Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-035  (Read 13262 times)

December 18, 2023, 10:08:00 pm
Read 13262 times

Administrator

கவிதையும் கானமும்-035
« on: December 18, 2023, 10:08:00 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-035


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
[/color

December 19, 2023, 10:06:12 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-035
« Reply #1 on: December 19, 2023, 10:06:12 am »
கருகும் மலர்கள்...!

மலரும்முன் மண்ணில் வீழ்ந்தாயே,
கனியும்முன் பிஞ்சில் வெம்பினாயே,
அழுவதற்கு கூட நேரம் இல்லமால்,
அரைவயிரை நிறைக்க ஓடுகின்றாயே,
உன் நிலை கண்டு என் உள்ளம் உறைகின்றதே..!

காலை கதிரவன் ஒளி வீசும் முன்னே ;
வெட வெடத்த நடை பயணமாய் ,
பெற்றோரின் துயர் துடைக்க ,
கையெல்லாம் மையாய் இருக்க வேண்டிய பருவத்தில் ,
ஐயோ !!
செத்த பிணத்தின் அருவருப்பு
போதுமடா சாமி அவர்கள் நிலை .
அதை பார்க்க என் இமை இடம் கொடுக்கவில்லை ..!
கருவறையின் சுகம் மட்டும் கண்டாய் வாழ்வில்
கல்லறைக்கூட கலங்கும் - உன் காய்ச்சிய கை கண்டு.......

நெருப்பில் சுட்ட இரும்பாய் தினம் தினம் அகதியாய்
கனவுகள் பல சுமந்து......
கார்மேக கண்களில் கண்ணீரை சுமந்து
செம்பட்டை முடியுடன் வீதியில் உன்னை பார்க்கையில் மனம் பதபதக்கின்றது என்ன பிறப்பிதுவென்று..!
செங்கற்கள் இடையில் சிக்கிய செந்தாமரையாய் ~ வழிந்து ஓடும் உன் குருதி அதில் சிவந்த செங்கற்கள் உன் வறுமையை பேசும்..!
அய்யன் பட்ட கடன் தீர்க்க அடகு வைத்தாய் உன் இளமையை தியாகியாய் நீ சிந்தும் இரத்தம் பறைசாற்றும் உன் அன்னையின் துயரை..!
நீ ஒட்டிய சுவரொட்டிகள் அனைத்தும் வேதனையில் கிழிந்தது உன் நிலை காண்கையில்..!
ஒரு கையில் பொம்மையுடன்
மற்றொரு கையில் புத்தகத்தோடு
வீட்டில் மகிழ்ச்சியாய் இருக்கும்
குழந்தையை ஏக்கத்தோடு உன் கண்கள் பார்க்கின்ற வலி நிறைந்த பார்வையை கண்டு மனம் உடைகின்றது..!
பசி வயிற்றை வாட்டி எடுக்க
பிச்சை எடுக்க மனம் தடுக்க
கொஞ்சம் வயிற்றை நிறைக்க நீ படும் துயர்கள் அனைத்தும் கனவாக கரைய மனிதம் காப்போம் குழந்தை தொழிலாளி இல்லா சமூகம் உருவாக்குவோம்..!🤝

என்றும் GTC நட்💐களுடன் நான் உங்கள்

December 21, 2023, 12:53:43 pm
Reply #2

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-035
« Reply #2 on: December 21, 2023, 12:53:43 pm »
குழந்தை தொழிலாளி

விளையாட்டு மைதானத்தில்  துள்ளித்திரியும் குழைந்தைகள்

வானத்தில் பறந்துவிளையாடும் வண்ணத்துப்பூச்சிககளை போல

குழந்தையின் மழலை மொழி காதில் தேன் பாய்வது போல

குழந்தையின் புண்முக சிரிப்பு பூத்து குலுங்கும் வண்ண பூக்கள்போல

குழந்தையின் குறும்புத்தனம் முக்கனியின் சுவையைப் போல

ஆனால் இவையெல்லாம் வேலை செல்லும் குழந்தைக்குக் கிடைக்காது போல !!

