகளில்!

பறவைகளின் குரல் இசைகளும்
வியக்க வைக்கும் வன விலங்குகளும்
சலசல என பாயும் நதிகளும்
 தூய்மையான காற்றும் கொடுத்து மனதிற்கு அமைதியை அல்லவோ அள்ளித் தருகிறாள் !!
           
கூவும் குயில் தாவும் குரங்கென எத்தனை  உறவுகளடி உனக்கு !!

இவள் போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எத்தனை உறவுகள் இருக்கிறது மனிதர்களுக்கு,!!

பல உயிர்களைத் தாங்கும் ஒற்றைத் தலைமைதான் இவள் !!

வழிப்போக்கர்களுக்கென பூமித்தாய் வழங்கிய நிழற்குடையே அவள்!!

சிந்தித்தபடி  இருக்கிறேன்!புயல் சூறாவளி என காற்று வீசும் திசையில் நீ வளைந்து கொடுத்து வாழ்வது ஏனோ என்று!!!!

மனிதனும் அவளிடம் கற்றுக்கொள்ள வேண்டும் வாழ்க்கையில் வளைந்து கொடுத்து வாழ்வது  எப்படி என்று.!!!!!!

                                                                                 ~Thank You🧢
« Last Edit: September 24, 2022, 04:52:36 am by Yash »

September 27, 2022, 02:34:31 pm
Reply #3

Sanjana

Re: கவிதையும் கானமும்-005
« Reply #3 on: September 27, 2022, 02:34:31 pm »
மானிடரே !!!

நான் உங்களுடன் இருக்கும்போது என்னையே நேசிக்கிறேன்.
நான் மௌனம், கூச்ச சுபாவமுள்ள காற்றைக் கேட்கிறேன்,
என் கிளைகள் வழியாக வானத்தைப் பாருங்கள்.
நான் உங்களுடன் நீல நிறத்தில், ஒளியில் வளர்கிறேன்.
ஒரு மேகத்தை நிறுத்தி என்னை உங்களுடன் அழைத்துச் செல்ல கூறுங்கள்.

மேலிருந்து நான் வயல்களையும் உயிரினங்களையும் காண்கிறேன்.
நான் மீண்டும் ஒரு குழந்தையாகி அனைவரையும் காண்கிறேன்.
சந்தோஷமே மிச்சமிருக்கிறது! நான் மகிழ்ச்சியில் மிதக்கிறேன்.
என்  கிளைகள் வழியாக மீண்டும் கீழ் நோக்கி பார்க்கின்றேன்.
பல போராடங்களின் மத்தியில் என் வாழ்க்கையை வாழ்கிறேன் என உணர்ந்தேன்.

நான் பல உயிரினங்களுக்கு உதவி இருக்கிறேன்.
அதை எண்ணி மனதில் பூரிப்படைகிறேன்.
நிழலைக் கொடுத்தேன். கனிகளைக் கொடுத்தேன்.
அனைத்து உயிரினங்களும் என் நிழலில் இளைப்பாறி ஆறுதல் அடைகின்றன.
ஒவ்வொரு நாளும் புதிய மகிழ்ச்சி எனக்குள்.

மானிடரோ  கோடரியைக் கொண்டு எங்களை வெட்டுகிறார்கள்.
பொல்லாதவர்கள் – எங்கள் வலி அறியாதவர்கள்.
நானும் அதே நேரத்தில் கஷ்டப்பட்டேன்.
கூர்மையான கத்தியில் இருந்து ஒரு ஆழமான காயம்.
நான் தாங்க முடியாத வலியை உணர்கிறேன்.

நீங்கள் பேராசையுடன் பூமியின் வல்லமையை உறிஞ்சுகிறீர்கள்.
நானும் கூட  துடிதுடிப்பது போல் உணர்கிறேன்!
வெட்டப்பட்ட பட்டையிலிருந்து புதிய பயனுள்ள பொருட்கள் உருவாகின்றன,
நானும் அதை உணர்கிறேன்!
நீங்கள் புத்துணர்ச்சியடைவதன் மூலம்,
என் காயம் குளிர்ச்சியடைவது போல் இருக்கிறது!
நாங்கள் இன்னும் எங்கள் வடுக்கள் பற்றி தற்பெருமை பேசுகிறோம்!

மானிடரரே !!!
ஜீவ விருட்சம் சாகக் கூடாது,
இல்லையெனில் மனிதன் தன் அழிவை நோக்கி ஓடுவான்.
நாம் இயற்கையை காயப்படுத்தும்போது,
நம்மை நாமே காயப்படுத்திக் கொள்கிறோம்.
சிந்திச்சு செயல் படுங்கள் மானிடரரே !!!


