Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-031  (Read 12908 times)

September 12, 2023, 06:47:36 pm
Read 12908 times

Administrator

கவிதையும் கானமும்-031
« on: September 12, 2023, 06:47:36 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-031


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: October 09, 2023, 02:15:06 pm by Coffee »

September 14, 2023, 05:49:46 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-031
« Reply #1 on: September 14, 2023, 05:49:46 am »
அம்மு!
நீ என் கண்ணில் படும்
நேரமெல்லாம்
நான் கிறுக்கிய கவிதைகள் யாவும்
என் மனமெனும் மதில்சுவர் தாண்டி
ஒன்றோடு ஒன்று
மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கிறது...

மங்கை உன் மதிமுகம் கண்டு
மயக்க நிலைக்கு சென்று...
கவிதையின் வரிகளை
நீ உச்சரித்து முடிக்கும் போது...
உன் உதட்டு வரிகளில்
என் உயிர் வரிகள் கலந்து...
உன் உள்ளத்தில் நிறைந்து...
உன் சுவாசத்தில் படர்ந்து கொள்ள
இதயமின்றி துடிக்கின்றது!
கண்களின்றி கண்ணீர் வடிக்கின்றது..!

September 18, 2023, 10:51:11 am
Reply #2

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-031
« Reply #2 on: September 18, 2023, 10:51:11 am »
பேசும் கண்கள்

கண்ணனுக்கு மை அழகு ஆனால்  அவளுக்கோ அவள்  கண் தான் அழகு!

ஆயிரம் சக்திகள் இருந்தலும் அவளின் கண்ணில் இருக்கும் சக்திக்கு நிகர் ஏதும் இல்லை !

காந்த சக்தியோ இரும்பை இர்க்கும் அவளின் கண்ணில் இருக்கும் காந்தம் எனது இதயத்தை ஈர்த்தது !

இடி இடுத்து மின்னல் வரும் உனது கண்ணின் மின்னலிலே எனது இதயம் சுக்குநூறாய் உடைந்தது

பெண்ணே!

நீ ஓரக்கண்ணால் பார்க்கும் பொழுது எனது இதயத்தின் ஓரத்தில் மற்றொரு இதய துடிப்பு

இன்னும் கூடியது ஒரு ஆயுட் காலம் !

உனது கண்ணின் கருப்பு வைரம் என்ன நோக்கி தோட்டாக்கள் பல பாய்கின்றன பெண்ணே !

பெண்ணே வெண்திரையை கண்ணுக்குள் வைத்து உனது நினைவை எனது நெஞ்சுக்குள் வர  செய்தாயே!

கண்கள் கூட பேசுவதை உனது  கண்களை  கண்டுதான்  புரிந்துகொண்டேன் பெண்ணே !

அன்போடு என்னை பார்க்கும் காதல் பார்வை! என்னை காணவில்லை என்றால் ஏக்கமான பார்வை ! நான்

பெண்களோடு பேசும்போது  ஓர பார்வை!  என் மீது கோவம் கொண்டு உனது கையில்  சிவத்த மருதாணியை

போல   கோவத்தில் பார்வை! கோவத்தில் நீ இருக்க நான்  அளித்த பரிசில்  நீ பார்க்கும்  வெட்க்க பார்வை!

உனது கண்ணில் கடலைப்போல நீரை காண ஆசை இல்லைபெண்ணே ஆனந்த  கண்ணீரையே காணவேண்டும் ..!!!

அடடா  உலகத்தில் இருக்கு மொழிகளைவிட உனது கண்ணுக்கு இருக்கு மொழிகள் அதிகம் போல !

இந்த அழகிய கண்னில் மயங்கிய நான் இப்பொழுது நிமிர்கிறேன் பெண்ணே உனது நெத்தி போட்டில் !

அடிப்பெண்ணே உனது கண்ணின் அழகில் மயங்கியத்தை வாய் இருந்த நான் சொல்லிவிட்டேன்

உனது அருகில் இருக்கும் இலைகள் எப்படி சொல்லும் அது பார்த்து கொண்டிருக்கும் நான் பார்க்காத முகத்தின்  அழகை !

மென்மையான  காற்றின் மூலம் தெரிவிக்கும் உன்மீது பட்டு  !!!



நீல வானம்
« Last Edit: October 05, 2023, 12:48:14 pm by Passing Clouds »

September 18, 2023, 01:19:33 pm
Reply #3

Shruthi

Re: கவிதையும் கானமும்-031
« Reply #3 on: September 18, 2023, 01:19:33 pm »
கருப்பு  வெள்ளை  கவிதையடி... 
உன் ஒன்றை  விழியில்  தெரியுதடி...

மறு  விழி  காண  என்  இருவிழி  துடித்தது...
அதை  இலை  கொண்டு ஏனோ  மறைத்தது....

அன்று  மொழியில் பேசிச்சென்றாள்..
இன்று  விழியால்  பேசிக்கொன்றாள்...

இலை  கொண்டு  மூடினாள் 
பின்னழகை....
எதைக்  கண்டு  தேடுவேன் பெண்ணழகை...