அன்னை கர்பதில் கன்னட சொர்கம் அன்னையின்  அரவணைப்பில் கண்ட இன்பம்

பாதம் வலிக்கும் என்று தோளில் தாங்கிய தந்தையின் நேசம்

இவை அனைத்தும் கடலில் மூழ்கின கப்பலைப் போலக் குழந்தை தொழிலாளருக்கு !!!

புத்தகம் சுமந்தது செல்லும் வயதில் நீ சுமப்பதோ குடும்பத்தின் பாரம்

நீ சுமைதாங்கி என்று கடவுள் நினைத்தானோ ?

தந்தையின் அலட்சியமோ தாயின் கஷ்டமோ இல்லை சமுதாயத்தின் அக்கறையின்மையோ

இவை அனைத்தும் புரியாத வயதில் அழுக்கான ஆடை கொண்டு போகிராயோ  பூச்செண்டு !

நீயும் பறக்கத்தானே ஆசைப்படுகிறாய் பட்டத்தைப் போல

நீயும் ஆடத்தானே ஆசைப்படுகிறாய் ஊஞ்சலைப் போல

நீயும் விளையாடத்தானே ஆசைப்படுகிறாய் மற்றவர்களைப் போல

அனைத்து ஆசையும் நிராசையாய்  போனதே காற்றிழந்த பலூனைப் போல!

குழந்தை தினத்தைக் கொண்டாட வேண்டிய நீ தொழிலாளர் தினத்தை அல்லவா கொண்டாடுகிறாய்!

நீ சுத்தியலினால் ஆணியை  அடிக்கிறாய்

ஆனால் காயம் அடைந்தது என்னவோ எனது இதயம்

நானும் சமுதாயத்தில் ஒருவன் தானே !!!

 
நீலவானம்

December 21, 2023, 01:37:51 pm
Reply #3
Re: கவிதையும் கானமும்-035
« Reply #3 on: December 21, 2023, 01:37:51 pm »
ஆசபட்டேன் ஆசப்பட்டேன்
பள்ளி செல்ல ஆசபட்டேன் !
அம்மா கை புடிச்சு
ஆசை நடை நடந்து பள்ளி போக ஆசைப்பட்டேனே !
அப்பா சைக்கிளில் அசைந்து அசைந்து பள்ளி போக ஆசைப்பட்டேனே!
தலைமகன் எந்தன் தலையில் உச்சிவகுந்தெடுத்து
ஊர்வலம் போகும் தேர் போல அலங்காரித்து
அழகு சீருடை தான் அணிவித்து.
சீக்கிரமாய் என்னை பள்ளி கிளப்பும் -என்
சிரித்த முகத் தாயே !
வருந்துகிறேன்  நம் நிலை கண்டு .
கஷ்டமில்லாம நாம வாழ
இஷ்டம் இல்லாம இரும்பு பட்டறைக்கு வேலைக்கு போறேனே !
என் கூட்டு பிள்ளைங்க
எகிரி குதிச்சு விளையாடயிலே  - அத
எட்ட நின்னு பார்க்கும் என் மனசு .
விட்டுட்டு போக தோணுது பாதியிலேயே
நான் பார்க்கும் வேலையை விட்டுட்டு போக தோணுதே !
வழியில வாத்தியாரை பார்க்கும்போது வணக்கம் சொல்லி
வாரேன் உங்களோடு பள்ளிக்குன்னு வாய் சொல்ல துடிக்குதே !
வறுமையின் கொடுமை நினைவுக்கு வரவே
வாய் மூடிய பதுமையாய் வந்துடுவேன் பட்டறை வேலைக்கு !
படிக்க இஷ்டப்பட்டு துடிக்கும் இதயம் இரும்பு அடிப்பதா ?
சுழன்று விளையாடும் வயதில் சுத்தியல் பிடிப்பதா ?