ஒரு மரமாக என் எண்ணங்கள் 
உங்கள் சஞ்சனா



வாய்ப்பு தந்தமைக்கு நன்றி  GTC...
THANK YOU FOR THE OPPORTUNITY GTC...
Vielen Dank für diese wunderbare Gelegenheit GTC...





« Last Edit: September 28, 2022, 02:53:36 pm by Sanjana »

September 28, 2022, 11:08:33 am
Reply #4

Arjun

Re: கவிதையும் கானமும்-005
« Reply #4 on: September 28, 2022, 11:08:33 am »
பரந்து விரிந்த நிலப்பரப்பு எங்கும் காண முடியாத நிழல்
தூர தெரிகிறது ஒற்றை மரம்
என்னுடைய கால்கள் அதை நோக்கி நகர
எண்ண ஓட்டங்கள் பின்னோக்கி நகர

மனிதன் பிறந்தான் மரம் தொட்டிலானது
மனிதன் நடந்தான் மரம் நடை வண்டியானது
மனிதன் வாழ்ந்தான் மரம் அவனுடன் எல்லாவமாக இருந்தது
மனிதன் இறந்தான் மரம் அவனுடன் சேர்ந்து எரிந்தது

கிட்ட நெருங்கினேன் ஆநிரைகளின் கூட்டம் மனம் வலித்தது
மரம் அதற்கு மனிதன் விலங்கு வேறுபாடு இல்லை
எல்லோருக்கும்  சமமாய் நிழல் பரப்பி நீள்கிறது
ஆனால் இன்று மனிதனின் மனமோ மரம் வைக்க மறுக்கிறது

மனிதனை  பேணி பாதுகாக்கும் மரத்தை ஏனோ மனிதன் இன்று பேணி பாதுகாப்பது இல்லை
மரம்தான் அதை பேணி பாதுகாப்பதும் அறம்தான்  அதை ஏனோ மனிதன் மறந்தான்
அதனால் இன்று பல இடங்களில் நிற்கிறது ஒற்றையாய்
அந்த ஒற்றையிலும் தருகிறது நிழல் கற்றையாய்

மரங்களை வளர்ப்போம் இயற்கையின் வழியில்
மனிதன் ஒற்றையாய் நிற்கும்போது தெரியும் ஒற்றை மரத்தின் வலி
மரம் ஒற்றையாய் இருந்தாலும் அதன் மடியில்
இளைப்பாற என்றென்றும் மனிதனுக்கு இடம் உண்டு

மரத்தினை பற்றி புரிந்து கொள்ள நினைத்தேன்
ஆனால்
மரத்தின் ஒவ்வொரு பாகமும் புரிய வைக்கிறது வாழ்க்கையை

புத்தரும் சித்தரும் ஞானதோயம் அடைந்தது உன் மடியில் தான்
புத்தரும் சித்தரும் இப்போது  இல்லாமல் போனது
உன்மடி கிடைக்காமல் போனதாலோ

ஒற்றையாய் நிற்கும் மனிதனுக்கு சில சமயங்களில்
ஒற்றை மரத்தின் நிழல் கூட அன்னையின் மடிதான்
அங்கு வீசும் இதமான தென்றல் காற்று
அன்னையின் தாலாட்டுதான்

தன்னுடைய இறுதி  மூச்சு வரை பயனளிக்கும்
மரத்தின் எதிர்பார்ப்பு இல்லாத கரிசனம்
முடிவில்லா மகிழ்ச்சிதரும் இன்ப தரிசனம்

கிறுக்கல்கள் !!! by Arjun

October 01, 2022, 12:00:34 am
Reply #5

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: கவிதையும் கானமும்-005
« Reply #5 on: October 01, 2022, 12:00:34 am »

கல் தோன்றிமண் தோன்றும் போதே இயற்கையை வணங்கும் முறையை கொண்டு வந்தான் தமிழன் !இயற்கை அன்னையின் அருள் கிடைத்தால் தான் மனிதன் உட்பட சகல ஜீவராசிகளும் இம்மண்ணில் வாழ முடியும்!!

நவீனம் என்ற பெயரில் பல மாற்றங்கள் கொண்டு வந்தாய் இயற்கையோடு வாழ்ந்த வாழ்க்கையை மறந்து !
சையற்கையை நோக்கி பயணம் ஆணாய் மனிதா!!

இன்று செயற்கையை நோக்கியை உனது பயணம் வீறு நடை போடுகின்றது!
இயற்கைக்கு சேதம் விளைவிக்காமல் செயற்கை பயன்படுத்தி இருக்கலாமே?

 நீ காலத்தின் போக்கில் செயற்கையை நம்பி பயணம் ஆனாய்!
ஆனால் சகல ஜீவராசிகளும் என்ன செய்யும்?

 ஐந்தறிவு உள்ள ஜீவராசிகள் இயற்கையை நம்பி தானே உள்ளன!