விழி தரும் செய்திதான்  என்னவோ?
றெக்கையின்றி பறக்கிறேன்,, நான்
என்ன  செய்வேன்  அய்யகோ!!!

அவள்   மொழி  கேட்டு  நானும்  கவிஞன்  ஆனேன்...
அவள்   மொழி  கேட்டு  நானும்  கவிஞன்  ஆனேன்...
அவள்  விழி  பார்த்து மதிமயங்கிப் போனேன்...

ஓட்டுமொத்த  காதலையும்  ஒன்றை  விழியில் காட்டினாள்...
இன்னும்  என்னடா  வேண்டும்  என்று  அவள்  இதய அறைக்குள் 
என்னை  வைத்து  பூட்டினாள்....

விரல்  இடையே   நடனமாடியது  என் 
பேனா...
அவள்  விழி  பேசிய மெளன  மொழியில்  தடுமாறி  போனவன்  நானா...

ஒரு  விழி  கண்டு கொண்டேன்   இப்போது...
அவள் மறு விழி  காண்பது  எப்போது?

இன்னும்  இன்னும்  சொல்ல  மனம்   ஏங்குது...
அடுப்படியில்  பூனையும் வந்து 
தூங்குது...

பசி  மயக்கம்  கண்ணை  கட்டுது...
போய்ட்டு   வந்து  சொல்லவா  மிச்சம்  விட்டது...
போய்ட்டு   வந்து  சொல்லவா  மிச்சம்  விட்டது...🤭
« Last Edit: September 18, 2023, 01:23:00 pm by Shruthi »

September 19, 2023, 08:31:28 pm
Reply #4

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
Re: கவிதையும் கானமும்-031
« Reply #4 on: September 19, 2023, 08:31:28 pm »
அவள் விழியில் ஐக்கியமாகி
அகதி போல் நான்.......


என் ஒத்த உசுருலதான்
உன் நினைப்ப
பதுக்கி வச்சேனடி கண்ணம்மா !!

உன் மை விழி அசைவில்
மயங்கி சொக்கித்தான்
போகிறேனடி கண்ணம்மா !!

உன் விழி சிமிட்டலில்
என்னை வீழ்த்தித்தான் 
செல்கிறாயடி கண்ணம்மா !!

உன் மின்னல் கீற்று பார்வையில்
என்னை சுடர் போல்
சுட்டெரிகிறாயடி கண்ணம்மா !!

உன் விழி பேசும்
மௌன மொழியில்
என்னை மீட்டெடுக்க
தவிக்கிறேனடி கண்ணம்மா !!

இலை மறைவில் சிந்தும்
உன் ஓர பார்வையில்
என் குருதி கொண்டு
கவி படைத்து, உளறி
கவிஞன் ஆகிறேனடி கண்ணம்மா !!

உன் கருவிழியில்
என்னை காண்கையில்
மனத்தவிப்பில்
என் மனம் தத்தளிக்கிறதடி கண்ணம்மா !!

உன் விழி புன்னகையில்
விண்ணும் மண்ணும்
விசித்திரம் காணுதடி கண்ணம்மா !!

உன் காந்த பார்வை ஈர்ப்பில்
என்னை வசீகரம்
செய்கிறாயடி கண்ணம்மா !!

உன் விழி கொண்டு
தினம் தினம்
என் மொத்த உசிரையும்
கொன்று சாய்க்கிறாயடி கண்ணம்மா !!

என் உயிர்
உன் விழியில் உலவுகிறதடி கண்ணம்மா !!
« Last Edit: September 19, 2023, 08:51:40 pm by Vaanmugil »

October 08, 2023, 12:15:03 pm
Reply #5
Re: கவிதையும் கானமும்-031
« Reply #5 on: October 08, 2023, 12:15:03 pm »
ஒரு ஆணின்  பார்வையில் இருந்து ஒரு கவிதை ...


பெண்ணின் கண்களை
வண்டென்பார்! வண்ண
மலரென்பார்! பாயும்
அம்பென்பார்! விண்
மீனென்பார்! துள்ளும்
கயலென்பார் கவிஞர்கள்!

கண்ணே.. உன்
கண்களைக் கண்ட நானோ
குருடாகி  மதிமயங்கி
உளருகிறேன்.

உன் கண்கள்
வண்ணம் தீட்டாத
வரைபடம்!
உன் புருவம்
வண்ணமில்லாத
வானவில் தான்!
இமையென்ன மழைக்கால
மயில்தோகையோ..

அந்தக் கருவிழி பார்வையில்
காந்தம் தான் உள்ளதோ?
என் இரும்பு மனமும்
சட்டென்று அப்பார்வையில்
ஒட்டிக்கொண்டதே!

அது கண்களா?
கலைக்கூடமா?
கண்டதும் கவிப்பாட
தூண்டுகிறதே!

கண்ணே.. அந்தக்
கனநேரப் பார்வையில்
கனம் நிறைந்து போனேன்.
மனம் நிறைந்து வாழ்வதற்கு
திரும்பவும் நீ ஒரேயொரு
கனநேரம் பார்த்து விடேன்!