சுமைகளை சுகம் எனத் தாங்கும் வயதில்லை எனக்கு - ஆம்
சுகங்களை சுமையில்லாமல் தாங்கும் வயதே எனக்கு.
உள்ளுக்குள் ஊஞ்சலாடுது வயசு !
வீட்டுக்குள் வறுமையால்
திண்டாடுது மனசு !

நித்தமும் சுத்தியல் பிடிக்கும் நினைவுகள்
நெஞ்சுக்குள்ளே படபடக்குதே !
பென்சில் பிடிக்கும்  ஆர்வங்கள் என்னுள்ளே
 பேரின்பம் கொள்ளுதே !
கையெல்லாம் காய்ச்சு போச்சு
கை நாட்டு நானென்றாச்சு ‌-
சமூகமே
விழி இழந்த - என் வாழ்க்கைக்கு
வழிகாட்ட வாருங்கள் !
வலி சுமக்கும் என் கரங்களுக்கு
விடை கொடுக்க வாருங்கள் !

December 23, 2023, 07:59:48 pm
Reply #4

karthick sri

Re: கவிதையும் கானமும்-035
« Reply #4 on: December 23, 2023, 07:59:48 pm »
  வாடிய மொட்டு
கார்த்திக் ஶ்ரீ

வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று
எண்ணினேன்,
ஆனால் விதி
உன் வாழ்வில் விளையாடியது..!


கரும்பலகை எந்தும் கைகளில்,
கற்களை உடைகின்றாய்,
கரைந்தது என் கல் நெஞ்சம்..! 


சிரித்துமகிழ வேண்டிய வயதில்,
சில்லரைக்கு அலைந்து,
சிரகோடிந்த பறவை ஆணாய்..!   


கண்டேன் மகிழ்ச்சியை
குதித்து குஷியானேன்
பட்டாம்-பூச்சி பிடித்தேன்
பட்டம் விட்டேன்
புத்தாடை போட்டேன்
பள்ளி சென்றேன்
பட்டம் பெற்றேன்
நீரில் நீச்சலடிதேன்
ஆடினேன் பாடினேன்
கண்விழித்தேன் யாவும்
கணவாய் கலைந்தது..!


கை எந்தினாய் கல் உடைத்தாய்
பிஞ்சுக்கைகள் காய்த்தது

அறியா பருவத்தில்
வாழ்வின் கொடுமையை அறிந்தாய்,
கள்நெஞ்சக்காரண்னடா கடவுள்.

யார் காரணம்?
நாமும் ஒரு காரணமோ?
குற்ற உணர்ச்சியில் குறுகினேன்னடா
நான்...!
 


நன்றி.
« Last Edit: December 23, 2023, 08:03:06 pm by karthick sri »

December 28, 2023, 10:25:36 am
Reply #5

iamcvr

Re: கவிதையும் கானமும்-035
« Reply #5 on: December 28, 2023, 10:25:36 am »
வாழ்தலை/ பிழைத்தலை
மையால் எழுதும் மாணவரிடையே
சிலர் வியர்வையால் எழுதுகிறார்கள்;
சில நேரங்களில் இரத்தத்தாலும்.

ஒருத்தி விளக்குத் திரி சுத்துகிறாள்;
ஒளி அவள் வாழ்வில் இல்லை.
இன்னொருத்தி மாலை கட்டி விற்கிறாள்;
காரில் வந்து மாலை வாங்கி
சாமி சேரும் மலர் போல செழிப்பில் இல்லை அவள் வாழ்க்கை.
ஒருவன் கட்டடவேலை செய்கிறான்;
அவன் அஸ்திவாரமே நிலையாயில்லை.
இன்னொருவன் சப்பாத்து தைத்து கொடுக்கிறான்;
வழக்கறிஞர், வைத்தியர், பொறியியலாளர், தொழிலதிபர்கள் என
அத்தனை பேருக்கும் தைத்து கொடுக்கிறான்.
அவனுடைய சப்பாத்தில் நின்று அவன் நிலையை பார்த்து
"உன்னுடைய கனவென்ன" என்று யாரும் கேட்க மாட்டார்களா என ஏங்கத்தான் செய்கிறான்.