கைப்பேசி வந்ததின் பலனாய் நாம் சிட்டுக்குருவிகளின் இனம் அழியக் கண்டோம்!!

 சதுப்பு நிலக்காடுகளின் உள்ள பறவை இனங்கள் மட்டற்ற வாகனங்களின் புகை மற்றும் இரைச்சலால் வர இயலாமல் போனதே!
எத்துணை துரோகம் செய்திருக்கிறோம் !!

நாம் இயற்கை அன்னைக்கு இயற்கை அன்னையின் கொடையையாய் இருக்கும் மரங்களை வெட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றோம் !!!

பாவம் வாயில்லா ஜீவன்களின் நிலையை பார்த்தீர்களா?
மானிடா உனக்கும் ஒரு நாள் இதே நிலை தான்!

 இயற்கை அன்னையின் அரவணைப்போடு வாழ்வதே சிறப்பான வாழ்க்கை!
ஆதி தமிழன் விட்டுச்சென்ற பாரம்பரியம் மற்றும் இயற்கையோடு வாழ்ந்த வாழ்வினை வாழ்வோம்!! அகிலம் காப்போம் !!!

October 01, 2022, 07:18:48 pm
Reply #6

Coffee

Re: கவிதையும் கானமும்-005
« Reply #6 on: October 01, 2022, 07:18:48 pm »
தாயின் மடியினை போன்ற அரவணைப்பில்
தன் நிழல் கைகளை விரித்து
கொடுவெயிலை தாங்கி
இளைப்பாற உயிர்களுக்கு இடம் கொடுக்கிறது
கோடாரிக்கு தப்பி பிழைத்த ஒரு மரம்.

எந்நாளும் வெயிலை ஏந்திக்கொண்டிருக்கும்
இம்மரம் யாருக்கும் வெயிலை தந்ததில்லை
மண்ணையும் மனதையும் குளிர்விக்கும்
விந்தையை தான் தந்திருக்கிறது.

காய் தந்து, கனி தந்து
மழை தந்து, நிழல் தந்து
காலம் காலமாக
கொடுத்துக் கொண்டே இருக்கும்
வள்ளல்தான் மரங்கள் என்பதை
மனித இனம் என்று உணருமோ?

வளரும் உயிர்களில்  ஆயுள் அதிகம் கொண்டது அதுவே..
மரம் இல்லையேல் மழை இல்லை
மழை இல்லையேல் உயிர்கள் இல்லை
இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்தும்
மரங்களை தொடர்ந்து அழிக்கும் மனித இனம்
பாதிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை

மனிதனின் முதல் நண்பன் மரம்
மரத்தின் முதல் எதிரி மனிதன் !
மனித இனம் செழிக்க
மரங்கள் தழைக்கவேண்டும்
இதை மனித இனம் உணர வேண்டும்..
 
உணருமா ?

October 01, 2022, 07:40:22 pm
Reply #7
Re: கவிதையும் கானமும்-005
« Reply #7 on: October 01, 2022, 07:40:22 pm »
மனிதர்களே சிந்தியங்கள் மரம் பற்றி...
மரம் வளர்க்க சொல்கிறேன் உன் கரம் பற்றி..     

குடம்குடமா தண்ணீரை  குடிச்சும் தாகம் தீரவில்லை !!
கோடையோட வெப்பமது கொஞ்சமும் மாறவில்லை!!
வெயிலுக்கு இளைப்பாற  மரமில்லை -ஆனாலும் 
மனிதனுக்கு மரம் வளர்க்க இங்கு மனமில்லை !!

மரம் வளர்ப்போம் ..
மரமே நமக்கு கடவுளின் கொடை....
வெயிலுக்கு இனி கைகளில் வேண்டாம் குடை ..
மரமே பூமியின் பசுமை ஆடை
மரம் இருந்தால் வதைக்குமா இந்த கோடை?

கோடைக்கு இயற்கை  மரங்கள் அன்றி
குளிர்சாதன செயற்கையை  நீ நாடினால்
பக்கவிளைவில் பாதிக்கப்பட்டு
பாழாய் போயி விடும்  உன் உடல் !
உன் நலன் காக்கவும் உரிமையோடு
மரம் வளர்க்க சொல்லி நான்
வரைகிறேன் இதை எழுதுகிறேன் இந்த கவிதை மடல் !!.....

இனியும் மரம் வளர்க்காமல்
சுயநல மனிதனாய்  பூமியில்  நீ
சுற்றி வந்தால் காணாமல் அழிந்து போவது
மரங்கள் மட்டும் அல்ல உன்
வருங்கால சந்ததியும்தான்!!....

இப்படிக்கு
உங்கள் இயற்கை நேசகன்(NATURE LOVER)
« Last Edit: October 01, 2022, 07:56:29 pm by NATURE LOVER »