இத்தனையும் கடந்து;
கண்மூடி கடக்கிறது உலகமும் கடவுளும்.
கனவுகள் எல்லாருக்கும் பொதுவானதில்லையா?
கடவுளை போல் கண்மூடி இராமல்
மனிதனாய் இருந்து பார்ப்போம்; கண் திறந்து பார்க்க,
கசக்கிறது நிஜ உலகம்.
முடியுமானால்
கனவுகளிற்கு கை கொடுப்போம்;
காலத்தின் ஓர் வழிகாட்டியாய்.

வாழ்க்கை என்பது ஒரு முறை..,
உதவும் கரங்கள் கொடுப்போம் பல முறை..!


― சி. வி. ஆர்.
« Last Edit: December 28, 2023, 02:42:30 pm by iamcvr »

December 31, 2023, 06:56:12 pm
Reply #6

Eagle 13

Re: கவிதையும் கானமும்-035
« Reply #6 on: December 31, 2023, 06:56:12 pm »
கல்வி கற்கும் வயதில் கல் உடைக்கிறாய்!.
ஓடி விளையாடும் வயதில் ஓடுகளை அடுக்குகிறாய்!
வறுமையினால் வயதை தொலைக்கிறாய்!
பசி மற்றும் பட்டினியால் பறித்தவிக்கிறாய்!.

அனைவருக்கும் தேநீர்
கொடுங்கள்!
கார்ல் மார்க்ஸ்!

அதை ஒரே மாதிரியான கோப்பையில்
கொடுங்கள்!

டாக்டர் B.R.அம்பேத்கர்!

அதை ஒரே அளவில் கொடுங்கள்!

தந்தை பெரியார்!.

அதை பசியில் இருப்பவருக்கு முதலில் தாருங்கள்!.
புரட்சி கலைஞர் விஜயகாந்த்!.


வெயிலோடு நீ விளையாடவில்லை!
மழையில் நீ காகித கப்பல் விடவில்லை!
பட்டாம்பூச்சியும் நீ பிடிக்கவில்லை!
கொட்டாங்குச்சியில் கூட உன்னிடம்
பொம்மைகள் இல்லை!
தட்டான் பிடிக்கும் வயதில் எச்சில் தட்டை
கழுவுகிறாய்!
இரக்கமற்ற உலகில் நல்ல உள்ளம்
கொண்ட இதயத்தை தேடுகிறாய்
!
நீ பட்டமும் விடவில்லை - உன் வாழ்வில்
பட்டமும் பெறபோவதில்லை!
இளமையில்,
ஏட்டுக்கல்வி கிடைக்காவிட்டால்,
எட்டாக்கனி ஆகிவிடும் உன் வாழ்க்கை!
வறுமையில் வாடிவிட்ட உனக்கு எப்படி
அமையுமோ?
எதிர்கால சேர்க்கை!.
குழந்தை தொழிலாளர்களை போக்க
அரசு,
இலவசகல்வி மதிய உணவு போன்ற
திட்டங்களை கொண்டு வந்தது!.
அதை கண்டு கொள்ள கூட்டம்
இன்றுவரை, எங்குதான் சென்றதோ?

கம்யூனிசம் பற்றி கேட்டால்,
முதலாளித்துவ கைக்கூலிகள்,
கடவுள் உண்டா? இல்லையா?,
எனக் கதைக்கிறார்கள்!
இன்றளவும்,
அனைவருக்கும் அனைவரும் சமம்
என்ற உரிமையை தர மறுக்கிறார்கள்!.